ஒவ்வொரு வருடமும் இந்தியாவில் 5 லட்சம் பேர் புற்றுநோயினால் இறக்கின்றனர். உலகில் உள்ள மொத்த கர்பப்பை புற்றுநோயாளிகளில் 26 சதவீதம் பேர் இந்தியாவில்தான் உள்ளனர். தமிழகத்தில் 1990களில் 10 சதவீதமாக இருந்த மார்பக புற்றுநோய் 2011ல் 24 சதவீதமாக அதிகரித்துள்ளது.
NOV 2013
திங்கள், 30 ஜனவரி, 2012
நெல்லை NWF நடத்திய புற்றுநோய் & மகப்பேறு இலவச மருத்துவ விழிப்புணர்வு முகாம்
காந்திஜியின் நினைவு நாள் - பாப்புலர் ஃப்ரண்ட் போஸ்டர் பிரச்சாரம்
தேசத்தந்தை காந்தியடிகளின் நினைவு நாளான ஜனவரி 30ஆம் தேதியை முன்னிட்டு தமிழகம் முழுவது ஃபாசிஸத்தின் கோர முகத்தை வெளிப்படுத்தும் விதமாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுவரொட்டி பிரச்சாரத்தை மேற்கொண்டது.
மதச்சார்பின்மை, மத நல்லிணக்கத்தோடு வாழ்ந்த காந்தி அவர்களை ஆர்.எஸ்.எஸ் தீவிரவாதியான நாதுராம் கோட்சேவினால் 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி அன்று சுட்டுக்கொலை செய்யப்பட்டார். காந்திஜி
ஞாயிறு, 29 ஜனவரி, 2012
மலேகான்:ஏ.டி.எஸ் அதிகாரிகளிடம் என்.ஐ.ஏ விசாரணை
புதுடெல்லி : 35 பேர்கள் கொல்லப்பட்ட 2006 முதல் மலேகான் குண்டுவெடிப்பு வழக்கு தொடர்பாக தேசிய புலனாய்வு ஏஜன்சி(என்.ஐ.ஏ) மஹராஷ்ட்ரா தீவிரவாத எதிர்ப்பு படை(ஏ.டி.எஸ்) அதிகாரிகளிடம் விசாரணை நடத்துகிறது. இவ்வழக்கில் ஏ.டி.எஸ்ஸின் பங்கு மற்றும் அவர்கள் விசாரணையைக் குறித்து மீளாய்வு செய்வதற்கு என அதிகாரப்பூர்வ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
விசாரணையின் ஒரு பகுதியாக மலேகானுக்கு சென்ற என்.ஐ.ஏ புலனாய்வு குழு முன்னர் இவ்வழக்கை விசாரித்த ஏ.டி.எஸ், சேகரித்த ஃபாரன்சிக் ஆதாரங்களை பரிசோதனைச் செய்தது. ஏ.டி.எஸ் அதிகாரிகளான துணை கமிஷனர் கெ.பி.ரகுவம்சி, துணை இன்ஸ்பெக்டர் ஜெனரல் சுபோத் ஜெய்ஸ்வால் ஆகியோர் அடங்கிய ஏ.டி.எஸ் புலனாய்வு குழு இவ்வழக்கை முன்பு விசாரித்தது.
அபுதாபியில் எமிரேட்ஸ் இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம் நடத்திய இரத்ததான முகாம்
அபுதாபி : இந்தியாவின் 63வது குடியரசு தினத்தை முன்னிட்டு அமீரகத்தின் சமூக சேவை அமைப்பான எமிரேட்ஸ் இந்தியா ஃபிரெடர்னிட்டி ஃபோரம் அபுதாபி இரத்த வங்கியுடன் இணைந்து இரத்ததான முகாமை நடத்தியது.
கடந்த ஜனவரி 27-ம் தேதி மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரை அபுதாபி காளிதியாவில் உள்ள இரத்த வங்கி அலுவலகத்தில் இரத்த தான முகாமை நடத்தியது. இம்முகாமில் 125 க்கும் அதிகமானோர் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர்.
அமீர்கான்:சிறையில் சீரழிக்கப்பட்ட 14 ஆண்டுகால வாழ்க்கை
புதுடெல்லி : எந்த குற்றமும் செய்யாமல் பள்ளிப் பருவத்தில்(19-வயதில்) கைது. 14 ஆண்டுகள் தனிமைச் சிறை வாழ்வு. 20 ஜோடிக்கப்பட்ட குண்டுவெடிப்பு வழக்குகள். தளர்வாதத்தால் சோர்ந்து போன தாய். மகன் கைது
செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதை நினைத்து மனம் உடைந்து மாரடைப்பால் மரணமடைந்த தந்தை.-இந்தியாவில் ஓர் அப்பாவி முஸ்லிமின் வாழ்க்கை எவ்வாறெல்லாம் சீரழிக்கப்படுகிறது என்பதற்கு அமீர்கான் மீண்டும் ஒரு உதாரணமாக திகழ்கிறார்.
சனி, 28 ஜனவரி, 2012
அபுதாபியில் வேலைவாய்ப்பு விழா: வெளிநாட்டினருக்கும் வாய்ப்பு
அபுதாபி: தனியார் துறையில் கூடுதல் உள்நாட்டினரை ஈர்க்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக அபுதாபியில் பெரிய அளவிலான வேலை வாய்ப்பு விழா3 நாட்கள் நடைபெற இருக்கிறது.
ஜனவரி 31, பிப்ரவரி 1, 2 தேதிகளில் அபுதாபி நேசனல் எக்ஸிபிஷன் சென்டரில் ‘தவ்தீஃப்’ என்ற பெயரில் இவ்விழா நடைபெறுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் நிதி மற்றும் வங்கியல் துறைகளில் செயல்படும் நிறுவனங்கள் உள்பட ஏராளமான நிறுவனங்கள் இவ்விழாவில் பல்வேறு வேலைவாய்ப்புக்கான நபர்களை தேர்வுச் செய்கின்றன.
கர்நாடகா முதல்வர் மீண்டும் ஆர்.எஸ்.எஸ் வாலண்டியர் ஆனார்
பெங்களூர்:கர்நாடகா முன்னாள் முதல்வர் பி.எஸ்.எடியூரப்பாவுடன் முதல்வர் பதவிக்கான போட்டி தீவிரமடைந்துள்ள சூழலில் ஆதரவு தேடி முதல்வர் டி.வி.சதானந்தாகவுடா ஆர்.எஸ்.எஸ் முகாமில் சீருடை அணிந்து கலந்துக்கொண்டார்.
வடக்கு கர்நாடகாவில் ஹுப்ளியில் மூன்று தினங்களாக நடந்துவரும் ஆர்.எஸ்.எஸ்ஸின் ‘ஹிந்து சக்தி சங்கம’த்தில் முதல்வர் சதானந்தாகவுடா மீண்டும் சங்கின் வாலண்டியராக கலந்து கொண்டார்.
காலித் மிஷ்அல் முதன் முறையாக காஸ்ஸா செல்கிறார்
காஸ்ஸாசிட்டி:ஃபலஸ்தீன் எதிர்ப்பு போராட்ட இயக்கமான ஹமாஸின் அரசியல் விவகார தலைவரான காலித் மிஷ்அல் முதன் முறையாக காஸ்ஸாவிற்கு செல்லவிருக்கிறார். மிஷ்அல் தனது சுற்றுப்
பயணத்தின்போது ஃபலஸ்தீன் ஆணைய அதிபர் மஹ்மூத் அப்பாஸ், காஸ்ஸாவில் ஹமாஸின் பிரதமர் இஸ்மாயீல் ஹானிய்யா ஆகியோரை சந்திப்பார் என காஸ்ஸா வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித் தொடர்பாளர் அஹ்மத் யூசுஃப் தெரிவித்துள்ளார்.
வெள்ளி, 27 ஜனவரி, 2012
இஸ்லாமிய இயக்கத்தலைவர்களின் ஒன்று கூடல்
சென்னை: பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டிற்கான கலந்தாலோசனை கூட்டம் நேற்று மாலை சென்னையில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் சமூகப் பிரமுகர்கள் மற்றும் சகோதர இயக்கங்களின் நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டு தங்களுடைய கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
"முஸ்லிம்களுக்கான இட ஒதுக்கீடு" பல ஆண்டுகளாக இதற்காக அனைத்து முஸ்லிம் இயக்கங்களும் தங்களால் இயன்ற அளவும் போராட்டங்களை
சிறுபான்மையினருக்கு உள் ஒதுக்கீடு: அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானதாம் – ஆர்.எஸ்.எஸ் கூறுகிறது
வதோதரா: அரசியல் சாசனத்தையும், நீதிபீடங்களையும் மீறிச் செயல்படுவதில் பிரசித்திப் பெற்ற ஆர்.எஸ்.எஸ் சிறுபான்மையினருக்கு 4.5 உள் ஒதுக்கீடு வழங்குவது அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானது என கூறியுள்ளது.
இதுத்தொடர்பாக ஆர்.எஸ்.எஸ்ஸின் செய்தி தொடர்பாளர் ராம் மாதவ் கூறியது :பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு அளிக்கப்படும் 27 சதவீத இடஒதுக்கீட்டிலிருந்து, 4.5 சதவீதம் உள் ஒதுக்கீடாக சிறுபான்மையினருக்கு அளிக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்திருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது.
போஜ்சாலா பிரச்சனையை மீண்டும் கிளப்பும் ஹிந்துத்துவாவாதிகள்
போபால்:மத்தியபிரதேச மாநிலம் தர் மாவட்டத்தில் போஜ்சாலா தொடர்பான பிரச்சனையை ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகள் மீண்டும் கிளப்புகின்றன.
இரு சமூகத்தினர் இடையே பகைமையை தூண்டும் நோக்கத்துடன் தடை உத்தரவை மீறி பல்கி யாத்ரா நடத்துவதற்கு தயாராகி வருகிறது ஒரு ஹிந்துத்துவா அமைப்பு. இன்று நடைபெறும் பசந்த் பஞ்சமியையொட்டி இந்த யாத்திரை நடத்தப்படுகிறது.
இந்திய நீதிமன்றங்கள் பாசிச மயமாகி வருகின்றன் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு
ஜபல்பூர்(ம.பி):இந்தியாவின் மதசார்பற்ற கொள்கையை மறந்துவிட்டு தீர்ப்பு கூறுவது நீதிமன்றங்களின் வாடிக்கையாக மாறிவிட்டது.
பகவத் கீதை மத நூல் அல்ல; அது வாழும் நெறி எனவும் சமூக நீதி காக்கும் நூல் எனவும் மத்திய பிரதேச உயர் நீதிமன்றம் கூறியுள்ளது. பள்ளிகளில் பகவத் கீதை கற்பிக்கும் மாநில அரசின் முடிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை இவ்வாறு கூறியுள்ளது.
இரங்கல் செய்தி
இப்போதைய கேரள ஆளுநரும், இரண்டு முறை மத்திய அமைச்சராகவும், முன்னால் சவுதி அரேபியாவின் இந்திய தூதராகவும், புதுவையில் மூன்று முறை முதல்வராக தேர்வு செய்யப்பட்டு, மக்கள் பணியாற்றிய மதிப்பிற்குரிய எம்.ஓ.ஹைச் உமர் பாரூக் மரைக்காயர் அவர்கள் உடல் நல குறைவினால் மரணம் அடைந்த செய்தி மிகுந்த மனவேதனை அளிக்கிறது. அவருடைய மறைவிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
மின்னஞ்சல்களை உளவு பார்ப்பதில்(snoop) இந்தியாவுக்கு 3-வது இடம்
புதுடெல்லி:கேரள மாநிலத்தில் முஸ்லிம் பிரமுகர்கள், அரசியல்வாதிகள், பத்திரிகையாளர்கள் ஆகியோரின் மின்னஞ்சல் முகவரிகள் போலீசாரால் ரகசியமாக கண்காணிக்கப்படும் செய்தி பரபரப்பை ஏற்படுத்திய வேளையில்
உலகிலேயே தனிநபர்களின் மின்னஞ்சல்களை கண்காணிப்பதில் இந்தியா 3-வது இடத்தை வகிப்பதாக பிரபல இணையதள சேவை நிறுவனமான கூகிள் அறிக்கை கூறுகிறது.
வியாழன், 26 ஜனவரி, 2012
எஸ்.டி.பி.ஐ சார்பாக சென்னயில் குடியரசு தின விழா கொண்டாட்டம்
சென்னை: இந்திய தேசத்தின் 63வது குடியரசு தினக்கொண்டாட்டம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. சென்னையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக 18ற்கும் மேற்பட்ட இடங்களில் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமானோர் பங்கெடுத்தனர்.
![]() |
| எஸ்.டி.பி.ஐ சார்பாக ஒட்டப்பட்ட குடியரசு தின வாழ்த்து சுவரொட்டி |
சிறுபான்மை கமிஷனுடன் மல்லுக்கட்டும் பீகார் அரசு
புதுடெல்லி : பீகார் மாநிலம் போர்ப்ஸ் கஞ்சில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஐந்து முஸ்லிம்கள் கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பாக தேசிய சிறுபான்மை கமிஷனுடன் பீகார் அரசு அறிக்கை போரில் ஈடுபட்டுள்ளது.
போர்ப்ஸ் கஞ்ச் துப்பாக்கிச்சூடு தொடர்பாக தேசிய சிறுபான்மை கமிஷன் தயாரித்த அறிக்கை பீகார் அரசுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. தேசிய சிறுபான்மை கமிஷனின் அறிக்கையை தொடர்ந்து மத்திய சிறுபான்மை
ஈரானின் அணுசக்தியால் அபாயமில்லை – அமெரிக்க முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர்
வாஷிங்டன் : ஈரானின் அணுசக்தி பரப்புரைச் செய்வது போல் கவலை அளிப்பது அல்ல என்று அமெரிக்காவின் முன்னாள் அதிபர் ஜிம்மி கார்டர் தெரிவித்துள்ளார். டைம் இதழுக்கு அளித்த பேட்டியில் கார்டன் இதனை தெரிவித்துள்ளார்.
அவர் கூறியது:அணு ஆயுதம் தயாரிக்கமாட்டோம் என உறுதியாக கூறிய மத உணர்வு மிக்க ஈரான் ஆட்சியாளர்கள் கூறியுள்ளனர். அவர்கள் அதனை
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
















