நெல்லை : தமிழகத் தில் ரேஷன் கார்டுகள் புதுப்பிக்கும் பணி நேற்று முதல் தொடங்கியது. அந்தந்த ரேஷன் கடைகளில் பிப்.28ம் தேதி வரை புதுப்பிக்கலாம்.
தமிழகத்தில் 1.90 ரேஷன் கார்டுகள் புழக்கத் தில் உள்ளன. இந்த கார்டுகளுக்கு 30 ஆயிரத்து 924 ரேஷன் கடைகள் மூலம் பொது விநியோக பொருட் கள் வழங்கப்பட்டு வருகின் றன. தமிழகத்தை பொறுத்தவரை கடைசியாக கடந்த 2005ம் ஆண்டு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட் டது.
இந்த ரேஷன் கார்டுகளின் ஆயுட்காலம் 2009ம் ஆண்டுடன் முடிவடைந் தது. 2010ம் ஆண்டிற்கு உள் தாள் இணைப்பு வழங்கி ரேஷன் கார்டு புதுப்பிக்கப்பட்டது. தொடர்ந்து 2011ம் ஆண்டிற்கும் உள்தாள் இணைப்பு வழங்கப்பட்டது.
கடந்த 7 ஆண்டுகளாக ஒரே ரேஷன் கார்டை பொதுமக்கள் பயன்படுத்தி வருவதால் பெயர் திருத்தம், முகவரி மாற்றம், பெயர் நீக் கல், சேர்த்தல் ஆகிய பணி கள் மேற்கொள்ளப்பட் டன. இதனால் பல குடும் பங்களுக்கு வழங்கப்பட்ட ரேஷன் கார்டு கிழ�ந்து கந்த லாக காட்சியளித்தது. 2013ம் ஆண்டு முதல் மின் னணு ரேஷன் கார்டு வழங்க அரசு முடிவு செய்துள்ளது.
இதற்காக நடப்பு ஆண் டிலும் (2012) ரேஷன் கார்டை புதுப்பித்து வழங் கும் பணிகள் தொடங்கியுள் ளன. 2012ம் ஆண்டிற்கு ஏற் கனவே உள்தாள் இணைப்பு இருந்த போதிலும், ரேஷன் பொருட்கள் வாங்க வரும் பொதுமக்களிடம் விசாரணை செய்து உரிய திருத்தங்களை பதிவு செய்ய ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கான பணிகள் தமிழகம் முழுவதும் நேற்று முதல் தொடங்கியது. தமிழகத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வரும் 1.90 கோடி ரேஷன் கார்டுகளும் இந்த முறையில் புதுப்பிக்கப்பட உள்ளன. இந்தப் பணிகள் நடந்ததால் பெரும் பாலான ரேஷன் கடைக ளில் நேற்று பொருட்கள் வழங்கப்படவில்லை. இதற் காக 2 மாதம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. பிப்.28ம் தேதிக்குள் இந்தப் பணியை முடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
நெல்லை மாவட்டத்தில் 8 லட்சத்து 44 ஆயிரத்து 735 ரேஷன் கார்டுகள் உள்ளன. இந்த ரேஷன் கார்டுகளை புதுப்பித்து வழங்கும் பணி 1,379 ரேஷன் கடைகளில் நேற்று முதல் தொடங்கியது.