நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 6 ஜனவரி, 2012

இஷ்ரத் ஜஹான் எண்கவுண்டர் வழக்கு சி.பி.ஐக்கு மாற்றம்

புதுடெல்லி: கடந்த வெள்ளிக்கிழமை அன்று குஜராத் உயர் நீதிமன்றம் பிரப்பித்த உத்தரவின் படி கடந்த 2004 ஆம் ஆண்டு மும்பை கல்லூரி மாணவியான இஷ்ரத் ஜஹான் மற்றும் 3 மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கை சி.பி.ஐ விசாரிக்க இருக்கின்றது.


இதற்கு முன்பாக இவ்வழக்கை குஜராத் உயர் நீதிமன்றத்தால் ஏற்படுத்தப்பட்ட சிறப்பு விசாரணைக்குழு விசாரித்து வந்தது. விசாரணையின் முடிவில் இஷ்ரத் ஜஹான் குஜராத் காவல்துறையினரால் போலி எண்கவுண்டர் முறையில் கொல்லப்பட்டுள்ளார் என்று கூறியது. தற்போது வி.வி லக்ஷ்மி நாராயணன் தலைமையிலான சிபிஐ அதிகாரிகளிடம் இவ்வழக்கிற்கான ஆவணங்களை சிறப்பு புலனாய்வுக்குழு ஒப்படைத்தது.
காவல்துறை துணை கண்காணிப்பாளர் கலைமணி, டி.ஐ.ஜி அருண் போத்ரா மற்றும் சில சி.பி.ஐ அதிகாரிகள் உடன் இருந்தனர். அப்போது சிறப்பு புலனாய்வுக்குழு இவ்வழக்கிற்கான எல்லா ஆவணங்களையும் ஆங்கில மொழிபெயர்ப்புடன் ஒப்படைத்தது.

இவ்வழக்கின் விசாரணையை முடித்த பிறகு மற்றுமொரு  எண்கவுண்டர் வழக்கானா ஷொராபுதீன் மற்றும் அவரது மனைவி கெளசர் பீ சுட்டுக்கொல்லப்பட்ட வழக்கையும் விசாரிக்க இருக்கிறது.

கடந்த 2004ஆம் ஆண்டு இஷ்ரத் ஜஹான், ஜாவித் ஷேக், அம்ஜத் அலி, ஜீஷன் ஜொஹர் ஆகியோர் குஜராத் முதலமைச்சர் நரேந்திர மோடி
யை கொல்ல திட்டமிட்டிருந்தனர் என்றும் பாகிஸ்தானில் செயல்பட்டுவரும் லக்ஷ்சர் இ தொய்பா தீவிரவாத இயக்கத்தோடு தொடர்புடையவர் என்று கூறி அஹமதாபாத் காவல்துறை அதிகாரிகள் சுட்டுக்கொலை செய்தனர்.  இதனை விசாரித்த சிறப்பு புலனாய்வுக்குழு இது போலி எண்கவுண்டர் என கண்டுபிடித்தது குறிப்பிடத்தக்கது.