நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 26 செப்டம்பர், 2011

உள்ளாட்சி தேர்தலில் கடையநல்லூர் 29- வது வார்டு நிலவரம்

கடையநல்லூர் -    இன்று காலை 9 மணியளவில் மதினா நகர் ஜமாத் பள்ளியில் வைத்து முகல்லா வாசிகள் அனைவரும் ஒன்று கூடி யாரை கவுன்சிலராக தேர்ந்தெடுப்பது பற்றி ஆலோசித்தார்கள்.

   அப்பொழுது சர்ச்சைகளுக்கு மத்தியில் பல வகையான எதிர்ப்புகளும் போட்டியுமாக இருந்தது ஜமாத் நிர்வாக கமிட்டி கூடி யார் யார் போட்டியிடுகின்றார்கள் என்று தனியாக பிரித்ததில் 11 போர் (பல கட்சி சார்பிலும் சுயேட்சையாகவும்) நிற்கப்போகின்றோம் என்று கருத்தை முன்வைத்தார்கள். அவர்கள் அனைவரையும் அழைத்து உங்களுக்குள்ளே யார் நிற்கலாம் என்று கலந்தாலேசித்து ஒரு முடிவை எங்களுக்கு தாருங்கள் என்று கமிட்டி சொன்னது.



  அதன் அடிப்படையில் சுமார் 1 மணி நேரம் நடந்தது இதில் பலவகையான எதிர்ப்புகளுக்கு(போராட்டஙகளுக்கு) மத்தியில் ஒருமனதாக 29-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு நமது ஜமாத்தைச் சார்ந்த S.நயினா முஹம்மது (எ)கனி அவர்களை தேர்ந்தெடுத்துள்ளோம் என்று கமிட்டியிடம் சொன்னார்கள். இதை அப்படியே ஜமாத்தைச் சார்ந்த அனைவரிடமும் கருத்து கேட்டார்கள் யாரும் மறுப்பு சொல்லாத காரணத்தால் (இறைவன் நாட்டப்படி) மதினா நகர் ஜமாத்தின் சார்பாக 29-வது வார்டு கவுன்சிலர் பதவிக்கு   S.நயினா முஹம்மது (எ)கனி அவர்களை சயேட்சையாக அறிவித்துள்ளார்கள்.
 
நாளை காலையில் ஜமாத்துடன் சேர்ந்து (வேட்பாளர்) வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு செல்ல இறுக்கின்றார்கள்.

  மேலும்  S.நயினா முஹம்மது (எ)கனி அவர்கள் சோஷியல் டெமாக்ரடிக் ஃபார்ட்டி ஆஃப் இந்தியா - வின் கடையநல்லூர் நகர தலைவர் என்பது குறிப்பிடதக்கது.