இப்னு உமர்(ரலி) அறிவிக்கின்றார்கள்:
'நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்களாவீர்.
ஒவ்வொருவரும் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்.
தலைவரும் பொறுப்புதாரியே! அவர் தன் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்.
ஒரு மனிதர் அவர் மனைவி குறித்து பொறுப்புதாரியாவர். அவரின் பொறுப்பு பற்றி அவர் விசாரிக்கப்படுவார்.
ஒரு பெண் தன் கணவனின் வீட்டிற்கு பொறுப்புதாரியாவாள். அவள் தன் பொறுப்பு பற்றி கேள்வி விசாரிக்கப்படுவாள்.
ஓர் ஊழியர் தன் எஜமானர் விஷயத்தில் பொறுப்புதாரியாவார்.
ஒவ்வொருவரும் பொறுப்புதாரியே! அவரவர் தம் பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவார்கள்!
என்று நபி(ஸல்) கூறினார்கள். (புகாரி,முஸ்லிம்) (ரியாளுஸ்ஸாலிஹீன்: 653)