நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 15 மார்ச், 2013

இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கப்படுவதை பாப்புலர் ஃப்ரண்ட் வண்மையாக கண்டிக்கிறது

நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமுமாக இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் தாக்கபடுவதையும் நித்தம் நித்தம் சிறை பிடிக்கபட்டு வருவதையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வண்மையாக கண்டிக்கிறது.

வியாழன், 14 மார்ச், 2013

சிங்கள அரசை கண்டித்து சென்னையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் ஆர்ப்பாட்டம்

சென்னை: இனவாத இலங்கை அரசை கண்டித்தும், ஐநா சபையில் இந்தியா இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை கொண்டு வர வலியுறுத்தியும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாபெரும் ஆர்பாட்டத்தை நடத்தியது. 13.03.2013 அன்று மாலை 4.30 மணியளவில் சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஞாயிறு, 10 மார்ச், 2013

மார்ச் 8 உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் விழிப்புணர்வு கருத்தரங்கம்


கடையநல்லூர் :-  உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மார்ச்-8ல் “பெண்களின் பாதுகாப்பே தேசத்தின் பாதுகாப்பு” என்ற முழக்கத்தோடு நாடுமுழுவதும் நேஷனல் உமன்ஸ் ஃப்ரண்ட் சார்பாக பொதுக்கூட்டம்,பேரணி,கருத்தரங்கம், மற்றும் கட்டுரைபோட்டிகள் நடந்தன.

அதன் ஒரு பகுதியாக  நெல்லை மேற்கு மாவட்டத்தில் “நேஷனல்  உமன்ஸ் ஃப்ரண்ட்” சார்பாக மார்ச் 10,2013 அன்று கடையநல்லூர் பேட்டை காதர் மைதின்  ஜும்மா பள்ளிவாசல் வளாகத்தில் கருத்தரங்கம் நடைபெற்றது. 

திருச்சியில் நடைபெற்ற எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில பொதுக்குழு-புதிய நிர்வாகிகள் தேர்வு


திருச்சி :- திருச்சியில் நேற்று (09.03.2013) துவங்கிய எஸ்.டி.பி.ஐ (சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா )கட்சியின் தமிழ்மாநில பொதுக்குழு இன்று (10.03.2013)மாலையுடன் முடிவடைந்தது.

திருச்சி எல்.கே.எஸ் மஹாலில் நடைபெற்ற இப்பொதுக்குழு கூட்டத்திற்கு மாநில தலைவர் கே.கே.எஸ்.எம்.தெஹ்லான் பாகவி தலைமை தாங்கினார்.மாநில பொதுச்செயலாளர் அப்துல் ஹமீது அனைவரையும் வரவேற்றார்.மாநில செயற்குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர்.

சனி, 9 மார்ச், 2013

இலங்கை போர் குற்றவாளிகளை விசாரணையின் முன் நிறுத்த வேண்டும்: பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய செயற்குழு தீர்மானம்!

புது டெல்லி :-  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய செயற்குழு மார்ச் 2 மற்றும் 3 தேதிகளில் தேசிய தலைமையகத்தில் நடைபெற்றது. நாடு முழுவதும் நடைபெற்று வரும் மரண தண்டனைக்கெதிரான பிரச்சாரத்திற்கு இச்செயற்குழு முழுமையான ஆதரவை வழங்கியது. 
தற்போதைய அரசியல் மற்றும் சமூக சூழலில் ஏழை மற்றும் சட்ட பாதுகாப்பற்ற மக்களுக்கு எதிராகத்தான் மரண தண்டனை வழங்கப்படுகிறது. தங்களுக்கு எதிரானவர்கள் மற்றும் அரசியல் எதிரிகளுக்கு எதிராக அரசாங்கம் இதனை பயன்படுத்தி வருகிறது. நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகள் மரண தண்டனையை ஒழித்திருப்பதை இச்செயற்குழு சுட்டிக்காட்டியது. சட்ட புத்தகங்களில் இருந்து மரண தண்டனையை நீக்க வேண்டும் என்று அரசாங்கத்திற்கு செயற்குழு கோரிக்கை வைத்தது.

வெள்ளி, 8 மார்ச், 2013

Employment - ஆன்லைனில் பதிவு செய்வது எப்படி?


தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகங்களும் கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டு ஆன்லைனில் இணைக்கப்பட்டுள்ளன. முதுகலை பட்டப்படிப்புகள்,பொறியியல், மருத்துவம், உயர் தொழில்நுட்ப கல்வித்தகுதிகளை பதிவு செய்ய ஆன்லைன் பதிவு முறை 2001 ல் கொண்டுவரப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் பதிவு செய்துள்ள அனைத்து கல்வித்தகுதிகளையும் கொண்ட பதிவுதாரர்களை இணைக்கும் புதிய ஆன் லைன் சாப்ட்வேர் "சுசி லினக்ஸ்” என்ற பெயரைக்கொண்ட இப்புதிய சாப்ட்வேரை எல்காட் நிறுவனம் உருவாக்கி கொடுத்துள்ளது.

வியாழன், 7 மார்ச், 2013

குண்டுவெடிப்புகளுக்கு முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை நிறுத்துங்கள்! – பிரஸ் கவுன்சில் தலைவர்

டெல்லி :- நாட்டில் நடக்கும் அத்தனை குண்டுவெடிப்புச் சம்பவங்களின் போதும் உடனடியாக முஸ்லீம்களை குறை கூறி செய்தி வெளியிடுவதை மீடியா நிறுவனங்கள் தவிர்க்க வேண்டும் வேண்டும் என்று முன்னால் உச்சநீதிமன்ற நீதிபதியும் தற்போதைய பிரஸ் கவுன்சில் தலைவருமான மார்க்கண்டேய கட்ஜூ கூறியுள்ளார்.
மார்க்கண்டேய கட்ஜூ
கட்ஜூவுக்கு தேசிய சிறுபான்மையினர் ஆணைய தலைவர் வஜாஹத் ஹபிபுல்லா ஒரு கடிதம் எழுதியிருந்தார்.

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறையை கண்டித்து பாப்பலர் ஃப்ரண்ட் நடத்திய தொடர் முழக்க ஆர்ப்பாட்டம்.

சென்னை :-  கடந்த 22.01.2013 அன்று பெரம்பலூர் மாவட்டம் வி.களத்தூரில் நடந்த ஊர்வலத்தில் இரண்டு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் ஒரு தரப்பினரான முஸ்லிம்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர்கள் மீது பொய்வழக்கு போடப்பட்டு மாணவர்கள் உட்பட 72 நபர்கள் அநியாயமாக கைது செய்யப்பட்டார்கள்.

ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை இழந்துவிட்டோம் – இ.அபூபக்கர் இரங்கல்!

புதுடெல்லி:- பாதிக்கப்பட்டவர்களுடன் இணைந்து அமெரிக்காவின் திமிரை எதிர்த்த தீரமிக்க ஏகாதிபத்திய எதிர்ப்பு போராளியை சாவேஸின் மரணத்தின் மூலம் உலகில் ஒடுக்கப்பட்ட மக்கள் இழந்துவிட்டார்கள் என்று சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியுள்ளார்.

இ.அபூபக்கர்
சோவியத் யூனியன் மற்றும் உலக கம்யூனிச இயக்கத்தின் வீழ்ச்சியைத் தொடர்ந்து புதிய உலக ஒழுங்குமுறை என்ற செல்லப் பெயரிட்டு அமெரிக்கா நடத்திய ஆக்கிரமிப்பு முயற்சிகளை திட உறுதியுடன் எதிர்த்த சாவேஸ் 3-ஆம் உலக நாடுகளின் தோழன் ஆவார்.

புதன், 6 மார்ச், 2013

ஒடுக்கப்பட்டவர்கள் ஒன்றிணைய வேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட் அழைப்பு!


புதுடெல்லி :- ஒடுக்கப்பட்ட மக்கள் ஒன்றிணைந்தால் மட்டுமே உண்மையான சக்திப்படுத்துதல் சாத்தியமாகும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.
புதுடெல்லி இந்தியன் இஸ்லாமிக் செண்டரில் பாப்புலர் ஃப்ரண்ட் ஏற்பாடுச் செய்த  ஒன்று கூடல்(get-together) நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரையாற்றினார் அவர். பல்வேறு துறைகளில் வெளிநாட்டு முதலீடுகள் மூலமாக ஏகபோக குத்தகைகளுக்காக நாட்டின் செல்வம் செலவிடப்படுவதை எதிர்த்து போராடுவது கட்டாயம் என்று துணை தலைவர் பேராசிரியர் பி.கோயா கூறினார்.

பைப் வெடிகுண்டு சதிகாரர்கள் கைது! புதுவை ரயிலில் குண்டு வைத்தது அம்பலம்!


திருச்சி:- ஹைதராபாத் குண்டுவெடிப்பை இந்தியன் முஜாஹிதீன் செய்ததாக ஊடகங்களும், உளவுத்துறை அறிக்கைகளும் பரப்புரை செய்துவரும் நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் 
where-the-pipe-bomb-was-found
மும்பையிலிருந்து புதுவை வரும் தாதர்-புதுவை சாளுக்கியா எக்ஸ்பிரஸ் எக்ஸ்பிரஸ் ரயிலில் குண்டுவைத்த பயங்கரவாதிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் தான் மதுரையில் பா.ஜ.கவின் அத்வானி வருகையின் போது பைப் வெடிக்குண்டு வைத்தவர்கள் என தெரியவந்துள்ளது.

64 வது குடியரசு தின விளையாட்டு போட்டிகளில் வடகரை மாணவிகள் சாதனை

வடகரை :- நாட்டின் 64 வது குடியரசு தினத்தை முன்னிட்டு சென்னை நேரு விளையாட்டரங்கில் நடைபெற்ற பாரதியார் நினைவு விளையாட்டு போட்டிகளில் மாநில அளவில் குங்ஃபு போட்டிகள் நடைபெற்றது. இதில் மாநிலம் முழுவதிலிமிருந்து 722 மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இதில் பண்பொழி செயிண்ட் ஜோசப் மேல்நிலை பள்ளியின் சார்பில் வடகரையை சார்ந்த சகோதரிகள் ரிஷிகா மற்றம் ஷபானா ஆகியோர் கலந்து கொண்டு மாநில அளவில் இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பிடித்தனர். இருவரும் சிற வயதிலிருந்தே கராத்தே, குங்ஃபு, டேக்வோண்டா போட்டிகளில் மாநில அளவில் முதல் மூன்று இடத்தை மாறிமாறி தக்க வைத்து வருகின்றனர்.

செவ்வாய், 5 மார்ச், 2013

தமிழ்நாடு ஹஜ் கமிட்டி & பாப்புலர் ஃப்ரண்ட் இணைந்து நடத்திய புனித ஹஜ் பயண பாஸ்போர்ட் விழிப்புணர்வு முகாம்

காஞ்சிபுரம் : பாஸ்போர்ட் இல்லாத முஸ்லிம்கள், உடனடியாக பாஸ்போர்ட் பெறுவதற்கு வசதியாக “ஹஜ் மேளா”வை அரசு நடத்துகிறது. சென்னை சாலிகிராமத்தில் உள்ள பாஸ்போர்ட் அலுவலகத்தில் மார்ச் 2ம் தேதி காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஹஜ் மேளா நடைபெற உள்ளது. இதில் பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகள் பங்கேற்று, உடனடியாக பாஸ்போர்ட் கிடைக்க ஆவண செய்கிறார்கள்.
இதனை முன்னிட்டு ஆன்லைனில் பாஸ்போர்ட் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, புனித ஹஜ் பயண மேற்கொள்பவர்களுக்கு உதவி செய்வதற்காக

தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டமாக அறிவிக்க வேண்டும். எஸ்.டி.பி.ஐ மாவட்ட செயற்குழு கோரிக்கை.


02-03-2013 அன்று செங்கோட்டையில் எஸ்.டி.பி.ஐ கட்சி நெல்லை மேற்கு மாவட்ட தலைவர் ஜாபர் அலி உஸ்மானி அவர்களின் தலைமையில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அக்கூட்டத்தில் கீழ் வரும் தீர்மானம் எடுக்கப்பட்டது.
 
தென்காசி மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் அதிகமான மக்கள் வசித்து வருகிறார்கள். அரசு சம்மந்தப்பட்ட மாவட்ட ரீதியிலான அத்தியாவசிய

சனி, 2 மார்ச், 2013

கோவையில் எஸ்.டி.பி.ஐ கட்சியினர் தடையை மீறி ஆர்ப்பாட்டம்

இலங்கை அரசு மற்றும் ராஜபக்சே மீது போர் குற்ற விசாரணை கோரி ஐ.நா. வில் தீர்மானம் கொண்டு வர மத்திய அரசை வலியுறுத்தியும், போர்க்குற்ற விசாரணை நடத்திட ஐ.நா. வை வலியுறுத்தியும், மத்திய அரசின் நிலைப்பாட்டை கண்டித்தும் . 

கோவை மாவட்ட எஸ்.டி.பி.ஐ. (சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆப் இந்தியா) கட்சியின் சார்பில் நேற்று(01.03.2013) கோவை திருவள்ளுவர் பஸ் நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

புதுவை சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் வெடிக்குண்டு வைத்த பயங்கரவாதி கைது!

புதுவை:மும்பையிலிருந்து புதுவை வரும் சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் வெடிக்குண்டு கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்த விசாரணையில் சிவசங்கர் என்ற பயங்கரவாதி  கைது செய்யப்பட்டுள்ளார். 
மும்பையில் இருந்து புதுவை வந்த ரெயிலில் வெடிகுண்டு
கடந்த பிப்ரவரி 8ம் தேதி மும்பையிலிருந்து புதுவை வந்த சாகர் எக்ஸ்பிரஸ் ரயிலின் முன்பதிவு செய்யப்படாத பெட்டி ஒன்றில் இருந்த சூட்கேசில் வெடிகுண்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை வெடிகுண்டு நிபுணர்கள் செயலிழக்கச் செய்தனர். அதை சோதனையிட்ட போது குண்டுக்குள் பசை போன்ற ஒரு பொருள் இருந்தது. அது திரவநிலை வெடிகுண்டு என்று உறுதிபடுத்தப்பட்டது.

மார்ச் 4, “ஈழத்தோழமை நாள்”, கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் SDPI கட்சி பங்கேற்ப்பு

ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமைக் குழு கூட்டம் ஜெனிவாவில் பிப்ரவரி-மார்ச் மாதங்களில் நடைபெறவுள்ளது. இக்கூட்டத்தில் இம்முறை இலங்கைக்கு எதிரான கண்டன தீர்மானத்தை கொண்டு வர முயற்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. 
புலம் பெயர் தமிழர்கள் பல்லாயிரக்கணக்கில் ஜெனிவாவில் கூடி ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர்.அதன் ஒரு பகுதியாக மார்ச் 4 தேதி ஈழத்தோழமை நாள் என அறிவித்து தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் கருப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெறவுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு SDPI கட்சியின் சார்பில்

காஞ்சி காமகோடியின் வெறிப் பேச்சு!


திருச்சி:- பாபரி மஸ்ஜித் விவகாரத்தில் நடுநிலை வகிக்கிறேன் என்ற பெயரால் நாடகமாடிய சங்கரராமன் கொலைக் குற்றவாளியான காஞ்சி காமகோடி சங்கரச்சாரியார் தனது உளக்கிடக்கையை வெளியிட்டுள்ளார்.
காஞ்சி சங்கராச்சாரியார்
ஹிந்துக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால் ராமர்கோயிலை கட்டமுடியும் என்று நேற்று திருச்சியில் துவங்கிய ஹிந்துத்துவா துறவியர்கள் மாநாட்டில் பேசியுள்ளார்.

வெள்ளி, 1 மார்ச், 2013

ஹைதராபாத் இரட்டைக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது புலனாய்வு ஏஜன்சிகளா?


புதுடெல்லி:- பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட அப்ஸல் குருவை தூக்கிலிட்டது தொடர்பாக எழுந்துள்ள முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகளை தவிர்க்கவே மத்திய அரசே திட்டமிட்டு நிகழ்த்தியதுதான் ஹைதராபாத் இரட்டைக்குண்டுவெடிப்பு என்று சிவில் உரிமை அமைப்பான ரிஹாய் மஞ்ச் குற்றம் சாட்டியுள்ளது.
HyderabadBlasts
தீவிரவாதிகள் என்று பொய்க் குற்றம் சாட்டி சிறையில் அடைக்கப்படும் அப்பாவி முஸ்லிம் இளைஞர்களின் விடுதலைக்காக பாடுபடும் அமைப்புதான் ரிஹாய் மஞ்ச். தேசிய ஊடகங்கள் வலதுசாரிகளின் வளர்ப்பு மிருகங்களைப் போல செயல்படுவதாக அவ்வமைப்பு குற்றம் சாட்டுகிறது.

பூரண மதுவிலக்கு : வைகோவின் நடைபயண நிறைவு பொதுக்கூட்டம்!எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் பங்கேற்பு!

தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்த வலியுறுத்தி SDPI கட்சி தொடர்ந்து போராடி வருகிறது. கடந்த ஆண்டு அக்டோபர் 2 முதல் 17 வரை தமிழக முழுவதும் மனித சங்கிலி, ஆட்சியர் அலுவலகம் முற்றுகை, தலைமைச் செயலகம் முற்றுகை போன்ற போராட்டங்களை வீரியமாக நடத்தியது. 
தொடர்ந்து கடந்த மாதம் கல்லூரி மாணவர்கள் மட்டும் பங்கேற்ற மாபெரும் பேரணியை நடத்தியது. மேலும் அடுத்த மாதம் மதுரையில் ஆயிரக்கணக்கான பெண்கள் பங்கேற்கும் பேரணி ஒன்றை நடத்தவும் திட்டமிட்டுள்ளது.