1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி ஃபாசிஸ பயங்கரவாதிகளாள் 600 ஆண்டுகாலம் பழமைவாயந்த பாபரி மஸ்ஜித் இடித்து தரைமட்டமாக்கப்பட்ட நிகழ்வு இந்திய மதச்சார்பின்மைக்கு எதிராக நடத்தப்பட்ட மிகப்பெரும் தாக்குதலாகும். ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6ஆம் தேதியை "ஃபாசிஸ எதிர்ப்பு தினமாக" அனுசரித்து வருகிறது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா. இந்த வருடமும் டில்லி ஜந்தர் மந்தர் உட்பட தேசம் முழுவதும் பல்வேறு இடங்களில் தர்ணா மற்றும் விழிப்புணர்வு பிரசாரங்கள் மேற்கொள்ளவிருக்கிறது .இது தொடர்பாக இன்று வெளியிடப்பட்டுள்ள பத்திரிகை அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட விவகாரத்தை விசாரிப்பத்தற்காக அரசாங்கம் ஏற்படுத்திய லிபர்ஹான் கமிஷன் தனது அறிக்கையை 17 ஆண்டுகள் கழித்து வெளியிட்ட பின்னரும் அரசியல் லாபத்திற்காக குற்றவாளிகளை தண்டிப்பதில் மெத்தனம் காட்டி வருகிறது மத்திய அரசாங்கம். கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் அலஹாபாத் உயர் நீதிமன்றம் பாபரி மஸ்ஜித் இருந்த இடத்தை மூன்று பங்காக பிரித்து அதில் ஒரு பங்கை முஸ்லிம்களுக்கு வழங்குவதாக கூறியது. இது மஸ்ஜிதை இழந்த முஸ்லிம் சமூகத்தினருக்கு மீண்டும் காயத்தை ஏற்படுத்தியது. இது அநீதியான தீர்ப்பு என்று சட்டத்திற்கு புரம்பானது என்றும் கூறி இந்த தீர்ப்பை நிராகரித்தது உச்ச நீதிமன்றம். தற்போது இதன் வழ்க்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது.
பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நீதி வழங்கப்பட வேண்டும் என்ற போராட்டக்களத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா முன்னின்று செயல்பட்டு வருகிறது. பாபரி மஸ்ஜிதை அதே இடத்தில் புணர் நிர்மானம் செய்ய வேண்டும் என்றும் அதனை இடித்த குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்தி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பல்வேறு போராட்டங்களையும், நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறது.
"பாபரி மஸ்ஜித் - என்றும் நம் நினைவில்" என்ற தலைப்பில் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 6ஆம் தேதி அன்று பல்வேறு நிகழ்ச்சிகளை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தி வருகிறது.
பாபரி மஸ்ஜித் பற்றிய போதிய விழிப்புணர்வு இல்லாத பகுதிகளில் பாபரி மஸ்ஜித் மீட்கப்பட வேண்டும் என்பதை உணர்த்தும் வகையிலும், மதச்சாற்பற்று விழங்கும் இந்திய தேசத்திற்கு எதிராக ஃபாசிஸ சக்திகள் மேற்கொள்ளும் சூழ்ச்சிகளை விளக்கியும் நாம் நடத்தும் நிகழ்ச்சிகளில் ஏராளமான மக்கள் பங்கேற்று வருகின்றனர்.
இச்சூழ்நிலையில் பாபரி மஸ்ஜித் இடிப்பு தினமான டிசம்பர் 6 ஐ முன்னிட்டு புதுடெல்லி ஜந்தர் மந்தரில் காலை 11.00 மணி முதல் பகல் 2.00 மணி வரை மாபெரும் தர்ணா போராட்டம் நடைபெற இருக்கிறது. இந்தப்போராட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான் உட்பட பல்வேறு அரசியல் பிரமுகர்கள், சமூக ஆர்வளர்கள் கலந்து கொள்ள இருக்கின்றனர். என பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக செய்தி வெளியிடப்பட்டுள்ளது.
Attachment | Size |
---|---|
Babar Masjid Tamil Press Release 5.12.2011.pdf | 40.16 KB |