நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 9 டிசம்பர், 2011

ஏழை சகோதரருக்கு மீன்பாடி வண்டியை வழங்கியது பாப்புலர் ஃப்ரண்ட்

சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாடு திட்டத்தின் கீழ் சென்னையில் ஏழை முஸ்லிம் சகோதரர் ஒருவருக்கு அவரது கோரிக்கையின் அடிப்படையில் அவருக்கு மீன் பாடி வண்டி வழங்கப்பட்டது.



சென்னை கொடுங்கையூர் பகுதியில், ராஜரத்தினம் நகரில் வசித்து வருபவர் காதர் பாஷா. சாயப்பட்டறையில் கூலி தொழில் செய்து வரும் இவருக்கும் இரண்டு பெண்குழந்தை, ஒரு ஆண் குழந்தை, தாயார் மற்றும் மனைவியுடன் வசித்து வருகிறார். தினக்கூலியாக ரூபாய் 170/- மட்டுமே சம்பாதித்து கொண்டிருக்கும் இவருடைய ஏழ்மை நிலையால சிறமப்பட்டுள்ளார்.  சென்னை பாப்புலர் ஃப்ரண்டின் நிர்வாகிகளை சந்தித்து தனக்கு உதவுமாறு கேட்டதன் அடிப்படையில் அவரது கோரிக்கையை ஏற்று  அவரது வறுமை நிலையை சீர்படுத்துவதற்காக மீன்பாடி வண்டி வழங்கப்பட்டது. சென்னையில நடைபெற்ற‌ சமூக நீதி மாநாட்டிற்கான தெருமுனை பிரச்சாரத்தின் போது சென்னை மாவட்ட தலைவர் சகோதரர் நாஜிம் அவர்கள் மீன்பாடி வண்டிக்கான சாவியை வழங்கினார். சமூகத்தை மேம்படுத்துவதற்கான துறையை துவக்கி அதன் மூலம் பல்வேறு நலதிட்ட உதவிகளை இந்தியா முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா செய்து வருவது குறிப்பிடத்தக்கது.