டெஹ்ரான்: மியான்மரில் இருந்து ரோஹிங்கியா முஸ்லிம்களை முற்றிலும் இன அழித்தொழிப்பு நடவடிக்கையில் பெளத்த பயங்கரவாதிகள் ஈடுபட்டுள்ள வேளையில் ஜனநாயகரீதியான போராட்டம் நடத்தி பல ஆண்டுகள் வீட்டுக் காவலில் இருந்த சமாதானத்திற்கான நோபல்பரிசு பெற்றுள்ள ஆங் சாங் சூகி இச்சம்பவம் குறித்து குற்றகரமான மெளனம் சாதித்து வருகிறார்.
ஷஹீத் சுல்ஃபிகர் அலி பூட்டோ இன்ஸ்ட்யூட் ஆஃப் சயன்ஸ் அண்ட் டெக்னாலஜியின் பேராசிரியரும், பிரபல அரசியல் பகுப்பாய்வாளருமான குலாம் தாகி பங்காஷ் ப்ரஸ் டி.விக்கு அளித்துள்ள பேட்டியில் ஆங் சாங் சூகியின் மெளனம் குற்றகரமானது என குற்றம் சாட்டுகிறார்.



