நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வியாழன், 26 ஜனவரி, 2012

எஸ்.டி.பி.ஐ சார்பாக சென்னயில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

சென்னை: இந்திய தேசத்தின் 63வது குடியரசு தினக்கொண்டாட்டம் நாடு முழுவதும் சிறப்பாக நடைபெற்றது. சென்னையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக 18ற்கும் மேற்பட்ட இடங்களில் தேசியக்கொடி ஏற்றி குடியரசு தின விழா சிறப்பாக கொண்டாடப்பட்டது. பல்வேறு இடங்களில் நடைபெற்ற இவ்விழாவில் ஏராளமானோர் பங்கெடுத்தனர்.
எஸ்.டி.பி.ஐ சார்பாக ஒட்டப்பட்ட குடியரசு தின வாழ்த்து சுவரொட்டி

சோஷியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா (எஸ்.டி.பி.ஐ) சார்பாக அதன் தலைமை அலுவலகம் முன்பு மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் தேசியக்கொடி ஏற்றி சிறப்புரை நிகழ்த்தினார். காலை 9.00 மணி அளவில் நடைபெற்ற இந்நிகழ்ச்சி அல்லாமா இஃக்பால் எழுதிய பாடலான "ஸாரே ஜஹான்ஸே அச்சா" பாடலுடன் நிகழ்ச்சி ஆரம்பமானது. இந்நிகழ்ச்சியில் உரையாற்றிய மாநில தலைவர் தெஹ்லான் பாகவி அவர்கள் கூறும் போது ஆபிரஹாம் லிங்கன் கூறிய குடியரசு கொள்கையான‌ மக்களால் மக்களுக்காக தேர்ந்தடுக்கப்படக்கூடிய வகையிலான உண்மையான குடியரசை இந்நாட்டில் நிலை நிறுத்திட வேண்டும். அதற்காக எஸ்.டி.பி.ஐ யின் உறுப்பினர்கள் அயராது உழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். வடசென்னை மாவட்ட தலைவர் எஸ்.அமீர் ஹம்சா, பொதுச்செயலாளர் முஹம்மது ரஷீத், செயலாளர் நேதாஜி ஜமால், கரீம் மற்றும் பலர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.





அதே போன்று துறைமுகம் தொகுதி அங்கப்பன் தெருமுனையில் எஸ்.டி.பி.ஐ சார்பாக குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதற்கு துறைமுக தொகுதி தலைவர் முஜிபுர் ரஹ்மான் தலைமை தாங்கினார். தேசியக்கொடியை வடசென்னை மாவட்ட தலைவர் அமீர் ஹம்சா ஏற்றி வைத்தார். மாநில செயற்குழு உறுப்பினர் ரத்தினம் அண்ணாச்சி அவர்கள் சிறப்புரை வழங்கினார். வட்ட நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் என ஏராளமானோர் இந்நிகழ்ச்சியில் பங்கெடுத்தனர். இந்நிகழ்ச்சியின் சிறப்பு அம்சமாக மாற்று திற‌னாளி ஒருவருக்கு அலுமினியம் கைத்தடி வழங்கப்பட்டது.