கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சினையை முன்வைத்து இந்து முன்னணிக் கூட்டம் மதக் கலவரத்தை உருவாக்கிட திட்டமிட்டே கலவரத்தில் ஈடுபட்டுள்ளது. இதனால் மதக் கலவரம் வெடிக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதை முளையிலேயே கிள்ளி எறியவேண்டும். தமிழக அரசு மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள் தமது அறிக்கையில் விளக்கியுள்ளார். அறிக்கை வருமாறு: கூடங்குளம் அணுஉலைக் கூடத்திற்கு எதி ரான போராட்டங்களை அப்பகுதி கிராம மக்களும், சமூக ஆர்வலர்களும் அறப்போராட்டமாக நடத்தி வருகின்றனர்.
கூடங்குளம் அணு உலையை மூட வேண்டும் என்ற அவர்களது கோரிக்கையில் நியாயம் இல்லை; அச்சம் ஆதாரமற்றது. சுனாமியே வந் தாலும்கூட அந்த அணு உலையால் அப்பகுதிவாழ் மக்களுக்குப் பாதிப்பு வராத அளவுக்கு அது பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளது என்று மத்திய அரசு தரப்பில், வல்லுநர்களையும், மேனாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் போன்ற விஞ்ஞானிகளையும் அழைத்து விளக்கிடச் சொல்லி பல்வேறு முயற்சிகளையும் செய்கின்றனர்!
இந்து முன்னணி வெறியாட்டம்!
நேற்று நெல்லையில் மத்திய நிபுணர் குழு வினர் வந்து, போராட்டக் குழுவினரை அழைத்து அவர்களுக்கு விளக்கிடவும் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது.
அதில் கலந்துகொள்ளச் சென்ற அணு உலை எதிர்ப்பாளர்கள் குழுவினரை நோக்கி ஒரு சிறு இந்து முன்னணி குழுவினர் வன்முறை வெறி யாட்டத்தில் ஈடுபட்டு, கம்பால் அடித்தும், செருப்பால் அடித்தும் மிக மோசமாக நடத்தி யுள்ளார்கள்; பெண்களைக்கூட மிகக் கேவலமாகப் பேசி, அவர்களையும் தாக்கிய காட்சி தொலைக் காட்சிகளில் பதிவாகி ஒளிபரப்பப்பட்டுள்ளது.
மாறுபட்ட கருத்துள்ளவர்களை அழைத்து, அவர்களது நியாயமான சந்தேகங்களுக்கு வல்லுநர் குழு தகுந்த விளக்கம் அளித்து, கூடங் குளம் அணுமின் நிலையத்தை மீண்டும் போதிய பாதுகாப்புடன் இயங்கச் செய்யும் முயற்சிக்கு குந்தகம் விளைவிக்கும் வண்ணம் இப்படி இந்து முன்னணி என்ற இந்த காலிக் கும்பல் கலவரம் - வன்முறையில் ஈடுபட்டது எவ்வகையில் நியாய மானது?
காரணம் அந்தப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சிறுபான்மை கிறித்துவர்கள் என்ற பார்வையோடு, அப்போராட்டத்திற்கு மதச் சாயம் பூசி மதக் கலவரங்களை அப்பகுதியில் உருவாக் கிக் குளிர்காயலாம் என்ற திட்டமிட்ட ஏற்பாடே யாகும்!
காவல்துறை தடுத்திருக்க வேண்டாமா?
இவர்களுக்கு எப்படி நெல்லை காவல்துறை அனுமதி அளித்தது? அங்குள்ள உளவுத் துறை இதனை முன்கூட்டியே அறிந்து சட்டம் ஒழுங் கைப் பராமரிக்கும் காவல்துறைப் பிரிவுக்கு எச்சரிக்கை விடுத்து தடுத்திருக்கவேண்டாமா?
மதக் கலவரமாக வெடிக்கும் அபாயம்!
இது நெல்லையோடு முடிந்து போகுமா? இந்தத் தாக்குதல், வன்முறையால், வந்த குழுவின் பணியும் நிறைவேற முடியாததோடு பிரச்சினை வேறு வகையில் மதக் கலவரமாக வெடிக்கும் அபாயமும் ஏற்பட்டுள்ளதே!
மற்றொரு மண்டைக்காடு கலவரங்களை உருவாக்க முயற்சிக்கிறது இந்து மதவெறிக் கும்பல் என்றால், அதனை அரசும், காவல்துறையும் தங்களது மென்மையான அணுகுமுறைமூலம் வரவழைத்துக் கொள்ளலாமா?
மதச்சாயம் பூசுவதா?
அணு சக்தி மின்சாரம் என்பதுபற்றி பல்வகைக் கருத்துகள் உண்டு. இன்றுள்ள மின் தேவைகளைப் பூர்த்தி செய்ய அணுமின் சக்தியை அறவே புறக்கணிக்க முடியாது. காரணம், மற்ற அனல், புனல், காற்று, சூரிய ஒளி வழி - இவைகளுக்குள்ள வாய்ப்புகளும், மாற்று ஏற்பாடுகளும், இதனுடன் ஒப்பிடும்போது அவ்வளவு எளிதாக அமைய முடியாது என்ற கருத்தும், வாதமும் எதிர்கொள்ள முடியாது என்பது வேறு. ஆனால், அதற்காக இதற்கு மதச் சாயம் பூசி, மதக் கலவரங்களுக்கு வித்திடுவதா? வன்முறை பதிலாகுமா?
கடலோரக் கிராமங்களில் (கன்னியாகுமரி பகுதியில்) இச்செய்தி பரவியவுடன் மாதா கோவில்களின் மணி அடிக்கப்பட்டு - மக்கள் திரண்டுள்ளார்கள் என்று (ஆங்கில நாளேட்டில்) இன்று செய்தி வெளியாகியுள்ளது!
தமிழக அரசு கிள்ளி எறியவேண்டாமா?
தமிழக அரசு இத்தகைய கலவரங்கள் பொறியாகப் புறப்படும்முன்பே அத்தகைய வன்முறையாளர்கள்மீது சரியான தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து முளையிலேயே கிள்ளி எறியவேண்டும்.
தமிழ் மண்ணை காவி மயமாக்க...
இன்றேல் கடும் விலையை ஒட்டுமொத்த தமிழ்நாடும் கொடுக்கவேண்டிய நிலையல்லவா! மதக்கலவரங்களாக இதனை மாற்றி, குழம்பிய குட்டையில் மீன் பிடித்து, தமிழ் மண்ணை காவி மயமாக்கும் கனவை நிறைவேற்றவே மதவெறியர்கள் முயற்சிப்பார்கள்.
அணு உலை எதிர்ப்பாளர்களாயினும், ஆதர வாளர்களாயினும் எவரும் சட்டத்தைக் கையில் எடுதுகதுக்கொள்ள ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது.
அரசு மிகுந்த கவனத்துடன்...
நேற்றைய வன்முறைத் தாக்குதல், பிரச் சினையை திசை திருப்பி விரும்பத்தகாத விளைவு களை ஏற்படுத்தக் கூடும் ஆதலால், அரசுகள் இதில் மிகுந்த கவனத்துடன் நடந்துகொள்ள வேண்டும்.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழக
தலைவர்,
திராவிடர் கழக