பெங்களூர்: சங்கப்பரிவார கும்பல்கள் தங்களது கொள்கைகளை பரப்பவும் இந்து ராஷ்டிரா என்ற கிரிமினல் அஜ்ன்டாவை ஏற்படுத்துவதற்கும் பெரும்பாலான நிகழ்ச்சிகளில் இந்து மத குருவான சுவாமி விவேகானந்தரின் பெயரை உபயோகப்படுத்தி வருகிறது.
ஆனால் விவேகானந்திரின் போதனைகளும் சங்கப்பரிவார கும்பல்களின் செயல்பாடுகளுக்கும் எண்ணற்ற முரண்பாடுகள் இருக்கின்றன.
NOV 2013
ஞாயிறு, 22 ஜனவரி, 2012
லிபியாவில் ஷரீஅத் சட்டத்தை அமுல்படுத்தக்கோரி பிரம்மாண்ட பேரணிகள்
திரிபோலி : எதிர்கால லிபியா அரசியல் சட்டத்தின் அடிப்படை இஸ்லாமிய சட்டமாக இருக்கவேண்டும் என கோரி லிபியாவில் பிரம்மாண்ட பேரணிகள் நடைபெற்றன. தலைநகரான திரிபோலி, ஸபா மற்றும் கிழக்கு நகரமான பெங்காசியிலும் பேரணிகள் நடைபெற்றன.
திருக்குர்ஆனை உயர்த்திப் பிடித்தவாறு மக்கள் இப்பேரணிகளில் கலந்துகொண்டதாக எ.எஃப்.பி கூறுகிறது. இஸ்லாத்தை நாட்டின் அதிகாரப்பூர்வ மார்க்கமாக(religion) மாற்ற அரசியல் சாசனத்தில் பிரத்யேக பிரிவை இணைக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
எகிப்து:அதிக இடங்களை கைப்பற்றிய இஃவானுல் முஸ்லிமீன் – அதிகாரப்பூர்வ அறிவிப்ப
கெய்ரோ : ஹுஸ்னி முபாரக்கின் ஏகாதிபத்திய ஆட்சி ஜனநாயக புரட்சியின் மூலம் தூக்கியெறியப்பட்ட பிறகு எகிப்து பாராளுமன்றத்திற்கு நடந்த முதல் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின்(இஃவானுல் முஸ்லிமீன்)
அரசியல் கட்சியான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் பார்டி 47 சதவீத இடங்களை கைப்பற்றியுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தீவிர சிந்தனைக் கொண்ட ஸலஃபிகளின் அந்நூர் கட்சி இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
வெள்ளி, 20 ஜனவரி, 2012
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் தலைவராக ஆர்.நடராஜ் நியமனம்
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம (டி.என்.பி.எஸ்.சி) தலைவராக ஓய்வு பெற்ற முன்னாள் டி.ஜி.பி ஆர்.நடராஜ் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக செல்லமுத்து இருந்தார். அவர் தனது பதவியை கடந்த வாரம் திடீரென ராஜிநாமா செய்தார். அவருடைய ராஜினாமா கடிதத்தை தமிழக அரசு ஏற்றுக் கொண்டது.
மானந்தவாடி(கேரளா) : சத்தியத்தை குறித்த தேடுதலில் இஸ்லாத்தை தனது வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட இளைஞரை தீவிரவாத முத்திரைக்குத்தி வேட்டையாட தேசிய புலனாய்வு ஏஜன்சியும், மாநில போலீசாரும் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்தவர் பிலால்.இவர் தற்பொழுது வயநாடு மானந்தவாடியில் வசித்துவருகிறார். புலனாய்வு அதிகாரிகளின் பகையை தீர்த்துக்கொள்ளும் முயற்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை தயாராகி வருகிறார் பிலால்.
கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தைச் சார்ந்தவர் பிலால்.இவர் தற்பொழுது வயநாடு மானந்தவாடியில் வசித்துவருகிறார். புலனாய்வு அதிகாரிகளின் பகையை தீர்த்துக்கொள்ளும் முயற்சிக்கு எதிராக சட்டநடவடிக்கை தயாராகி வருகிறார் பிலால்.
வியாழன், 19 ஜனவரி, 2012
நான்காம் ஆண்டில் அடியெடுத்துவைக்கும் உங்களின் நிஜங்கள்
பத்திரிக்கைதுறையினரால் பழிவாங்கப்பட்டுக்கொண்டிருக்கும் முஸ்லீம் சமுதாயம், தமக்கு இழைக்கப்படும் கொடுமைகளுக்கு எதிராக மக்களின் சக்தியை ஒருமுகப்படுத்தாமல் இஸ்லாம் சார்ந்த இதழ்களிலேயே இழைப்பறிக் கெண்டிருக்கின்றன. அதற்கு முக்கியக்காரணம் அத்துறைில் காணப்படும் வெற்றிடமே! அவ்வெற்றிடத்தை வென்றெடுத்திடவே இளம் கைகளில் எழுதுகோலை கொடுத்து எமது இந்தப் பணியினை துவங்கினோம். சிறிய அகவில் துவங்கப்பட்ட இப்பணி இன்று பல்லாயிரம் வாசகர் வட்டத்தை தன்னுள் சேர்த்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டில் நடக்கும் சம்பவங்கள் நிறம்மாறி வரும் காலங்களில் நிஜங்களாக வரவேண்டும் என்பதற்காக. எழுத்தாளமும், கருத்தாளமும் கொண்ட எங்களின் கட்டுரைகளுக்கு வாசகர்கள் அனுப்பும் கருத்துக்களே வலுசேர்க்கின்றன. நான்காம் ஆண்டில் அடி எடுத்துவைக்கும் எங்களுக்கு ஆக்கமும், ஊக்கமும் கொடுத்து அரவணைக்குமாறு அன்போடு வேண்டுகிறோம்.
-ஆசிரியர் குழு-
கேரள அரசுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை
கோழிக்கோடு : முஸ்லிம்களில் பொது மற்றும் பத்திரிக்கையாளர்களின் மின்னஞ்சல்களில் கேரள காவல் துறை ஊடுருவுவதை தடுத்து நிறுத்த வேண்டும் என கேரள அரசுக்கு பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து மாநில முதல்வர் தன்னிலை விளக்கம் அளிக்க வேண்டும் என்று மாநில பொது செயலாளர் பி அப்துல் ஹமீது வலியுறுத்தியுள்ளார்.
அதிரையில் தீ விபத்து - மீட்புப் பணியில் பாப்புலர் ஃப்ரண்ட்
அதிரை c .m.p லைன் v .k .m ஸ்டோர் அருகே உள்ள ஒரு வீட்டில் மாடியில் இருந்து கூரை திடுரென தீப்பிடித்து மளமளவென பரவியது . இது பற்றி தகவலறிந்த பொதுமக்களும் அதிரை நகர பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்களும் விரைந்து சென்று ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி தீயை அணைத்தனர் . பாப்புலர் ப்ரண்ட் செயல்வீரர்கள் தீயை அனைத்த்ததோடு மீட்பு பணியிலும் ஈடுபட்டனர் . பாப்புலர் ப்ரண்ட் செயல் வீரர்களின் பணியினை அதிரை காவல் ஆய்வாளர் திரு.செங்கமலக்கண்ணன் வெகுவாக பாராட்டினார் .
கிழக்கு ஆப்பிரிக்காவில் பட்டினி சாவுக்கு காரணம் சர்வதேச சமூகம்
லண்டன் : கிழக்கு ஆப்பிரிக்காவில் பட்டினி மூலம் ஆயிரக்கணக்கான மக்கள் மரணிப்பதற்கு, இதுக்குறித்த முன்னறிவிப்பை சர்வதேச சமூகம் அலட்சியப்படுத்தியதுதான் காரணம் என பிரிட்டன் நிவாரண அமைப்புக்கள் கூறியுள்ளன.
சோமாலியா,கென்யா,எத்தியோப்பியா ஆகிய நாடுகளைச் சார்ந்த ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் பட்டினியால் கடந்த ஆண்டு மரணித்தனர்.
கண் கண்ட கவ்லா
இஸ்லாத்தை ஆரம்பகாலத்தில் ஏற்றுக்கொண்ட பெண்மணிகளில் கவ்லா பின்த் ஹக்கீமும்(ரலி) ஒருவர். கற்களையும், சிலைகளையும் வணங்கிக்கொண்டு இணைவைப்பின் இருளில் சிக்கியிருந்த கவ்லா பின்த் ஹக்கீம் (ரலி) ஏகத்துவத்தை இதயத்தில் ஏந்திய பின் எழுச்சி மிக்க பெண் ஆனார்.
இஸ்லாம் அவரது வாழ்க்கையை வாகாய் புரட்டிப் போட்டது. அண்ணலாரின் குடும்பத்தாருடன் மிக நெருக்கமானார். அண்ணலாருக்குப் பணிவிடை செய்வதில் அலாதி ஆனந்தம் அடைந்தார். மக்காவில் முஸ்லிம்கள் இருந்த சமயத்தில் கதீஜா அம்மையாரை அடிக்கடி சந்தித்து அளவளாவுவார்.
கண் கண்ட கவ்லா
இஸ்லாத்தை ஆரம்பகாலத்தில் ஏற்றுக்கொண்ட பெண்மணிகளில் கவ்லா பின்த் ஹக்கீமும்(ரலி) ஒருவர். கற்களையும், சிலைகளையும் வணங்கிக்கொண்டு இணைவைப்பின் இருளில் சிக்கியிருந்த கவ்லா பின்த் ஹக்கீம் (ரலி) ஏகத்துவத்தை இதயத்தில் ஏந்திய பின் எழுச்சி மிக்க பெண் ஆனார்.
இஸ்லாம் அவரது வாழ்க்கையை வாகாய் புரட்டிப் போட்டது. அண்ணலாரின் குடும்பத்தாருடன் மிக நெருக்கமானார். அண்ணலாருக்குப் பணிவிடை செய்வதில் அலாதி ஆனந்தம் அடைந்தார். மக்காவில் முஸ்லிம்கள் இருந்த சமயத்தில் கதீஜா அம்மையாரை அடிக்கடி சந்தித்து அளவளாவுவார்.
நபிகளாருக்கு இறைச்செய்தி துவங்கிய 10வது வருடம் அன்னை கதீஜா அம்மையார் மறைந்தபொழுது அவரது இழப்பால் ஏற்பட்ட வெற்றிடத்தை உடனே நிரப்ப வேண்டும் என்று கவ்லா உணர்ந்தார். 25 ஆண்டுகளாக அனைத்து வகையிலும் அண்ணலாருக்கு அரும்பெரும் துணையாக இருந்த கதீஜா அம்மையாரின் மறைவு அண்ணலாருக்குப் பெரும் சோகத்தை உண்டாக்கியிருந்தது. அண்ணலார் திரும்பவும் திருமணம் செய்துகொள்ளவேண்டும் என்று கவ்லா அண்ணலாரிடம் வலியுறுத்தினார்.
அத்தோடு அண்ணலாருக்குப் பொருத்தமானவர் யார் என்பதையும் அவர் மனதில் வைத்திருந்தார். நபிகளார் கவ்லாவிடம் யாரை மணமுடிக்கலாம் என்று கேட்டபொழுது, “நீங்கள் விரும்புவது கன்னிப் பெண்ணையா, முதிர்ந்த பெண்ணையா?” என்று கவ்லா கேட்டார்.”இருவரது பெயரையும்சொல்லுங்கள்” என்று அண்ணலார் கேட்டார்கள்.
அதற்கு கவ்லா(ரலி) இவ்வாறு பதிலளித்தார்: “கன்னிப் பெண் ஆயிஷா. முதிர்ந்த பெண் ஸவ்தா.” இருவரையும் பெண் கேட்குமாறு அண்ணலார் கேட்டுக்கொண்டார்கள்.
கவ்லா(ரலி) அந்த இருவரிடமும் சென்று, “அல்லாஹ் உங்களுக்கு ஒரு கண்ணியத்தை நாடுகிறான்” என்று சொன்னார். அந்த இருவருமே அண்ணலாரை மணமுடிக்க சம்மதம் தெரிவித்தார்கள். அண்ணலார் முதலில் மக்காவில் இருக்கும் பொழுதே ஸவ்தா(ரலி) அவர்களைத் திருமணம் முடித்தார்கள். மூன்று வருடம் கழித்து மதீனாவில் வைத்து ஆயிஷா(ரலி) அவர்களை மணமுடித்தார்கள்.
மதீனாவுக்குப் புலம்பெயர்ந்த பிறகும் கவ்லா(ரலி) அண்ணலாரின் வீட்டுக்குத் தொடர்ந்து செல்பவர்களாக இருந்தார்கள். அண்ணலாரின் மனைவிமார்களும் கவ்லா வரும்பொழுதெல்லாம் அவரை வரவேற்று உபசரிப்பார்கள். ஒரு தடவை கவ்லா மிகவும் கவலையாகக் காணப்பட்டார். பழைய ஆடைகள் அணிந்து, அணிகலன்கள் எதுவும் அணிந்துகொள்ளாமல், தன்னை அலங்கரித்துக் கொள்ளாமல் வெறுமையாகக் காட்சியளித்தார். அவருடைய கணவர் வசதியானவராக இருந்தும் ஏன் இப்படி இருக்கிறீர்கள் என்று முஃமின்களின் தாய்மார்கள் வினவியபொழுது அவர் இவ்வாறு பதிலளித்தார்: “அவர் அவருக்கே உரிய ஓர் உலகில் வாழ்ந்து வருகிறார். தினமும் நோன்பு நோற்கிறார். ஒவ்வொரு இரவும் நின்று வணங்குகிறார்.”
அண்ணலாரிடம் அவர்களின் மனைவிமார்கள் இது குறித்து முறையிட்டார்கள். இறைத்தூதர் முஹம்மத் (ஸல்) கவ்லாவின் கணவரான உதுமான் இப்னு மஸ்ஊன் (ரலி) அவர்களை அழைத்து, “நீங்கள் பின்பற்ற வேண்டிய நபர் நான்தானே” என்று கேட்டார்கள். உதுமான் இதனைக் கேட்டதும் ஆச்சரியப்பட்டுப் போனார். அவரது இரவு வணக்கம் குறித்தும், நோன்பு குறித்தும் அவரிடம் கேட்டு உறுதிப்படுத்திய நபிகளார் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறினார்கள்: “அவ்வாறு செய்யாதே. உன் கண்களுக்கு உன் மேல் உரிமை உண்டு. உன் உடலுக்கு உன் மேல் உரிமை உண்டு. உன் குடும்பத்துக்கு உன் மேல் உரிமை உண்டு. இரவு வணங்கவும் செய். உறங்கவும் செய். சில நாட்கள் நோன்பு நோற்றுக்கொள். சில நாட்கள் நோன்பை விடு.”
உதுமான் இப்னுமஸ்ஊன்(ரலி) அண்ணலாரின் கட்டளைக்கிணங்க நடந்துகொண்டார். அதன்பிறகு நபிகளாரின் மனைவிமார்களிடம் வந்த கவ்லா தன்னை அலங்கரித்துக்கொண்டு, நல்ல ஆடைகள் அணிந்து மகிழ்ச்சியாக மணப்பெண்போல் காட்சியளித்தார்.
இந்த உதுமான் இப்னுமஸ்ஊன் (ரலி) அவர்கள்தான் மக்காவிலிருந்து வந்த முஹாஜிர்களில் முதன்முதலில் மதீனாவில் மரணித்தவர். அவரைப் பற்றி கவ்லா(ரலி) ஓர் அழகிய கவிதை ஒன்றை எழுதினார். அது அதிக இலக்கியச் செறிவுடன் உயர்ந்த நடையில் அமைந்திருந்தது.
இப்படி மாதர் குலத்தின் மாதிரி வடிவமாகத் திகழ்ந்த கவ்லா(ரலி) அவர்களிடமிருந்து நாம் இஸ்லாமிய ஈடுபாட்டையும், ஈர்ப்பையும் பாடமாகப் பெறலாம்.
இனி ஹஜ் விண்ணப்பத்துடன் பாஸ்போர்ட் ஒரிஜினல் வேண்டாம்
புதுடெல்லி : புனித ஹஜ்ஜிற்கான விண்ணப்பத்துடன் ஒரிஜினல் பாஸ்போர்ட்டை சமர்ப்பிக்கும் நிபந்தனையை தளர்த்த சேர்மன் முஹ்ஸினா கித்வாய் தலைமையில் விஞ்ஞான் பவனில் நடந்த ஹஜ் கமிட்டி கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.
இனி ஹஜ்ஜிற்கு விண்ணப்பிக்கும் வேளையில் பாஸ்போர்ட்டின் நகலை மட்டும் இணைத்தால் போதுமானது. பின்னர் ஹஜ்ஜிற்கு செல்ல தேர்வு செய்யப்பட்ட பிறகு ஒரிஜினலை சமர்ப்பிக்க வேண்டும்.
ஈரானையும், சிரியாவையும் தாக்கக்கூடாது – ரஷ்யா எச்சரிக்கை
மாஸ்கோ : ஈரான்,சிரியா பிரச்சனைகள் தொடர்பாக அந்நாடுகள் மீது ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள திட்டமிடும் மேற்கத்திய நாடுகளுக்கு ரஷ்யா எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஈரானை தாக்குவது பெரும் துயரத்தை உருவாக்கும் என கூறியுள்ள ரஷ்ய வெளியுறவு துறை அமைச்சர் ஸெர்ஜி லாவ்ரோவ் பிராந்தியம் முழுவதும் அகதிகள் பிரச்சனையால் நெருக்கடியுல் ஆழ்ந்துவிடும் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சர்ச்சையை கிளப்பிய குடியரசு வேட்பாளரின் துருக்கி விமர்சனம்
அங்காரா : அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கான குடியரசு கட்சியின் வேட்பாளர் பதவிக்காக மிட் ரும்னியுடன் மோதும் டெக்ஸாஸ் ஆளுநரின் துருக்கி குறித்த விமர்சனம் சர்ச்சையை கிளப்பியுள்ளது. துருக்கி ‘இஸ்லாமிய தீவிரவாதிகளின் ஆட்சியின் கீழ் உள்ளது’ என்ற மோசமான விமர்சனம் கடும் எதிர்ப்பை உருவாக்கியுள்ளது.
அமெரிக்க ஊடகங்கள் கூட மிதவாதி என குறிப்பிடும் ரஜப் தய்யிப் எர்துகானின் ஜஸ்டிஸ் அண்ட் டெவலப்மெண்ட் கட்சியை பயங்கரவாத கட்சியாக முத்திரைக் குத்தும் டெக்ஸாஸ் ஆளுநர் ரிக் பெர்ரி மன்னிப்பு கோரவேண்டும் என அமெரிக்காவில் உள்ள துருக்கி அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
புதன், 18 ஜனவரி, 2012
ஹிந்துத்துவா குண்டுவெடிப்புகள்: முக்கியத்துவமாகும் ஜோஷியின் கொலை
மும்பை : மலேகான், மக்கா மஸ்ஜித், சம்ஜோதா எக்ஸ்பிரஸ் உள்பட ஹிந்துத்துவா பயங்கரவாதிகள் இந்தியாவில் நடத்திய குண்டுவெடிப்புகளை குறித்து விசாரணை நடத்திவரும் தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ)க்கு ஆர்.எஸ்.எஸ் தலைவர்களில் ஒருவரான சுனில்ஜோஷியின் கொலை வழக்கு விசாரணை முக்கியத்துவமாக மாறும்.
சுனில் ஜோஷியின் கொலை வழக்கில் ஆதாரங்கள் இதர வழக்குகளுடன் பிணைந்து கிடப்பதால் இவ்வழக்கின் விசாரணை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
லோக் ஆயுக்தா என்பது மோடியின் கபட நாடகம் – காங்கிரஸ் குற்றச்சாற்று
புதுடெல்லி : குஜராத் மாநிலத்தில் ஆளுநர் கமலா பெனிவால் லோக் ஆயுக்தா நீதிபதியை நியமித்தது செல்லும் என அம்மாநில உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை தொடர்ந்து குஜராத் முதல்வர் மோடி மீது கடுமையான விமர்சனங்களை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
நரேந்திர மோடியின் கபடநாடகத்திற்கும், பா.ஜ.கவின் இரட்டை வேடத்திற்கும் இன்னொரு சட்டரீதியான விளக்கம்தான் நீதிமன்ற தீர்ப்பு என காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது.
ஹரேன் பாண்டியா கொலை: குஜராத் மோடி அரசுக்கு நோட்டீஸ்
அஹ்மதாபாத் : குஜராத் முன்னாள் அமைச்சர் ஹரேன் பாண்டியா கொலை வழக்கில் மறு விசாரணை கோரி அவரது மனைவி ஜாக்ருதி பாண்டியா தாக்கல் செய்த மனு மீதான விசாரணையில் சி.பி.ஐக்கும், குஜராத் மோடி அரசுக்கும் அம்மாநில உயர்நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
ஹரேன் பாண்டியா மனைவியின் மனு மீதான விசாரணை பிப்ரவரி ஆறாம் தேதி முதல் நடைபெறும். விசாரணை துவங்குவதற்கு முன் பதிலளிக்கவேண்டும் என உயர்நீதிமன்றம் சி.பி.ஐக்கும், மோடி அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.
உலகிலேயே மிகப்பெரிய திருக்குர்ஆன் ஆஃப்கானில்
காபூல் : உலகிலேயே மிகப்பெரிய திருக்குர்ஆனின் கையெழுத்து பிரதி ஆஃப்கானில் வெளியிடப்பட்டது. 2.28 மீட்டர் நீளமும், 1.55 மீட்டர் அகலமும் கொண்ட திருக்குர்ஆன் 500 கிலோ எடை கொண்டது. 218 தாள்கள் உள்ளன. 5 லட்சம் டாலர் செலவான இத்திருக்குர்ஆன் பிரதி உலகிலேயே மிகப்பெரியது என ஆஃப்கானிஸ்தானின் ஹஜ் மற்றும் மார்க்க விவகாரத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
பிரபல கையெழுத்தாளர் முஹம்மது ஸாபிர் காதிரியும், ஒன்பது மாணவர்களும் இணைந்து இத்திருக்குர்ஆன் பிரதியை தயாரித்துள்ளனர். வசனங்களின் முக்கியத்துவத்தைக் குறித்து குறிப்பிட்ட நிறத்தில் சில பகுதிகள் உள்ளன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)















