நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 2 பிப்ரவரி, 2012

உலக நாடுகளின் குப்பை தொட்டியா இந்தியா?


தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் பகுதி மலைகிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள் மா, கொய்யா உள்ளிட்ட மரக்கன்றுகளை பயிரிட்டுள்ளனர்.சமவெளியாக இல்லாத இந்த மலை பகுதிகளில் மரங்களுக்கு  தண்ணீர் பாய்ச்ச நூதன முறையை கடைபிடித்து வருகின்றனர்.



இவர்கள் வளர்க்கும் ஒவ்வொறு கன்றுகளுக்கு அருகில் ஒரு மண் பானையை வைத்து நீரை நிரப்புகின்றனர். பானையின் கீழ் பகுதியில் சிறு துவாரம் போட்டு விடுகின்றனர்.


இதன் மூலம் தண்ணீர் சொட்டு சொட்டாக மரக்கன்றுகளுக்கு செல்கிறது. இதனால் மரக்கன்று நடப்பட்ட இடம் எப்போதும் ஈரமாகி செடி வளர உதவுகிறது. சொட்டு நீர் பாசனம் போல் செயல்படும் இதற்கு குறைந்த அளவே பணம் செலவு ஆவதுடன் மின்சாரம் வசதி தேவையில்லாததால் விவசாயிகள் இந்த முறையை ஆர்வத்துடன் பின்பற்றி வருகின்றனர்.

இப்படி நாட்டை வளப்படுத்த விவசாயிகள் மரம் வளர்த்து, விவசாயம் செய்து மண்ணையும், வளங்களையும், சுகாதாரத்தையும் பாதுகாக்கிறார்கள். ஆனால் மன்மோகன் சிங் அரசோ நாட்டின் கனிமவளங்களை சுரண்டி இந்தியாவை அந்நிய முதலாளிகளின் குப்பை கூடையாக மாற்ற திட்டம் தீட்டுகிறது.
சத்தீஸ்கர் மாநிலத்தில் கனிமவளங்களை சுரண்ட காட்டு வேட்டை ஆடுகிறது.கூடங்குளத்தில் அணு மின்நிலையம் திறந்து கடலை நம்பி வாழும் மக்களின் வயிற்றி அடிக்க முயற்சி செய்கிறது. கூடங்குளம் அணு உலை ஒன்று மட்டும்தான் என்று எண்ணி விடாதீர்கள். இது முடிந்ததும் நாடு முழுவதும் 40 அனுவுலைகளை அமைக்க அந்நிய கார்பரேட் நிறுவனங்கள் ஒப்ந்தத்துடன் காத்துக்கிடக்கின்றன. இனி மாவட்டம் தோறும் அனுவுலைகள்தான்.
இந்தியாவுக்கு வந்திருப்பது வல்லரசு என்கிற தாகம்இந்த தாகம் எடுத்தவர்கள் தாகத்துக்கு அருந்துவது எல்லாம் மனித இரத்தங்களைத்தான். இந்த தாகத்தின் காரணமாக ஈழத்திலே ஒன்றரை இலட்சம் மக்களை கொன்று குவித்தார்கள். ஈழத்து இன அழிப்புக்கு சிங்கள காடையர்களுக்கு ஆயுதம் கொடுத்து உதவிய புண்ணிய ஆத்மாக்கல்தான் இந்த காந்திய வழி கதர் சட்டைக்காரர்கள். காஷ்மீரில் படர்வது பனிமட்டும் அல்ல இந்த கயவர்களின் அடக்குமுறையும் அழித்தொழிப்பும்தான்.
ஒருபுறம் ஹிந்துத்துவா உண்டாக்க நினைக்கும் மதவாதம் மறுபுறம் கார்பெரெட் முதலாளிகளின் சகவாசம் என்று நாட்டின் வளர்ச்சியை நாசம் செய்கிறார்கள். இந்தியா என்கிற பூஞ்ச்சோலை அணு உலைகளால் சோமாலியாவாக மாறப்போகிறது. உலக நாடுகளில் அனுமதி மறுக்கப்படும் அல்லது கழிவுகளை வெளியாக்க, அவைகளை சுத்திகரிப்பு செய்ய ஆகும் செலவுகளை சமாளிக்க கார்பரேட் நிறுவனங்கள் தேர்ந்தெடுத்திருக்கும் சொர்க்க பூமிதான் ( குப்பை கூடைதான்) இந்தியா.  உலக நாடுகளின் குப்பை தொட்டி இந்தியா என்று சொன்னால் மிகையாகாது.