நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 27 ஜூன், 2013

கோத்ரா சம்பவம்:விசாரணை நடத்திய நீதிபதி யு.சி.பானர்ஜியை கொலைச் செய்ய முயன்ற ஹிந்துத்துவா தீவிரவாதிகள்!



குஜராத் முஸ்லிம் இனப்படுகொலைக்கு காரணமான கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் எரிபொருளை முஸ்லிம்கள் வெளியே இருந்து ஊற்றவில்லை,ரெயிலுக்கு உள்ளேயிருந்தே ஊற்றப்பட்டுள்ளது என்று கண்டுபிடித்த நீதிபதி யு.சி. பானர்ஜியை ஆர்.எஸ்.எஸ் பிரச்சாரக் சுனில் ஜோஷி கொலைச் செய்ய திட்டமிட்டிருந்தான் என்று சாட்சி ஒருவர் கூறியதாக 2006 மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையில் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கூறுகிறது.

உண்மையும் உரிமையும் " என்ற தலைப்பில் தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மாபெரும் பொதுக்கூட்டம்


பாப்புலர் ஃப்ரண்டின் மாநில தலைவர் இஸ்மாயில் அவர்கள் உரையாற்றிய பொழுது


தமிழ்நாடு இஸ்லாமிய இயக்கங்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் கூட்டமைப்பு சார்பில் கோவை மாவட்டம் லாரிப்பேட்டையில் 16.06.2013 அன்று மாலை 5.00 மணி அளவில் "உண்மையும் உரிமையும் " என்ற தலைப்பில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இப்பொதுக்கூட்டத்திற்கு அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஏ.கே.முஹம்மது ஹனீஃபா தலைமை தாங்கினார்.

UAPA சட்டம் என்றால் என்ன?அது உருவானது எப்படி?ஒரு விரிவான பார்வை

நவம்பரில் (2009)மும்பையில் நடந்த தீவிரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து, தேசிய புலனாய்வு அமைப்பு (NIA) ஒன்றைத் தொடங்குவதற்கான சட்டம், ஏற்கெனவே இருந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தை திருத்தி புதிய சட்டம் (UAPA) பயங்கரவாதத் தடுப்புச் சட்டங்களை இந்திய அரசு அவசரமாக உருவாக்கியுள்ளது. உருப்படியாக எந்த விவாதமுமின்றி நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டுள்ள இச்சட்டங்களின் மூலம், நாட்டை அரசு பயங்கரவாத அரசாக காங்கிரஸ் அரசு மாற்றியமைத்துள்ளது.

இதன் சிறப்பம்சம் என கருதப்படுபவை:

அணுவிசை பாதுகாப்பு, விமானக் கடத்தல் தடுப்பு, கொடிய பேரழிவுக்கான ஆயுதங்கள் தடுப்பு, நக்சல் தீவிரவாத ஒழிப்பு உள்ளிட்ட நாட்டின் பாதுகாப்பு தொடர்பான 8 வகை சட்டங்களால் தண்டிக்கப்படக் கூடிய பயங்கரவாதக் குற்றங்கள் நிகழ்ந்திருந்தால், அவற்றை இனி தேசிய புலனாய்வு அமைப்பு விசாரிக்கும். இந்த அமைப்பின் சட்டப்படி, சிறப்பு நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டு, அவை இரகசியமாக விசாரணையை நடத்தும். சி.பி.ஐ. போன்ற மையப் புலனாய்வு அமைப்புகளின் விசாரணைக்கு மாநில அரசின் ஒப்புதல் தேவை என்று ஏற்கெனவே இருந்த நடைமுறை மாற்றப்பட்டு, தற்போதைய தேசிய புலனாய்வு அமைப்பு மாநில அரசின் ஒப்புதல் இல்லாமலேயே விசாரணை நடத்த அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளை வெறும் தகவல் தெரிவிக்கும் உறுப்புகளாக மாற்றிவிட்ட இச்சட்டம், மாநில அரசுகளின் பெயரளவிலான உரிமைகளைக் கூட முடக்கி, மைய அரசிடம் வரம்பற்ற அதிகாரத்தைக் குவிக்கிறது.

புதன், 19 ஜூன், 2013

அச்சனபுதூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய "பள்ளி செல்வோம்" )SCHOOL CHALO) விழிப்புணர்வு பிரச்சாரம்.



நெல்லை மேற்கு மாவட்டம் அச்சனபுதூரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் சமுக மேம்பாட்டுத்துறையின் சார்பாக "பள்ளி செல்வோம்" (SCHOOL CHALO) "(தேசீய விழிப்புணர்வு பிரச்சாரம் மற்றும் கல்வி உபகரணங்கள் வழங்கும் விழா) நிகழ்ச்சி ஜூன் 18 அன்று  மாலை 4.30 மணிக்கு அச்சனபுதூர், நகர அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் மாவட்ட தலைவர் A. சிராஜீல் முனிர் அவர்கள், பள்ளிவாசல் இமாம் A. முகம்மது கனி உஸ்மானி மற்றும் SDPI கட்சியின் நகர செயலாளர் மைதீன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு வாழ்த்துரையுடன் குழந்தைகளுக்கு கல்வி உபகரணங்கள் வழங்கினார்கள். இதில் பெற்றோர்கள் மற்றும் ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்

செவ்வாய், 18 ஜூன், 2013

“குண்டு வைப்பவர்கள் ஹிந்துத்துவா தீவிரவாதிகள், பிடிக்கப்படுவது முஸ்லிம்கள் – இதுதான் இன்றைய முஸ்லிம்களின் நிலை!” – வழக்கறிஞர் ஷாஜஹான் மலேசியாவில் உரை

கோலாலம்பூர்: மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் கடந்த 16.06.13 ஞாயிறன்று “இஸ்லாத்திற்கெதிரான சதியும் முஸ்லிம்களின் நிலையும்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. இஸ்லாமிய நற்பணி மன்றம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இக் கருத்தரங்கில் பாப்புலர் ஃபிரண்டின் தமிழ்நாடு மாநில செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஷாஜஹான் கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். 

கருத்தரங்கின் ஆரம்பமாக உஸ்தாத் காரீ முஹம்மத் அப்ராருல் ஹக் அவர்கள் கிராஅத் ஓதி நிகழ்ச்சியைத் துவக்கி வைத்தார். சமூக ஆர்வலர் ஜனாப் முஹம்மத் அலீ ஜின்னாஹ் அவர்கள் வரவேற்புரை ஆற்றினார். கருத்தரங்கிற்கு டத்தோ ஜமருல் கான் அவர்கள் தலைமை தாங்கினார். அவர் தனது உரையில் இந்தத் தலைப்பின் அவசியத்தையும், 

சுரண்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக டெங்கு விழிப்புணர்வு முகாம்.



நெல்லை மேற்கு மாவட்டம் சுரண்டையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக டெங்கு விழிப்புணர்வு முகாம் மற்றும் நிலவேம்பு கசாயம் கொடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சிக்கு சுரண்டை பகுதியின் பொறுப்பாளர் பக்ரூத்தீன் அவர்கள் தலைமை ஏற்றார்கள். இதில் 100-க்கும் மேற்ப்பட்ட பொதுமக்கள் கலந்து பயன் அடைந்தனார்...




சனி, 15 ஜூன், 2013

இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கு:ஐ.பியின் பங்கை கண்டுபிடித்த சி.பி.ஐ அதிகாரி சதீஷ் சர்மா நீக்கம்!

புதுடெல்லி:இஷ்ரத் ஜஹான் போலி என்கவுண்டர் வழக்கை சீர்குலைக்க உயர்மட்ட அளவில் தலையீடு ஐ.பி சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் மீது வழக்கின் விசாரணை திரும்பியதற்கு பழிவாங்கும் நடவடிக்கையாக சி.பி.ஐ அதிகாரி பலிகடாவாக்கப்பட்டுள்ளார். ராஜேந்தர் குமாருக்கு போலி என்கவுண்டரில் தொடர்பு இருப்பதாக தகவல் அளித்த முன்னாள் சிறப்பு புலனாய்வு குழுவின் உறுப்பினரும், தற்போது சி.பி.ஐ புலனாய்வுக் குழுவின் உதவியாளருமான ஐ.பி.எஸ் அதிகாரி சதீஷ் வர்மாவை சி.பி.ஐ புலனாய்வுக் குழுவில் இருந்து நீக்கம் செய்துள்ளது. ராஜேந்தர் குமாரை சி.பி.ஐ அழைத்து விசாரணை நடத்தியதை கண்டித்து ஐ.பி தலைவர் ஆசிஃப் இப்ராஹீம் பிரதமரை சந்தித்து புகார் அளித்துள்ளார்.

திங்கள், 10 ஜூன், 2013

காலித் முஜாஹித், தாரிக் காஸ்மி கைது!: போலீஸின் பொய் மூட்டைகளை தோலுரித்துக் காட்டும் நிமேஷ் கமிஷன் அறிக்கை!


உத்தரபிரதேச மாநிலத்தில் 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த தொடர் குண்டுவெடிப்புகளில் தொடர்புடையவர்கள் என்று குற்றம் சாட்டி, காலித் முஜாஹித், தாரிக் காஸ்மி ஆகியோரை எஸ்.டி.எஃப் (ஸ்பெஷல் டாஸ்க் ஃபோர்ஸ்) கைது செய்தது.இக்கைது சம்பவத்தில் மர்மங்கள் நிறைந்திருப்பதை வெட்ட வெளிச்சமாக்கும் நிமேஷ் கமிஷனின் அறிக்கை வெளியாகியுள்ளது.காலித் முஜாஹிதையும், தாரிக் காஸ்மியையும் பொய் வழக்கில் சிக்கவைத்த போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நேற்று முன் தினம் உ.பி மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிமேஷ் கமிஷன் கூறுகிறது. நிமேஷ் கமிஷனின் அறிக்கை அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை.
 
ஃபைஸாபாத், லக்னோ, கோரக்பூர் ஆகிய இடங்களில் 2007-ஆம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்புகளில் காலித் முஜாஹித் மற்றும் தாரிக் காஸ்மிக்கு தொடர்பிருப்பதாக குற்றம் சாட்டி பாரபங்கி ரெயில்வே நிலையத்தில் வைத்து கைது செய்ததாக எஸ்.டி.எஃப் கூறியது. இவர்களிடமிருந்து வெடிப்பொருட்களை கைப்பற்றியதாகவும் எஸ்.டி.எஃப் தெரிவித்தது. ஆனால், கைது செய்ததாக கூறப்படும் தேதிக்கு முன்பே இருவரையும் எஸ்.டி.எஃப் காவலில் எடுத்ததாக நிமேஷ் கமிஷன் கண்டறிந்தள்ளது.

இலக்கியச்சோலையின் புதிய புத்தகங்கள் வெளியீட்டு விழா



ஞாயிறு, 9 ஜூன், 2013

தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய "பள்ளி செல்வோம்" (SCHOOL CHALO)




நெல்லை மேற்கு மாவட்டம் தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் சமுக மேம்பாட்டுத்துறையின் சார்பாக "பள்ளி செல்வோம்" (SCHOOL CHALO) "தேசீய விழிபுணர்வு பிரச்சாரத்தின் நிகழ்ச்சியாக 1,00,000 லட்சம் கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக ஜூன் 07 அன்று  மாலை 4.30 மணிக்கு தென்காசி, காட்டு பாவா நடுநிலை பள்ளியில் வைத்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் தென்காசி நகர தலைவர் P.  முகம்மது தாரிக் அவர்கள் தலைமையில் கல்வி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.  

வியாழன், 6 ஜூன், 2013

கிரிக்கெட் வீரர்கள் மீது மோக்கா சட்டம்: பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!

ஐ.பி.எல் கிரிக்கெட் சூதாட்டத்தில் தொடர்புடையதாக குற்றம் சாட்டி கைதுச் செய்யப்பட்டுள்ள கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் உள்ளிட்ட 22 பேர் மீது மோக்கா(மஹராஷ்ட்ரா அமைப்புரீதியான குற்றங்கள் தடுப்புச் சட்டம்) சட்டத்தின் கடுமையான பிரிவுகளை பிரயோகித்தது கண்டனத்திற்குரியது. மக்களிடமிருந்து கடும் எதிர்ப்பை கிளப்பிய பொடா, தடா, யு.ஏ.பி.ஏ போலவே மோக்கா(MCOCA) சட்டமும் ஜனநாயக விரோதமானதாகும்.

கடையநல்லூர் மசூத் கொலை வழக்கு : டி.எஸ்.பி சந்திரபால் சஸ்பெண்ட்


நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி விசாரணைக்காக கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு கீரிப்பாறை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.

கடந்த ஆறு வருடங்களாக இந்த வழக்கிற்காக போராடி வருகின்றது மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO). என்.சி.ஹெச்.ஆர்.ஓ. வின் களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தினால், இக்கொலையில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பிரதாப் சிங், டி.எஸ்.பி.கள் ஈஸ்வரன், சந்திரபால் உள்ளிட்ட பன்னிரெண்டு காவல்துறை அதிகாரிகள் மீது சி.பி.சி.ஐ.டி கொலை வழக்கு பதிவு செய்து, திருநெல்வேலி செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.

வெள்ளி, 31 மே, 2013

கேரள தலைநகரை ஸ்தம்பிக்க வைத்த UAPA விற்கு எதிரான மக்களின் எழுச்சி!


திருவனந்தபுரம்:நேற்று(30/05/2013) கேரள தலைநகரான திருவனந்தபுரத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக நடந்த யு.ஏ.பி.ஏ கறுப்புச் சட்டத்திற்குஎதிரான ‘ஜன விசாரணை யாத்திரை’யின் இறுதியில் நடந்த பேரணி, மற்றும் மாநாட்டில் கலந்துகொண்ட பல்லாயிரக்கணக்கான மக்கள் திரள், பொய்க்கதைகளை ஜோடித்தும், கறுப்புச் சட்டங்களை பிரயோகித்தும் நவீன சமூக எழுச்சிக்கு தடை போட்டுவிடலாம் என்று கனவு காணும் அதிகார, ஆளும் வர்க்கத்திற்கு பதிலடியாக அமைந்தது. யு.ஏ.பி.ஏ என்ற கறுப்புச் சட்டத்திற்கு எதிரான ‘ஜன விசாரண யாத்திரா’ என்ற மக்கள் விசாரணை பயணத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் கேரள மாநில தலைவர் கரமன அஷ்ரஃப் மவ்லவி தலைமை வகித்திருந்தார்.

செவ்வாய், 19 மார்ச், 2013

மாணவர் போராட்டத்தை ஆதரித்து எஸ்.டி.பி.ஐ கட்சி நாளை தமிழகம் முழுவதும் போராட்டம். மத்திய அரசுக்கு தி.மு.க ஆதரவு வாபஸ் வரவேற்கத்தக்கது.


எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம்  இன்று சென்னையில் நடைபெற்றது.இதன் பிறகு  மாநில தலைவர்  கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி  வெளியிட்டுள்ள அறிக்கையில்PRESSஈழத்தமிழர் பிரச்சனையில் மத்திய அரசு தொடர்ந்து மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழர்களின் உணர்வுகளுக்கு விரோதமாக செயல்பட்டு வருகிறது.

முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று கூறிய காங்கிரஸின் காவி அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பதவி விலக கோரி மக்களவையில் எம்.பிக்கள் அமளி!

புதுடெல்லி: முஸ்லிம்களை பயங்கரவாதிகள் என்று பேசிய காவி தோல் போர்த்திய காங்கிரஸின் மத்திய உருக்குத் துறை அமைச்சர் பேனி பிரசாத் வர்மா பதவி விலகக் கோரி, சமாஜ்வாதி கட்சி உறுப்பினர்கள் மக்களவையில் அமளியில் ஈடுபட்டனர். இதனால், மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டது. மக்களவையில் திங்கள்கிழமை காலையில் கேள்வி நேரம் முடிந்ததும் பொது, முக்கியத்துவம் வாய்ந்த பிரச்னைகளை விவாதிக்கும் பூஜ்ய நேர அலுவல் நண்பகல் 12 மணிக்கு நடைபெற்றது.

குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை மூடி மறைக்கும் ஊடகங்கள்!

gujarat Chhota Udepur, burn shedsபுதுடெல்லி: நரேந்திர மோடியின் குஜராத்தில் முஸ்லிம்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களை ஊடகங்கள் மூடி மறைத்து வருகின்றன.
கடந்த மாதமும், இம்மாதமும் குஜராத்தின் சோட்டா உதய்பூரில் முஸ்லிம்களின் நிறுவனங்கள் கொள்ளையடிக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன. முஸ்லிம்களும், பழங்குடியினரும் இப்பகுதியில் அதிகமாக வசிக்கின்றனர். பழங்குடியினரை பயன்படுத்தி சங்க்பரிவார்கள் முஸ்லிம்கள் மீது தாக்குதல் நடத்துகின்றனர்.

ஞாயிறு, 17 மார்ச், 2013

அறிவகம் தாவா குழுவின் “திருக்குரானும் நவீன விஞ்ஞானமும்” புத்தகம் வெளியீட்டு விழா

தேனி மாவட்டம் அறிவகம் தாவா குழுவின் திருக்குரானும் நவீன விஞ்ஞானமும்புத்தகம் வெளியீட்டு விழா சனிக்கிழமை 16-03-2013  கம்பம் கோகுலம் யாதவர் மஹாலில் நடைபெற்றது.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் அபூபக்கர் சித்தீக்

கடையநல்லூரில் “மதரஸா செல்வோம்” விழிப்புணர்வு பிரச்சார பேரணி

கடையநல்லூர் : மார்ச்16 அன்று கடையநல்லூரில் மதினா நகர் மற்றும் பேட்டை பகுதிகளில் மார்க்க கல்வியின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு வலியுறுத்தும் விதமாக சிறார்கள்  கைகளில் பதாகைகளை ஏந்தியவண்ணம் மாபெரும் பேரணி நடைபெற்றது. 

வெள்ளி, 15 மார்ச், 2013

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பாப்புலர் ஃப்ரண்ட் வண்மையாக கண்டிக்கிறது

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவதையும் நித்தம் நித்தம் சிறை பிடிக்கபட்டு வருவதையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வண்மையாக கண்டிக்கிறது.