லக்னோ : ஓ.பி.சி வகுப்பினருக்கான இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கென மத்திய அரசு உள் ஒதுக்கீடு வழங்குவதாக தீர்மானித்துள்ளது. இதனை சரியாக பயன்படுத்திக்கொண்டு சமூக நல்லிணக்கத்தை சீர்குழைக்கும் வகையில் முஸ்லிம்களுக்கு எதிரான தங்களது துவேஷ எண்ணங்களை மக்களிடத்தில் சேர்ப்பதற்கு வி.ஹெச்.பி தயாராகி வருகிறது.
வி.ஹெச்.பியின் அகில உலக தலைவர் பிரவீன் தொகாடியா கடந்த 5ஆம் தேதி அன்று ஓ.பி.சி வகுப்பினருக்காக வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டில் சிறுபான்மை மக்களுக்காக 4.5% உள் ஒதுக்கீடு (முஸ்லிம்களுக்காக வழங்கப்பட்ட ஒதுக்கீடு) வழங்கியதை கண்டித்து நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக அறிவித்துள்ளார்.

இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பான ஓ.பி.சியினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டிலிருந்து 4.5% முஸ்லிம்களுக்கு வழங்கப்படுவது மிகவும் கண்டிக்கதக்கதாகும். 27% ஒதுக்கீடு செய்வது என்பது இந்திய அரசியல் அமைப்பிற்கு எதிரான மீறலாகும். அதுமட்டுமல்லாமல் பெரும்பான்மை மக்களின் ஜனநாயக உரிமைகளை பறிக்கக்கூடிய விதமாக இருக்கிறது. எனவே இதனை கண்டித்து அமைதியான முறையில் நாடு தழுவிய போராட்டத்தை நடத்த இருப்பதாக தொகாடிய தெரிவித்துள்ளார்.
இன்று இந்திய அரசாங்கம் முஸ்லிம்களுக்கு முன்னால் மண்ணியிட்டு நின்றுகொண்டிருக்கிறது. ஆனால் குடும்ப கட்டுப்பாடு போன்ற அத்தியாவசிய செயல்களை கூட செய்ய மறுப்பவர்களாக முஸ்லிம்கள் இருக்கிறார்களாம். மேலும் ஏழை ஓ.பி.சியினருக்காக வழங்கப்பட்ட 27% இடஒதுக்கீட்டிலிருந்து 4.5% முஸ்லிம்களுக்கு ஒதுக்குவதன் மூலம் கல்வி, வேலை வாய்ப்பு, வங்கிக்கடன், இன்னும் பிற சலுகைகளை சிறமப்பட்டுக் கொண்டிருக்கும் இதர பிற்படுத்த மக்களிடம் இருந்து பிடுங்கி முஸ்லிம்களுக்கு வழங்க மத்திய அரசு முடிவெடுத்துள்ளதாம். இத்தோடு நின்றுவிடாமல் கிறிஸ்தவர்களுக்கும், பிற்படுத்தப்பட்டவர்களுக்கும் ஒதுக்கீடு வழங்கும் நிலை ஏற்பட்டுவிடும். ஓட்டு வங்கியை கருத்தில் கொண்டு மத்திய அரசு இத்தகைய முடிவை எடுத்திருக்கிறது.
முஸ்லிம்களுக்கு வழங்க இருக்கும் இடஒதுக்கீட்டினை உடனே மத்திய அரசு வாபஸ் பெற வேண்டும். மேலும் ஓ.பி.சி பட்டியலில் சேர்க்கப்பட்ட முஸ்லிம்களை உடனே அதிலிருந்து நீக்க வேண்டுமென மத்திய அரசை வலியுறுத்துவதாக தெரிவித்தார்.
மத்திய அரசின் இந்த நிலைபாடு இறுதியில் பாரத இந்தியாவில் ஹிந்துக்கள் வாழ்வதற்குண்டான வழிவகைகளை அழித்துவிடும் செயலாகும். எனவே ஜாதி, மத, இன, மொழி பேதமின்றி அனைத்து ஹிந்துக்களும் ஒன்றினைந்து இந்த போராட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளார்.