கடந்த 2006 ஆண்டு உத்திரப் பிரதேச மாநிலம் வாரனாசியில் 3 இடங்களில் குண்டுவெடிப்பு, 2006ல் மும்பை இரயில்களில் 7 குண்டு வெடிப்புகள், 2006 மஹாராஷ்ட்ரா மாநில மாலேகானில் மசூதியில் நடந்த குண்டுவெடிப்புகள், 2007 ஹைதராபாத் பூங்காவில் இரட்டை குண்டு வெடிப்புகள், 2008 ஜெய்ப்பூரில் சைக்கிள் குண்டு வெடிப்புகள், 2008 பெங்களுர் குண்டு வெடிப்புகள். இன்று 2008 செப்டம்பர் மாதம் தலைநகர் டெல்லியிலோ 6 இடங்களில்....இப்படி நாசகார செயல்களினால் பலியெடுக்கப்பட்ட மனித உயிர்கள் பல நூறுகளைத் தாண்டும்.
இக்குண்டுவெடிப்புகள் அனைத்தும் ஒரே ஒரு தகவலைத்தான்; சொல்லும். அது குண்டு வெடிப்புகள் நிகழ்ந்த மறுகனமே பயங்கரவாதி அத்வானி சின்னத்திரைகளில் தோன்றுவார். குண்டு வெடிப்புக்கு பாக்கிஸ்தானில் லஷ்க்கரே தைய்யியா அல்லது இல்லாத சிமி அமைப்பே காரணம் என்பார். அப்படியே ஆளும் காங்கிரஸ் அரசை ஒரு பிடிபிடிப்பார். வழக்கம் போல அப்பாவி முஸ்லிம்கள் நாடுமுழுவதும் சிறைவைக்கப் படுவார்கள். வெடிகுண்டு சோதனை என்ற பெயரால் முஸ்லிம்கள் சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு, நாடே அமளிதுமளியாகும். இதுதான் நம் சுதந்திர இந்தியாவின் இன்றைய நிலை.
தேசபிதா காத்தியடிகளை கொலைசெய்த, சங்பரிவார வெறியனும் தேசதுரோகியுமான கோட்சே தனது கைகளில் இஸ்மாயில் என்ற முஸ்லிம் பெயரை பச்சைகுத்திக் கொண்டும், முஸ்லிம்களைப் போல கத்னாவும் செய்திருந்தான் என்பது நிரூபிக்கப்பட்ட வரலாற்று உண்மை. காரணம் காந்தியடிகளை கொலைசெய்தது ஒரு முஸ்லிம் என்று வாதந்தியைப் பரப்பி முஸ்லிம்கள் மீது பழியைப் போட்டு, ஒட்டு மொத்த தேசத்தையே முஸ்லிம்களுக்கு எதிராகத் திருப்பலாம் என்று திட்டமிட்டனர் அன்றைய சங்பரிவார கொலை வெறியர்கள்.ஆனால் குள்ளநரிகளின் சாயம் மிக விரைவிலேயே வெளுத்து, சங்பரிவாரத்தின் கோரக் கொலைவெறி முகத்தை நாடே கண்டு அதிர்ந்தது.
தேசத்துரோகி கோட்சேயின் அதே பர்முலாவை கையாண்டு, அவனது வாரிசுகளான இன்றைய சங்பரிவார பிஜேபியினர் முஸ்லிம்களுக் கெதிராக தொடர்ந்து சூழ்ச்சிகளை செய்து வருகின்றனர். அத்தகைய சூழ்ச்சிகளில் ஒன்றுதான் இவர்கள் நடத்தும் தொடர் குண்டு வெடிப்புகள். இதற்கோர் சிறந்த உதாரணம் கடந்த 2006ல் நடந்த மாலேகான் குண்டுவெடிப்புகள். மாலேகான் மசூதியில் முஸ்லிம்கள் வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகை நடத்திக் கொண்டிருக்கும் தருணத்தில் பிஜேபியினர் குண்டுகளை வெடிக்கச் செய்தனர். மசூதிக்குள் குண்டுகளை வைத்தது முஸ்லிம்கள்தான் என்று ஊடகங்கள் திரிபுவாதம் பண்ணுவதற்கு வசதியாக தொப்பிகளையும், ஒட்டுதாடிகளையும் அவ்விடத்தில் விட்டுச்சென்றனர்.
இதை போலத்தான் குஜ்ராத்திலும். ஓடிய ரயிலை தாங்களாகவே கொளுத்திவிட்டு பழியை முஸ்லிம்கள் மீது போட்டு, பல்லாயிரக் கணக்கான முஸ்லிம்களின் உயிரை நரவேட்டையதும், முஸ்லிம் பெண்களை கற்பழித்ததும், அவைகளைத் தொடர்ந்து டெகல்கா பத்திரிக்கை இவர்களது கோரமுகத்தை கிழித்ததும் நாடே அறியும்.
கடந்த 4 வருடங்களின் காங்கிரஸ் தலைமையிலான மத்திய ஆட்சி (முஸ்லிம்களுக்கு தனிஇடஒதுக்கீடு அளிக்காமை, அமெரிக்காவுடன் அனு ஒப்பந்தம் ஆகியவைகளைத் தவிர்த்து) பெரிய அளவில் குறைசொல்ல முடியாத அளவிற்கு நல்லதொரு ஆட்சியாக உள்ளது. நாட்டின் வளர்ச்சிப்பணிகளுக்கு திட்டங்கள் பல தீட்டி அதில் வெற்றி நடைபோடும் இக்காங்கிரஸ் ஆட்சி இனியும் நீடித்தால், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பிஜேபியினர் எதிர்க்கட்சி இருக்கையில்கூட அமர இயலாத சூழ்நிலை வந்துவிடும். சங்பரிவார பிஜேபியினர் இவைகளை புறிந்துகொண்டதின் கோரவிளைவுதான் தொடரும் இக்குண்டுவெடிப்புகள்.
பெங்களூரில் பிஜேபியினரின் தேசிய செயற்குழு கூடியிருந்த தருனத்தில், தலைநகர் டெல்லியில் குண்டு வெடிப்புகள் நிகழ்த்தப்பட்டு, அதன்பின்னர் தொலைக்காட்சிகளுக்கு முன்னின்று பேட்டி என்ற பெயரில் மெகா சீரியல் நடத்திய பிஜேபி தலைவர்களின் பேட்டிகளைக் கண்ட எவரும் இக்குண்டுவெடிப்பின் பின்னனியிலுள்ள இரகசியங்களைத் தெளிவாக விளங்கிக் கொள்வர்.
பிரதமர் பதவி வெறியில் உறக்கமில்லாமல் சுற்றித்திரியும் ரத்தயாத்திரை புகழ் ரத்தக்காட்டேரி அத்வானி, குண்டு வெடித்த சில மணித்துளிகளிலேயே நாங்கள் ஆட்சிக்கு வந்ததும் பொடா சட்டம் கொண்டு வருவோம் என்று சூளுரைத்தார்.
நரமாமிச உண்ணி நரேந்திரமோடியோ இதற்கு ஒருபடி மேலேபோய்'நாங்கள் 10 நாட்களுக்கு முன்னரே பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு இக்குண்டுவெடிப்புத் தகவல்களை அளித்துவிட்டோம்' என்று படீர் என உண்மையை போட்டு உடைத்தார். உண்மைதான்! குண்டு வைக்க இருப்பவனுக்குத்தானே எப்படி எங்கே எத்தனை குண்டுகள் வெடிக்க இருக்கின்றது என்பது தெரியும். பின்னர் நரேந்திரமோடி தான் வாய்உளறி விட்டதை சுதாரித்துக் கொண்டு 'தேசநலன், தீவிரவாதிகள்' என்று ஏதேதோ சொல்லி நிலமையை சமாளித்தார்.
குஜ்ராத்தில் முஸ்லிம் இனப்படுகொலைகளை நடத்திய நரேந்திர மோடி, அவன் நடத்த இருந்த டெல்லி குண்டு வெடிப்புகளை பற்றி பிரதமருக்கே அளித்த எச்சரிக்கையை உளவுத்துறைகள் கண்டுகொள்ளாமல் கோட்டைவிட்டது ஏனோ? அவ்வாறு அலட்சியம் செய்ததின் விளைவுதான் எமது சகோதரர்கள் 30 பேர்கள் பலியாக்கப்பட்டும், 100ம் அதிகமானோர் மருத்துவமனைகளில் உயிருக்கப் போராடும் துக்கநிலை ஏற்பட்டுள்ளது.
கோப்புகளை மூடுவதற்காக, குண்டுவெடிப்புகளுக்குக் காரணம் லஷ்க்கரே தைய்யியா, அல்லது சிமி என்று கூறி நாட்டு மக்களை இனியும் சமாதானப்படுத்திட இயலாது என்ற முடிவிற்கு வந்த உளவுத்துறையினர், தற்போது இந்தியன் முஜாஹிதீன் என்று ஒரு புதிய திரைக்கதையை இயற்றுகின்றனர். பெங்களூரில் சங்பரிவார தலைவர்கள் கூடியிருந்த அரங்கத்திற்குள் குண்டுகள் வெடித்து, பயங்கரவாதிகள் அனைவரும் உடல் சிதறி செத்திருந்தால், இந்தியன் முஜாஹிதீன் அமைப்பினர் குண்டு வைத்தனர் என்று உளவுத்துறையினர் கற்பனை செய்வதில் ஒரளவு அர்த்தமிருக்கும். நம் இந்தியத் திருநாடு வல்லரசாக ஆகுவதற்கு பெரும் தடையாக இருக்கும் இச்சங்பரிவார குண்டர்கள் தொலையட்டும் என்று இந்தியன் முஜாஹிதீன் பெயரில் யாரோ சிலர்கள் குண்டுகள் வைத்திருக்கின்றனர் என்று நாட்டுமக்களும் நம்பலாம்.
ஆனால் அநியாயமாக ஒர் உயிரைக் கொல்வது ஒரு சமுதாயத்தையே கொலைசெய்வதற்குச் சமம் என்று போதிக்கும் இஸ்லாமிய மார்க்கத்தையும், முஸ்லிம்களையும் உளவுத்துறையினர் இக்குண்டுவெடிப்புகளுக்கு பலிகிடாவாக்குவது என்ன நியாயம்? இதனால் உண்மைக் குற்றவாளிகள் அதிர்ஷ்டவசமாக தப்பிக்கொண்டே வருகின்றனர் என்பதே உண்மை.
இக்குண்டுகள் அமோனியம் நைட்ரேட் வேதிப் பொருட்கள் மூலம் தயார் செய்யப்பட்டதாக அனைத்து தொலைக்காட்சிகளும் செய்தி வெளியிட்டன. நாட்டில் நடக்கும் அனைத்து குண்டு வெடிப்புகளுக்கும் பின்னணியில் இருப்பது இத்தேசதுரோக சங்பரிவார பிஜேபி குண்டர்களே என்பதில் மத்திய அரசுக்கு இனியும் சந்தேகம் இருந்தால், நாக்பூரிலும், மத்திய பிரசேத்திலுள்ள போபாலிலும், செயல்படுகின்ற சங்பரிவார வெறியர்களின் துப்பாக்கித் தொழிற்சாலைகள் மற்றும் ஆயிதக் கிடங்குகளை மத்திய அரசு உடனடியாகக் கைப்பற்றவேண்டும். அப்போது தெரியும் தலைநகரில் வெடிக்கப்பட்ட குண்டுகளுக்கும், இதற்க முன்னர் நடந்த அனைத்து குண்டு வெடிப்புகளுக்கம் அமோனிம் நைட்ரேட் போன்ற வேதிப்பொருட்கள் எங்கிருந்து வந்தது என்று?.
மேலும் சாஹா பயற்சி என்ற பெயரில் ஆண்களுக்கும், துர்காவாகினி என்ற பெயரில் மகளிர் அமைப்புகளையும் உருவாக்கி ஆயுதப்பயிற்சி அளிக்கும் ஆர்.எஸ்.எஸ் குண்டர்களை கைது செய்து, நாடு முழுவதுமுள்ள இவர்களின் அலுவலகங்களை ஒரேநேரத்தில் சோதனை நடத்தினால் இந்தியன் முஜாஹிதீன் என்ற பெயரில் செயல்படுபவர்கள் யார்? என்பதும் வெட்டவெளிச்சமாகும்.
இதில் முக்கியமான ஒன்றையும் தமிழக அரசு கவனத்தில் கொள்ளவேண்டும். குண்டுவெடிப்புகள் நிகழ்ந்த பின்னர் வழக்கமாக ஒரு ஈமெயில் உளாவரும். இன்று டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்குப் பின்னரும் வெளியான முகவரியில்லாத அந்த ஈமெயிலில், டெல்லியைத் தொடர்ந்து சென்னையிலும்;, பெங்களூரிலும் குண்டுவெடிப்புகள் நடத்தப்படும் என்று எச்சரிக்கை விடப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. சென்னையையும் தாக்க இருப்பதாக வெளியான இச்செய்தி உண்மையா அல்லது மிரட்டலா என்பது நரேந்திர மோடிக்கும், பிஜேபியினருக்குமே வெளிச்சம். இருப்பினும் அமைதிப் பூங்காவாம் நம் தமிழக மண்ணில் பிஜேபியினரின் இந்துத்துவ தீவிரவாதத்திற்கு எவரும் பலியாகி விடக்கூடாது. இத்தீவிரவாதிகளின் கோரப்பிடியிலிருந்து மக்களைக் காக்கும் கடமை தமிழக முதல்வர் டாக்டர் கலைஞரையும், தமிழக காவல்த்துறையுமே சாரும்.
தொடரும் குண்டு வெடிப்புகளுக்கு லஷ்க்கரே தைய்யியா, சிமி, இந்தியன் முஜாஹிதீன் என்று இனியும் உளறிக் கொண்டிராமல் உண்மை தீவிரவாதிகளான சங்பரிவார குண்டர்கள் மத்திய மாநில அரசுகள் கைது செய்யுமா? நாட்டில் அமைதி நிலவ வழிவகுக்குமா? பொறுத்திருந்து பார்ப்போம்.