நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 7 டிசம்பர், 2011

டிசம்பர் 6ஐ "வெற்றித் திருநாளாக" கொண்டாடப்படுவதை தடுக்க வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட்


 
பாபரி மஸ்ஜிதி இடிப்பு என்பது மதச்சார்பற்ற கொள்கையை பரைசாற்றிக்கொண்டிருந்த நமது நாட்டிற்கு ஏற்பட்ட மிகப்பெரும் அடியாகும். சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்து கொண்டிருந்த இந்திய மக்களிடையே மத துவேசத்தை ஏற்படுத்துவதற்காக சங்கப்பரிவார மதவெறியர்கள் திட்டமிட்டு பாபரி மஸ்ஜிதை இடித்து தரைமட்டமாக்கினார்கள். இந்த மாபெரும் பாதகச்செயல் நமது தேசத்திற்கும் ஏற்பட்ட மிகப்பெரும் களங்கமாகும். உலக நாடுகளுக்கு மத்தியில் பாபரி மஸ்ஜித் இடிப்பு சம்பவம் இந்திய நாட்டிற்கு பெருத்த தலைகுனிவை ஏற்படுத்தியது.

பரஸ்பர புரிந்துணர்வு, சமூக நல்லிணக்கத்தோடு வாழ்ந்த இந்திய மக்களிடையே தவறான புரிந்துணர்வு, மத மோதல்களை ஏற்படுத்தும் விதமாக பாபரி மஸ்ஜித் இடிப்பு சம்பவம் மாற்றியது. அப்போது ஆட்சி செய்து கொண்டிருந்த காங்கிரஸ் கட்சியின் பிரதமர் நரசிம்ம ராவ் முஸ்லிம்களுக்கு அதே இடத்தில் மீண்டும் பாபரி மஸ்ஜித் கட்டித்தரப்படும் என்று வாக்குறுதி அளித்திருந்தார். ஆனால் மத்திய அரசு தான் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. அதற்கான எந்த ஒரு முயற்ச்சியிலும் அவர்கள் ஈடுபடாமல் நம்பிக்கி துரோகம் செய்துள்ளது. மத்திய அரசாங்கத்தினாலேயே ஏற்படுத்தப்பட்ட லிபர்ஹான் கமிஷனும் விசாரணை செய்து 16 ஆண்டுகளுக்கு பிறகு 68 நபர்கள் மீது குற்றம் சாட்டி அதன் அறிக்கையை அரசிடம் சமர்பித்த போதும், குற்றவாளிகளுக்கு எதிராக எந்த ஒரு நடவடிக்கையை மேற்கொள்ளாமல் மெத்தனம் காட்டி வருகிறது.
  
ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6ம் தேதியை ஃபசிஸ மதவெறியர்கள் "வெற்றித் திருநாளாக" கொண்டாடி வருகின்றனர். பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி அந்நாளில் இனிப்பு வழங்கி கொண்டாடி வருகின்றனர். ஆனால் சட்ட ஒழுங்கு பிரச்சனை என்று கூறி முஸ்லிம் சமூகமும், மதச்சார்பற்ற இன்ன பிற மதத்தவர்களும் ஜனநாயக முறையில் அமைதியாக டிசம்பர் 6ஐ "கருப்பு தினமாக" அனுசரித்து போராட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்துவதிலிருந்து தடுக்கப்பட்டு வருகின்றனர்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக நீதிக்காவும் அதே சமயம் அநீதியை எதிர்த்து போராடி வருகிறது. பாபரி மஸ்ஜித் இடிப்பை கண்டிக்கும் முகமாக ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6ஆ தேதி அன்று சுவரோட்டிகள், விழிப்புணர்வு பிரச்சாரங்களை நடத்தி வருகிறது. இதன் மூலம் மத தூவெசத்தை ஏற்படுத்த நினைக்கும் வகுப்புவாத சக்திகளுக்கு எச்சரிக்கை விடும் வகையில் பணிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மேற்கொண்டு வருகிறது.

நேற்றைய தினம் டிசம்பர் 5ஆம் தேதி அன்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஆந்திர மாநில தலைவர் முஹம்மது ஆரிஃப் அஹமது மற்றும் பலர் பிரதமர் மன்மோஹன் சிங் அவர்களுக்கு ஹைதராபாத் மாவட்ட ஆட்சியர் மூலமாக நினைவு பத்திரம் வழங்கி, கீழ் கண்ட கோரிக்கைகளை விடுத்துள்ளார்.

1. வகுப்புவாத சக்திகள் டிசம்பர் 6ஐ "வெற்றித் திருநாளாக" கொண்டாடப்படுவதை தடுத்து நிறுத்த வேண்டும்.

2. பாதிக்கப்பட்ட முஸ்லிம் சமூக மக்களும் இன்ன பிற சமுதாயத்தவரும் டிசம்பர் 6ஆம் தேதியை கருப்பு தினமாக அனுசரித்து ஜனநாயக முறையில் போராட்டங்களை நடத்துவதற்கு அனுமதி அளிக்க வேண்டும்.

3. மத்திய அரசு ஏற்கனவே கொடுத்த வாக்குறுதியின் அடிப்படையில் பாபரி மஸ்ஜிதி இருந்த அதே இடத்தில் மீண்டு மஸ்ஜித் கட்டப்பட வேண்டும்.

4. லிபர்ஹான் கமிஷனின் விசாரணையின்படி பாபரி மஸ்ஜித் இடிப்பில் ஈடுபட்ட, அறிக்கையில் குறிப்பிடப்பட்ட 68 குற்றவாளிகளுக்கும் முறையான தண்டனை வழங்கப்படவேண்டும்.

பாபரி மஸ்ஜிதின் நினைவலைகளை மக்களுக்கு ஏற்படுத்தும் வகையில் மாநிலம் முழுவதும் போஸ்டர் பிரச்சாரங்கள் செய்யப்பட்டுள்ளதாக முஹம்மது ஆரிஃப் அஹமது தெரிவித்தார். மேலும் மாநிலம் முழுவதும் பாபரி மஸ்ஜிதின் உண்மை வரலாற்றை மக்களுக்கு எடுத்துரைக்கும் விதமாக கருத்தரங்குகள் நடைபெறும் என்று தெரிவித்தார்.

D.S. HABIBULLAH
General Secretary
Popular Front of India
Andhra Pradesh
Cell: 9985931301