நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 28 ஜூலை, 2012

அஸ்ஸாம் கலவரத்தை கண்டித்து அமைதிப்பேரணி - ஏ.ஐ.ஐ.சி

குவாஹாத்தி: ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் (ஏ.ஐ.ஐ.சி) சார்பாக அஸ்ஸாம் மாநிலத்தில் நடைபெற்ற கலவரத்தை கண்டித்து குவாஹாத்தியில் அமைதிப்பேரணி நடைபெற்றது. 
பெரும்பாலான அம்மாநில ஊடகங்கள் இச்செய்தியை ஒளிபரப்பியது. இப்பேரணியில் சுமார் 500 நபர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியின் இறுதியாக அஸ்ஸாம் மாநில கவர்னர் மற்றும் முதலமைச்சருக்கு துணை ஆணையாளர் மூலமாக மனு அளிக்கப்பட்டது. கலவரம் நடைபெற்ற பின்பு இதனை கண்டித்து நடைபெற்ற முதல் போராட்டம் இதுவேயாகும்.

அஸ்ஸாம் இனக்கலவரம் குறித்து விரைவான நடவடிக்கை தேவை


சமூக விரோத இனவாத சக்திகளின் சதியினால் அஸ்ஸாமில் துரதிஷ்டவசமாக நடந்து வரும் கலவரத்தில் பல பேர் கொல்லப்பட்டுள்ளதும், பல்லாயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதும் குறித்து தனது ஆழ்ந்த வேதனையை தெரியப்படுத்தியுள்ளார் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர். கோக்ரஜார், துப்ரி, சிராங் மற்றும் போங்கைகாவ்ன்  



போன்ற மாவட்டங்களில் பரவி வரும் கலவரத்திற்கு மாநில அரசின் பொறுப்பற்ற தன்மைதான் காரணம் என்றும் உள்ளூர் அளவில் சமூகங்களுக்கு மத்தியில் ஏற்பட்ட சில அசம்பாவிதங்களை தொடந்து உருவான கலவர சூழலை அறிந்தும் அனைத்து சமூக மக்களுக்கும் போதிய பாதுகாப்பை வழங்கிட மாநில அரசு தவறிவிட்டது.

அஸ்ஸாமில் நடந்தது குஜராத் மாடல் முஸ்லிம் இனப்படுகொலை!


குவஹாத்தி: ஆயிரக்கணக்கான முஸ்லிம்கள் வாழும் கொக்ராஜர் மாவட்டத்தில் உள்ள படிபாரா கானிப்பாஸா கிராமம் அன்றைய தினம் பயந்து நடுங்கிக் கொண்டிருந்தது. காலை முதல் அங்குள்ள அனைவரும் கிராமத்தை 
Assam Muslim genocide has same model as Gujarat genocide!

பாதுகாப்பதில் மும்முரமாக ஈடுபட்டிருந்தனர். யாரும் அன்று வயலுக்கு வேலைக்கு செல்லவில்லை. குழந்தைகளை குடிசைக்குள் இருத்தி வாசலை மூடினார்கள். கால்நடைகளை பாதுகாப்பதற்கான ஏற்பாடுகளில் பெண்கள் மும்முரமாக ஈடுபட்டிருந்தார்கள். கலவரக்காரர்கள் கிராமத்தை நோக்கி வந்துகொண்டிருப்பது உறுதியானது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து குடிசைகள் பற்றி எரிந்து புகை மேலெழும்புவது தெரிந்தது. இளைஞர்கள் கத்தி மற்றும் கம்புகளுடன் கிராமத்தின் நுழைவு பாதைகளில் பாதுகாப்பிற்காக நின்றனர்.

ஞாயிறு, 22 ஜூலை, 2012

அஸ்ஸாமில் வன்முறை:11 பேர் பலி!


கொக்ராஜர்(அஸ்ஸாம்): அஸ்ஸாம் மாநிலம் கொக்ராஜர் மாவட்டத்தில் இரு பிரிவினர் இடையே ஏற்பட்ட மோதலில் 11 பேர் பலியானார்கள். 15 பேர் காயமடைந்துள்ளனர். பலியானவர்களில் ஒரு பெண்ணும் அடங்குவார்.
6
இதனைத்தொடர்ந்து அங்கு அமைதியை ஏற்படுத்த ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும்  சனிக்கிழமை பகல் 12 மணியில் இருந்து ஞாயிற்றுக்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை மாவட்ட நிர்வாகம் பிறப்பித்துள்ளது.

அரபு வசந்தத்தின் இறுதி மஸ்ஜிதுல் அக்ஸாவின் விடுதலையாக அமையும்!


காஸ்ஸா:அரபுலகில் நடந்துகொண்டிருக்கும் வசந்த புரட்சிகள் தற்போதைய சூழலுடன் ஒடுங்கிவிடும் என கருத வேண்டாம் என ஃபலஸ்தீன் காஸ்ஸா பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா தெரிவித்துள்ளார்.
Gaza prime minister Ismail Haniyeh
கடந்த வெள்ளிக்கிழமை காஸ்ஸாவில் உள்ள மஸ்ஜிதுல் அமீனில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார் அவர். அப்பொழுது அவர் கூறியது:

சனி, 21 ஜூலை, 2012

பர்மா முஸ்லிம் இனப்படுகொலை: முஸ்லிம்களுக்கு ஓர் வேண்டுகோள்!


முஸ்லிம்கள் ஒருவருக்கொருவர் சகோதரர்கள் ஆவர். அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் “நிச்சயமாக நம்பிக்கையாளர்கள் சகோதரர்களே!” (சூரா ஹுஜ்ராத்) என குறிப்பிடுகிறான்.
பர்மா முஸ்லிம் இனப்படுகொலை-- முஸ்லிம்களுக்கு ஓர் வேண்டுகோள்!
முஸ்லிம்கள் ஓர் உடலைப் போன்றவர்கள் என்று இஸ்லாத்தின் இறுதித்தூதரான முஹம்மது நபி(ஸல்) அவர்கள் உபதேசித்ததுடன் அதனை நடைமுறைப்படுத்தியும் காட்டினார்கள்.

வெள்ளி, 20 ஜூலை, 2012

மியான்மர் முஸ்லிம் இனப்படுகொலை: உலகின் மெளனம் குறித்து எஸ்.டி.பி.ஐ கடும் கண்டனம்!

மியான்மரில் சிறுபான்மை ரோஹிங்கியா முஸ்லிம்கள் கூட்டாக கொலைச் செய்யப்படுவதை பார்த்துக்கொண்டு மெளனம் சாதிக்கும் சர்வதேச சமூகத்தின் செயல்பாடு குறித்து சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கடும் கோபத்தையும், அதிர்ச்சியையும் வெளிப்படுத்தியுள்ளது.

நாகரீக உலக சமூகங்களை கொண்ட சர்வதேச நாடுகள் குறைந்த பட்சம் இந்த படுகொலைகளை குறித்து கவலையாவது கொள்ளுமாறும், துன்புறுத்தப்படும் சமூகத்தினருக்கு அமைதி கிடைக்கும் விதமாக இப்பிரச்சனையில் தீவிரமாக தலையிடுமாறும் சர்வதேச நாடுகளை எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தியுள்ளது.


சென்னையில் அமெரிக்க தூதரகம் முற்றுகை போராட்டம்,SDPI கட்சியின் 200 தொண்டர்களுக்கும் மேற்பட்டோர் கைது


தமிழக மீனவர் சேகர் மீது துப்பாக்கிசூடு நடத்தி கொலை சைய்த அமெரிக்க  கப்பல் படையை கண்டித்தும்,இந்திய சில்லறை வர்த்தகத்தில் நேரடி அந்நிய 
முதலீடு தேவை என்று கருத்து கூறிய அமெரிக்க ஒபாமாவின் அத்துமீறலை கண்டித்தும் SDPI கட்சியின் அமெரிக்க தூதரகம்  முற்றுகை போராட்டம் இன்று(19:07:2012)காலை 11 மணி அளவில் அமெரிக்க தூதரகம் முன்பு  முற்றுகை போராட்டம்  தொடங்கியது, இதில் SDPI  மாநில செயலாளர் சையது அலி அவர்கள் தலைமை தங்கினார்கள்,


செவ்வாய், 17 ஜூலை, 2012

அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் ஒற்றுமையான போராட்டத்தால் திணறிய பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டத்தில் வயதைக் காரணம் காட்டி முஸ்லிம் பெண்ணின் திருமணத்தை தடுத்து பெற்றோரை கைது செய்த மாவட்ட ஆட்சியரின் அதிகார துஷ் பிரயோகத்தை கண்டித்தும் முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டு இந்திய நீதி மன்றத்தை 
அவமதித்து முஸ்லிம் திருமணத்தை தடுத்து நிறுத்திய பெரம்பலூர் மாவட்ட ஆட்சி தலைவரை கண்டித்தும், இம்மாவட்ட காவல் துறையை கண்டித்தும் முஸ்லிம் இயக்கங்கள் ஒன்றினைந்து நடத்திய போராட்டம் பெரம்பலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகம் முன்பு இன்று 17-07-2012 அன்று நடைபெற்றது. 

சென்னையில் அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட போவதாக SDPI அறிவிப்பு

துபாயில் அமெரிக்க கப்பல் ஒன்று ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளிப்புற கடற்பகுதியில் வைத்து மீன்பிடி படகு மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில் தமிழகத்தைச் சார்ந்த மீனவர் பலியானார். 3 பேருக்கு காயம் ஏற்பட்டது.



ராமநாதபுரத்தைச் சார்ந்த சேகர்(வயது 26) என்பவர் அமெரிக்ககப்பற்படையின் அநியாய துப்பாக்கிச்சூட்டில் பலியான நபர் ஆவார். மணிகண்டன், முத்துக்கண்ணன் ஆகியோருக்கு துப்பாக்கிச்சூட்டில் காயம் ஏற்பட்டது.
பாரசீக வளைகுடாவின் 30 கடல் மைல் தொலைவில் உள்ள ஜெபல் அலி கடல் பகுதியில் வைத்து துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. மீன் பிடித்தலுக்கு உபயோகிக்கும் 9 மீட்டர் அகலம் கொண்ட 3 எஞ்சின்களை உடைய ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த படகு மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது.

முர்ஸியின் முன்மாதிரியை முஸ்லிம் உம்மத் பின்பற்ற வேண்டும்: எர்துகான் அறிவுரை!


இஸ்தான்புல்: எகிப்தில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அதிபர் முஹம்மது முர்ஸி மகத்தான முன்மாதிரியாக திகழ்கிறார் என துருக்கி பிரதமர் ரஜப் தய்யிப் எர்துகான் புகழாரம் சூட்டியுள்ளார்.

முஸ்லிம் உம்மத்தில்(சமூகம்) இளைஞர்கள் முர்ஸியை முன்மாதிரியாக பின்பற்ற வேண்டும். சோசியல் நெட்வர்க் தளமான ஃபேஸ்புக்கில் எர்துகான் தனது கருத்தை பதிவுச்செய்துள்ளார்.

திங்கள், 16 ஜூலை, 2012

பிரிகேடியர் உஸ்மான் – இந்தியாவின் சின்னம் – ஹாமித் அன்ஸாரி!

புதுடெல்லி: 1947-48 காலக்கட்டத்தில் நடந்த இந்தியா-பாகிஸ்தான் போரின்போது வீரத்துடன் செயல்பட்டு உயிர் நீத்த பிரிகேடியர் உஸ்மான் இந்தியாவின் சின்னம் என துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்ஸாரி கூறியுள்ளார்.
Brigadier Mohammad Usman
பிரிகேடியர் முஹம்மது உஸ்மானின் 100-வது பிறந்த நாள் விழா டெல்லியில் நேற்று(ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டு துணை குடியரசு தலைவர் ஹாமித் அன்ஸாரி உரையாற்றினார்.

ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பு! – ஆங் சாங் சூகியின் குற்றகரமான மெளனம்!


டெஹ்ரான்: மியான்மரில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்களை முற்றிலும் இன அழித்தொழிப்பு நடவடிக்கையில் பெளத்த பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ள வேளையில் ஜனநாயகரீதியான போராட்டம் நடத்தி பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த சமாதானத்திற்கான நோபல்பரிசு பெற்றுள்ள ஆங் சாங் சூகி இச்சம்பவம் குறித்து குற்றகரமான மெளனம் சாதித்து வருகிறார்.
ரோஹிங்கியா முஸ்லிம்களுக்கு எதிரான இன அழித்தொழிப்பு!
ஷஹீத் சுல்ஃபிகர் அலி பூட்டோ இன்ஸ்ட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியின் பேராசிரியரும், பிரபல அரசியல் பகுப்பாய்வாளருமான குலாம் தாகி பங்காஷ் ப்ரஸ் டி.விக்கு அளித்துள்ள பேட்டியில் ஆங் சாங் சூகியின் மெளனம் குற்றகரமானது என குற்றம் சாட்டுகிறார்.

வெள்ளி, 13 ஜூலை, 2012

காவல் நிலையத்தில் இறந்த வியாபாரிக்கு நீதி கேட்டு SDPI கண்டன ஆர்பாட்டம்



காஞ்சிபுரம் மாவட்டம், கானத்தூர் காவல் நிலையத்தில் வியாபாரி ஹுமாயூன் தீ வைத்து இறந்த சம்பவத்தை சிபிசிஐடி விசாரணைக்கு உட்படுத்தக் கோரியும், உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் நிவாரண நிதி வழங்க வலியுறுத்தியும், பணியிடை நீக்கம் செய்யப்பட்ட காவலர்கள் நிரந்தர பணி நீக்கம் செய்யப்பட வேண்டும் என்று வலியுறுத்தியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் இன்று (12-07-2012) காலை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

முஸ்லிம் தனியார் சட்டத்தில் அத்துமீறி தலையிட்டும் ,இந்திய நீதி மன்றத்தை அவமதித்த பெரம்பலூர் மாவட்ட ஆட்சியரை கண்டித்து அனைத்து முஸ்லிம் அமைப்புகளின் சார்பாக ஆர்பாட்டம்



என்று முடிவுக்கு வரும் சிறுபானமையின வேட்டைஎன்று முடிவுக்கு வரும் சிறுபானமையின வேட்டை


முஸ்லிம் கைதிகளிடம் பாரபட்சம்: விசாரணை நடத்த பிரதமர் உத்தரவு!


புதுடெல்லி: மஹராஷ்ட்ரா சிறைகளில் முஸ்லிம் கைதிகளிடம் போலீஸ் பாரபட்சமாக நடந்துகொள்வது குறித்து எழுந்துள்ள குற்றச்சாட்டைக் குறித்து விசாரணை நடத்த மஹராஷ்ட்ரா மாநில அரசுக்கும், உள்துறை அமைச்சருக்கும் பிரதமர் மன்மோகன்சிங் 
Manmohan tells Maha govt, HM to examine police bias against Muslims
உத்தரவிட்டுள்ளார். இந்தியன் யூனியன் முஸ்லிம் லீக் கட்சி தனது பத்திரிகைச் செய்தியில் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
அண்மையில் டாட்டா இன்ஸ்ட்யூட் ஆஃப் சோசியல் சயன்ஸ் நடத்திய ஆய்வில் மஹராஷ்ட்ரா மாநிலத்தில் முஸ்லிம் கைதிகள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றார்கள் என கண்டறியப்பட்டது. இதன் அடிப்படையில் இவ்விவகாரத்தில் பிரதமர் தலையிடவேண்டும் என முஸ்லிம் லீக் தலைவரும், மத்திய அமைச்சருமான இ.அஹ்மத் கோரிக்கை விடுத்திருந்தார்.

இனப்படுகொலையின் துயர நினைவை புதுப்பித்த ஸ்ரெப்னிகா நகரம்!






சரயாவோ: 2-வது உலகப்போருக்கு பிறகு ஐரோப்பா கண்ட மிகப்பெரிய கூட்டுப் படுகொலையான ஸ்ரெப்னிகா கூட்டுப் படுகொலையின் 17-வது நினைவு தினத்தை போஸ்னிய மக்கள் நினைவுக் கூர்ந்தனர்.
Srebrenica massacre remembered
ஆயிரக்கணக்கான மக்கள் ஸ்ரெப்னிகா நகரத்தில் நினைவுதின நிகழ்ச்சியில் கலந்துகொள்ள திரண்டனர். போஸ்னியாவில் அனைத்து அரசு அலுவலகங்களிலும் துயர நிகழ்வை நினைவுக்கூறும் பொருட்டு அரைக் கம்பத்தில் கொடிகள் பறக்கவிடப்பட்டன.

புதன், 11 ஜூலை, 2012

உங்கள் சொத்துக்களின் அரசாங்க மதிப்பு என்ன?


கவலை வேண்டாம் கீழ்கண்ட இணையதளத்துக்கு செல்லுங்கள் தங்களுடைய ஊர்,கிராமம், தெருவின் அரசாங்க சொத்துமதிப்பு இதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பத்திரப் பதிவுத்துறை
இதில் Guideline Value க்கு செல்லவும் பிறகுGuideline Values from 1-8-2007 கிளிக் செய்யவும் பிறகு உறிய மாவட்டம்பிறகு கீழ்கண்ட முறைப்படி உள்ளே செல்லவும்
உங்கள் தெருக்களுக்கான அரசாங்க சொத்துமதிப்புக்கு
Click here to view Guideline value for Streets என்ற லிங்கைஅழுத்துங்கள்

தொடர்ந்து குறிவைக்கப்படும் முஸ்லிம் இளைஞர்கள்

ஆஸம்கரில் இருந்து பர்ஸமேலாவை நோக்கி.....

கர்சலே ஹம் ஃபிதா ஜான்-ஓ-தன் ஸாதியோன் என அழகான தேச பக்தி பாடலை இயற்றிய கய்ஃபி ஆஸ்மியும் சுதந்திரப் போராட்ட வீரரான அல்லாமா ஷிப்லி நுஃமானியும் பிறந்த மாவட்டம் தான் ஆஸமகர்.

       ஆஸமகரை ஆதங்க் கர் (தீவிரவாத முகாம்) ஆக மாற்ற நடந்த சதித்திட்டமே 2008-ம் ஆண்டு நடந்த பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் சமபவம் ஆகும். எழுத்தாளர் பிரவீன் சுவாமியின் தலைமையில் உளவுத்துறையின் பேனா 4லி தொழிலாளர்களின் உதவியுடன் ஸராய்மீர் என்ற ஆஸமகர் மாவட்டத்தில் உள்ள கிராமத்தை குறிவைத்து நடத்தப்பட்ட அவதுறு பிரச்சார தாக்குதல்களின் இறுதிகட்டமாக பாட்லா ஹவுஸ் சம்பவம் அமைந்தது.

முழுவதும் படிக்க இந்த மாதம் விடியல்வெள்ளி மாதஇதழை வாங்கி படியுங்கள்.