மத்திய அரசையும், கேரள அரசையும் கண்டித்து SDPI இராமநாதபுரத்தில் இரயில் மறியல் . 200 க்கும் மேற்பட்ட SDPI தொண்டர்கள் கைது. முல்லைப்பெரியார் விவகாரத்தில் தீர்வு காண இயலாத மத்திய அரசையும், அத்துமீறும் கேரள அரசையும் கண்டித்து சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் சார்பில் இன்று (31.12.2011) இராமநாதபுரத்தில் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நூர் ஜியாவுதீன் தலைமை வகித்தார்.
மாநில செயலாளர் செய்யது இப்ராகிம், மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினம் அண்ணாச்சி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணை தலைவர் அப்துல் வஹ்ஹாப், அம்ஜத் உசேன், மாவட்ட பொது செயலாளர் இஷாக், இராமநாதபுரம் தொகுதி தலைவர் பைரோஸ்கான், செயலாளர் ஜமீல், துணை தலைவர் கார்மேகம், பரமக்குடி தொகுதி தலைவர் செய்யது இப்ராகிம், முதுகுளத்தூர் தொகுதி தலைவர் ஜகாங்கீர், துணை தலைவர் சித்திக், தமிழர் தேசிய இயக்கம் மாவட்ட செயலாளர் சி. பசுமலை, அப்பாஸ், இராமநாதபுரம் நகர தலைவர் அப்பாஸ், துணை தலைவர் ரபீக்,
அஜ்மல் செரிப், செயலாளர் ஜி.செந்தில், இணை செயலாளர் சிக்கந்தர், ஜாபர், பொருளாளர் நவாஸ், பாப்புலர் ப்ரண்ட் மாவட்ட தலைவர் செய்யது ஹாலிது, கேம்பஸ் ப்ரண்ட் மாவட்ட தலைவர் ரிஹாருதீன், மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களும், நகர, கிளை நிர்வாகிகளும், ஏராளமான கட்சி தொண்டர்களும் கலந்து கொண்டு மத்திய அரசுக்கெதிராகவும், கேரள அரசுக்கெதிராகவும் கோஷமிட்டனர். இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட முயன்ற க்கும் மேற்பட்ட 200 க்கும் மேற்பட்ட SDPI தொண்டர்களும், நிர்வாகிகளும் கைது செய்யப்பட்டனர்.