கெய்ரோ : ஜனநாயகத்தில் அடியெடுத்து வைக்கும் எகிப்தில் பாராளுமன்ற கீழ் சபைக்கான இறுதிக்கட்ட தேர்தல் நேற்று துவங்கியது.
ஒன்றரை கோடி வாக்காளர்கள் நேற்றும், இன்றும் நடைபெறவிருக்கும் வாக்குப்பதிவில் தங்களது வாக்குரிமையை நிறைவேற்றுவர். ஒன்பது மாகாணங்களில் இறுதிக்கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
மொத்தம் 498 உறுப்பினர்களை கொண்ட அவைக்கான தேர்தல்கள் 3 கட்டமாக நடந்துவருகின்றன.10 இடங்களுக்கான உறுப்பினர்களை ராணுவ கவுன்சில் தலைவர் ஃபீல்ட் மார்ஷல் ஹுஸைன் தன்தாவி நியமிப்பார்.முதல் இரண்டு கட்ட தேர்தல்களில் இஸ்லாமிய கட்சிகள் முன்னணி பெற்றன.முஸ்லிம் சகோதரத்துவ இயக்கத்தின் அரசியல் பிரிவான ஃப்ரீடம் அண்ட் ஜஸ்டிஸ் கட்சி பெரும்பான்மையான இடங்களை கைப்பற்றும் என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். அதற்கு அடுத்து அந்நூர் என்ற இஸ்லாமிய கட்சி உள்ளது. 40-க்கும் அதிகமான கட்சிகள் தேர்தல் களத்தில் உள்ளன.
பாராளுமன்றத்தின் துணைச் சபையான ஷூரா கவுன்சிலுக்கு இம்மாதம் 19-ஆம் தேதி முதல் பிப்ரவரி 22 வரை மூன்று கட்ட தேர்தல்கள் நடைபெறும். ஜூன் மாதம் அதிபர் பதவிக்கான தேர்தல் நடைபெறும்.