நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 29 ஜனவரி, 2012

எஸ்.டி.பி.ஐ நடத்திய மாபெரும் கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்

கடையநல்லூர் :  கடையநல்லூரில் சோஷியல் டெமாக்ரடிக் கட்சி (SDPI) சார்பில் கொள்கை விளக்க பொது கூட்டம் நேற்று மாலை 7 மணியளவில் ஷஹீத் பழனி பாபா நுழைவாயிலாகிய காயிதே மில்லத்  திடலில் தொடங்கியது.  இக்கூட்டம் நெல்லை மேற்கு SDPI - யின் மாவட்ட பொதுச்செயலாளர் யாசர்கான் அவர்களின் தலைமையில் நடைபெற்றது. 





இதில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றிய SDPI - யின் மாநில பொதுச்செயலாளர் ஜனாப் V.M.S.முகம்மது முபாரக் அவர்கள் வீர முழக்கமிடும் போது இஸ்லாமியர்களிடம் அரசியல் அதிகாரம் இல்லாததன் காரணத்தால் எல்லா துறைகளிலும் புறக்கணிக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், இன்ஷா அல்லாஹ் SDPI ஆட்சிக்கு வந்தால்தான் இஸ்லாமியர்கலுக்கு நீதி கிடைக்கும் என்றும் அவர் தெரிவித்தார். மேலும் பாபரி மஸ்ஜித் இடிப்புக்கு எந்த ஓர் அரசியல் கட்சியும் நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டுத்தொடரில் குரல் கொடுக்காமல் மவுனமாக இருந்தது மிகவும் வேதனைப்பட வேண்டிய விசயமாக இருக்கிறது என்றும் அவர் தெரிவித்தார்.


இதனைத்தொடர்ந்து பேசிய SDPI - யின் தமிழ் மாநில தலைவர் K.K.S.M . தெஹ்லான் பாக்கவி அவர்கள், சில சமுதாய மக்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளை தடுக்கவும் மற்றும் அவர்களை இவைகளிலிருந்து மீட்டெடுக்கவும் தான் இந்த SDPI கட்சி உருவாக்கப்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மேலும் இந்திய நாட்டு அனைத்து மக்களையும் ஒருங்கிணைக்க SDPI கட்சியால் மட்டும்தான் இயலும் என்றும் அவர் தெரிவித்தார். 


பரமக்குடியில் தலித் மக்கள் படுகொலைக்கு ஆளாக்கப்பட்டு வருகிறார்கள் என்றும், ஆனால் இவற்றை தடுக்காமல் மன்மோகன்சிங் அரசானது மக்கள் விரோத அரசை நடத்தி வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். SDPI கட்சி ஆரம்பித்து இரண்டு வருடங்களில் 2 தேர்தல்களை சந்தித்துள்ளது என்றும், அவற்றில் 300 இடத்தில் போட்டியிட்டு 60 இடங்களை கைப்பற்றி உள்ளோம் என்றும் இந்த வெற்றியானது காசு கொடுத்துபெற வில்லை என்றும், நாங்கள் கொள்ளையடிக்கும் கூட்டம் இல்லை என்று மக்கள் விளங்கியதன் காரணத்தால் தான் இந்த நிலையை நாங்கள் அடைந்தோம் என்றும் அவர் தெரிவித்தார். 


இதில் நெல்லை மேற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாவட்ட தலைவர் J.ஜாபர் அலி உஸ்மானி, SDPI - யின் நகர செயலாளர் I.M.பாதுஷா, நகர தலைவர் S.நயினா முகம்மது(எ) கனி ஆகியோர் கலந்து கொண்டனர்.


இக்கூட்டத்திற்கு ஏராளமான பொது மக்கள் வருகை தந்து அரசியல் எழுச்சி பெற்றனர்.