SDPI மேயர் வேட்பாளரின் வேட்பு மனுவை நிராகரிக்க முயன்றதால்
சென்னை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை!
போராட்டத்தை தொடர்ந்து மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது
விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் இஸ்லாமிய அமைப்புகளின் கூட்டணியின் சார்பாக சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா ( SDPI )வின் S.அமீர் அவர்கள் மேயர் வேட்பாளராக போட்டியிடுகிறார்.
சென்னை மாநகராட்சியில் இன்று நடைபெற்ற வேட்பு மனு பரிசீலனையின் போது, SDPI வேட்பாளரின் மனு நிராகரிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதனால் SDPI தொண்டர்களிடையே கொந்தளிப்பு ஏற்பட்டது. அனைத்து விதமான தகவல்களும் முறையாக கொடுக்கப்பட்டு, சிறந்த வழக்கறிஞர்கள் மூலம் சரிபார்க்கப்பட்ட பின்பே வேட்பு மனு தாக்கல் செய்யப்பட்டது. எனவே தேர்தல் அதிகாரிகள் திட்டமிட்டே வேட்பு மனுவை நிராகரித்தது தெரிய வந்தது. இந்த தகவல் வெளியானதும், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல் திருமாவளவன், SDPI யின் மாநிலபொதுச் செயலாளர்கள், நெல்லை முபாரக், பி. அப்துல் ஹமீது மற்றும் இஸ்லாமிய சமுதாய ஒருங்கிணைப்பாளர் ஹனிபா,சுன்னத் ஜமாத் தலைவர் மேலை.நாசர், தேசியலீக் தலைவர்,தடா ரஹீம் ஆகியோர் உடனடியாக மாநகராட்சி ரிப்பன் பில்டிங் வந்தனர்.

போராட்டத்தை தொடர்ந்து மனு ஏற்றுக் கொள்ளப்பட்டது.
வேட்பு மனு ஏற்று கொண்டதை அடுத்து நிர்வாகிகள் பொன்னாடை அணிவித்தனர்