நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 15 செப்டம்பர், 2012

அப்பாவி சிறைவாசிகளை விடுவிக்கக் கோரி பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய மனித சங்கிலி போராட்டம்


அப்பாவி சிறைவாசிகளை பிணையில் விடுவிக்கக் கோரி சட்டப்படி பிணையில் விடு அப்பாவிகளை விடுதலை செய் என்ற முழகத்தை முன்வைத்து கடந்த 15.08.2012 முதல் 15.09.2012 வரை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசிய அளவிலான பிரச்சாரத்தை நடத்தி வந்தது. அதன் நிறைவாக டெல்லி (ஜந்தர் மந்தர்) மற்றும் தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 100க்கும் மேற்பட்ட இடங்களில் இக்கோரிக்கையை வலியுறுத்தி மனிதச் சங்கிலி போராட்டத்தை 15.09.2012 அன்ற ஒரே நேரத்தில் நடத்தியது.

    இப்போராட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டு நீதிக்கான போராட்டத்தில் தங்களின் கைகளும் துணை நிற்கும் என்பதை உறுதி செய்தனர்.

வெள்ளி, 14 செப்டம்பர், 2012

அமெரிக்காவை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் கடையநல்லூரில் மாபெரும் கண்டண ஆர்ப்பாட்டம்


                முஸ்லீம்கள் உயிரினும் மேலாக மதிக்க்கூடிய இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்களை அவமதிக்கும் வகையில் அமெரிக்காவிலுள்ள கலிபோர்னியா மகாணத்தில் வசிக்கும் யுத இனத்தைச் சேர்ந்த ஷாம் பேசிலி என்ற திரைப்பட இயக்குனரும் அமெரிக்காவைச் சேர்ந்த டெர்ரி ஜோன்ஸ் என்ற கிருஸ்தவ போதகரும் இணைந்து திரைப்படம் ஒன்றை தயாரித்துள்ளனர்.




                இதனால் உலகம் முழுவதும் முஸ்லீம் சமூக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு பல்வேறு நாடுகளில் அமெரிக்காவை கண்டித்து பலவகையான போராட்டங்கள் நடைபெற்றுவருகிறது.எகிப்து,லிபியா,யெமன்,துனீசியா,பாகிஸ்தான்,லெபனான்,சூடான்,இந்தியா,மெராக்கா, ஃபலஸ்தீன்,பங்களாதேஸ்,ஈரான் மற்றும் இந்தியா உள்ளிட்ட உலகின் பல்வேறு நாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் அமெரிக்காவிற்கு எதிராக வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

புதன், 12 செப்டம்பர், 2012

முஸ்லிம் இளைஞர்களின் கைது: ஜோடிக்கப்பட்டது – மனித உரிமை ஆர்வலர்கள்!


முக்கிய பிரமுகர்களை கொலைச் செய்ய சதித்திட்டம் தீட்டினார்கள் என குற்றம் சாட்டி உயர் கல்வி கற்ற முஸ்லிம் இளைஞர்களை கைது செய்த கர்நாடகா போலீஸின் நடவடிக்கை அடுத்த தேர்தலை இலக்காக கொண்ட வகுப்பு பிரிவினைவாத அஜண்டா என்று மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.




கோமு நல்லிணக்க பேரவையின் தலைமையில் பெங்களூர் ப்ரஸ் க்ளப்பில் நடத்திய செய்தியாளர்கள் சந்திப்பில் மனித உரிமை ஆர்வலர்கள் கர்நாடகா க்ரைம் ப்ராஞ்ச் போலீசாரின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்தனர். போலீசார் பொய் கதைகளை இட்டுக் கட்டியுள்ளார்கள். எஃப்.ஐ.ஆர் மற்றும் போலீஸ் ஆவணங்களில்இருந்து இவ்வழக்கு ஜோடிக்கப்பட்டது என்று மூத்த உயர்நீதிமன்ற வழக்கறிஞரும், முன்னாள் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவருமான வழக்கறிஞர் எ.கே.சுப்பைய்யா கூறினார்.

திங்கள், 10 செப்டம்பர், 2012

69% இடஒதுக்கீட்டை தக்க வைக்க வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் செயலக கூட்டம் வேண்டுகொள்...

07-09-2012 அன்று மதுரையில் பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் மாநில செயலக கூட்டம் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில் தலைமையில் நடைபெற்றது.இக்கூட்டத்தில் மாநில பொது செயலாளர் காலித் மற்றும் மாநில துணை தலைவர் முஹம்மது இஸ்மாயில் ஆகியோர் கலந்து கொண்டனர்.இதில் பின்வரும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1950 யில் தமிழகத்தில் அமுலில் இருந்த வகுப்புரிமை ஆணையை எதிர்த்து செண்பகம் மற்றும் துரைராஜன் என்ற இரு மாணவர்கள் தங்களுக்கு கல்லூரியில் வகுப்புரிமை ஆணையினால் இடம் கிடைக்கவில்லை என சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கானது உயர் சாதியினருக்கு (பிராமணர்களுக்கு) மட்டுமே 14.29% இடஒதுக்கீடு அமுலில் இருந்த சமயத்தில் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. அன்றைய சென்னை உயர் நீதி மன்றம் இவ்வழக்கை ஏற்று இரு மாணவர்களுக்கு கல்லூரியில் இடம் கிடைக்காததால் வகுப்புரிமை ஆணையையே ரத்து செய்தது.

கூடங்குளம்​:போலீஸ் பயங்கரவாதம் ​-தெஹ்லான், நெடுமாறன், வேல்முருகன் கண்டனம்!


திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக அமைதியான வழியில் போராட்டம் நடத்திய சுற்றுவட்டார மக்கள் மீது அராஜக தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டுஅப்பகுதியை கலவரக் காடாக மாற்றியுள்ள தமிழக ஜெயா அரசின் காவல்துறைக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
கூடங்குளம்​-போலீஸ் பயங்கரவாதம்

எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது:

கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான போலீசாரின் அராஜகத்தை கண்டித்து எஸ்.டி.பி.ஐ, ம.ம.க சாலை மறியல்!


சென்னை: கூடங்குளம் போராட்டக்காரர்கள் மீதான போலீசாரின் அராஜக தாக்குதலை கண்டித்து சென்னையில் சாலை மறியலில் ஈடுபட்ட  எஸ்.டி.பி.ஐ, மனிதநேய மக்கள் கட்சியினர் கைது செய்யப்பட்டனர்.
கூடங்குளத்தில் இன்று காலை அமைதியான வழியில் போராடி வரும் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தி பெரும் கலவரத்தை ஏற்படுத்திய காவல்துறையினரை கண்டித்தும், இடிந்தகரை பகுதியில் இருந்து

வியாழன், 6 செப்டம்பர், 2012

பாப்புலர் ப்ரண்ட் நிர்வாகிகள் சந்திப்பு

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் சந்திப்பு நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் குற்றாலத்தில் 2012 செப்டம்பர் 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெற்றது. இதில் கீழ்கானும் தீர்மானங்கள் எடுக்கப்பட்டது. மாநில தலைவர் A.S. இஸ்மாயில் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் A. ஹாலித் முஹம்மது வரவேற்புரை நிகழ்த்தினார். செயலாளர் S. பைசல் அஹமது செயற்குழு உடனே நிஜாம் முகைதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

கடந்த ரம்ஜான் பெருநாள் தினத்தன்று அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் துயர்துடைப்பதற்க்காக தமிழகம் முழுவதும் மசூதிகளில் அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதி பாப்புலர் ஃப்ரண்ட் சார்பாக வசூல்செய்யப்பட்டது. இதில் மொத்தம் ரூபாய் 39,95,121 வசூல் செய்யப்பட்டது. இத்தொகையை பாப்புலர் ஃப்ரண்டின் தேசிய தலைமையிடம் ஒப்படைப்பது என்றும் அஸ்ஸாம் நிவாரணமுகாமில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி செய்வதற்காக தமிழகத்திலிருந்து ஒரு குழு நேரடியாக செல்வது என்றும் இக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

சிவகாசி தீ விபத்து - நிவாரணப்பணியில் பாப்புலர் ஃப்ரண்ட்

மதுரை: 05-09-2012 இன்று மாலை சிவகாசியில் பட்டாசு ஆலையில் ஏற்ப்பட்ட வெடி விபத்து தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இவ்விபத்தில் நாற்பதுக்கும் மேற்பட்டோர் பலியானதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. விபத்தில் காயமடைந்த மக்கள் மதுரை, விருதுநகர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


இதில் மதுரை ராஜாஜி மருத்துவமனையில் அவசர சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டவர்களுக்கு வேண்டிய உதவிகள், அவர்களை ஆம்புலன்ஸ் வாகனங்களிலிருந்து தூக்கிக்கொண்டு சென்றது போன்ற பணிகளில் பாப்புலர் ஃப்ர‌ண்ட் ஆஃப் இந்தியாவின் உறுப்பினர்கள் ஈடுபட்டார்கள்.

த சண்டே இந்தியன் பத்திரிக்கையின் ஆசிரியருக்கு ஒரு முஸ்லிம் சகோதரனின் கடிதம்

தாங்கள் செப்டம்பர் 16 தேதியிட்ட சண்டே இந்தியன் தமிழ் இதழில் முஸ்லிம் சகோதரர்களுக்கு எழுதிய கடிதம் பார்த்து ஓர் அளவு சந்தோசமும் ஓரளவு கவலையும் பட்டுக்கொண்டேன்.ஏநென்றால் முஸ்லிம்களுக்கு இந்தியாவில் எந்த பிரச்சனையும் இல்லாதது போலவும் முஸ்லிம்கள்தான் பிரச்சனைகளுக்கும் தீவிரவாதத்திர்க்கும் காரணம் என்பது போலவும் எழுதி வரும் மீடியா உலகில் அதற்க்கு சிறிது மாற்றமாக இந்தியாவில் 

முஸ்லிம்களும் ஏனய மக்களும் பிரச்சனைகளில் தள்ளப்பட்டுள்ளனர் என்றும் இந்தியாவில் கடுமையாக விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட நிலையில் இருக்கும் சமூகமாக முஸ்லிம்கள் உள்ளனர் என்றும் ஆதலால் நாம் போராட நாம் கவனம் செலுத்த இன்னும் எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது என்ற அறிவுருத்தலான செய்திகளையும் பார்த்த சமயம் ஓரளவு சந்தோஷ பட்டேன்.


செத்துருக்கலாமோ? நரகத்தின் நடுவில்..............





அஸ்ஸாமில் நடந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டு உயிரோடிருக்கும் முஸ்லிம்களின் மனநிலைதான் மேலே கொடுக்கப்பட்ட தலைப்பின் வார்த்தை.ஏன் அடிக்கிறார்கள்? எதற்கு அடிக்கிறார்கள்? ஏன் ஊரை விட்டு வீட்டை விட்டு காலி செய்து வந்தோம் என பல கேள்வி கணைகளோடு அகதிகள் முகாமில் கலவரம் என்ற கோரதாண்டவத்தில் பாதிக்கப்பட்டு இருக்கும் முஸ்லிம்களின் நிலையை பார்த்தால் மிகவும் மோசமான நிலையில் உள்ளது.அமைப்புக்களை கண்காணிக்கிறோம் நிறுவனங்களை கண்காணிக்கிறோம் என அரசாங்கத்தால் சொல்லப்படும் அமைப்புக்களும் நிறுவனங்களும் இல்லை என்றால் என்றோ இவர்களும் செத்து போயிருக்கலாம்.முகாமுக்கு வெளியேயான உலகம் குண்டுகளாலும் அம்புகளாலும் ஆனது என்றால் முகாமிற்குள்ளான வாழ்க்கையை நரகம் என்று சொல்லலாம்.அந்த அளவிற்கு மிக மோசமாகவும் இன்னொரு கொடுமைகளும்தான் அங்கு நடக்கிறது.
முகாம்களில் இருக்கும் ஒரு சில நிலைகளை அவர்களே கூறியதை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

ஞாயிறு, 12 ஆகஸ்ட், 2012

அஸ்ஸாம் கலவர பூமியில் தீவிரமாக பணியாற்றும் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்கள்!

கொக்ராஜர்:அஸ்ஸாமில் போடோக்கள் மற்றும் முஸ்லிம்கள் இடையே நிகழ்ந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் 149 அகதிகள் முகாம்களிலும் ரிஹாப் தன்னார்வ சேவைத் தொண்டர்களின் துயர் துடைப்பு பணிகள் தொடர்கின்றன.
Rehab india volunteers working Actively in Assam relief camps2

இந்த முகாம்களில் 3,20,750 மக்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பிரச்சனைகளால் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியிருக்கும் 20 முகாம்களில் ரிஹாப் சேவைத் தொண்டர்களால் செல்ல இயலவில்லை. ஊடக செய்தியாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை.

அஸ்ஸாம்,மியான்மர் கலவரத்தை கண்டித்து நடந்த போராட்டத்தில் வன்முறை: 2 பேர் பலி!


மும்பை:அஸ்ஸாம் கலவரம் மற்றும் மியான்மரில் முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கும் இன அழித்தொழிப்பு ஆகியவற்றை கண்டித்து ராஸா அகாடமி சார்பாக மும்பை ஆஸாத் மைதானத்தில் நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இச்சம்பவத்தில் 2 பேர் பலியானார்கள். 14 பேருக்கு காயம் ஏற்பட்டுள்ளது.

Anti-Assam riot protest turns violent in Mumbai- 2 killed
அஸ்ஸாம் மாநிலத்தில் முஸ்லிம்கள் மீது போடோ தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்கள் மற்றும் மியான்மரில் ராகேன் மாநிலத்தில் ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது அரசு உதவியுடன் புத்தர்கள் நடத்தி வரும் இன அழித்தொழிப்பைக் கண்டித்து மும்பையில் உள்ள ஆஸாத் மைதானத்தில் ராஸா அகாடமி என்ற அமைப்பின் சார்பாக போராட்டம் நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இப்போராட்டத்தில் நூற்றுக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர்.

வியாழன், 9 ஆகஸ்ட், 2012

முஸ்லிம் சிறை கைதிகளை விடுதலை செய்யகோரி நாடு தழுவிய பிரச்சாரம்-பாப்புலர் ஃப்ரண்ட்


மோட்சம் வேண்டுமா மோடியே...?



"குஜராத் இனக்கலவரம்" எத்துனை ஆண்டுகாலம் கடந்தாலும் இந்திய முஸ்லிம்களால் எளிதில் மறந்துவிட முடியாத ஒரு துயர சம்பவம். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அயோத்தியிலிருந்து அஹமதாபாத் நோக்கி வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் எஸ்-6 பெட்டியில் பயணம் செய்த கரசேவகர்கள் 56 பேர் உடல் கருகி உயர்ந்தனர். இதில் 56 நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு தரப்பு செய்திகள் வந்தாலும் மறுதரப்பில் சிலர் உயிர் பிழைத்தனர் என்று கூறுகிறது.

பத்ர் தரும் பாடம்!

மனித குலத்திற்கு நேர்வழி காட்டும் புனித திருக்குர்ஆனை (2:185) இறக்கியருள அகிலங்களை படைத்து பரிபாலிக்கும் அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதம் தான் ரமலான்.



மனித சமூக வாழ்வின் துவக்கம் முதல் இறுதி வரை மாபெரும் மாற்றத்தை  எக்காலத்திலும் உருவாக்கிக் கொண்டிருக்கும் புரட்சி வேதம்தான் திருக்குர்ஆன். மனித சமூகத்திற்கு ஓர் பூரணமான விடுதலையை திருக்குர்ஆன் லட்சியமாக கொண்டுள்ளது. சாத்தானிய சக்திகளிடமிருந்து விடுதலை, ஏகாதிபத்திய சர்வாதிகாரிகளின் அடிமைத்தனத்தில் இருந்து விடுதலை, மனோ இச்சையில் இருந்து விடுதலை, உலகியல் வாழ்வின் அதி மோகத்தில் இருந்து விடுதலை ஆன்மீகத்தின் அபத்தமான பயணத்தில்  இருந்து விடுதலை மரணத்திற்கு பிந்தைய வாழ்வில் நரகில் இருந்து விடுதலை இவ்வாறு திருக்குர்ஆன் சமர்ப்பிக்கும் விடுதலை கொள்கை உலகியல் மற்றும் மரணத்திற்கு பிந்தைய வாழ்வின் வெற்றிக்கு அடித்தளமாகும்.

புதன், 8 ஆகஸ்ட், 2012

"குஜராத் இனக்கலவரம்"



"குஜராத் இனக்கலவரம்" எத்துனை ஆண்டுகாலம் கடந்தாலும் இந்திய முஸ்லிம்களால் எளிதில் மறந்துவிட முடியாத ஒரு துயர சம்பவம். 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அயோத்தியிலிருந்து அஹமதாபாத் நோக்கி வந்து கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் இரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் எஸ்-6 பெட்டியில் பயணம் செய்த கரசேவகர்கள் 56 பேர் உடல் கருகி உயர்ந்தனர். இதில் 56 நபர்கள் கொல்லப்பட்டார்கள் என்று ஒரு தரப்பு செய்திகள் வந்தாலும் மறுதரப்பில் சிலர் உயிர் பிழைத்தனர் என்று கூறுகிறது.


வியாழன், 2 ஆகஸ்ட், 2012

மியன்மார்: உலக மனச்சாட்சி இறந்துவிட்டதா?


மியன்மாரில் (பர்மா) கடந்த சில வாரங்களாக நடைபெற்று வரும் முஸ்லிம்களுக்கு எதிரான படுகொலைகளும் வன்முறைகளும் சர்வதேச ஊடகங்களின் கவனத்தை ஏன் பெறவில்லை என்பது ஆச்சரியமான கேள்வியாகவே உள்ளது.
Myanmar
இதுவரை சுமார் 20,000 முஸ்லிம்கள் -குழந்தைகள்,பெண்கள் உள்ளிட்டு- பதறப் பதறப் படு கொலைசெய்யப்பட்டுள்ளனர். உண்மையில்,கொல்லப்பட்டோரின் எண்ணிக்கை மற்றும் இடம்பெயர்ந்தோர் தொகை என்பவற்றை துல்லியமாக அறிய முடியாத நிலையே தொடர்கின்றது.

அஸ்ஸாம் கலவரம் - பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக வீடு திரும்ப அரசு உதவ வேண்டும்!


அஸ்ஸாம் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக தங்களது சொந்த வீடுகளுக்கு திரும்புவதற்கு அரசு உதவி செய்ய வேண்டுமென பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயலகம் வலுவான கோரிக்கையை 


முன்வைக்கின்றது. அஸ்ஸாம் மாநில அரசின் அதிகாரப்பூர்வ தகவலின்படி 3 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தங்களது சொந்த கிராமத்தை விட்டு கலவரக்காரர்களால் துரத்தி அடிக்கப்பட்டுள்ளனர். தற்போது தங்குவதற்கு இடமின்றியும், உணவு உடை என எவ்வித அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யமுடியாமலும் நிவாரண முகாமை விட்டு பல மைல் தூரம் வசித்து வருகின்றனர்


மகாத்மாவை அதிர வைத்த மாமனிதர் உமர் சுப்ஹானி !!!!


தேசவிடுதலைக்காக போராடும் காங்கிரஸ் பேரியக்கத்தின் பொருளாதார ஆதாரங்களுக்காக நிதி திரட்டும் முயற்சியில் காங்கிரஸ் கமிட்டி முனைந்தது. 1921 மார்ச் 31 - ஆம் தேதி விஜயவாடாவில் கூடிய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் ஒரு கோடி ரூபாய் நிதி திரட்டுவது என்றும், அந்நிதிக்கு திலகர் நினைவு சுயராஜ் நிதி என்றும் பெயரிட்டனர்.


அந்த நிதியில் 60 லட்சத்தை பம்பாயிலும் மீதமுள்ள 40 லட்சத்தைப் பிற நகரங்களிலும் வசூல் செய்ய வேண்டுமென்று காந்திஜி அறிவித்தார். பம்பாயின் மிகப் பெரிய தொழில் அதிபர்களான ஏ.பி. காட்ரெஜ் மூன்று லட்சமும், ஜெயநாராயணன் இந்து மல்தானி ஐந்து லட்சமும், ஆனந்திலால் இரண்டு லட்சமும் நிதி வழங்கினர்.

சுதந்திர போராட்ட வீரர் தளபதி திருப்பூர் மொய்தீன்


பதவி பேறுகள் எதுவும் இல்லாமலே முப்பத்தைந்து ஆண்டுகள் தன்னலமற்ற அரசியற் பணி புரிவது என்பது அரசியல் உலகில் ஒரு அற்புத விந்தையாகும்.அந்த விந்தையை காரிய சாதனையாக இயற்றி நம் மத்தியில் வாழ்ந்து மறைந்தவர் திருப்பூர் மொய்தீன். அவர் தமிழ்நாடு முஸ்லீம் லீக் துணை தலைவராகவும், சிறந்த பேச்சாளராகவும், வீர வாள் பரிசு பெற்ற தளபதியாகவும் விளங்கினார்.


தளபதி மொய்தீன் அவர்களுடைய அரசியல் வாழ்வு முப்பத்தைந்து ஆண்டுகளுக்கு மேலாக பரந்துபட்டதாகும். "கொடி காத்த குமரன்" என்று இந்திய சுதந்திர போராட்டத்தில் தமிழரின் வீரத்திற்கு இலக்கணமாக விளைந்த திருப்பூர் குமரனும், திருப்பூர் மொய்தீன் அவர்களும் ஒரே ஊரவர்கள் மட்டும் அல்ல. ஒன்றாக அரசியல் என்னும் வேள்வி குண்டத்திலே குதித்தவர்கள். அந்நிய நாட்டு துணி எதிர்ப்பு போராட்டத்தில் பங்கு கொண்டு இருவரும் அரசியல் அரங்கில் அடியெடுத்து வைத்தார்கள். இந்த எதிர்ப்பு போராட்டத்தின் ஒரு அங்கமாக கிளைத்த ரயில் வண்டி மறியலிலும் இருவரும் ஒன்றாகவே செயலில் இறங்கினர்.