லிலாங் : சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா கட்சியை சேர்ந்த தேர்தல் பிரச்சாரக் குழு கடந்த ஜனவரி 1-ஆம் தேதி முதல் மணிப்பூர் லிலாங் தொகுதியில் போட்டியிடும் முஹம்மத் ஹாலித் தனது பிரச்சாரத்தை துவக்கியது.
இந்த பிரச்சாரத்தில் 3000-க்கும் மேற்ப்பட்ட மக்கள் கலந்துக் கொண்டனர். சுமார் காலை 11-மணி அளவில் தொடங்கிய இந்த பிரச்சாரத்தில் 200 இரு சக்கர வாகனங்கள், 30 ஆட்டோ ரிக்க்ஷா மற்றும் 20-கார்கள் பங்கேற்க இந்த பிரச்சார பேரணி லிலாங் தொகுதியில் உள்ள ஒவ்வொரு பகுதிக்கும் சென்றது.
இந்த தேர்தல் பிரச்சார பேரணியை வரவேற்க மக்கள் வெள்ளம் சாலையோரம் இருபுறம்மும் திரண்டு நின்றனர். பிரச்சாரத்தில் பங்கேற்றவர்கள் “ஊழலை நிறுத்துவோம், உரிமைக்காக சண்டையிடுவோம்” என்று கோசம் எழுப்பினர்.பிரச்சாரத்தில் பங்கேற்ற மக்களை வரவேற்க திறந்தவெளி ஜீப்பில் வேட்பாளர் முஹம்மது ஹாலித் மற்றும் மாநில செயலாளர் முஹம்மது ரபிசுத்தின் ஷா அவர்களும் கூட்டத்தை வலம் வந்தனர்.
மேலும் பிரச்சாரத்தில் பேசிய வேட்பாளர் ஹாலித், இன்று நாங்கள் லிலாங் தொகுதியின் அனைத்து மூளை, முடுக்கையும் பார்வையிட்டோம், எங்கள் பிரச்சினைகளை சரி செய்வார்கள் என்று நம்பி ஓட்டு போட்டோம், ஆனால் இன்று வரை இந்ததொகுதியில் எந்த வித மாறுபாடும் இல்லை. வெகு விரைவில் புதிய மாற்றத்தை இந்த தொகுதியில் உண்டாக்குவோம் என்று எழுச்சிமிக்க உரையை பிரச்சாரத்தில் ஹாலித் முன் வைத்தார்.