நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 6 ஜனவரி, 2012

திருப்புர் வெள்ள நிவாரணம் நெல்லை மேற்கு மாவட்ட பள்ளிவாசல்களில் வசூலான விபரம்.


திருப்G+ர் வெள்ள நிவாரணம் நெல்லை மேற்கு மாவட்ட பள்ளிவாசல்களில் வசூலான விபரம்.

எண்
பள்ளியின் பெயரகள்
ஊர்
வ.பணம்
1
முகைதீன் பள்ளி
கடையநல்லுர்
2,500.00
2
பேட்டை பள்ளி
”
743.00
3
ரஹ்மானியாபுரம் பள்ளி
”
748.00
4
மதினா நகர் பள்ளி
”
2,825.00
5
ஊரணி பள்ளி
”
457.00
6
தி.ப.பள்ளி
வடகரை
670.00
7
பெரிய பள்ளி
”
660.00
8
[_ம்ஆ பள்ளி
சங்கரன்கோவில்
1,237.00
9
பஸ்டாண்ட் பள்ளி
தென்காசி
3,034.00
10
நடுபேட்டை பள்ளி
”
1,885.00
11
மஸ்ஜிதே அஃலம்
புளியங்குடி
1,958.00
12
பெரிய பள்ளி
”
702.00
13
[_ம்ஆ பள்ளி
அச்சன்புதுர்
1,210.00
14
[_ம்ஆ பள்ளி
வல்லம்
1,600.00
15
மேY}ர் பள்ளி
செங்கோட்டை
1,600.00
16
தஞ்சாT+ர் பள்ளி
”
1,657.00
17
ரயில்வேகேட் பள்ளி
”
243.00
18
[_ம்ஆ பள்ளி
பண்பொழி
382.00
                  மொத்தம் வசூலான பணம்
24,111.00


இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்



கடந்த சில வருடங்களாக புற்றுநோயினால் ஏற்படும் மரணங்கள் அதிகரித்து கொண்டே இருகின்றது என்பதை நாம் அனைவரும் அறிவோம். பெண்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தவும் புற்றுநோயை ஆரம்ப நிலையிலே கண்டு கொள்ளவும்,குழந்தையின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம் இன்ஷா அல்லாஹ் வரும் ஜனவரி 8 ஆம் தேதி அல்ஹுதா மெட்ரிகுலேசன் பள்ளியில் வைத்து நேசனல் உமன்ஸ் பிரென்ட் சார்பாக நடைபெற இருகின்றது இந்த முகாமில் அணைத்து பெண்களும் கலந்து கொண்டு பயன்பெற கேட்டு கொள்கிறோம்.

ஒதுக்கீடு வழங்கப்பட்டதற்கு எதிராக நாடு தழுவிய போராட்டம் - வி.ஹெச்.பி

லக்னோ :  ஓ.பி.சி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கென மத்திய அரசு உள் ஒதுக்கீடு வழங்குவதாக தீர்மானித்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு சமூக நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது துவேஷ எண்ணங்களை மக்களிடத்தில் சேர்ப்பதற்கு வி.ஹெச்.பி தயாராகி வருகிறது. 



வி.ஹெச்.பியின் அகில உலக தலைவர் பிரவீன் தொகாடியா கடந்த 5ஆம் தேதி அன்று ஓ.பி.சி வகுப்பினருக்காக வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் சிறுபான்மை மக்களுக்காக 4.5% உள் ஒதுக்கீடு (முஸ்லிம்களுக்காக வழங்கப்பட்ட ஒதுக்கீடு) வழங்கியதை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார். 

முஸ்லிம்களை தாக்குவதற்கு ஹிந்தத்துவா இளைஞர்களுக்கு பயிற்சி

ஹைதராபாத் : ஆந்திர மாநிலத்தில் நடைபெற்று வரும் தெலுங்கான விவகாரத்திற்கு மத்தியில் நன்கு திட்டமிடப்பட்டு நேர்தியான முறையில் தொடர்ந்து முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டு வருகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற போராட்ட நேரங்களிலிருந்து இன்று வரை 15ற்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள் தாக்கப்பட்டுள்ளனர்.


சென்ற வருடம் முஸ்லிம்கள் கொண்டாடிய ஹஜ்ஜுப் பெருநாள் பின்பு போவனபள்ளி, காச்சிகுடா, சிக்கடபள்ளி, எல்.பி. நகர், வித்யா நகர் போன்ற பகுதிகளில் இத்தகைய தாக்குதல்கள் ஒரு சில நாட்கள் இடைவெளியில் நடந்தேறியுள்ளது.

அரசு அலுவலகத்தில் பாக்.கொடி: ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகள் கைது


பெங்களூர் : கர்நாடகா மாநிலம் சிந்தகியில் அரசு அலுவலகத்தின் முன்னால் உள்ள கொடி மரத்தில் பாகிஸ்தான் கொடியை ஏற்றியது தொடர்பாக ஆறு ஹிந்துத்துவா தீவிரவாதிகளை போலீசார் கைது செய்துள்ளனர்.

மீண்டும் 4 முஸ்லிம் இளைஞர்கள் மும்பையில் கைது!

மும்பை :  அப்துல் வஹாப் உமர் (22) மற்றும் கமர் ஆலம் ஷேக் ஆகிய இருவரும் மும்பை தீவிரவாத எதிர்ப்பு படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு கிட்டத்தட்ட 3 நாட்களாகியும் இதுவரை அவர்களை எங்கு வைத்திருக்கிறார்கள் என்பது மர்மமாகவே உள்ளது.

"லவ் ஜிஹாத்" என்னும் வதந்தியை பரப்புவது ஹிந்துத்துவ இணையதளங்களே!


திருவனந்தபுரம் :  எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய் வதந்தியான "லவ் ஜிஹாத்" என்னும் பிரச்சாரத்தை இந்துத்துவ இணையதளங்கே பரப்பி வருவதாக கேரள மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கேரள காவல்துறையினர் சைபர் கிரைம் அதிகாரிகளின் உதவியோடு விசாரணையில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

செவ்வாய், 3 ஜனவரி, 2012

வருகிறது இன்னொரு வசதி சேமிப்பு கணக்கு எண் மாறாமல் விரும்பிய வங்கிக்கு மாறலாம்


புதுடெல்லி : செல்போன், இன்சூரன்ஸ் ஆகியவற்றை தொடர்ந்து நம்பர் மாறாமல் நிறுவனம் மாறும் வசதி வங்கிகளுக்கும் விரிகிறது. சேமிப்பு கணக்கு எண் மாறாமல் வேறு வங்கியில் கணக்கு தொடங்கும் வசதி ஏற்படுத்த மத்திய நிதி அமைச்சகம் பரிசீலித்து வருகிறது.

உலகெங்கும் அவசர உதவிக்கு ஒரே எண்


ஒவ்வொரு நாட்டிலும், மாநிலத்திலும் மக்கள் சேவைக்காக அவசர உதவி மையங்கள் செயல்பட்டுவருகின்றன. இதில் மருத்துவ உதவி, தீயணைப்பு உதவி, ஆம்புலன்ஸ், அவசர போலீஸ் என ஒவ்வொரு உதவி மையத்திற்கும் தனித்தனி எண் கொடுக்கப்பட்டிருக்கும்.

மகளிர் உதவி மையம் - 1091
குழந்தை உதவி மையம் - 1098
தீயணைப்பு - 101
அவரச போலீஸ் - 100
ஆம்புலன்ஸ் - 108

இஸ்லாமியவாதிகளின் தலைமையில் புதிய அமைச்சரவை


ரபாத் : மொராக்கோவில் இஸ்லாமிய கட்சியான ஜஸ்டிஸ் அண்ட் டெவல்ப்மெண்ட் கட்சியின் (பி.ஜெ.டி) தலைமையில் புதிய அமைச்சரவை பதவியேற்றது.

பி.ஜெ.டி தலைவர் அப்துல் இலாஹ் பென்கிரானை பிரதமராகவும், 31 உறுப்பினர்களை கொண்ட அமைச்சரவையும் மொராக்கோ மன்னர் நியமித்துள்ளதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் கூறுகிறது. புதிய அமைச்சரவையில் பிரதமர்,
வெளியுறவுத்துறை, சட்டம், செய்தி ஒலிபரப்பு உள்பட 11 அமைச்சர்கள் பி.ஜெ.டி கட்சியை சார்ந்தவர்கள் ஆவர்.

இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்


எகிப்து இறுதிக்கட்ட வாக்குப்பதிவு துவக்கம்
கெய்ரோ : ஜனநாயகத்தில் அடியெடுத்து வைக்கும் எகிப்தில் பாராளுமன்ற கீழ் சபைக்கான இறுதிக்கட்ட தேர்தல் நேற்று துவங்கியது.
ஒன்றரை கோடி வாக்காளர்கள் நேற்றும், இன்றும் நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவில் தங்களது வாக்குரிமையை நிறைவேற்றுவர். ஒன்பது மாகாணங்களில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

மேற்கு வங்கத்தில் "பள்ளி செல்வோம்" பிரச்சாரம்


கொல்கத்தா: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கடந்த பல வருடங்களாக கல்வி பற்றிய விழிப்புணர்வை நாடு முழுவதும் ஏற்படுத்தி வருகிறது. அதன் அடிப்படையில் ஒவ்வொரு வருடமும் "ஸ்கூல் சலோ" என்ற முழக்கத்தை முன் வைத்து கல்வி பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது.
School Chalo in West Bengal


திங்கள், 2 ஜனவரி, 2012

நாடு போற போக்கு பார்த்தா., இனிமேல் ., ? மின்சாரம் கேட்ட மக்கள் மீது துப்பாக்கிச்சூடு

ஜம்மு :  காஷ்மீர் மாநிலத்தில் மின்சாரரம் கேட்டு வீதிக்கு வந்து போராடிய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் ஒருவர் உயிரிழந்தார். 2 பேர் படுகாயமுற்ற நிலையில் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டுள்ளனர். 


துப்பாக்கி சூட்டிற்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் சாலைகளில் தொடர் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர்.



தமிழகம் முழுவதும் 1.90 கோடி ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கும் பணி தொடங்கியது


நெல்லை : தமிழகத் தில் ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. அந்தந்த ரேஷன் கடைகளில் பிப்.28ம் தேதி வரை புதுப்பிக்கலாம்.
தமிழகத்தில் 1.90 ரேஷன் கார்டுகள் புழக்கத் தில் உள்ளன. இந்த கார்டுகளுக்கு 30 ஆயிரத்து 924 ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோக பொருட் கள் வழங்கப்பட்டு வருகின் றன. தமிழகத்தை பொறுத்தவரை கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட் டது.

கடையநல்லூர் பகுதியில் மீண்டும் மர்ம காய்ச்சலால் பொதுமக்கள் அச்சம்


கடையநல்லூர் : கடையநல்லூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் மீண்டும் மர்ம காய்ச்சல் தலை தூக்கியுள்ளதால் பொது மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
கடையநல்லூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 ஆண்டுகளாக மர்ம காய்ச்சல் பொது மக்களை அச்சுறுத்தி வரு கிறது. இதுவரை 50க்கும் மேற்பட்டோர் பலியான நிலையில் ஆயிரக்கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளனர். இக்காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் ரத்ததில் உள்ள பிலேட்லேட்ஸ் அணுக்கள் குறைவதால் உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்கப்படாவிட்டால் இறந்து போகும் சூழ்நிலை உள்ளது.

7 இந்திய மாநிலங்களில் விவசாயத் திட்டத்தை துவக்குகிறது இஸ்ரேல்


ஜெய்ப்பூர் : விவசாய உற்பத்தியை அதிகரிக்கவும், விவசாயிகளுக்கு நவீன தொழில்நுட்பத்தை கற்றுக் கொடுப்பதற்கும் மத்தியக்கிழக்கில் பயங்கரவாத நாடாக திகழும் இஸ்ரேல் இந்தியாவில் கால்பதிக்கிறது. ஏழு மாநிலங்களில் 2012-ஏப்ரல் மாதம் விவசாய திட்டத்தை துவக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது.


முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் .


முஸ்லீம் மாணவர்களுக்கு கல்வி உதவி தொகை வழங்கும் தொண்டு நிறுவனங்கள் 




1. ஐக்கியப் பொருளாதாரப் பேரவை ,,அலி டவர்ஸ், கிரீம்ஸ் ரோடு ஆயிரம் விளக்கு, சென்னை - 600 006 தொலைபேசி: 2829 5445

2. இஸ்லாமிக் டெவலப்மென்ட் பேங்க் ராயபேட்டை, நெடுஞ்சாலை சென்னை - 14 தொலைபேசி: 94440 52530

3. சீதக்காதி அறக்கட்டளை, 688 , அண்ணா சாலை, சென்னை - 06

4. ஆல் இந்தியா இஸ்லாமிக் பவுண்டேசன், 688 , அண்ணா சாலை, சென்னை - 06



வேலை இல்லாத சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன் வளர்ச்சி திட்டம்


தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் வேலை இல்லாத சிறுபான்மையினர்களுக்கு இலவச திறன் வளர்ச்சி திட்டத்தின் கீழ் இலகு ரக வாகன ஓட்டுனர் பயிற்சியும் மற்றும் கன ரக ஓட்டுனர் பயிற்சியும் அளிக்கபடுகிறது .

மேற்கொண்டு விபரங்கள் படத்தில் உள்ளது.

உங்கள் பிள்ளைகள் சாப்பிடுவது சத்தான உணவா?


வளரும் பருவத்தில் குழந்தைகள் சாப்பிடும் உணவு சுவையாக இருந்தால் மட்டும் போதாது;  சத்தானதாகவும் இருக்க வேண்டும்.

பொதுவாக, ஒரு வயதில் இருந்து ஆறு வயது வரை ஆண் குழந்தையாக இருந்தாலும் பெண் குழந்தையாக இருந்தாலும் ஒரே மாதிரியான ஊட்டச் சத்துக்கள்தான் தேவைப்படும். ஏழு வயது முதல் இருபாலருக்கும் தேவைப்படும் சத்துக்களில் சிறிது மாற்றம் ஏற்படும். இந்த வயதில் சிறுவர்களைவிட சிறுமிகளுக்கு அதிக எடை கூடும். காரணம் – ஹார்மோன்

நிபுணர்குழு அறிக்கை தமிழகத்திற்கு சாதகம் – கேரளா எதிர்ப்பு


டெல்லி:முல்லைப் பெரியாறு அணை பகுதியில் மிக குறைந்த அளவிலே நில அதிர்ச்சி ஏற்பட வாய்ப்பிருப்பதால் அணைக்கு அதனால் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என நிபுணர் குழு தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்நிலையில் நிபுணர்குழுவிற்கு எதிராக கேரளா அரசு உச்சநீதிமன்ற உயர்மட்டக் குழுவினரிடம் புகார் அளித்துள்ளது.

1948 ஃபலஸ்தீன் இனப் படுகொலைப் பற்றி உண்மையை வெளிக்கொணரும் முன்னாள் இஸ்ரேல் வீரர்


1948-ல் ஃபலஸ்தீன் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்ற போரில், ஃபலஸ்தீனுக்கு எதிராக இஸ்ரேலால் மேற்க்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள், இன அழிப்பு, படுகொலைகள், குடியேற்றம் மற்றும் இனவாதம் பற்றி முன்னாள் இராணுவ அதிகாரி அம்னன் நெயுமான் தனது வீடியோ சாட்சியத்தின் மூலம் வெளிக்கொண்டு வந்துள்ளார்.

அத்துமீறும் கேரள அரசையும் கண்டித்து இராமநாதபுரத்தில் SDPI இரயில் மறியல் .



மத்திய அரசையும், கேரள அரசையும் கண்டித்து SDPI இராமநாதபுரத்தில் இரயில் மறியல் . 200 க்கும் மேற்பட்ட SDPI தொண்டர்கள் கைது. முல்லைப்பெரியார் விவகாரத்தில் தீர்வு காண இயலாத மத்திய அரசையும், அத்துமீறும் கேரள அரசையும் கண்டித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் சார்பில் இன்று (31.12.2011) இராமநாதபுரத்தில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை வகித்தார்.