நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 17 பிப்ரவரி, 2012

உற்சாகமான தேர்தல் எதிரியின் முகத்தை நோக்கிய இடியாக இருக்கும்: ஈரான் தலைவர்

டெஹ்ரான்: மார்ச் 2- ஆந்தேதி அன்று நடக்கவிருக்கின்ற ஈரான் பாராளுமன்றத் தேர்தலில் பெருவாரியாக வாக்களித்து எதிரியின் முகத்தில் குத்துவார்கள் என்று இஸ்லாமியப் புரட்சியின் மூத்த தலைவர் ஆயதுல்லாஹ் அலி கொமெய்னி கூறியுள்ளார்.

தெஹ்ரானிலுள்ள வடமேற்கு மாகாணமான கிழக்கு அஜர்பைஜானில் புதனன்று ஆயிரக் கணக்கானோர் கலந்து கொண்ட மாபெரும் பொதுக்கூட்டத்தில் இதனை தெரிவித்தார்.

பிசுபிசுத்துப்போன பா.ஜ.கவின் வாக்குறுதிகள்


வழக்கம் போல் ஒவ்வொரு தேர்தலின் போதும் பா.ஜ.க விடுக்கும் தேர்தல் வாக்குறுதிகளில் எந்தவித மாற்றத்தையும் ஏற்படுத்தாமல் இந்த முறையும் உத்திர பிரதேச தேர்தல் வாக்குறுதிகளை வெளியிட்டது.


உத்திர பிரதேச மாநில சட்டமன்ற தேர்தல் வாக்குறுதிகளில் அயோத்தியில் இராமர் கோயிலை கட்டுவதே பா.ஜ.கவின் லட்சியம் என்று கூறியது. ஆனால் இந்த முறை பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கைகள் இந்துக்களிடம் வரவேற்பை பெறவில்லை என்பதும் அவர்கள் பா.ஜ.கவை ஆதரிக்க தயாரக இல்லை என்பதையே எடுத்துக்காட்டுகிறது. இதற்கு காரணம் இன்று வாக்களிப்பவர்களில் 60% இளைஞர்களாக இருக்கின்றார்கள். கல்வி, வேலை வாய்ப்பு ஆகியவற்றிலேயே ஆர்வம் காட்டும் அவர்கள் இது போன்று மதத்தின் பெயரால் பிளவை ஏற்படுத்துவதை அவர்கள் விரும்புவதில்லை என டாக்டர் முஹம்மது ஆரிஃப் தெரிவித்தார்.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட இந்துக்களுக்கு உதவி செய்த முஸ்லிம் தொண்டு நிறுவனம்


அஹமதாபாத் :  "நரோடா பாட்டியா" கடந்த 2002 ஆம் ஆண்டு சங்கப்பரிவார ஃபாசிஸ்டுகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட கலவரத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட இடம். அப்பாவி முஸ்லிம்களில் பெண்கள் குழந்தைகள் என 90ற்கும் மேற்பட்டவர்கள் சங்கப்பரிவாரங்களால் காட்டுமிராண்டித்தனமான‌ முறையில் கொலை செய்யப்பட்டனர். அதே சமயம் இவ்வூரில் தனது அக்கம்பக்கத்தினராக இருந்த இந்துக்களுக்கு கலவரத்தால் பாதிக்கப்பட்ட அவர்களுடைய வீட்டை சீரமைப்பதற்கு முஸ்லிம்களே உதவிசெய்துள்ளனர்.



கடந்த 2003 ஆம் ஆண்டு இஸ்லாமிக் ரிலீஃப் கமிட்டி (ஐ.ஆர்.சி) மூலமாக‌ 70ற்கும் மேற்பட்ட இந்து குடும்பங்களுக்கு உதவி செய்யப்பட்டுள்ளது. அதிக முஸ்லிம்கள் அந்த பகுதியை விட்டு சென்றுவிட்டனர். கலவரத்தின் போது வெளியேறிய பெரும்பாலான இந்துக்கள் மீண்டும் தங்களுடைய இருப்பிடத்திற்கு வந்துவிட்டனர்.

வியாழன், 16 பிப்ரவரி, 2012

பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய உறுப்பினர்களுக்கு பயிற்ச்சி கொடுக்கிறதாம்!

சென்னை :  1 6.02.2012 அன்று காலை "டைம்ஸ் நவ்" ஆங்கில செய்தி சேனலில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பற்றிய பயங்கரமான செய்தியை வெளியிட்டது. பாப்புலர் ஃப்ரண்ட் தன்னுடைய உறுப்பினர்களுக்கு பயிற்ச்சி அளிக்கிறதாம்! பயிற்ச்சி என்னவென்றால்? காவல்துறையினரும், உளவுத்துறை அதிகாரிகளும் கேள்வி கேட்டால் எவ்வாறு பதிலளிக்க வேண்டும் என்று பயிற்ச்சி அளிப்பதாக டைம்ஸ் நவ் சேனலில் செய்தி ஒளிபரப்பப்பட்டது.

இந்தியாவில் தடை செய்யப்பட்ட இயக்கமான சிமியுடன் தொடர்பு என்றும், தீவிரவாத அமைப்பு என்றும் உளவுத்துறையினரால் தீவிரமாக கண்காணித்து வரப்படுகின்ற இயக்கம் என்று வழக்கம் போல் அறைத்த மாவையே அறைத்தது. அது சரி! உளவுத்துறை அதிகாரிகள் அதே மாவை கொடுத்து அறையுங்கள் என்று  கூறும்போது இந்த ஊடகங்களை குற்றம் சுமத்தி என்ன பிரயோஜனம்?


எஸ்.டி.பி.ஐ பேரணியில் போலீஸ் அராஜகம் – தடியடி, கைது


திருவனந்தபுரம் : சோசியல் டெமோக்ரேடிக் பார்டி ஆஃப் இந்தியா கட்சி உறுப்பினர்கள் மீது சுமத்திய தேசத்துரோக வழக்கை வாபஸ்பெறக் கோரி எஸ்.டி.பி.ஐ நடத்திய தலைமைச் செயலகத்தை நோக்கிய பேரணியில் போலீஸ் அராஜகம்.
sdpi march police lathicharg​e
எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் மீது போலீஸ் நடத்திய தடியடியில் ஏராளமான உறுப்கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் உள்ள தியாகிகள் மண்டபத்தில் இருந்து பேரணி துவங்கியது. துவக்க உரைக்கு பின்னர் சிறிய அளவில் போலீசாருக்கும், எஸ்.டி.பி.ஐ உறுப்பினர்கள் இடையே தள்ளு. முள்ளு நிகழ்ந்தது. இதனைத் தவிர வேறு எந்த பிரச்சனையும் இல்லாத சூழலில் போலீசார் திடீரென தடியடி நடத்த துவங்கினர். 

குஜராத் அரசிற்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு

அஹமதாபாத்: கோத்ரா இரயில் எரிப்பு சம்பவத்திற்கு பின்னர் நடைபெற்ற கலவரத்தில் எரிக்கப்பட்ட 56 முஸ்லிம் கடைகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீடு வழங்காதது தொடர்பாக குஜராத் அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.


 2002-ல் கோத்ரா சம்பவத்துக்குப் பின்னர் நடைபெற்ற கலவரத்தில் அஹமதாபாத்தில் 56 கடைகள் எரிக்கப்பட்டன. கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான நிவாரண உதவியை மத்திய அரசு 2008 பிப்ரவரியில் அறிவித்தது. இதையடுத்து, தங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்தனர். 

முஸ்லிம்கள் மீண்டும் தங்களது விசுவாசத்தை காண்பிக்க வேண்டும் - ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் கூறியுள்ளார்


லக்னோ:  ஆர்.எஸ்.எஸ்-ன் மூத்த தலைவர் இந்திரேஷ் குமார் முஸ்லிம்கள் இந்திய தேசத்தின் மீதான தங்களது விசுவாசத்தை மீண்டும் ஒருமுறை நிரூபிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். கடந்த புதன்கிழமை இமாம்பாரா என்னும் இடத்தில் சில முஸ்லிம் மொளலவிகள் நடத்திய் மீலாது விழாவில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் இந்திரேஷ் குமார் இவ்வாறு கூறியுள்ளார்.

முஹம்மது நபியும் ஒருவர் தன்னுடைய தாய் நாட்டின் மீது விசுவாசமாக இருக்க வேண்டுமென வலியுறுத்தியிருக்கிறார். தாய் நாட்டின் மீது விசுவாசமாக இருக்க வேண்டுமென்பது ஒவ்வொரு முஸ்லிமிடத்திலும் இருக்க வேண்டிய தனித்துவமிக்க அம்சமாகும். எல்லா முஸ்லிம்களும் தங்களது நபி கூறியபடி நடப்பார்கள் என்று நம்புகிறேன் இவ்வாறு மொபைல் போனின் மூலம் பேசியுள்ளார்.

சென்னையில் பைப் வெடிக்குண்டுகள் பறிமுதல்: ஹிந்துத்துவா தீவிரவாதிகளின் சதியா?


சென்னை : சென்னை அருகே செங்குன்றத்தையடுத்துள்ள எடப்பாளையத்தில் உள்ள ஒரு கிணற்றில் 5 பைப் வெடிகுண்டுகள் கைபற்றப்பட்டன. இதையடுத்து கிணற்றின் உரிமையாளர் கோயில்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
பைப் வெடிக்குண்டுகள்
திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றத்தை அடுத்த அலமாதி ஊராட்சிக்கு உட்பட்டது எடப்பாளையம். அங்குள்ள பசும்பொன் நகரில் கோயில்ராஜ் என்பவருக்கு சொந்தமான கிணற்றில் சக்திவாயந்த வெடிகுண்டுகள் வைக்கப்பட்டிருப்பதாக சோழாவரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

ஈரான் அணுவிஞ்ஞானிகளை கொலைச்செய்த பாணியில் நடந்த டெல்லி குண்டுவெடிப்பு


மும்பை : டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்தின் கார் தீப்பற்றி வெடித்த சம்பவம் ஈரானில் அணு விஞ்ஞானிகள் கொலைச் செய்யப்பட்ட பாணியில் நிகழ்த்தப்பட்டுள்ளது. ஜனவரி முதல் தேதி டெஹ்ரானில் ஈரானின் அணு விஞ்ஞானி முஸ்தஃபா அஹ்மதி ரோஷன் டெல்லியில் நடந்த தாக்குதலுக்கு சமமான ஆபரேசன் மூலமாக கொலைச் செய்யப்பட்டார்.
ஈரான் அணுவிஞ்ஞானிகளை கொலைச்செய்த பாணியில் நடந்த டெல்லி குண்டுவெடிப்பு
அணுவிஞ்ஞானி பயணித்த காரை மோட்டார் சைக்கிளில் பின் தொடர்ந்த இரண்டுபேர் காந்த குண்டை(அல்லது ஒட்டுக்குண்டு) காருக்கு பின்புறம் இணைத்துவிட்டு தப்பிவிட்டனர். பின்னர் குண்டுவெடித்து விஞ்ஞானி கொல்லப்பட்டார். இதே பாணியில்தான் டெல்லியிலும் குண்டுவெடிப்பு நிகழ்த்தப்பட்டுள்ளது. மிக தீவிரமான பயிற்சியை பெற்றவர்கள்தாம் இக்குண்டுவெடிப்பின் பின்னணியில் செயல்பட்டுள்ளதாக புலனாய்வு ஏஜன்சிகள் கூறுகின்றன.

புதன், 15 பிப்ரவரி, 2012

மோடி அரசுக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ்


அஹ்மதாபாத் : 2002 குஜராத் முஸ்லிம் இனப்படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்காத மோடி தலைமையிலான குஜராத் அரசுக்கு அம்மாநில உயர்நீதிமன்றம் நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இனப்படுகொலைகள் நடந்த வேளையில் கடைகள் அழிக்கப்பட்ட 56 பேருக்கு இழப்பீடு வழங்கவேண்டும் என்று கடந்த ஆண்டு நீதிமன்றம் மோடி அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இதுவரை நீதிமன்றத்தின் உத்தரவை மோடியின் அரசு நிறைவேற்றவில்லை. இதனை சுட்டிக்காட்டியுள்ளது நீதிமன்றம்.

மனப்பாடம்' செய்யாதீர்கள்...'மனப்படம் செய்யுங்கள்!


நினைவாற்றல்... இது நமக்கான பெரும் வரப்பிரசாதம். நம்முடைய தேர்வு அமைப்புகளும், பணித்திறனும், நடைமுறை வாழ்க்கையும் நினைவாற்றல் திறனின் மேம்பாட்டுக்கு ஏற்றவாறே அமைந்துள்ளன... சிறப்பு பெறுகின்றன!
இங்கே, பள்ளி பொதுத்தேர்வுக்கு தயாராகும் மாணவர்களுக்கு, நினைவாற்றல் திறனுக்கான நடைமுறை குறிப்புகளை தருகிறார், சர்வதேச நினைவாற்றல் பயிற்சியாளர் ஜான் லூயிஸ்.17 வருடங்கள் முதுநிலை

தேவேந்திர குல மக்கள் - முஸ்லிம்களுக்கு இடையே பிளவு ஏற்படுத்த சதி: ஜான்பாண்டியன் குற்றச்சாட்டு!

சங்கரன்கோவில் கலவரத்திற்கு காரணமான தென்மண்டல ஐ.ஜி.யை மாற்ற வேண்டும் என்று தமமுக தலைவர் ஜான் பாண்டியன் வலியுறுத்தியுள்ளார். சங்கரன்கோவிலில் ஏற்பட்ட கலவரத்தில் காயமடைந்த காளிராஜ், பெருமாள் ஆகியோர் நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

அவர்களை தமமுக தலைவர் ஜான்பாண்டியன் சந்தித்து ஆறுதல் கூறினார். மாநகர செயலாளர் கண்மணி மாவீரன் மற்றும் நிர்வாகிகள் உடன் சென்றனர்.

குர்ஷித் மீதான தேர்தல் கமிஷனின் நடவடிக்கை தேவையற்றது – மோடியை முதல்வர் பதவியில் இருந்து நீக்கவேண்டும் – பாப்புலர் ஃப்ரண்ட்


புதுடெல்லி : தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக குற்றம் சாட்டி தேர்தல் கமிஷன் மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் மீது நடவடிக்கை எடுக்க கோரி குடியரசு தலைவரை அணுகியது தேவையற்றது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச்செயலாளர் கே.எம்.ஷெரீஃப் கூறியுள்ளார்.
K.M.Sharif, National General Secretary of Popular Front of India
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: தேர்தல் பிரச்சாரங்களின் போது வாக்குறுதிகளை அளிப்பது புதிய சம்பவம் அல்ல. எல்லா அரசியல் கட்சிகளும் இவ்வாறு வாக்குறுதி அளிப்பதை தொடரத்தான் செய்கின்றன. முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவது குறித்த சல்மான் குர்ஷிதின் அறிக்கையும் அது போன்றதே. அதனை சட்டவிரோதமாக பார்க்க முடியாது.

சம்ஜோத்தா இரயில் குண்டுவெடிப்பு ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி கைது!


புதுடெல்லி :  கடந்த 2007ஆம் ஆண்டு சம்ஜோத்தா இரயில் குண்டுவெடிப்பு வழக்கில் இந்தூரைச்சேர்ந்த ஆர்.எஸ்.எஸ் திவிரவாதி ஒருவனை புலனாய்வுத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.


கைது செய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியான கமால் செளஹான் இதே குண்டுவெடிப்பு வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட‌ ராம்ஜி கல்சங்கரா மற்றும் சந்தீப் தாங்கே ஆகிய இருவருக்கும் நெருக்கமானவன் என்று தெரியவந்தள்ளது. அவனை கைது செய்த காவல்துறை அதிகாரிகள் இது தொடர்பாக இந்தூரில் உள்ள அவனது வீட்டிற்கு சம்மனும் அனுப்பியுள்ளனர்.



செவ்வாய், 14 பிப்ரவரி, 2012

இந்தியா-ஈரா​ன் நட்புறவை சீர்குலைக்​க இஸ்ரேலே குண்டுவெடிப்பை நிகழ்த்தியு​ள்ளது – ஈரான் குற்றச்சாட்​டு


டெஹ்ரான் : புதுடெல்லியிலும், திப்லிஸிலும் தங்களது தூதரகங்கள் அருகே குண்டுவெடிப்புகளை இஸ்ரேலே நடத்திவிட்டு எங்களின் மீது பழிபோடுகிறது என்று ஈரான் குற்றம் சாட்டியுள்ளது.

இஸ்ரேல் தூதரகத்தின் கார் டெல்லியில் அதிதீவிர பாதுகாப்பு நிறைந்த பகுதியில் நேற்று(திங்கள்கிழமை) மதியம் திடீரென வெடித்து தீப்பற்றி எரிந்தது. இது விபத்தா? அல்லது குண்டுவெடிப்பா என்பது குறித்து இறுதி முடிவு வெளியாகவில்லை. ஆனால், இச்சம்பவத்தை தீவிரவாத தாக்குதல் என்று இஸ்ரேல் அறிவித்துள்ளது. இச்சம்பவத்தின் பின்னணியில் ஈரானும், ஹிஸ்புல்லாஹ்வும் உள்ளது என்று இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது.

வெளிநாட்டு வங்கிகளில் இந்தியர்களின் கறுப்பு பணம் 24.5 லட்சம் கோடி – சி.பி.ஐ


புதுடெல்லி : வெளிநாட்டு வங்கிகளில் கறுப்பு பண முதலீட்டில் இந்தியர்கள் முன்னிலையில் இருப்பதாக சி.பி.ஐ இயக்குநர் எ.பி.சிங் கூறியுள்ளார். வரி ஏய்ப்பிற்காக இவர்கள் வெளிநாட்டு வங்கிகளில் முதலீடு செய்துள்ள தொகை கிட்டத்தட்ட 50 ஆயிரம் கோடி டாலர்(24.5லட்சம் கோடி) என்று சிங் கூறினார்.

ஊழலுக்கு எதிராகவும், சட்டவிரோத சொத்துக்களை பறிமுதல் செய்வதற்குமான இண்டர்போல் திட்டத்தின் துவக்க நிகழ்ச்சியில் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார் எ.பி.சிங்.

திங்கள், 13 பிப்ரவரி, 2012

தமிழகத்தில் முஸ்லிம்களுக்கு ஏழு சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்: பாப்புலர் பிரான்ட் பொதுக்குழு தமிழக அரசுக்கு கோரிக்கை

பாப்புலர் பிரான்ட் ஆப் இந்தியாவின் மாநில பொதுக்குழு கூட்டம் பிப்ரவரி 11 ,12 ஆகிய தேதிகளில் தேனீ மாவட்டம் முத்துதேவன்பட்டியில் வைத்து நடைபெற்றது. 

பாப்புலர் பிரண்டின் மாநில தலைவர் ஏ. எஸ். இஸ்மாயில் அவர்கள் தலைமையில் நடைபெற்ற இப்பொதுக்குழு கூட்டத்தில் பொது செயலாளர் காலித் முஹமது மற்றும் மாநில செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர் . சிறப்பு விருந்தினர்களாக பாப்புலர் பிரண்டின் தேசிய துணை தலைவர் முஹம்மத் அலி ஜின்னா அவர்களும், சோசியல் டெமோக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அபுபக்கர் அவர்களும் கலந்து கொண்டனர் . 



குண்டுவெடிப்பு வழக்கு:ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதி சவுகானின் கைது திருப்புமுனையாகும்


புதுடெல்லி : சம்ஜோதா எக்ஸ்பிரஸ் குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்டு வந்த கமால் சவுகானை தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) கைது செய்திருப்பது இவ்வழக்கில் முக்கிய திருப்புமுனையாக கருதப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் உறுப்பினரான சவுகானை நேற்று முன்தினம் இந்தூரில் வைத்து என்.ஐ.ஏ கைது செய்தது.
குண்டுவெடிப்பு வழக்குகளில் தேடப்பட்டு வரும் தலைமறைவு ஹிந்துத்துவா தீவிரவாதிகளான சந்தீப் டாங்கே, ராம்சந்திர கல்சங்கரா ஆகியோரை கைது செய்ய சவுகானின் கைது உதவும் என கருதப்படுகிறது.

அப்பாவி முஸ்லிகளை சிறையில் சந்தித்தது பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

நெல்லை மேற்கு மாவட்டம் சங்கரன்கோவிலில் 07.02.2012 அன்று நடந்த ஊர்வலத்தில் சில சமுக விரோதிகளின் திட்டமிட்ட சதியால் கலவரம் மூண்டது, 


இதில் முஸ்லிம்களின் வாகனம் ,கடைகள் மற்றும் முஸ்லிம்களின் சொத்துகள் திட்டமிட்டு தீக்கிரை யாக்கப்பட்டது.ஒரு கோடி மதிப்புள்ள சொத்துகள் சீரழிக்கபட்டது .மேலும் கலவரத்தில் அப்பாவி முஸ்லிம்கள் பலர் கைது செய்யபட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர் .


சிறையில் அடைக்கபட்ட அப்பாவி முஸ்லிம்களை .பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மாவட்ட செயலாளர் ஹைதர் அலி தலைமையில் நெல்லை மாநகர தலைவர் மூஸல் காலிம்,மேலப்பாளையம் நகர தலைவர் அப்துல் லத்திப் ,நகர செயலாளர் ஜாபர் போன்றோர் சிறையில் சென்று பாதிக்க அப்பாவி முஸ்லிம்களை சந்தித்து ஆறுதல் கூறினார்,மேலும் அவர்கள் கூறுகையில் எங்களுக்காக இறைவனிடம் பிராத்தனை செய்யுமாறும் கூறினர்.

காதலர் தினம் ஓர் பார்வை!


அகிலங்களின் அதிபதியும் மகத்தான படைப்பாளனுமாகிய அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான்: - நம்பிக்கைக் கொண்டோரே! ஷைத்தானின் அடிச் சுவடுகளை பின்பற்றாதீர்கள்! யார் ஷைத்தானின் அடிச் சுவடுகளை பின்பற்றுகிறாரோ (அவர் வழிகெடுவார்) ஏனெனில் அவன் வெட்கக்கேடானவற்றையும் தீமையையும் தூண்டுகிறான் (அல்குர்ஆன் 24:21)


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2012

இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமைக்கப்படவுள்ளது.



இந்தியாவின் மிகப்பெரிய பள்ளிவாசல் கேரளாவில் அமையப்பெறவுள்ளது.இப்பள்ளிவாவலை அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் வைபவம் கேரளாவின்கோழிக்கோட் புறநகர்ப்பகுதியில் அமைந்துள்ள கிரன்தூர் நகரில் நடைபெற்றதுடன்,இந்நிகழ்வில் ஆயிரக்கணக்கான பார்வையாளர்களும் பல நாடுகளைச் சேர்ந்த
இஸ்லாமிய அறிஞர்களும் கலந்துகொண்டனர்.250,000 சதுரமீற்றர் பரப்பளவில்அமைக்கப்படவுள்ள இப்பள்ளிவாசலானது, 17ஆம் நூற்றாண்டு காலப்பகுதிக்குரிய முகலாயப் பேரரசின் அரசரான ஸஜஹான் காலத்தில் தலைநகரில் கட்டப்பட்ட பள்ளிவாசலை ஒத்தவடிவில் அமைக்கப்படவுள்ளது.



Carrier Guidance Program by IFF Dammam - Flyer


Dear all,
 
              Please pass this invitation to your know friends and confirm Urgently.


குஜராத் அரசின் மேலிட உத்தரவின் படி காட்சிக்கு வைக்கப்பட்ட இறந்த உடல்கள்!


அஹ்மதாபாத் : குஜராத் அரசின் மேலிட உத்தரவின் படியே, கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தில் பலியானவர்களின் உடல்களை அஹ்மதாபாத்திற்கு கொண்டு வந்து, அதனை வைத்து ஊர்வலம் நடத்தப்பட்டது என சுட்டிக்காட்டி சிறப்பு புலனாய்வு குழுவிற்கு கடிதம் எழுதியதாக குஜராத் காங்கிரஸ் எம்.எல்.ஏ அர்ஜுன் மோட்வாடியா கூறியுள்ளார்.
கோத்ராகுஜராத் அரசின் மேலிட உத்தரவின் படி காட்சிக்கு வைக்கப்பட்ட இறந்த உடல்கள்
இதற்கு ஆதாரமாக அஹ்மதாபாத்  கமிஷனராக பதவி வகித்த பி.சி.பாண்டே நானாவதி கமிஷனுக்கு முன்பாக 2004 ஆகஸ்ட் மாதம் அளித்த வாக்குமூலத்தையும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்ததாக மோட்வாடியா கூறுகிறார். ஆனால், நரேந்திர மோடி அரசின் சட்டமீறலை வேண்டுமென்றே ஆர்.ராகவனின் தலைமையிலான சிறப்பு புலனாய்வு குழு புறக்கணித்தது என அவர் குற்றம் சாட்டுகிறார்.

ஷஹீத் ஹஸன்-அல்-பன்னாஹ் – மறக்கமுடியாத இஸ்லாமிய ஆளுமை


நபி(ஸல்) கூறினார்கள்; “அல்லாஹுத்தாலா ஒவ்வொரு நூற்றாண்டின் ஆரம்பத்திலும் இந்த மார்க்கத்தை புனர்நிர்மாணம் செய்கின்ற ஒருவரை அனுப்பி வைக்கிறான்” (அபூதாவூத்)
Imam Hassan Al Bannah
ஒவ்வொரு  நூற்றாண்டின் ஆரம்பத்திலும் அல்லாஹ் இஸ்லாத்தை புனர்நிர்மாணிக்க ஒருவரை அனுப்பி வைக்கிறான் என்ற நபிமொழியின் அடிப்படையில், 20-வது நூற்றாண்டின் துவக்கத்தில் ஏகாதிபத்தியத்தின் கோரப் பிடியில் சிக்கிக்கொண்ட முஸ்லிம்களை காப்பாற்றவும், மேலும் இஸ்லாத்தின் கலாச்சாரத்தை பாதுகாக்கவும் எவராலும் ஒன்றும்  செய்ய முடியாத காலகட்டத்தில் அபூர்வமான, அசாதாரண தகுதிகளுடைய ஹஸனுல் பன்னாஹ்(ரஹ்…) அவர்களை அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு அளித்தான்.

கடையநல்லூர் பகுதியில் கனமழை

கடையநல்லூர் : கடையநல்லூர் பகுதிகளில் நேற்று இரவு பலத்த இடி மின்னலுடன் கனத்த மழை பெய்தது. ஒருசில பகுதிகளில் ஆலங்கட்டி மழை பெய்ததால் சிறுவர், சிறுமியர் மகிழ்ச்சியுடன் மழையில் நனைந்து மகிழ்ந்தனர்.கடையநல்லூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் கடந்த இரண்டு தினங்களாக மாலை நேரங்களில் மழை பெய்து வருகிறது. நேற்று மாலை 6 மணிக்கு மேல் வானம் மப்பும் மந்தாரமுமாக காணப்பட்ட நிலையில் கருமேகத்துடன் இருண்ட நிலையும் இருந்தது. 7 மணிக்கு மேல் கடையநல்லூர், இடைகால், கிருஷ்ணாபுரம், நயினாரகரம், சிவராமபேட்டை உள்ளிட்ட பகுதிகளில் கனத்த மழை பெய்தது. பலத்த இடி மின்னலுடன் பெய்த மழை சுமார் ஒன்றரை மணிநேரம் நீடித்தது.

சங்கரன்கோவில் கலவர பிரச்னை இருதரப்பினர் சமாதான கூட்டம்

சங்கரன்கோவில் : பிற மத உணர்வுகளுக்கு மதிப்பு அளிக்கும் வகையில் இளைஞர்களை இரு பிரிவு பெரியவர்களும் நல்வழி நடத்த அறிவுரை வழங்க வேண்டும் என்று சங்கரன்கோவிலில் இருபிரிவினர் மோதல் தொடர்பாக ஆர்.டி.ஓ., இளங்கோ தலைமையில் நடந்த சமாதான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

சங்கரன்கோவிலில் கடந்த 7ம் தேதி இரவு ஒரு பிரிவினரின் வழிபாட்டு தலத்தின் மீது தாக்குதல் நடத்தியதாக மற்றொரு பிரிவினரின் முளைப்பாரி ஊர்வலத்தின் மீது கல்வீசி தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால் இரு பிரிவினரிடையே பெரும் கலவரம் நடந்தது.இந்த கலவரத்தில் ஏராளமான வாகனங்கள் தீ வைத்தும், அடித்தும் நொறுக்கப்பட்டது. கலவரம் காரணமாக 17 பேர் படுகாயமடைந்தனர். கலவரம் தொடர்பாக 20 பேர் கைது செய்யப்பட்டனர். 

ஜெ’யாவை நம்பி மோசம்போன அணு உலை எதிர்ப்பாளர்கள்


சென்னை : கூடங்குளம் அணுமின் நிலைய பிரச்சனையில் முதல்வர் ஜெயலலிதாவின் திசை திருப்பும் நடவடிக்கை அணு உலை எதிர்ப்பாளர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.
jayalalitha cartoon
ஒரே நேரத்தில் பிள்ளையையும் கிள்ளி, தொட்டிலையும் ஆட்டும் ஜெயாவின் தந்திரம் புரியாமல் அவரை முழுமையாக நம்பி மோசம் போய்விட்டோமோ? என்ற கவலை அணு உலை எதிர்ப்பாளர்களை பீடித்துள்ளது.

நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்தவேண்டும் – அமிக்கஸ் க்யூரி


புதுடெல்லி : குஜராத் இனப்படுகொலை வழக்குகளில் முதல்வர் நரேந்திர மோடியிடம் விசாரணை நடத்தவேண்டும் என அமிக்கஸ் க்யூரி(நீதிமன்றத்திற்கு உதவும் வழக்குரைஞர்) பரிந்துரைச் செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
amicus-curiae
கடந்த மே மாதம் அமிக்கஸ் க்யூரி ராஜு ராமச்சந்திரன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த அறிக்கையில் நரேந்திர மோடியை விசாரணைச் செய்ய கோரிக்கை விடுத்துள்ளார்.