மும்பை : அண்மையில் மஹராஷ்ட்ரா மாநில தீவிரவாத எதிர்ப்பு படையினரால்(ஏ.டி.எஸ்) கைது செய்யப்பட்ட பொறியியல் மாணவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்திய போதிலும் கடந்த ஆண்டும் ஜூலை 13-ஆம் தேதி நடந்து மும்பை தொடர் குண்டுவெடிப்பு வழக்கில் துப்பு துலங்கவில்லை.
ஸினாரில் உள்ள தரபங்காவைச் சார்ந்த பஞ்சாப் பொறியியல் கல்லூரியில் பயிலும் மாணவர்களான கமர் அஸ்லம்(வயது 19), அப்துல் வஹ்ஹாப்(வயது 20) ஆகியோரை ஏ.டி.எஸ் இம்மாதம் முதல் தேதியில் கைது செய்தது. ஆனால் இவர்களிடம் தீவிரமாக விசாரணை நடத்திய போதிலும் தகவல்கள் ஒன்றும் கிடைக்கவில்லை என மும்பை ஏ.டி.எஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளையில், மும்பையில் கைது செய்த தனது மகனை குறித்து ஏ.டி.எஸ் தகவல் தெரிவிக்கவில்லை என கமர் அஸ்லமின் தந்தை ஸக்கீர் ஹுஸைன் கூறுகிறார். “எனது மகன் படிப்பில் கெட்டிக்காரன். எவ்வித சட்டவிரோத செயல்களிலும் அவன் ஈடுபடமாட்டான் என்ற உறுதியான நம்பிக்கை எனக்கு உண்டு” என ஹுஸைன் கூறுகிறார்.‘எனது மகன் நிரபராதி’ என அப்துல் வஹ்ஹாபின் தந்தை முஹம்மது அப்துல் உமரும் கூறுகிறார்.