திருவனந்தபுரம் : எந்த ஒரு அடிப்படை ஆதாரமும் இல்லாத பொய் வதந்தியான "லவ் ஜிஹாத்" என்னும் பிரச்சாரத்தை இந்துத்துவ இணையதளங்கே பரப்பி வருவதாக கேரள மாநில காவல்துறை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக கேரள காவல்துறையினர் சைபர் கிரைம் அதிகாரிகளின் உதவியோடு விசாரணையில் இறங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
இந்த இணையதளத்தை நடத்தி வருபவர்கள் மீது நடவடிக்கை எடுப்பதற்காக காவல்துறையினர் தேடி வருகின்றனர். லவ் ஜிஹாத் தொடர்பான வழக்கு ஆதாரமற்றது என்றும் அது ஒரு பொய் பிரச்சாரம் என்று கேரள உயர் நீதி மன்றம் தீர்பளித்த பின்பும் இந்த இணையதளத்தின் மூலமாக பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருவதாக காவல்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
லவ் ஜிஹாத் தொடர்பான பொய்யான செய்திகளை வெளியிட்டது மட்டுமல்லாமல் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய பொய் பிரச்சாரங்களையும் மேற்கொண்டுள்ளனர். காவல்துறையின் இந்த செய்தி வெளியிடப்பட்டதும் தங்கள் இணையதளத்திலிருந்து லவ் ஜிஹாத் தொடர்பான எல்லா செய்திகளையும் நீக்கியுள்ளனர்.