- எந்த பொதுத்துறை அதிகாரியிடமிருந்தும் தகவல் அறியும் சட்டம் 2005 இன் படி தேவைப்படும் தகவலைப் பெற்றுக்கொள்ளலாம். (அரசு நிறுவனம்/அரசு உதவிபெறும் நிறுவனம்)
- விண்ணப்பம் கைகளால் எழுதப்படலாம் அல்லது தட்டச்சு செய்யப்படலாம்.India Development Gateway Portal என்ற இணையதள முகவரியிலிருந்து விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
- விண்ணப்பங்கள் ஆங்கிலம், இந்தி அல்லது எந்த மாநில மொழியிலாவது சமர்ப்பிக்கலாம்
- பின்வரும் தகவல்களோடு மனுவை தரவேண்டும்.
- மனுவைப் பெற்றுக்கொண்ட துணை பொதுதகவல் அதிகாரி (APIO) அல்லது பொதுத்தகவல் அதிகாரியின் (PIO) பெயர்.
- பொருள்: தகவல் அறியும் சட்டம் பகுதி 6(1) இன் படி மேல் முறையீட்டுக்கான விண்ணப்பம்.
- பொதுத்தகவல் அதிகாரியிடமிருந்து எதிர்பார்க்கும் தகவல்கள்.
- விண்ணப்பதாரரின் பெயர், தந்தை அல்லது கணவர் பெயர்
- பிரிவு SC, ST & OBC
- விண்ணப்பக் கட்டணம்.
- வறுமைக்கோட்டிற்கு கீழ் நீங்கள் (BPL) வசிப்பவரா? ஆம்/இல்லை
- கைபேசி எண் (mobile no) மற்றும் மின்னஞ்சல் முகவரியுடன் (இரண்டும் கட்டாயமில்லை) அஞ்சல் முகவரி.
- தேதி மற்றும் இடம்.
- மனுதாரரின் இடம்.
- மனுதாரரின் கையொப்பம்
- இணைக்கப்பட்டுள்ள ஆவணங்களின் பட்டியல்..
- மனு செய்வதற்குமுன் துணை பொதுதகவல் அதிகாரி/பொதுத்தகவல் அதிகாரியின் பெயர், கூறப்பட்டுள்ள கட்டணம் மற்றும் கட்டணம் செலுத்தப்பட வேண்டிய முறை ஆகியனவற்றைச் சரிபார்த்துக்கொள்ளவும்.
- தகவல் அறியும் சட்டம் மூலம் தகவல் அறியும் மனுவினுக்கான கட்டணம் இருந்த போதிலும், தாழ்த்தப்பட்டவர்கள், மலைஜாதியினர் மற்றும் வறுமைக்கோட்டின் கீழ் வசிப்பவர்கள் ஆகியோருக்கு மனுவினைப்பெற கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.
- கட்டண விலக்கு வேண்டுபவர்கள் தாழ்த்தப்பட்டவர்கள், மலை சாதியினர் மற்றும் வறுமை கோட்டின் கீழ் வசிப்பவர்கள் என்பதற்கான சான்றிதழைச் சமர்ப்பிக்கவேண்டும்.
- மனுக்களை நேரிலோ அல்லது அஞ்சலிலோ சமர்ப்பிக்கலாம். அஞ்சலில் அனுப்புவதாக இருப்பின் பதிவுத்தபாலில் அனுப்ப வேண்டும். கூரியர் மூலம் (courier) அனுப்புவதை அறவே தவிர்க்க வேண்டும்.
- விண்ணப்பம்/மனுவினை இரண்டு நகல் எடுக்கவும். (அதாவது, மனு, பணம் கட்டியதற்கான ரசீது, நேரில் அல்லது அஞ்சலில் மனு அனுப்பப்பட்டதற்கான ஆதாரம் ஆகியன) அவைகளை பின்னாள் ஒப்பிடுதலுக்காக (future reference) பத்திரமாக வைத்திருக்கவும்.
- நேரில் உங்களது மனுவை சமர்ப்பித்திருந்தால் அலுவலகத்தில் தேதியும் முத்திரையும் கூடிய ரசீதைப்பெற்று மிகக் கவனமாக வைத்திருக்கவும்.
- கேட்ட தகவலைத் தரவேண்டிய காலம், பொதுத் தகவல் தொடர்பு அதிகாரி மனுவை பெற்றுக் கொண்ட நாளிலிருந்து தொடங்குகிறது.
பின் வருவனவற்றையும் கவனத்தில் கொள்க
வ. எண் | சூழல் | தகவலைத் தரவேண்டிய கால அவகாச எல்லை |
1 | சாதாரணமாக தகவலைத் தெரிவிக்க | 30 நாள் |
2 | கேட்கப்படும் தகவல் ஒரு மனிதனின் வாழ்க்கை மற்றும் சுதந்திரத்தைக் குறித்ததாக இருப்பின் | 48 மணி நேரம் |
3 | துணை பொதுதகவல் அதிகாரி(APIO) மனுவைப் பெற்றிருந்தால் | மேலே குறிப்பிடப்பட்டுள்ள இரு சூழல்களுக்கான கால அவகாசத்துடன் மேலும் 5 நாள் சேர்த்துக்கொள்ளப்படும் (30 நாள்+5 நாள்)/48 மணி நேரம் + 5 நாள்) |