நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 12 ஆகஸ்ட், 2011

பாலிக்ராஃப் சோதனைக்கு தயார் – மலேகான் குண்டுவெடிப்பில் அநியாயமாக குற்றஞ்சாட்டப்பட்ட முஸ்லிம் இளைஞர்கள்


மும்பை: தாங்கள் நிரபராதி என்பதை நிரூபிக்க பாலிக்ராஃப் டெஸ்ட்(பலமுனை வரைவி சோதனை), ப்ரெயின் மேப்பிங் உள்ளிட்ட உண்மை கண்டறியும் சோதனைக்கு தயார் என முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் அநியாயமாக குற்றம் சாட்டப்பட்ட அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் ஒன்பது பேர் நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்டவர்களை விஞ்ஞான ரீதியிலான பரிசோதனைக்கு உள்ளாக்க வேண்டும் என என்.ஐ.ஏ கடந்த வாரம் மோக்கா சிறப்பு நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தது.

செங்கோட்டை தாக்குதல்:ஆரிஃபின் மரணத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிச்செய்தது


புதுடெல்லி: செங்கோட்டை தாக்குதல் வழக்கில் லஷ்கர்-இ-தய்யிபா இயக்கத்தின் உறுப்பினர் என கருதப்படும் முஹம்மது அஷ்ஃபாக் என்ற ஆரிஃபின் மரணத்தண்டனையை உச்சநீதிமன்றம் உறுதிச்செய்துள்ளது.
2000-ஆம் ஆண்டு டிசம்பர் 22-ஆம் தேதி நடந்த செங்கோட்டை தாக்குதல் வழக்கில் டெல்லி விசாரணை நீதிமன்றம் மரணத்தண்டனையை விதித்திருந்தது. இத்தீர்ப்பை டெல்லி உயர்நீதிமன்றமும் உறுதிச்செய்தது.

பொருளாதார முறைகேடு:எடியூரப்பாவின் மீது லோகாயுக்தா எஃப்.ஐ.ஆர் பதிவுச்செய்தது



பெங்களூர்: பொருளாதார முறைகேடு தொடர்பாக முன்னாள் கர்நாடகா முதல்வர் பி.எஸ்.எடியூரப்பா மீது லோகாயுக்தா போலீஸ் எஃப்.ஐ.ஆர் பதிவுச் செய்துள்ளது.
சட்டவிரோத சுரங்கத் தொழில், நிலபேர ஊழல் ஆகிய குற்றச்சாட்டில் சிக்கியிருக்கும் எடியூரப்பாவிற்கு இவ்வழக்கு மீண்டும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

முஸ்லிம்கள் பார்வையில் தெலுங்கானா


ஆந்திர மாநிலத்தில் இருந்து தெலுங்கானா பகுதியைப் பிரித்து தனி
மாநிலமாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தும் போராட்டங்கள் அறுபது ஆண்டுகளாகநடந்து வருகின்றன.ஆளும் வர்க்கம் இதற்குச் செவி சாய்க்க மறுத்து வந்தது. இன்றோஅலட்சியப்படுத்த முடியாத அளவுக்குப் போராட்டம் தீவிரமடைந்ததால் வேறு வழியின்றிதனித் தெலுங்கானா மாநிலம் அமைக்கப்படும் என்று மத்திய அரசு உறுதியளித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை தற்காலிகமாகச் சமாதானப்படுத்தியுள்ளது.


வ.உ சிதம்பரம் பிள்ளை க்கு உதவிய வள்ளல்


சுதேசி ஸ்டீம் நேவிகேசன்

இந்திய சுதேசி வர்க்ககத்தின் லட்சியக் கனவான 'சுதேசி ஸ்டீம் நேவிகேசன்' - என்ற சுதேசிக் கப்பல் கம்பெனியை வ.உ சிதம்பரம் பிள்ளை 16-10-1906 - இல் நிறுவினார். இந்நிறுவனத்திற்கு பங்குதாரர்களைச் சேர்க்கும் முயற்சியில் அவர் இறங்கியபோது அவருக்கு நம்பிக்கைக் கரம் நீட்டியவா ஹாஜி ஏ.ஆர். பக்கீர் முகம்மது சேட்ஆவார்.

NRI வாக்காளர்களுக்கான விண்ணப்பப் படிவம்

UAE Vacancies in Oilfield private


Please note that the following immediate vacancies exists in Oilfield private, Abu Dhabi , UAE .
1. Project Engineers - 2 nos – Mechanical Engineer with excellent academics , good working knowledge & experience in Fabrication , Welding , Assembly , Hydraulics etc. Good computer skills . Renumeration package : AED. 10,000 / – ( Complete ) , Medical , Transportation , Yearly paid leave , To & fro annual ticket to the home country .
2. Production / Workshop Manager – 1 no – Mechanical Engineer with excellent academics , good working knowledge & years of experience in Fabrication , Welding , Assembly , Hydraulics etc. Good computer skills . Renumeration package : AED. 20,000 / – to AED. 25,000 / – , Accomodation , Family Status , Medical , Transportation , Yearly paid leave , To & fro annual ticket to the home country .
Please forward cvs of our brothers for immediate deployment . Free visa . Interview will be either live or telephonic .
Mail to : Rasheed Ahmed [mailto:rasheedz@yahoo.com]

வியாழன், 11 ஆகஸ்ட், 2011

முஸ்லிம்களுக்கு இடஓதுக்கீடு அதிகரிக்க வேண்டும் சட்டசபையில் ம.ம.க. கோரிக்கை


2011-12க்கான திருத்திய நிதி நிலை அறிக்கை குறித்த விவாதத்தின் போது ஆகஸ்ட் 11 அன்று தமிழக சட்டமன்றப் பேரவையில் மனிதநேய மக்கள் கட்சியின் தலைவரும் இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினருமான முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா ஆற்றிய உரை

மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே
நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியை பெற்றது போல் அதிமுக அரசு தாக்கல் செய்துள்ள 2010-11க்கான நிதி நிலை அறிக்கை வரலாற்றுச் சிறப்புமிக்கதாக அமைந்துள்ளது. கண்ணும் கருத்துமாக செயல்பட்டு தமிழகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் பலன் அளிக்கும் வகையில் ஒரு சிறந்த நிதி நிலை அறிக்கையை மாண்புமிகு நிதி அமைச்சர் அவர்கள் அளிப்பதற்கு  அட்சரமாக இருக்கும் எங்கள் அன்புச் சகோதரி  மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் எனது நெஞ்சார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

புதன், 10 ஆகஸ்ட், 2011


பாப்புலர் ஃப்ரண்ட் சமூக மேம்பாடு திட்டம் 2011-2012 - ஒரு பார்வை

Wednesday, July 13th, 2011

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அனைத்து ஒடுக்கப்பட்ட சமூகத்தையும் சக்திபடுத்துவது மூலமே தேசத்தை சக்திபடுத்த முடியும் என்ற நோக்கத்ததை கொண்ட ஒரு புதிய சமூக இயக்கமாகும். இந்த இயக்கம் அதிகமாக முஸ்லீம் சமூகத்தின் முன்னேற்றத்திற்காக பாடுபட்டாலும் மற்ற பின்தங்கிய மற்றும் சமூகத்தின் சிறுபான்மை பிரிவுகளையும் இணைத்து செயல்படும் அமைப்பாகும். இது ஒரு சமூக மாற்றத்தை நோக்கி பயனிக்கும் இயக்கமாகும்.

மருதுபாண்டியரின் போர்ப் படைத் தளபதிகளில் முதன்மையானவர்கள் முஸ்லிம்கள்.

        சிவகங்கை சீமையின் திருப்பத்தூர் கோட்டை வாயில். சுற்றிலும் மக்கள் வெள்ளம். ஒவ்வொருவர் முகத்திலும் ஆறாத் துயரம். ஒருவர் இருவர் அல்ல. ஐநூறுக்கும் மேற்பட்ட தமிழ்ப் போராளிகளை தூக்கிலிட்டுக் கொண்டிருக்கிறார்கள் வெள்ளையர்கள்.
  முதலில் அஞ்சாநெஞ்சன் சின்னமருது. மக்கள் இதயம் துடிதுடித்தது. அடுத்தது சின்ன மருதுவின் மூத்தமகன், உற்றார் உறவினர், போர் வீரர்கள், கடைசியாக பெரிய மருது. இப்படி மருதுபாண்டியர் வம்சத்தையே கூண்டோடு தூக்கிலிட்டனர். அழுவதைத் தவிர அந்த மக்களுக்கு எதுவும் செய்யமுடியாத நிலை.

மகாத்மா காந்தி இந்தியாவிற்கு தந்தை ... அந்த தந்தையை சுதந்திர போராட்டதிற்கு அழைத்து சென்றது யார் என்று தெரியுமா ?


        மகாத்மா காந்தியின் சுதந்திர போராட்டத்திற்கும், அவரது தென் ஆப்ரிக்கா பயணத்தின் போதும் உதவியவர்கள் குஜராத் மாநிலம் போர்பந்தரைச் சேர்ந்த வியாபார சகோதரர்கள்அப்துல்லா ஆதம் ஜவேரி மற்றும் அப்துல் கரீம் ஆதம் ஜவேரி.
       போர்பந்தர்! இந்தியாவின் தேசத் தந்தையான மகாத்மா காந்தி அவதரித்த அமைதியான இடம். குஜராத் மாநிலத்தில் உள்ள இந்தத் துறைமுக நகரம்தான், ஜவேரி குடும்பத்தாரின் பிறப்பிடம்.அப்ல்கரீம் ஹாஜி ஆதம் ஜவேரி. அவரது அண்ணன் அப்ல்லா ஹாஜி. இவர்கள் இருவரும் அப்துல்லா அண்ட் கம்பெனிஎன்ற பெயரில் தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் கப்பல் கம்பெனி நடத்தினர். அவர்களிடமிருந்த மொத்த கப்பல்கள் ஐம்பத்து நான்கு. அதில் நான்கு பயணிகள் கப்பல்.

நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!


நாவைக் கட்டுப்படுத்துவோம்! நாசத்தைத் தவிர்ப்போம்!
மனிதனுக்கு அல்லாஹ்வினால் ஏராளமான நிஃமத்துக்கள் கொடுக்கப்பட்டிருக்கின்றன. அவற்றில் மனிதனின் உடலுறுப்புகள் அனைத்தையும் விட முதன்மையானது ஆகும். அதிலும் தான் கற்பனை செய்கின்ற விஷயங்களை, சிந்திக்கின்ற விஷயங்களை மக்களுக்கு எடுத்துக் கூறுகின்ற மிக மிக முக்கிய உறுப்பாக மனிதனின் நாவு விளங்குகின்றது. இந்த நாவு, ஒரு மனிதன் உலகில் மக்களுக்கு மத்தியில் நல்லொழுக்கம்  உள்ளவனாகவும், நல்லவனாகவும் தோன்றுவதற்கு காரணமாக அமைகின்றது. இதே போன்று ஒரு மனிதனை மிக மோசமானவனாகவும் ஒழுக்கம் கெட்டவனாகவும் மாற்றுவதற்கும் இந்த நாவு காரணமாக அமைகின்றது. நாவின் மூலம் செய்யக்கூடிய பாவங்கள் ஏராளமானவை. அவற்றில் மற்றவர்களைப் பற்றி புறம் பேசுவதென்பது சமூகத்திற்கு மத்தியில் முதன்மையாகவே விளங்குகின்றது.

அடக்கு முறைக்கு அஞ்சாத அபூதர் அல் கிப்பாரி (ரலி) அவர்கள்.



அபுதர் அல் கிப்பாரி (ரலி) அவர்களின் வாழ்க்கையையும் அதில் நாம் பெற வேண்டிய படிப்பினைகளையும் அறிவோம்.அபுதர் அல் கிப்பாரி (ரலி) பற்றி ஓர் அறிமுகம்பெயர் : ஜுன்துப் இப்னு ஜுனாதாத் இப்னு சுப்யான் இப்னு உபைத் இப்னு ஹராம் இப்னு கிப்பார் இப்னு முலைல் இப்னு லம்hரா இப்னு பக்ர் இப்னு அப்து மனாத் இப்னு கினானா என்பதாகும்.
இவரது புனைப் பெயர் அபு தர் என்பதாகும்.மேலும் இவர் அல் கிப்பார் குலத்தைச் சேர்ந்தவர் ஆவார். தந்தையின் பெயர் :
ஜுனாதாத் இப்னு சுப்யான்தாயின் பெயர் : ரம்லத் பின்து வகீஆ ரலி அவர்கள்மனைவியின் பெயர் : உம்மு தர் ரலி அவர்கள் சகோதரரின் பெயர் :உனைஸ் இப்னு ஜுனாதா ரலி அவர்கள்ஆதாரம் :அஹ்மத் .சீரத்து அஃலாமுன் நுபலா.

பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியை அலற வைத்த ,சுதந்திரதிற்கு வித்திட்ட மாவீரர் திப்பு சுல்தான்


கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்' திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது. """இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?'' என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு.
பல நாள் பதுங்கி வாழும் நாயைவிட, சில நிமிடங்கள் போர் புரிந்து உயிர் துறக்கும் சிங்கம் மேலானதுஎன்ற பூகம்பமொழியை வரலாற்றுக்கு வழங்கிய போராளிதான் மாவீரன் திப்பு சுல்தான்.
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.

செவ்வாய், 9 ஆகஸ்ட், 2011

படிக்க மறந்த கடைசிப் பாடம்


Ø இப்பாடத்தில் முதல்கோணல் முற்றும் கோணலல்ல! முடிவுக்கோணலே முழுகோணல்!
Ø இத்தேர்வில் தவறியோர் மறுதேர்வு எழுத அணுமதியில்லை
Ø மறு நுழைவுக்கும் வழியும் இல்லை , கை பிசைந்து நிற்கும் அவலநிலை.

கண்ணியமிக்க எனது சகோதரர்களே!


கண்ணியமிக்க எனது சகோதரர்களே! நானும் சிந்திக்கிறேன், நம்மில் ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்கிறேன். நாம் ஏன் இறைவனின் அன்பிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறோம்? எல்லாப் புறங்களிலும் துன்பங்கள் ஏன் சூழ்ந்துக் கொண்டிருக்கின்றன? காபிர்கள் இறைவனை வழிபடாதவர்கள் என்று யாரை நாம் சொல்கிறோமோ அவர்கள் நம்மை விட எல்லா விதத்திலும் ஏன் மோலோங்கி நிற்கிறார்கள்? இறைவனுடை சட்டத்துக்கு பணிந்து நடப்பதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கும் நாம் ஏன் ஒவ்வொரு இடத்திலும் தாழ்வுற்றுக் கிடக்கிறோம்?
   

இயக்கச் செய்திகள்


1.         கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு
கோழிக்கோடு : கேரளாவில் நான்கு இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பை நடத்த பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா திட்டமிட்டுள்ளது. இந்த வருடம் புனலூர், சாவக்காடு, மஞ்சேரி மற்றும் தமரச்செரி ஆகிய நான்கு நகரங்களில் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான சுதந்திர தின அணிவகுப்பு நடக்கும் என தெரிவித்துள்ளது
வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாக என்ற முழக்கத்துடன் 2004 முதல் ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இந்த அணிவகுப்பு மக்களிடையே சுதந்திரத்தை பாதுகாப்பதின் அவசியம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் அவர்களிடையே நம்பிக்கையை விதைக்கும் தேசிய உணர்வை ஏற்படுத்தும் என பாப்புலர் ப்ரண்ட் தலைமை தெரிவித்துள்ளது.
இந்நிகழ்ச்சி எங்கு நடைபெற்றாலும் அது மதம் மற்றும் கட்சிகளுக்கு அப்பாற்பட்டு பல்லாயிரக்கணக்கான மக்களை ஈர்க்ககூடியது அனைவராலும் விரும்பக்கூடிய நிகழ்ச்சியாகும். சுதந்திரம் பெற்ற காலம் தொட்டு வெறும் சம்பிரதாயமாக பார்க்கப்பட்ட ஒரு சில அரசு அலுவலங்களில் மட்டுமே கொண்டாடப்பட்டு வந்த சுதந்திர கொண்டாட்டம் அடித்தட்டு மக்களால் தற்போது கொண்டாடப்படுவதால் மிகவும் பிரபலமடைந்துள்ளது. எனவே சுதந்திர தின கொண்டாட்டத்தையும் அணிவகுப்பையும் மாபெரும் வெற்றியடைய செய்ய வேண்டும் என பாப்புலர் பிரான்ட் தலைமை மக்களை கேட்டுக்கொள்கிறது
கேரளாவில் மட்டுமின்றி கர்நாடகா தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் கடந்த முன்று வருடங்களாக சுதந்திர தின கொண்டாட்டம் அணிவவகுப்பு ஆகியவை நடத்தப்பட்டு வருகிறது.



விடுதலை போரில் நெல்லை மாவட்ட முஸ்லிம்கள்



உருவிய வாளுடனும், உறுதிமாறா நேர்மையுடனும் அரேபிய வெளிகளில் போராடிய பெருமானார் அண்ணல் நபிகள் (ஸல்) நிலை நாட்டிய இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட இந்திய முஸ்லீம் பெருமக்கள் பரங்கியர் சைன்யங்களின் பீரங்கிகளுக்கும், துப்பாக்கிகளுக்கும் அஞ்சாமல் களங்கண்ட சம்பவங்கள் பல. அவற்றில் வெளிச்சத்திற்கு வந்தவைகள் மிகச்சில. 
இந்திய சுதந்திர போராட்டத்தில் முஸ்லிம்களின் பங்கு மகத்தானது. ஆங்கிலேயர்கள் தங்களது சாம்ராஜ்யத்தை மூன்று முஸ்லீம் மன்னர்களின் - வடக்கே பகதூர்~h, வங்கத்தில் சிராஜ்-உத்-தௌலா, தெற்கே மைசூர் சிங்கம் திப்பு சுல்தான், இறந்த உடல்களின் மீதுதான் அமைக்க முடிந்தது. ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாக திகழ்ந்தது இம்மூவர் தான். இந்த மன்னர்களை கண்டு அஞ்சியதை போல், இந்தியாவில் ஆங்கிலேயர்கள் வேறு யாருக்கும் அஞ்சியதில்லை என்பது சரித்திரம் கூறும் உண்மை.

திங்கள், 8 ஆகஸ்ட், 2011

மறக்கடிக்கப்பட்ட மாவீரன் திப்புசுல்தான்


1799 மே மாதம் நான்காம் தேதி சாதாரண சிப்பாய் போல் ஆங்கிலேய அந்நிய படைக்கெதிராக களமிறங்கி தனது உடலில் கடைசி மூச்சு நிற்கும் வரை உறுதியுடன் போராடி உயிர் தியாகியானார் மாவீரன் திப்பு. அந்த வீரத் திருமகனின் வரலாற்றை நினைவு கூறுவது இந்திய தேசத்தின் விடுதலை வரலாற்றையே நினைவு கூறுவதற்கு சமமாகும்.

கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய இஃப்தார் நிகழ்ச்சி


ஆண்டுதோறும் ரமலான் மாதத்தில் கோவை மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக  நோன்பு திறக்கும் (இஃப்தார்) நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல இவ்வருடம்  நோன்பு திறக்கும் நிகழ்ச்சி 7/8/2011 ஞாயிற்றுக் கிழமையன்று மாலை 5 மணிக்கு கோவை போத்தனூர் சாலையிலுள்ள பாரதி மஹால் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.


நிகழ்ச்சிக்கு வந்திருந்தோரை பாப்புலர் ஃப்ரண்ட் -ன் கோவை மாவட்ட செயலாளர் M.முஸ்தபா அவர்கள் வரவேற்றுப் பேசினார். பாப்புலர் ஃப்ரண்ட் -ன் கோவை மாவட்ட தலைவர் K.ராஜா உசேன் அவர்கள் தலைமையுரை ஆற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலப் பேச்சாளர் மௌலவி M.மெஹபூப் அன்சாரி பைஜி அவர்கள் சிறப்புரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் -ன் மாவட்ட செயற்குழு உறுப்பினர் M.I.அப்துல் ஹக்கீம் அவர்கள் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டு சிறப்பித்த அனைவருக்கும் நன்றி கூறினார்.

அதன்பிறகு நடைபெற்ற இஃப்தார் விருந்து நிகழ்ச்சியில் சுமார் 1500 சகோதரர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக "பாப்புலர் ஃப்ரண்ட் -ன் சமூகப் பணிகள்" காணொளி திரையிடப்பட்டது.

மேலும் புகைப்படங்கள்













வியாழன், 4 ஆகஸ்ட், 2011

தமிழக பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு இல்லாதது ஏமாற்றம் அளிக்கிறது. SDPI மாநிலத் தலைவர் K.K.S.M.தெஹ்லான் பாகவி அறிக்கை


 SDPIயின் மாநிலத் தலைவர் இன்று (4.08.2011)வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

            தமிழக அரசு நேற்று(3.8.2011) சட்டசபையில் தாக்கல்செய்துள்ள 2011-12 ம் ஆண்டிற்கான இடைக்கால நிதி நிலை அறிக்கையில் உலமா ஓய்வூதியம் உயர்த்தப்பட்டிருப்பதும் விவசாயம் மற்றும் அணைகள் பராமரிப்பிற்கு அதிக கவனம்செலுத்தப்பட்டிருப்பதும், ஏழைக்குடும்பங்களுக்கு ஆடுகள் மற்றும் கறவை மாடுகள் இலவசமாக வழங்குவது பற்றிய அறிவிப்பும், வரவேற்றகத்தக்கது, பாரட்டிற்குரியது. அதேசமயம் சமச்சீர் கல்வி பற்றி எதுவும் கூறாததும், விலை வாசியை கட்டுப்படுத்துவது பற்றிய அறிவிப்புகள் இல்லாததும், தேர்தல் பிரச்சாரத்தில் முதலமைச்சர் வாக்குறுதியளித்தபடி முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீட்டை உயர்த்துவது பற்றிய அறிவிப்பு இல்லாததும், கல்வி, பொருளாதாரம், வேலை வாய்ப்பில் பின் தங்கியுள்ள முஸ்லிம்களுக்கான நலத்திட்டங்கள் பற்றிய அறிவிப்புகள் இல்லாததும் ஏமாற்றம் அளிக்கிறது.  இவ்வாறு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

புதன், 3 ஆகஸ்ட், 2011

டி.என்.பி.எஸ்.சி. புதிய அறிவிப்புகளும்

           கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான அறிவிப்பு 21-7-2010 அன்று அறிவிக்கப்பட்டது. அதில் பொதுவான காலியிடமாக 1576 மற்றும் பட்டியல் வகுப்பினர், பட்டியல் வகுப்பினர் (அருந்ததியர்), பட்டியல் பழங்குடியினர்  (SC, SC (A), ST) பிரிவினருக்கான குறைவு பணியிடங்களுக்கான (Backlog Reserve Vacancies) காலியிடங்களாக 1077-வும் அறிவிக்கப்பட்டது. இந்த குறைவுப் பணி யிடங்கள்  என்பது கடந்த காலங்களில் முறையாக தமிழக அரசால் எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கான காலியிடங்களில் நிரப்பப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாததனால்,  தேசிய  அட்டவணை வகுப்பினர் ஆணையம் (NCSC- National Commission for Scheduled Castes) மற்றும் தேசிய அட்டவணை பழங்குடியினர் ஆணையம்(NCST- National Commission for Scheduled Tribes)  மற்றும் பணியாளர் அமைச்சகம் (Ministry of Personal)  ஆகியவற்றின் புகார் அடிப்படையில் எஸ்.சி., எஸ்.டி குறைவு பணியிடங்களுக்கான அறிவிப்பும் பொது அறிவிப்புடன் சேர்ந்து அறிவிப்பு செய்யப் பட்டது. இரண்டுக்குமான வி.ஏ.ஓ. தேர்வை டி.என்.பி.எஸ்.சி 20-2-2011   அன்று நடத்தியது. இத்தேர்வை 10 லட்சத்திற்கும் மேலானவர்கள் எழுதினர். இத்தேர்வுக்கான முடிவுகள் 19-7-2011 அன்று பொதுவான காலியிடமான 1576-க்கு மட்டுமே வெளியானது. இதனை கண்ட பல லட்சக்கணக்கான எஸ்.சி. எஸ்.டி மாணவர்கள் ரிசல்ட் வெளியாகாததைக் கண்டு பொது அறிவு உலகத்தை தொடர்பு கொண்டு மிகவும் வருத்தப்பட்டனர். டி.என்.பி.எஸ்.சி தேர்வை நடத்தி எஸ்.சி., எஸ்.டி பிரிவினருக்கு மட்டும் தேர்வு முடிவு வெளியிடப்படாததன் காரணம் லட்சக்கணக்கான மாணவர்களுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. மாணவர்கள் மீது பொது அறிவு உலகம் கொண்ட அக்கறையின் வெளிபாடாக இந்த விவகாரத்தை டி.என்.பி.எஸ்.சி-க்கு எடுத்து சென்றோம். விசாரித்ததில், வி.ஏ.ஓ. தேர்வுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு சில மாதங்களில் எஸ்.சி. &  எஸ்.டி பிரிவினருக்கான குறைவு பணியிடங் களை தனியாக குறிப்பிட்ட இனத்தினருக்காக நிரப்பக் கூடாது என அதன் மீது தடைகோரி ஆர். சந்தோஷ்குமார் என்பவர் தமிழக அரசு  செயலர் (R. Santhoshkumar vs the secretary to government)  மீது ரிட் மனு ஒன்றை 2010-இல் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்தார். அந்த ரிட் மனு எண்.19563 ஆகும். இதனை விசாரித்த உயர்நீதிமன்றம் தமிழக அரசை   (Counter Affidavit) ஒன்றை தாக்கல் செய்யுமாறும், அதனை டி.என்.பி. எஸ்.சி-க்கு அனுப்பி வைக்குமாறும் கூறியது. இந்த வழக்கில் டி.என்.பி.எஸ்.சி 4-வது சாட்சி யாகும். அதனால் இந்த வழக்கை டி.என்.பி.எஸ். சியும் நடத்த வேண்டிய அவசியமில்லை. இதற்கு வருவாய் செயலர் மற்றும் அரசு செயலர்தான் பொறுப்பு ஆவார்கள். இதற் கிடையில் மனுதாரர் ஆர். சந்தோஷ்குமார் மற்றுமொரு மனுவை (M.P. No.2)  வை தாக்கல் செய்ய, "தேர்வை நடத்த எவ்வித தடையில்லை  என்றும் ஆனால் வழக்கு முடியும் வரை எஸ்.சி & எஸ்.டி பிரிவு தேர்வு முடிவுகளை அறிவிக்கக் கூடாதெனவும்' உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. இப்போதைக்கு இந்த அளவில் வழக்கு உள்ளது. இதில் தடையை அகற்றி தேர்வு முடிவுகள் வெளியிட வேண்டுமெனில் தமிழக அரசு இதற்கான நடவடிக்கையில் இறங்க வேண்டும். ஆனால் இதுவரை எதிர்வாக்கு மூலம் கூட தாக்கல் செய்யவில்லை தமிழக அரசு. அல்லது வி.ஏ.ஓ. தேர்வை எழுதிய எஸ்.சி. & எஸ்.டி மாணவர்கள் (பாதிக்கப்பட்டவர்கள்) இந்த வழக்கில் தங்களையும் ஒரு வாதியாக இணைத்துக் கொண்டு வழக்கை நடத்த வேண்டும். அப் போதுதான்தடை நீக்கப்பட்டு இந்த வி.ஏ.ஓ. ரிசல்ட் வெளியிடப்படும். இல்லையெனில் இந்த தேர்வு முடிவு வெளியிடப்படாமல் போக வாய்ப்பு உள்ளது.

குறைவு பணியிடங்கள் பற்றிய விளக்கம்

பொது அறிவு உலகம் எப்போது இடஒதுக்கீட்டுக்கு 100 சதவீதம் ஆதரவு அளிக்கும். அது  BC, MBC, SC, ST  என அனைவருக்குமான இடஒதுக்கீட்டை நிச்சயம் வழங்க வேண்டும் என்பதே பொது அறிவு உலகத்தின் விருப்பம். இன்று மத்திய, மாநில          அரசுகள் திட்ட மிட்டே OBC (BC  மற்றும் MBC) பிரிவினர் களுக்கான வேலைவாய்ப்பில் துரோகமிழைத்து வருகிறது. இதனால் பல ஆண்டுகளுக்கும் மேலாக குறைவு பணியிடங்களை நிரப்பாமல் ஏமாற்றி வருகின்றன. "2004-ஆம் ஆண்டு நாடு முழுவதும் உள்ள ஞஇஈ, நஈ, நப பிரிவினருக்கான 60,000 குறைவு பணியிடங்களை (Backlog Reserve Vacancies)  நிரப்ப வேண்டுமென ஆணைப் பிறப்பித்தும் மேற்கண்ட பிரிவினரை பணியமர்த்தப் படவில்லை என பணியாளர்  அமைச்சகம் வெளியிட்ட ஆணையில் (65067/2010) தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2007-ஆம் ஆண்டு புள்ளிவிவரத்தின்படி 74,008 குறைவு பணியிடங்கள் (26, 358 நேரிடை தேர்வு மூலமாகவும் 47, 650 பதவி உயர்வு மூலமாகவும்) நிரப்படவில்லை என மத்திய பொது பணியாளர் அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கை தெரிவிக்கிறது. இது மத்திய, மாநில அரசுகள் அளித்து வரும் இடஒதுக்கீடு சமூக நீதிக்கு உதாரணம்.

புதிய அறிவிப்புகள்

  டி.என்.பி.எஸ்.சி அலுவலக வட்டாரங்களில் கிடைத்த தகவலின்படி பின்வரும் தேர்வு களுக்கான அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளி யிடப்பட உள்ளன. TNPSC  குருப் IV தேர்வுக் கான அறிவிப்பு நவம்பர் மாதவாக்கில் வெளியாக வாய்ப்புள்ளது. இதற்கான காலியிடங்கள் ஏறக்குறைய மூவாயிரத்திற்கும் அதிகமாகும். தற்சமயம் டி.என்.பி.எஸ்.சி வசம் வெறும் 67 ஆயிரம் விண்ணப்பங்கள் மட்டுமே உள்ளன. அதனால் இவற்றை வைத்துக்கொண்டு எந்த ஒரு பெரிய தேர்வுக்கான அறிவிப்பும் வெளியிடப்பட முடியாது. எனவே விண்ணப் படிவங்களுக்காக அறிவிப்புகள் காலதாமதம் ஆகின்றன. அண்மையில்தான் விண்ணப் படிவங்களை அச்சிடுவதற்கு டெண்டர் விடப் பட்டுள்ளது. விண்ணப்பங்கள் தயாராகும் பொருத்து தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும்.

அடுத்து TNPSC  குரூப் IV, VIII இந்து அறநிலையத்துறை செயல் அலுவலர் (Tamilnadu Hindu Religious and Charitable Endowments Suboordinate Service) (EO)  பணிக்கான தேர்வு பட்டப் படிப்பு தரம் மற்றும் 10-ஆம் வகுப்பு கல்வித் தகுதிக்கானவை விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. இதற்கான காலியிடங்கள் ஏறக்குறைய 150-க்குள் இருக்கலாம்.

மேலும் தொடர்ந்து நவம்பர், டிசம்பர் மாதங்களில் குரூப் I மற்றும் குரூப் II தேர்வுகளுக்கான அறிவிப்புகள் வெளிவரும். 

குரூப் II  தேர்வு முடிவுகள்

டி.என்.பி.எஸ்.சி குரூப் 11 தேர்வுக்கான முடிவுகள் அனைத்தும் தயார் செய்தாகி விட்டது. தமிழக அரசு தமக்கு தேவையான பணியிடங்களை அதிகரிக்க பரிசீலனை செய்துவருவதால், தேர்வு முடிவுகள் அறிவிப்பதில் காலதாமதமாகிறது. இந்த விவரம் கிடைக்கபெற்றவுடன் விரைவில் குரூப் ஒஒ தேர்வு முடிவுகள் வெளியிடப்படும்.


செவ்வாய், 2 ஆகஸ்ட், 2011

அர்ஷின் நிழலில்.


அர்ஷின் நிழலில்.

இதற்கு முந்தைய தொழுகை சம்மந்தமான கட்டுரைகளில் தொழுவதினால் ஏற்படும் இம்மை மறுமை நன்மைகளை நமக்குத் தெரிந்தவரை பட்டியலிட்டோம் இன்னும் நமக்குத் தெரியாமல் ஏராளமான நன்மைகள் அல்லாஹ்வின் வார்த்தைகள் அடங்கிய அருள்மறைக்குர்ஆனிலும்,அண்ணல் நபி(ஸல்)அவர்களின் அறிவுப்புகளின் அறிவுச் சுரங்கத்திலும் குவிந்து கிடக்கின்றன.

திங்கள், 1 ஆகஸ்ட், 2011

தமிழ்நாடு மக்கள்தொகை 2011


மத்திய திட்டக்குழுவின் மேலாதிக்கம்


           நாட்டினுடைய வள ஆதாரங்களையும், நிதியாதாரங்களையும் கணக்கில் எடுத்துக் கொண்டு, சமூக-பொருளாதார வளர்ச்சியை ஒன்றிணைத்து, பல மக்கள் நலத்திட்டங்களை வகுத்து செயல்படுத்தும் முறையைத்தான் "திட்டம்' என்று குறிப்பிடுகிறார்கள். முதன் முதலாக பொதுவுடைமைக் கட்சியினுடைய ஆட்சி 1917-ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் அமைந்தபோது வேளாண்துறை, தொழில்துறைகள் மிகவும் பின்தங்கிய நிலையில் இருந்தன. நாட்டின் பல பகுதிகளில் இருந்த ஏற்றத்தாழ்வைக் குறைப்பதற்கும், வளர்ச்சியை விரைவுப்படுத்துவதற்கும் திட்டமிட்டு முன்னேறுகிற ஒரு அமைப்பு தேவை என சமதர்மச் சிற்பியான லெனின் அவர்கள்தான் திட்டமிடல் முறையை முதன்முதலில் அறிமுகப்படுத்தினார். திட்டமிடல் கொள்கையால் சோவியத் ஒன்றியம் மிக குறுகிய காலத்தில் விரைவான பொருளாதார வளர்ச்சியைப் பெற்றது. இதற்கு பின்னர் "திட்டம்' பற்றிய கருத்துகள் உலகளவில் செல்வாக்குப் பெற்றன.

வெள்ளி, 29 ஜூலை, 2011

மாவட்ட நிர்வாகம்


பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா - வின் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்களால் மாவட்ட தலைமை நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். திருநெல்வேலி நெல்லை மேற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்கள்.

மாவட்ட தலைவர் - ஜாபர் அலி உஸ்மானி

மாவட்ட செயலாளர் - ஹாஜா இமாம்(தென்காசி)