நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 25 ஜனவரி, 2012

குஜராத் என்கவுண்டர் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவு


டெல்லி :  குஜராத் மாநிலத்தில் 2003-06 கால அளவில் நடந்தபல்வேறு போலி என்கவுண்டர் படுகொலைகள் குறித்து விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பான விசாரணையை ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி எம்.பி.ஷா நடத்துவார் உச்சநீதிமன்றம் அறிவித்துள்ளது.
நீதிபதி அஃப்தாப் ஆலம் தலைமையிலான உச்சநீதிமன்ற பெஞ்ச் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.




2003 முதல் 2006 வரை குஜராத்தில் நடந்த பல்வேறு என்கவுண்டர்கள் போலியானவை என்று புகார்கள் குவிந்துள்ளன. குறிப்பாக 20 என்கவுண்டர்கள் போலியானவை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவை குறித்துத்தான் ஷா தலைமையிலான விசாரணை அமைப்பு விசாரிக்கவுள்ளது.
ஷா தலைமையிலான அமைப்பு, தனக்குத் தேவையான விசாரணைக் குழுக்களை நியமித்துக் கொள்ளவும் அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. விசாரணைக் குழுக்களில் இடம் பெறுவோர் குஜராத்தைச் சேர்ந்தவர்களா அல்லது வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களா என்பதையும் நீதிபதி ஷாவே முடிவு செய்துகொள்ளலாம்.
ஷா தலைமையிலான அமைப்பு 20க்கும் மேற்பட்ட என்கவுண்டர் வழக்குகளை விசாரித்து அவை உண்மையான என்கவுண்டரா அல்லது போலி என்கவுண்டரா என்பதை தெளிவுபடுத்தி அதை உச்சநீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
தனது முதல் விசாரணை அறிக்கையை 3 மாத காலத்திற்குள் அளிக்க வேண்டும் என்றும் ஷாவுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
குஜராத்தில் நடந்த போலி என்கவுண்ட்டர்கள் குறித்து விசாரணை நடத்தவேண்டும் என்று பிரபல கவிஞர் ஜாவீத் அக்தரும், பத்திரிகையாளர் பிஜி.வர்கீஸும் உச்சநீதிமன்றத்தை அணுகியிருந்தனர்.