நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 15 செப்டம்பர், 2011

பஜ்ருத் தொழுகையை அதன் நேரத்தை விட்டுப் பிற்படுத்துதல்


பஜ்ருத் தொழுகையை உரிய நேரத்தில் தொழாமல் தாமதித்துத் தொழும் எண்ணத்தில் வேண்டுமென்றே அலாரத்தைத் தாமதமாக வைப்பது தொழுகையை வேண்டுமென்று மனமுரண்டாக விடுவதாகவே கருதப்படும். தொழுகையை வேண்டுமென்று மனமுரண்டாக விடுபவன், சில அறிஞர்களின் பார்வையில் காபிர் ஆவான். - தொழுகையை வேண்டுமென்று விடாமலிருக்க அல்லாஹ் உதவி செய்வானாக!
    எனினும் யாருக்குத் தூக்கம் மிகைத்து உரிய நேரத்தை விட்டும் தொழுகை தவறிப் போகிறதோ, அவர் மீது குற்றமில்லை. விழித்தெழுந்ததும் அவர் தொழுது விட வேண்டும். அவ்வாறே குறித்த ஒரு தொழுகையை மறந்து விட்டவர் ஞாபகம் வந்ததும் தொழுது விட வேண்டும்.
    அதல்லாமல் வேண்டுமென்றே தொழுகையை அதன் நேரத்தை விட்டும் பிற்படுத்துவது அல்லது தாமதித்துத் தொழ வேண்டும் என்ற நோக்கத்தில் கடிகாரத்தில் நேரம் வைத்துத் தாமதித்து எழுவது இவை அனைத்தும் வேண்டுமென்று தொழுகையை விடுவதாகவே கருதப்படும். இவ்வாறு செய்வது எல்லா அறிஞர்களதும் பார்வையில் மிகப் பெரும் பாவமாகவே கருதப்படுகிறது. என்றாலும் இவன் காபிராகி விடுவானா இல்லையா? என்பதில் உலமாக்கள் மத்தியில் கருத்து வேறுபாடு காணப்படுகிறது.
    பெரும்பாலான அறிஞர்கள் இவன் காபிராக மாட்டான் என்று கருதுகின்ற அதேவேளை, சில அறிஞர்கள் அவன் காபிராகி விடுவான் என்று கூறுகின்றனர். இரண்டாவது சாராரின் கூற்றுக்கு ஒத்ததாகவே ஸஹாபாக்களின் நிலைபாடும அமைந்திருந்தது என்பது இங்கு நோக்கத்தக்கது.
    'ஒரு மனிதனுக்கும் ஷிர்க் குப்ருக்கும் இடையிலுள்ள வித்தியாசம் தொழுகையை விடுவதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல் : முஸ்லிம்)
    மேலும், 'நமக்கும் அவர்களுக்கும் இடையிலுள்ள வேறுபாடு தொழுகையாகும். யார் தொழுகையை விடுகிறானோ அவன் காபிராவான்' என்று கூறினார்கள். (நூல்கள் : அஹ்மத், திர்மிதி, நஸயி, இப்னுமாஜா)

டிசம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பாரட்சமின்றி ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும்...


நீங்கள் இஸ்லாமிய அறிவை அதிகப்படுத்திக்கொள்ள விரும்புவரா..?


பெட்ரோல் விலை உயர்வு : லிட்டர் ரூ. 71

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்வால் பெட்ரோல் விலை அதிகரித்துள்ளது.



பெட்ரோல் விலை லிட்டருக்கு 3 ரூபாய் 14 காசு உயருகிறது.   நள்ளிரவு முதல் விலை உயர்வு அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பால் தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூபாய் 70.60  ஆக உயர்ந்துள்ளது.

மதிமுக திறந்தவெளி மாநாடு : 12 தீர்மானங்கள்


பேரறிஞர் அண்ணா 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இன்று இரவு (15.9.2011) மதிமுக திறந்தவெளி மாநாடு நெல்லை சீமையில் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

10 ஆயிரத்திற்கு மேற்பட்டோர் இம்மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.  கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ,  கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத்,  பேராசிரியர் பெரியார்தாசன் உட்பட பலர் இந்த மாநாட்டில் சிறைப்புரையாற்றிக்கொண்டிருக்கின்றனர்.

யு.ஏ.இ-யில் வாழும் வெளிநாட்டவர்களுக்கான எமிரேட்ஸ் ஐடி எடுப்பது பற்றிய அறிவிப்பு

அபுதாபி : ஐக்கிய அரபு அமீரகத்தில் வாழும் வெளிநாட்டவர்களுக்கு(15 வயது மேற்பட்டவர்களுக்கு) எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுப்பது பற்றி 4 விதங்களில் காலக்கெடு அறிவிக்கப்பட்டுள்ளது.aida

இதன்படி வடக்கு அமீரக பகுதிகளான புஜைரா, ராஸ் அல் கைமா, உம்மு அல் க்வைன், மற்றும் அஜ்மான் ஆகியவற்றில் வாழும் வெளிநாட்டவர்கள் 2011 டிசம்பர் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்
சார்ஜா-வில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 பிப்ரவரி மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்
அபுதாபியில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஏப்ரல் மாதம் முதல் தேதிக்கு முன்னதாகவும்
துபாயில் வாழும் வெளிநாட்டவர்கள் 2012 ஜூன் 1 -ஆம் தேதிக்கு முன்பும் எமிரேட்ஸ் அடையாள அட்டை எடுக்க வேண்டும் என்றும் யு .ஏ.ஈ. அரசு அறிவித்துள்ளது .

இவரைப் ( உமர் முஃக்தார் )பற்றி உங்களுக்கு நினைவுகள் உண்டா..?


பத்தொன்பதாம் நூற்றாண்டு காலத்தில் இத்தாலியின் படைகள் லிபியாவை ஆக்கிரமித்து அப்பாவி மக்களை கொன்று குவித்த காலகட்டத்தில் தனது முதுமையான வயதிலும் கூட லிபிய மக்களின் விடுதலைக்காக இத்தாலிய படையை எதிர்த்து போரிட்டு ஷஹீதான உமர் முஃக்தார் அவர்கள் பிறந்த தினம் செப்டம்பர் 16.  

உமர் முஃக்தார் (1862 - செப்டம்பர் 16, 1931) மினிபா எனும் பழங்குடி இனத்தைச்சார்ந்த இவர் லிபியாவில் பார்குவா எனும் சிறிய கிராமத்தில் பிறந்தார். 1912 ஆம் ஆண்டில் இருந்து 20 ஆண்டுகளாக லிபியாவில் இத்தாலியரின் ஆதிக்கத்துக்கு எதிராகப் போராடியவர். இவர் இத்தாலியர்களால் கைது செய்யப்பட்டு 1931 இல் தூக்கிலிடப்பட்டார்.

சிறு வயது வாழ்க்கை


பசி, பட்டினியில் தவிக்கும் சோமாலியாவில் தினமும் 100 பேர் பலியாகும் பரிதாபம்

நைரோபி: சோமாலியாவில் பசி மற்றும் பட்டினியில் வாடும் மக்களில் தினமும் 100க்கும் மேற்பட்டோர் பலியாவதாக ஐக்கிய நாடுகள் சபை கவலை தெரிவித்துள்ளது.

ஆப்ரிக்க நாடான சோமாலியாவில் கடும் பஞ்சம் நிலவி வருகிறது. இதனால் ஏற்பட்டுள்ள பட்டினியில் தினமும் சுமார் 100க்கும் மேற்பட்டோர் இறந்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றனர். இதில் பெண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகம் என தெரிகிறது.

தேசிய அரசிலில் குதிக்கிறார் நரேந்திர மோடி!: பாஜக தேசியத் தலைவராகிறார்!!

டெல்லி: 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவர வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியை தேசிய அரசியலில் ஈடுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது.

அவரை பாஜக தேசியத் தலைவராக்கவும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.

ராஜஸ்தானில் இரு மதத்தினரிடையே மோதல்: 9 பேர் சுட்டுக் கொலை

ஜெய்ப்பூர் : ராஜஸ்தான் மாநிலம் பாரத்பூர் மாவட்டத்தில் நேற்றிரவு இரு மதத்தினரிடையே ஏற்பட்ட மோதலில் 9 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ஏராளமானோர் காயமடைந்துள்ளனர்.

காமன் தாலுகாவில் பரத்பூரில் இந்த சம்பவம் நடந்தது. பாரத்பூரின் கோபால்கர் கிராமத்தில் ஒரு மயான பூமி தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனை பின்னர் மத மோதலாக மாறியது.

இலவச லேப்டாப், ஆடு-மாடு, மிக்ஸி-கிரைண்டர் திட்டம்: எம்ஜிஆர் பாட்டு பாடி தொடங்கி வைத்த ஜெ!

திருவள்ளூர் : அறிஞர் அண்ணாவின் 103வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு இலவச மிக்ஸி, கிரைண்டர், மின் விசிறி, மாணவ, மாணவிகளுக்கு லேப்டாப், கிராம மக்களுக்கு ஆடு,மாடுகள் வழங்கும் திட்டத்தை முதல்வர் ஜெயலலிதா இன்று தொடங்கி வைத்தார்.

திருவள்ளூர் மாவட்டம், காக்களூரில் இந்தத் திட்டங்களைத் தொடங்கி வைத்து ஜெயலலிதா பேசுகையில், இன்று பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 103 வது பிறந்த நாள்.

''இதய தெய்வம் நமது அண்ணா தோன்றினார்,
அவர் என்றும் வாழும் கொள்கை தீபம் ஏற்றினார்,
அந்த ஒளி காணலாம் சொன்ன வழி போகலாம்,
நாளை வரலாறு நமக்காக உருவாகலாம்''
என்று, பேரறிஞர் அண்ணாவின் கொள்கைகளை அனுதினமும் கடைபிடித்து, நல்லாட்சி நடத்தி, ஏழை, எளிய மக்களின் இதயத்தில் நீங்கா இடம் பெற்ற, பொன்மனச் செம்மல், புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். வழியில்,

டெல்லி குண்டுவெடிப்பு : காவி பயங்கரவாதத்தையும் விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்

ஐதராபாத் :  டெல்லியில் நடந்த குண்டுவெடிப்பிற்கான விசாரணையில் காவி பயங்கரவாதத்தையும் உட்படுத்த வேண்டும் என ஐதராபாத்தைச் சேர்ந்த மனித உரிமை கண்காணிப்பு மத்திய அரசை கேட்டுக்கொண்டுள்ளது.

சமீபத்தில் டெல்லி உயர் நீதிமன்றம் அருகே சக்தி வாய்ந்த குண்டுவெடித்ததில் 13 அப்பாவி பொதுமக்கள் பலியாகினர் 90ற்கும் மேற்பட்டோர்  படுகாயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

Jobs in UAE - அமீரகத்துக்கு ஆட்கள் தேவை

*(1) HOUSE DRIVER*
*UAE License  Salary - Driver 1500/=*

*GCC License Salary - Driver 1500/=*

*Arabic Cook- Salary 1200/=AED*

*Free accommodation and food.*


*(2) HOUSE MAID - Free Visa*
*Arabic Cook, Baby Sitter, Cleaner, *

*Salary 800 - 1000 AED*


*(3) HOUSE JOB **- Free Visa*
*Female Nurse, House Bay*

*More Detais Contact  - **+91 7871340341*

  1. டிரைவர் (வீட்டுக்கு) சம்பளம் - 1500/= திரஹம் (விசா கட்டணம்)
  2. அரபிக் சமையல் (வீட்டுக்கு) சம்பளம் - 1200/= திரஹம் (விசா கட்டணம்)
  3. வீட்டு வேலைக்கு - குழந்தை காப்பாளர், கிளீனர், நர்ஸ் சம்பலம்
  1500/=திரஹம் (விசா இலவசம்) ஆண் காப்பாளர் - (ஆங்கிலம் தெரிந்து இருக்க
  வேண்டும்) (விசா இலவசம்)

*தொடர்புக்கு** - **+91 7871340341

WWW.JOBS4U.TK*

செப்டம்பர் 15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு பாரபட்சமின்றி ஆயுள் தண்டனை கைதிகளை விடுதலை செய்ய வேண்டும் :SDPI


SDPI-ன் மாநிலத் தலைவர் இன்று வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் பின்வருமாறு கோரிக்கை விடுத்துள்ளார் 

தமிழக அரசு செப்டம்பர் 15 அன்று அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு கடந்த வருடங்களில் 7 வருடங்கள் சிறைத் தண்டனை அனுபவித்த கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர் . அப்போது 10 வருடங்களுக்கு மேலாக சிறைத் தண்டனை அனுபவித்த முஸ்லிம் சிறைக் கைதிகளுக்கு மாத்திரம் பாரபட்சத்துடன் விடுதலை மறுக்கப்பட்டது.

புதன், 14 செப்டம்பர், 2011

அன்னா ஹசாரேவின் சமூகப் பாசிசம்


லோக்பால் பிரச்சனை குறித்து அண்மையில் டெல்லியைச் சுற்றி நிகழ்ந்தவை மக்களின் வெற்றி என்றும் அன்னா ஹசாரேயின் அணியால் நிகழ்த்தப்பட்டவை என்றும் ஊடகங்களால் கொண்டாடப்படுகின்றன. ஆனால் இந்த நாட்டின் நிறுவனமயமாக்கப்பட்ட சாதி மற்றும் வர்க்க சூழல்களில் வாழ்ந்து கொண்டிக்கும் ‘வெகுமக்களில்’ பெரும்பான்மையினர், வெற்றிபெற்ற குழு கூறிக்கொண்டிருப்பது போல இன்னும் “குடிமைச் சமூகத்தின்” பகுதியாக இல்லை.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தும் சமூக நீதி மாநாடு

புதுடெல்லி :  பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மற்றுமோர் மைல்கல்லாக வருகின்ற நவம்பர் மாதம் 26 மற்றும் 27 ஆகிய இரு தினங்களுக்கு தேசிய அளவிலான "சமூக நீதி மாநாடு" (SOCIAL JUSTICE CONFERENCE) ஓன்றை நடத்த தீர்மானித்துள்ளது. சமீபத்தில் டெல்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெற்ற தேசிய செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது.

செவ்வாய், 13 செப்டம்பர், 2011

ghg


கோவை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை


ஹைதராபாத் : பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் ஆந்திர மாநிலத் தலைவர் முகம்மது ஆரிப் அஹ்மத் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் காவல்துறையின் கூடுதல் பொது இயக்குனர் (உளவுத்துறை, ADGP) வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய உத்தரவை உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று முதல்வரையும், உள்துறை அமைச்சரையும் வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ளார். பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியாவின் உறுப்பினர்களால் ரமலான் மாதத்தில் பெறப்பட்ட ஜகாத் பற்றிய தகவல்களை திரட்டித் தருமாறு சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா


கோவையில் வார்டு  சீரமைக்கும் பணி நடந்தது. அதில் முஸ்லிம்கள் பெருபான்மையாக இருக்கும் பகுதிகளை Schedule Caste வகுப்பினருக்கு எனவும், பெண்களுக்கு எனவும் தனி ஒதுக்கிடு செய்து முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டது. 

ஆகவே  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக  கோவை மாவட்டத் தலைவர் k.ராஜா உசேன் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிராக வார்டு சிரமைப்பில் நடந்த முறைகேடை கண்டித்தும், அதை சீரமைக்க தமிழக அரசை  வலியுறுத்தியும் கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 12-09-2011 அன்று காலை 11-00  மணியளவில் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. 

கோவை மாநகராட்சி அலுவலகம் முற்றுகை: பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா

கோவையில் வார்டு  சீரமைக்கும் பணி நடந்தது. அதில் முஸ்லிம்கள் பெருபான்மையாக இருக்கும் பகுதிகளை Schedule Caste வகுப்பினருக்கு எனவும், பெண்களுக்கு எனவும் தனி ஒதுக்கிடு செய்து முஸ்லிம்களுக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட்டது. 

ஆகவே  பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியா சார்பாக  கோவை மாவட்டத் தலைவர் k.ராஜா உசேன் தலைமையில் முஸ்லிம்களுக்கு எதிராக வார்டு சிரமைப்பில் நடந்த முறைகேடை கண்டித்தும், அதை சீரமைக்க தமிழக அரசை  வலியுறுத்தியும் கோவையில் மாபெரும் ஆர்ப்பாட்டம் 12-09-2011 அன்று காலை 11-00  மணியளவில் கோவை மாநகராட்சி அலுவலகம் முன்பு நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரலான மக்கள் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை போலிஸ் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

இந்த  ஆர்பாட்டத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள்