நெல்லை மேற்கு
மாவட்டத்தில் உள்ள கழுநீர்குளம் என்ற கிராமத்தில்
06-08-2013 மதியம் 3-00 மணியளவில் பள்ளிவாசல் தெற்கு தெருவில் (மாற்று பாதை
இருந்தும்) பிரச்சனை செய்யும் நோக்கில் தேவர் சமுதாயத்தைச் சார்ந்த சிலர் சவ
ஊர்வலம் சென்று முஸ்லிம் பெண்களிடம் அநாகரீகமாக நடந்து கொண்ட விஷயத்தை
கேள்விப்பட்டவுடன் நெல்லை மேற்கு மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின்
மாவட்டத் தலைவர் செய்யது இப்ராஹிம் உஸ்மானி,மாவட்ட செயலாளர் லுக்மான் ஹக்கீம்
மற்றும் SDPI கட்சியின் மாவட்டத் தலைவர்
ஜாபர் அலி உஸ்மானி, மாவட்ட துணைத் தலைவர் யாசர் கான், ஆகியோர் கழுநீர்குளம் ஜமாத்தை
சந்தித்து விபரங்களை கேட்டறிந்து சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டனர் DSPயை நேரடியாக
சந்தித்து நிலைமைகளை எடுத்துக்கூறி தேவர் சமுதாயத்தைச் சார்ந்த குற்றவாளிகளை
விரைவாக கைது செய்ய கோரினர். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்டனர்.
NOV 2013
புதன், 7 ஆகஸ்ட், 2013
செவ்வாய், 6 ஆகஸ்ட், 2013
சி.பி.சி.ஐ.டி விசாரணையில் உண்மை வேண்டும் : பாப்புலர் ஃப்ரண்ட் வலியுறுத்தல்
கடந்த
19.7.13 அன்று சேலத்தில் ஆடிட்டர் ரமேஷ் மர்ம நபர்களால் கொலை
செய்யப்பட்டார். தடையம் ஏதும் கிடைக்காத நிலையில் ஆடிட்டர் ரமேஷ் மற்றும்
வெள்ளையப்பன் ஆகிய இரண்டு நபர்களின் கொலை வழக்கை விரைவாக கண்டுபிடிக்க
தமிழக அரசு சிறப்பு புலனாய்வு விசாரணைக்கு உத்திரவிட்டது.இந்நிலையில் சி.பி.சி.ஐ.டி குழுவின் விசாரணை முஸ்லிம்களை குறிவைக்கும்
நோக்குடன் போலியான அணுகுமுறையிலிருந்து துவங்கியுள்ளது. சமீபத்தில் நெல்லை
மாவட்டம் மேலப்பாளையத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்கள் 5 பேர் மீது 17 கிலோ
வெடிப்பொருட்கள் வைத்திருந்தனர் என பொய்யான வழக்கை பதிந்து UAPA (Unlawful
Activities Prevention Act) எனும் கருப்புச் சட்டத்தின் கீழ் கைது
செய்யப்பட்டுள்ளார்கள்.
காவல்துறை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தி அச்சுறுத்தும் விதமாக கூட்டம் கூட்டமாக வீடுகளில் புகுந்து , எந்த நீதிமன்ற ஆவணமும் இல்லாமல் சோதனை நடத்தியுள்ளனர். இது சங்கபரிவார இயக்கங்களின் அழுத்தங்களுக்காக முஸ்லிம்களை பழி வாங்கும் செயலாகத் தெரிகிறது. இச்செயலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வண்மையாக கண்டிக்கிறது.
காவல்துறை முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் பதட்டத்தை ஏற்படுத்தி அச்சுறுத்தும் விதமாக கூட்டம் கூட்டமாக வீடுகளில் புகுந்து , எந்த நீதிமன்ற ஆவணமும் இல்லாமல் சோதனை நடத்தியுள்ளனர். இது சங்கபரிவார இயக்கங்களின் அழுத்தங்களுக்காக முஸ்லிம்களை பழி வாங்கும் செயலாகத் தெரிகிறது. இச்செயலை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வண்மையாக கண்டிக்கிறது.
மேலப்பாளையத்தில் மீண்டும் காவல்துறை அட்டகாசம் நடு இரவில் அப்பாவி முஸ்லிம் கைது:காவல்துறை முற்றுகை
நெல்லை மாவட்டம் மேலப்பாளைத்தில் அப்பாவி முஸ்லிம் இளைஞர்ள் கைது
செய்யப்படுவது தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இந்நிலையில் தக்வா
பள்ளிவாசல் வளாகத்தில் கஞ்சி மற்றும் சஹர் நேர சமையல்களை செய்து வந்த RSK
ரஹ்மான் சமையல் குழுவைச் சார்ந்த காட்டு தெருவில் வசித்து வரும் பிலால்
என்ற அப்பாவி இளைஞரை சமையல் செய்து கொண்டிருந்த போது காவல்துறையினர்
நள்ளிரவு 1.15 மணியளவில் அடித்து இழுத்து சென்றனர். நேற்றைய தினத்தில் சஹர்
நேர உணவின் தேவை அதிகமாக இருந்ததால் இவர் சமையல் கூடத்தில் சமைத்துக்
கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த சம்பவத்தை கேள்விப்பட்ட இஸ்லாமிய கூட்டமைப்பினர் அனைவரும் ஃபஜர் தொழுகையை தொடர்ந்து தக்வா பள்ளி வளாகாத்தில் ஒன்றுகூடி இஸ்லாமிய கூட்டமைப்பின் துணை ஒருங்கிணைப்பாளாராகிய K.S.ஷாகுல் ஹமீது உஸ்மானி அவர்களின் தலைமையில் சுமார் 5.30 மணியளவில் மேலப்பாளையம் காவல்நிலையத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டு காவல்நிலையத்தை முற்றுகையிட்டனர். இதில் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI கட்சி, தக்வா ஜமாத், தமுமுக, மமக, மமமுக மற்றும் பொதுமக்கள் உட்பட சுமார் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
திங்கள், 5 ஆகஸ்ட், 2013
கருத்து சுதந்திரம்:இதனை முஸ்லிம்களுக்கு எதிராக மட்டும் பயன்படுத்துவது ஏன்?
![]() |
அமெரிக்காவை சேர்ந்த அமீனா வதூத் என்பவர், ஆண்களைப் போல பெண்களும் இமாமாக இருந்து தொழுகை நடத்தலாம்,
இதுவரை இஸ்லாத்தில் யாரும் செய்யாத,ஆண்களும் பெண்களும் இரண்டரக் கலந்து தொழ வைப்பது, பெண்களைக் கொண்டு தொழுகைக்கான அழைப்பான 'பாங்கு' சொல்வது, ஜுமுஆ (வெள்ளிக்கிழமை) தொழுகைக்கு இவரே சொற்பொழிவை ஆற்றுவது போன்ற செயல்களில் ஈடுபட்டு முஸ்லிம்களை வழிகெடுக்கும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். இது தவிர, al.fatiha foundation,gaymuslim organisation என்கிற இரண்டு அமைப்புகளோடு இணைந்து இயங்குகிறார் அமீனா.
இந்த அமைப்புகள் முற்போக்கு, பெண்ணுரிமை,தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் லெஸ்பியன், கே செக்ஸ், பாலின மாற்றம் போன்ற செயல்களுக்கு ஊக்கம் அளித்து வருபவை. இந்த அமைப்புகள் அமீனாவிற்கு நிறைய விருதுகளும் வழங்கி இருக்கின்றன. இந்த அமைப்புகள் அமேரிக்கா பெர்க்ளியை மையமாக வைத்து செயல்பட்டு வருகின்றன.
என்பது போன்ற சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு வருபவர்.Sisters in Islam, என்ற அமைப்பை நடத்தி வரும் அமீனா,
(29/07) அன்று சென்னையிலுள்ள "மெட்ராஸ் யூனிவெர்சிட்டி"யில் சென்னை பல்கலைக்கழக இஸ்லாமிய ஆய்வுத்துறையும், JABS கல்லூரியும் இணைந்து இஸ்லாம் , பாலியல் மற்றும் சீர்திருத்தம் என்ற தலைப்பில் ‘தலைப்பில் உரை நிகழ்த்தவிருந்தார்.மேலும் பெண்களின் அனுபவங்கள் மற்றும் இஸ்லாத்தில் அவர்களின் அதிகாரம் சார்ந்த பிரச்சினைகள்” என்ற தலைப்பில் வட்டமேசை கலந்தாய்வு நடக்க இருந்தது இதற்காக, கேரள மாநிலம் கோழிக் கோட்டிலிருந்து சென்னை வரவிருந்த அவரை நிகழ்ச்சிக்கு வரவேண்டாம் என 28/07 அன்று இரவு, பல்கலைக்கழக துணை வேந்தர் தாண்டவன் கேட்டுக் கொண்டார்.சர்ச்சைக்குரிய அமீனாவின் நிகழ்ச்சிகள் சென்னையில் நடைபெற்றால் 'சட்டம் ஒழுங்கு' பிரச்சினை உண்டாகும் என உயர் போலீஸ் அதிகாரிகள் கேட்டுக் கொண்டதையடுத்து, நிகழ்ச்சியை ரத்து செய்து விட்டதாக தெரிவித்தார், ஆர்.தாண்டவன்.
தேஜஸ் பத்திரிகைக்குச் சிவசேனா கொலைமிரட்டல்!
கேரளா: திருவனந்தபுரம் பத்மனாப சுவாமி கோவில் புதையலுக்குப் பாதுகாப்பு தொடர்பான செய்தியினை வெளியிட்ட தேஜஸ் பத்திரிகைக்கு சிவசேனா கொலை மிரட்டல் விடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவனந்தபுரம் கோட்டையினுள் பத்மனாப சுவாமி கோயில் உள்ளது. இங்கு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான ஆபரண, தங்க நாணய புதையல் கண்டுபிடிக்கப்பட்டது. இப்புதையலைப் பாதுகாப்பது தொடர்பாக அறிக்கை சமர்ப்பிக்க அமிக்கஸ் க்யூரியினை உச்ச நீதிமன்றம் நியமித்தது. இந்த அமிக்கஸ் க்யூரி அளித்த பாதுகாப்பு அறிக்கையினை விரிவாக தேஜஸ் பத்திரிகை வெளியிட்டது.
இதனைத் தொடர்ந்து நேற்று காலை தேஜஸ் பத்திரிகை தலைமை அலுவலகம் மற்றும் அதன் செய்தியாளர்களின் கைப்பேசி எண்களுக்கு சிவசேனையைச் சேர்ந்தவர்கள் அழைத்து கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இது தொடர்பாக தேஜஸ் பத்திரிகை ஆசிரியர் திருவனந்தபுரம் சிட்டி கமிசனர் பி. விஜயனைச் சந்தித்து புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி குற்றவாளிகள்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என கமிசனர் பி. விஜயன் உறுதியளித்தார்.
சனி, 3 ஆகஸ்ட், 2013
தொடரும் படுகொலைகள் யார் குற்றவாளி? பாப்புலர் ஃப்ரண்ட் நோட்டிஸ் பிரச்சாரம்
பாரதிய ஜனதாவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் 19.7.2013 அன்று
மர்ம நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை யாரால் நடத்தப்பட்டது.
எந்த பின்னணியில் நடத்தப்பட்டது என்று விசாரணை நடைபெறுவதற்கு முன்னே
இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் முஸ்லிம்கள் மீது இப்படுகொலையை திணிக்க
முற்பட்டு வருகிறது.
இதற்கு முன் வேலூர் அரவிந்த ரெட்டி, நாகை புகழேந்தி, பரமக்குடி முருகன்,
ராமேஸ்வரம் குட்ட நம்பு, வேலூரில் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம்
தீவிரவாதிகள் தான் ஆடிட்டர் ரமேஷையும் கொலை செய்திருக்கிறார்கள் என அனைத்து
இந்துத்துவ தலைவர்களும் கூப்பாடு போட்டனர்.
அதை தொடர்ந்து இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் பந்த் நடத்தியது. பந்தின்
போது பொது சொத்துக்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினர்.
முஸ்லிம்களின் கடைகள் திட்டமிட்டு அடித்து நொறுக்கப்பட்டன. ஃபாஸிஸ
பயங்கரவாதிகள் கோவை துடியலூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு
ஒன்றை வீசினர். ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றும்
தீக்கிறைக்யாக்கப்பட்டது. காரைக்காலில் முஸ்லிம் வியாபாரி கத்தியால்
தாக்கப்பட்டார்.
மேலப்பாளையத்தில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேரும் அப்பாவிகள்:NCHROவின் உண்மை கண்டறியும் குழு!
நெல்லை
மாவட்டம் மேலப்பாளையத்தில் கடந்த ஆகஸ்ட் 1 ம் தேதி அன்று வீட்டில் வெடி
குண்டு வைத்திருந்ததாக பொய்யாக குற்றம் சுமத்தி மேலும் சேலம் பி.ஜே.பி பொது
செயலாளர் ஆடி ட்டர் ரமேஷ் வழக்கிலும் பொய்யாக குற்றம் சுமத்தி அப்பாவி
முஸ்லிம்கள் ஐந்து பேரை கைது செய்துள்ளது தமிழக காவல் துற . இது குறித்து
NCHRO வின் உண்மை கண்டறியும் குழு நேரில் சென்று சம்பவம் நடந்த பகுதிகளை
ஆய்வு செய்து,பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் நேரில் சென்று விசாரித்தனர்.
கட்டபஞ்சாயத்துகளால் கொல்லப்பட்டவர்களை பி.ஜெ.பி அரசியல் கொலையாக மாற்ற முயற்சி செய்வது ஏன் ?
பாரதிய
ஜனதாவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் 19.7.2013 அன்று மர்ம
நபர்களால் கொலை செய்யப்பட்டார். இப்படுகொலை யாரால் நடத்தப்பட்டது. எந்த
பின்னணியில் நடத்தப்பட்டது என்று விசாரணை நடைபெறுவதற்கு முன்னே இந்துத்துவ
ஃபாசிச அமைப்புகள் முஸ்லிம்கள் மீது இப்படுகொலையை திணிக்க முற்பட்டு
வருகிறது.
இதற்கு முன் வேலூர் அரவிந்த ரெட்டி, நாகை புகழேந்தி, பரமக்குடி முருகன், ராமேஸ்வரம் குட்ட நம்பு, வேலூரில் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகள் தான் ஆடிட்டர் ரமேஷையும் கொலை செய்திருக்கிறார்கள் என அனைத்து இந்துத்துவ தலைவர்களும் கூப்பாடு போட்டனர்.
அதை தொடர்ந்து இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் பந்த் நடத்தியது. பந்தின் போது பொது சொத்துக்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினர். முஸ்லிம்களின் கடைகள் திட்டமிட்டு அடித்து நொறுக்கப்பட்டன. ஃபாஸிஸ பயங்கரவாதிகள் கோவை துடியலூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினர். ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றும் தீக்கிறைக்யாக்கப்பட்டது. காரைக்காலில் முஸ்லிம் வியாபாரி கத்தியால் தாக்கப்பட்டார்.
இதற்கு முன் வேலூர் அரவிந்த ரெட்டி, நாகை புகழேந்தி, பரமக்குடி முருகன், ராமேஸ்வரம் குட்ட நம்பு, வேலூரில் வெள்ளையப்பன் ஆகியோரை கொன்ற முஸ்லிம் தீவிரவாதிகள் தான் ஆடிட்டர் ரமேஷையும் கொலை செய்திருக்கிறார்கள் என அனைத்து இந்துத்துவ தலைவர்களும் கூப்பாடு போட்டனர்.
அதை தொடர்ந்து இந்துத்துவ ஃபாசிச அமைப்புகள் பந்த் நடத்தியது. பந்தின் போது பொது சொத்துக்கள், அரசு பஸ்கள் ஆகியவற்றை சேதப்படுத்தினர். முஸ்லிம்களின் கடைகள் திட்டமிட்டு அடித்து நொறுக்கப்பட்டன. ஃபாஸிஸ பயங்கரவாதிகள் கோவை துடியலூர் பகுதியில் உள்ள பள்ளிவாசலில் பெட்ரோல் குண்டு ஒன்றை வீசினர். ராமநாதபுரத்தில் உள்ள பள்ளிவாசல் ஒன்றும் தீக்கிறைக்யாக்கப்பட்டது. காரைக்காலில் முஸ்லிம் வியாபாரி கத்தியால் தாக்கப்பட்டார்.
ஜூனியர் விகடன், நக்கீரன், குமுதம் ரிப்போர்டர் மும்மூர்த்திகள்களும் ஹிந்துத்துவ அரசியலும்!
கடந்த,
சில தினங்களுக்கு முன் பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச் செயலாளர்
ஆடிட்டர். ரமேஷ் சேலத்தில் சில மர்ம நபர்களால், அவரது அலுவலக வளாகத்திலேய
சரமாரியாக வெட்டி கொலை செய்யப்பட்டார். இந்த கொலைவெறி தாக்குதல் வன்மையாக
கண்டிக்கத்தக்கது. இதை, முஸ்லிம் சமூகத்துடன் இணைத்து பத்திரிகைகளும்,
ஊடகங்கலும் செய்தி வெளியிடுவது சமுகத்தில் இருக்கும் நல்லிணக்கத்திற்கு
இழுக்காகும்.
யார் இதற்க்கு கரணம்?
ஆடிட்டர் ரமேஷ் 19இம் தேதி இரவு மர்ம நபர்களால் கொல்லபட்டபோது, அவரது அலுவலகத்தில் வாட்ச் மேனகா வேலை பார்த்த ஜெயராமன் என்பவர் மட்டும் தான் சம்பவ இடத்தில இருந்தார். வேறு எந்த தடயங்களும், கொலை சமந்தமான அதரங்களும் கிடைக்கவில்லை. ஆனால் , இதை சிறிதும் ஆராயமல் பா.ஜ.க. தலைவர்களும், ஹிந்துத்துவ தலைவர்களும் முஸ்லிம்கள் தான் செய்திருப்பார்கள் என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அதையும், நமது பத்திரிகைகளும், ஊடங்கங்களும் வெளியிட ஆரம்பித்து விட்டனர். இது நிச்சயமாக கண்டிக்கத்தக்க ஒரு விசயமாகும்.
யார் இதற்க்கு கரணம்?
ஆடிட்டர் ரமேஷ் 19இம் தேதி இரவு மர்ம நபர்களால் கொல்லபட்டபோது, அவரது அலுவலகத்தில் வாட்ச் மேனகா வேலை பார்த்த ஜெயராமன் என்பவர் மட்டும் தான் சம்பவ இடத்தில இருந்தார். வேறு எந்த தடயங்களும், கொலை சமந்தமான அதரங்களும் கிடைக்கவில்லை. ஆனால் , இதை சிறிதும் ஆராயமல் பா.ஜ.க. தலைவர்களும், ஹிந்துத்துவ தலைவர்களும் முஸ்லிம்கள் தான் செய்திருப்பார்கள் என்று பேட்டி கொடுக்க ஆரம்பித்து விட்டனர். அதையும், நமது பத்திரிகைகளும், ஊடங்கங்களும் வெளியிட ஆரம்பித்து விட்டனர். இது நிச்சயமாக கண்டிக்கத்தக்க ஒரு விசயமாகும்.
வெள்ளி, 2 ஆகஸ்ட், 2013
விடுதலை சிறுத்தைகள் கட்சி நடத்திய இஃப்தார் நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர்!
சென்னை: வருடத்திற்கு ஒரு முறை சுழற்சியாக ரமலான் மாதம் நம்மை வந்தடைகிறது. அம்மாதத்தில் பயற்சி முகாம் அமைத்து, நாம் நோன்பு நோற்க நம்மோடு தங்கியிருந்து ஆன்மீக பயிற்சியளித்து, பாவங்கள் அகற்றி, பலஹீனமான ஈமானைப் பலப்படுத்தி, தொலைநோக்கு பார்வையுடன் சமூகத்தை வழிநடத்தி, போராட்ட குணத்துடன் வெற்றியை நோக்கி அழைத்து செல்கிறது. சங்கை மிகு இப்புனித ரமலான் மாதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பாக இஃப்தார் நிகழ்ச்சி 31.7.2013 நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில், SDPI கட்சியின் மாநில துணை தலைவர் S.M.ரஃபீக் அஹமது, விடுதலை சிறுத்தைகள் கட்சிகள் மாநில தலைவர் தொல்.திருமாவளவன், இந்திய தவ்ஹீத் ஜமாத்தின் மாநில துணை தலைவர் அஹமது முனிர் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் கலந்து கொண்டனர்.
வியாழன், 18 ஜூலை, 2013
பாப்புலர் ஃப்ரண்ட் அளித்த புகாரில் ப்ரஸ் கவுன்சில் நடவடிக்கை! - ஐ.பி, என். ஐ.ஏவுக்கு நோட்டீஸ்!
நற்பெயரை கெடுக்கும் வகையில் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து 10 நாளிதழ்களுக்கு எதிராக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் ஐ.பி மற்றும் என்.ஐ.ஏவுக்கு ப்ரஸ் கவுன்சில் ஆஃப் இந்தியா நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.நேற்று டெல்லியில் நடந்த அமர்வில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அளித்த புகாரில் வாதம் கேட்டபிறகு நோட்டீஸ் அனுப்ப தீர்மானிக்கப்பட்டது.
தாங்கள் செய்தி வெளியிட்டது ஐ.பி அதிகாரிகள் அளித்த தகவலின் அடிப்படையில் தான் என்று சண்டே கார்டியன், டெக்கான் க்ரோனிக்கிள் ஆகிய பத்திரிகைகளும், என்.ஐ.ஏவிடமிருந்து கிடைத்த தகவலின் அடிப்படையில் செய்தி வெளியிட்டதாக பயனீர் பத்திரிகையும் விளக்கம் அளித்ததை தொடர்ந்து மத்திய புலனாய்வு ஏஜன்சிகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதி மார்க்கண்டேய கட்ஜு தலைமையிலான ப்ரஸ் கவுன்சில் உத்தரவிட்டது. ஐந்து பத்திரிகைகளுக்கு எதிரான புகாரில் பாப்புலர் ஃப்ரண்டிற்கு ஆதரவான தீர்மானத்தை ப்ரஸ் கவுன்சில் எடுத்தது.எதிர்காலத்தில் இத்தகைய செய்திகளை வெளியிடக்கூடாது என்று ஹிந்துஸ்தான் டைம்ஸ், இன்குலாப்(உருது), தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ், நவபாரத் டைம்ஸ்(ஹிந்தி), ஏசியன் ஏஜ் ஆகிய பத்திரிகைகளுக்கு எதிரான புகாரில் தீர்ப்பளித்து ப்ரஸ் கவுன்சில் உத்தரவிட்டது.
கடையநல்லூர் மசூத் கொலை வழக்கு: எஸ்.பி ஈஸ்வரன் பதவியிறக்கம்!
நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூரை சேர்ந்த மசூத் என்பவர் கடந்த 2005ம் ஆண்டு நவம்பர் 25ம் தேதி விசாரணைக்காக கன்னியாகுமரி மாவட்ட போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டு கீரிப்பாறை காவல்நிலையத்தில் வைத்து சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
கடந்த ஆறு வருடங்களாக இந்த வழக்கிற்காக போராடி வருகின்றது மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO). என்.சி.ஹெச்.ஆர்.ஓ. வின் களப் போராட்டம் மற்றும் சட்டப் போராட்டத்தினால், இக்கொலையில் ஈடுபட்ட கன்னியாகுமரி மாவட்ட ஏ.டி.எஸ்.பி. பிரதாப் சிங், டி.எஸ்.பி.கள் ஈஸ்வரன், சந்திரபால் உள்ளிட்ட பன்னிரெண்டு காவல்துறை அதிகாரிகள் மீது சி.பி.சி.ஐ.டி கொலை வழக்கு பதிவு செய்து, திருநெல்வேலி செஷன்ஸ் கோர்ட்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. அவர்கள் மீது துறைரீதியான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது.
பாப்புலர் ஃப்ரண்டின் பள்ளி செல்வோம் (ஸ்கூல் சலோ) பிரச்சாரம் நிறைவுற்றது
நாடு முழுவதும் மூன்று மாதங்களாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வெற்றிகரமாக நடத்திய பள்ளி செல்வோம் (ஸ்கூல் சலோ) பிரச்சாரம் நிறைவுற்றது. புதுமையான முறையில் அதிக மக்களை சென்றடையும் விதத்தில் நடத்தப்பட்ட இந்த பிரச்சாரம் மாணவர்கள் மற்றும் பொது மக்களின் கவனத்தை ஈர்த்தது.
| முன்னதாக செங்கோட்டையில் ஆரம்பம் ஆன ஸ்கூல் சலோ பேரணி |
ஏப்ரல் 25 அன்று டெல்லி செங்கோட்டையில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் கலந்து கொண்ட கண்கவர் பேரணியுடன் இந்த பிரச்சாரம் ஆரம்பமானது. கல்வி கணக்கெடுப்பு, பள்ளிக்கூட சாதனங்கள் வழங்குதல், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், தலைசிறந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்குதல், படிப்பை விட்ட மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்தல் ஆகியன இந்த பிரச்சாரத்தின் முக்கிய நிகழ்ச்சிகளாக இருந்தன.
குஜராத் இனப்படுகொலையை நியாயப்படுத்தும் மோடியின் பேச்சு: பாப்புலர் ஃப்ராண்ட் கண்டனம்!
முஸ்லிம் இனப்படுகொலை புகழ் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி, வெளிநாட்டு செய்தி நிறுவனமான ராய்ட்டர்ஸுக்கு அளித்த நேர்காணலில் குஜராத்தில் முஸ்லிம்களை படுகொலை செய்ததை நியாயப்படுத்தியிருக்கின்றார். நரேந்திர மோடியின் இக்கருத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம் தெவித்துள்ளது.
இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட ஆஃப் இந்தியாவின் மாநில துணைத் தலைவர் M.முஹம்மது சேக் அன்சாரி அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: "கடந்த 2002 ஆம் ஆண்டில் சுமார் 2000 த்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்களை இனப்படுகொலை செய்யப்பட்டார்கள். அந்த கலவரத்தை கட்டுப்படுத்தவோ அல்லது தடுக்கவோ குஜராத முதல்வர் நரேந்திர மோடி எவ்வித முயற்சி எதுவும் எடுக்கவில்லை, மாறாக காவல் துறை அதிகாரிகளுக்கு "ஹிந்துக்களின் கோபத்தை வெளிப்படுத்த விடுங்கள்" என்று ஆணை பிறப்பித்து படுகொலை நடத்த ஊக்கப்படுத்தினார்.
ஞாயிறு, 7 ஜூலை, 2013
முர்சிஸி வெளியேற்றம், அரபுலக ஜனநாயகத்திற்கு பின்னடைவு! - பாப்புலர் ஃப்ரண்ட்
எகிப்தில் முதன் முறையாக ஜனநாயக ரீதியில் தேந்தெடுக்கப்பட்ட எகிப்து ஜனாதிபதியை ஆயுத படையை (இராணுவத்தை) கொண்டு வெளியேற்றியது மிகவும் கவலைக்குரியது என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷரீஃப் அவர்கள் தெவித்துள்ளார்.
இது பற்றி அவர் மேலும் கூறிகையில் "ஹாஸ்னி முபாரக் வெளியேற்றப்பட்டதிலிருந்து, அதிகாரத்தை மோசமான முறையில் தவறவிட்ட முபாரக்கின் விசுவாசிகளான இராணுவ தலைவர்களால் செயல்படுத்தப்பட்ட திட்டமிட்ட சதி இது என்பதே உண்மை. ஜனாதிபதி முஹம்மது முர்ஸியின் அரசாங்கத்தை கவிழ்த்ததும், அரசியலமைப்பை இடைநீக்கம் செய்ததும் எகிப்திற்கு மட்டுமல்ல அரபுலக ஜனநாயக முறைக்கே பின்னடைவாக அமைந்துள்ளது.
எகிப்துடைய ஜனாதிபதியாக சட்ட ரீதியாக தேந்தெடுக்கப்பட்ட முர்ஸியை மீண்டும் பதவியில் அமர்த்த வேண்டும். மேலும் உள் அமைப்பின் மூலம் மீண்டும் ஜனநாயகத்தை கொண்டுவர வேண்டும் அதற்கு இந்திய அரசாங்கம் எகிப்திய படையின் மீது தூதரக அழுத்தம் கொண்டுவர வேண்டும்" என்றும் வலியுறுத்தினார்.
வெள்ளி, 5 ஜூலை, 2013
எகிப்தில் 60 வருடம் உள்ள பிரச்சினையை எப்படி 1 வருடத்தில் தெற்க்க முடியும்-யூசுஃப் அல் கர்ளாவி
ஒன்பது தசாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..!ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமானஅரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் பிடிக்காது...
மன்னர் புவாதின் ஆட்சின் கீழ் 14 வருடங்கள், (1922-1936)
மன்னர் பாரூக்கின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1936-1952)
ஜமால் அப்துல் நாசரின் ஆட்சியின் கீழ் 16 வருடங்கள் (1954-1970)
அன்வர் சதாத்தின் ஆட்சின் கீழ் 11 வருடங்கள் (1970-1981)
ஹுஸ்னி முபாரக்கின் ஆட்சியில் 31 வருடங்கள் (1981-2012)
![]() |
என அக்கிரமக்காரர்களின் அடக்குமுறைகளில் ஒன்பது தசாப்தங்கள் அடங்கிக் கிடந்த எகிப்தியர்களுக்கு ஜனநாயக முறைப்படி தேர்வான ஜனாதிபதி முர்ஸியுடன் ஒருவருடம் பொறுமையாக இருக்க முடியவில்லை..! முர்ஸி முழுமையானவர் என்றோ இக்வான்கள் மட்டும் இறைநேசர்கள் என்றோ நான் சொல்லவில்லை, அவர்களும் கோரவில்லை, ஆனால் ஜனாதிபதி முர்ஸியோடும் இக்வான்களோடும் முரண்பட்டோருக்கு முரோதிகள்..! ன்டுகொடுத்த சர்வதேச பிராந்திய சக்திகள் இஸ்லாத்தினதும் முஸ்லிம்களினதும் பரம வி
முபாரக்கிற்கு எதிராக கிளர்ந்தெழுந்த மக்கள் போராட்டத்தை முபாரக்கின் இராணுவம் காவு கொண்ட பொழுது இக்வான்கள் அதனை மீட்டெடுக்க கைகொடுத்தார்கள், இன்றுவரை இராணுவத்தின் சதிவலைகளுக்குள்ளேயே அரபு வசந்தம் அடிபட்டுக் கிடந்தது. ராபியத்துல் அதவிய்யாஹ்வில் கூடிய எகிப்தின் சட்டபூர்வமான அரசையும் மக்களையும் மாத்திரமல்ல தஹ்ரீரிலே குழுமி நின்று கோஷ மிட்ட எதிரணியினரையும் இலக்கு வைத்தே இராணுவம் சதிப் புரட்சியை செய்துள்ளது என்பதனை எகிப்தியர்கள் உணர நீண்ட காலம் செல்ல மாட்டது..!
குர்ஆனின் மீது பதவி பிரமாணம் எடுத்த ஆஸ்திரேலிய அமைச்சர்
ஆஸ்திரேலிய வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் ஒருவர் அமைச்சராக பதவி ஏற்றுள்ளார். தன்னுடைய பதவி பிரமாணத்தை குர்ஆனின் மீது எடுத்துள்ள இவரது பெயர் எட் ஹுசிக் என்பதாகும். ஆஸ்திரேலிய மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது இவரது செயல். பைபிள் மீது பதவி பிரமாணம் எடுக்காமல் குர்ஆன் மீது எடுத்து, ஆஸ்திரேலியாவின் பாரம்பரியத்தை எட் குலைத்து விட்டதாக சமூக தளங்களில் சிலர் விமர்சித்துள்ளனர்.
அதே நேரம், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள் எட்-டின் செயலை வரவேற்றுள்ளனர். ஆஸ்திரேலியா, மத நம்பிக்கைகளுக்கு சுதந்திரம் கொடுப்பதாகவும், தங்களுடைய மத நம்பிக்கையை வெளிப்படுத்துவது அவரவர் விருப்பம் என்றும் தலைவர்கள் தெரிவித்துள்ளார்.
புத்த தீவிரவாதம்:டைம் பத்திரிகைக்கு இலங்கையில் தடை ஏன்?
![]() |
| புத்த தீவிரவாதம் குறித்து டைம் பத்திரிக்கையில் வந்த செய்தி |
மக்களின் மத உணர்வுகளை புண்படுத்துவதாக குற்றம் சாட்டி டைம்' பத்திரிகையின் விற்பனையை தடை செய்த இலங்கை அரசு, அப்பத்திரிகையின் அனைத்துப் பிரதிகளையும் பறிமுதல் செய்துள்ளது.மியான்மரில் புத்த மதத்தினருக்கும், முஸ்லிம்களுக்கும் இடையேயான கலவரம் குறித்த செய்தியை "டைம்' பத்திரிகை வெளியிட்டிருந்தது. அப்பத்திரிகையின் ஜூலை 1-ம் தேதி பதிப்பில் புத்த தீவிரவாதம் குறித்த கட்டுரை வெளியாகியிருந்தது.
விமானத்தில் வந்த அப்பத்திரிகையின் 4,000 பிரதிகளை கொழும்பு சர்வதேச விமான நிலைய சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் வகையில் அக்கட்டுரை இருப்பதால், "டைம்' பத்திரிகையின் பிரதிகளை பறிமுதல் செய்ததாக சுங்கத் துறை செய்தித் தொடர்பாளர் லெஸ்லி காமினி தெரிவித்தார்.இலங்கையில் கடந்த சில மாதங்களுக்கு முன் முஸ்லிம்களுக்கு எதிராக பொது பல சேனை என்ற அமைப்பு பல்வேறு இனவெறி கொண்ட போராட்டங்களை நடத்தியதால் பதற்றமான சூழ்நிலை நிலவியது குறிப்பிடத்தக்கது.
ஜூன் 26 உலக சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு NCHRO நடத்திய கலந்தாய்வுக் கூட்டம்
ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 26ம் தேதி உலக சித்திரவதை எதிர்ப்பு தினமாக ஐ.நா. சபையால் அனுஷ்டிக்கப்படுகிறது. மேற்படி சித்திரவதை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மனித உரிமை இயக்கங்களின் தேசிய கூட்டமைப்பு (NCHRO) இன்று 29.06.2013 சென்னை பெரியமேட்டில் உள்ள ஹோட்டல் பனாரில் காலை 11.00 மணி முதல் 1.30 வரை “காவல்துறையின் சித்திரவதைககள், என்கவுண்டடர்கள் மற்றும் பொய் வழக்குககள் ” என்ற தலைப்பில் ஒரு கலந்தாய்வுக்கூட்டம் நடைபெற்றது.
இக்கலந்தாய்வுக் கூட்டடத்திற்கு NCHROவின் மாநில பொதுச்செயலாளர் வழக்கறிஞர். ஏ. முஹம்மது யூசுப் தலைமை தாங்கினார்.. வழக்கறிஞர் ஏ. ராஜா முஹம்மது வரவேற்புரையாற்றி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்., இந்நிகழ்ச்சியில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர் எஸ். சத்தியசந்திரண், எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில பொதுச்PUCLசெயலாளர் நெல்லை முபாரக், த.மு.மு.க. செயலாளர் பேராசிரியர். ஹாஜா கனி கக்இஃ அமைப்பின் செயல்பாட்டாளர் மற்றும் ஊடகவியலாளர் T.S.S.மணி, பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.அஹமது பக்ரூதீன், பத்திரிகையாளர் ஆளுர் ஷாநவாஸ், கலைஞர் தொலைக்காட்சியின் செய்தி ஆசிரியர் முஹம்மது இஸ்மாயில், எஸ்.டி.பி.ஐ.ன் வழக்கறிஞர் அணியைச் சேர்ந்த கோபிநாத், வெல்ஃபேர் பார்ட்டி ஆஃப் இந்தியாவின் மாநில துணைத்தலைவர் வழக்கறிஞர் ஜெய்னுல் ஆபிதீன், NCHROவின் மக்கள் தொடர்பு அலுவலர் வழக்கறிஞர் ஏ.சையது அப்துல் காதர், வழக்கறிஞர்கள் ஏ. முஹம்மது ஷாபி, (மதுரை), முஹம்மது நவ்ஃபல் (கோவை), சதாத் (சென்னை), முஹைதீன் அப்துல் காதர் (சென்னை), முஹம்மது பைசல் (திருவாரூர்) மற்றும் பல உயர்நீதிமன்ற வழக்கறிõகள் கலந்து கொண்டு கருத்துரையாற்றினார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)























