நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 4 ஜனவரி, 2014

முஸ்லிம் மாணவிகளின் திறமையை வளர்க்க 978 கோடி திட்டம்!

இந்தியாவில் 14 வயதுக்கு மேலான முஸ்லிம் மாணவிகளின் திறமைகளை வளர்க்கும் நோக்கில் மத்திய அரசு ரூ. 978 கோடி மதிப்பிலான திட்டத்தை தயாராக்கியுள்ளது. திறமை என்ற பொருள்படும் HUNAR என்று பெயரிடப்பட்டிருக்கும் இத்திட்டம் குறித்து அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் விவாதிக்கப்படும்.
girls

கடையநல்லூரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய பெற்றோர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு விழிப்புணர்வு முகாம்!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா மற்றும் அக்சஸ் இந்தியா சார்பாக 01-01-2014 புதன் அன்று நெல்லை மேற்கு மாவட்டம் கடையநல்லூர் பாப்புலர் ஃப்ரண்ட் அலுவலகத்தில் பெற்றோர் மற்றும் குழந்தைகள் வளர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் ஏராளமான பெற்றோர்கள் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.

ஞாயிறு, 1 டிசம்பர், 2013

கடையநல்லூரில் டெங்கு விழிப்புணர்வு மற்றும் நில வேம்புக் கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சமூக மேம்பாட்டுத் துறை சார்பாக, கடையநல்லூரில் மீண்டும் பரவிவரும் மர்மக் (டெங்கு) காய்ச்சலைக் கட்டுப் படுத்தும் விதமாக ஆங்காங்கே விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டும் மேலும் நில வேம்புக் கசாயம் வழங்கப்பட்டும் வருகிறது.

திங்கள், 4 நவம்பர், 2013

தென்காசியில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய “ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்“ விழிப்புணர்வு மினி மாரத்தான் ஓட்டம் மற்றும் யோகா பயிற்சி வகுப்பு!

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா ஆண்டு தோறும்“ஆரோக்கியமான மக்கள் வலிமையான தேசம்” என்ற விழிப்புணர்வு பிரச்சாரத்தை தேசிய அளவில் நடத்தி வருகிறது. இந்த வருடம் நவம்பர் 01 முதல் 15 ஆம் தேதி வரை இந்த விழிப்புணர்வு பிரச்சாரம் இந்தியா முழுவதும் நடைபெறுகிறது. தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் மினி மாரத்தான், உடற்பயிற்சி வகுப்புகள், ஆரோக்கியம் தொடர்பான மருத்துவ முகாம்கள், இரத்த தான முகாம்கள், அரசு மருத்துவமனைகளை தூய்மைப்படுத்துதல் போன்ற பல்வேறு நலப் பணிகள் முழுவீச்சில் மக்களின் பேராதரவுடன் நடைபெற உள்ளது.

புதன், 30 அக்டோபர், 2013

சென்னையில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் நடத்திய பொதுக்கூட்டம் !



ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சில் சார்பாக மத்தியில் 10% மாநிலத்தில் 7% முஸ்லிம்களுக்கு தனி இட ஒதுக்கீடு வழங்க மத்திய மாநில அரசை வலியுறுத்தி மண்ணடி தம்புச் செட்டி தெருவில் 27. 10. 2013 அன்று மாலை 6. 30 மணியளவில் ஆல் இந்தியா இமாம்ஸ் கவுன்சிலின் தமிழ் மாநில தலைவர் மௌலவி ஏ. ஆபிருத்தீன் மன்பயீ அவர்களின் தலைமையில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. 


ஞாயிறு, 6 அக்டோபர், 2013

சிறை நிரப்பும் போராட்டம் - சென்னை மற்றும் மதுரையில் இருபதாயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களையும்,பொய் வழக்குகளில் அப்பாவிகள் கைது செய்யப்படுவதையும் ,கருப்பு சட்டங்களின் மூலம் பொது மக்களை அச்சுறுத்துவதையும் கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டம் சென்னை மற்றும் மதுரையில் இன்று (06.10.2013) நடைபெற்றது.

வெள்ளி, 4 அக்டோபர், 2013

ஏன் சிறைநிரப்பு போராட்டம்?பாப்புலர் ஃப்ரண்ட் மாநில தலைவர் அறிக்கை



தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்தும், அநீதிகளைக் கண்டித்தும் எதிர்வரும் செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 ஆம் தேதி வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரமும் நிறைவாக அக்டோபர் 6 ஆம் தேதி அன்று சென்னை, மதுரை ஆகிய இரு இடங்களில் சிறைநிரப்பு போராட்டத்தையும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவுள்ளது.


பதவி உயர்வுக்காக அப்பாவி முஸ்லிம்களை தீவிரவாதியாக மாற்றியது அம்பலம்



டெல்லி போலீஸின் ஸ்பெஷல் பிரிவு தீவிரவாத முத்திரை குத்தி பொய் வழக்கில் கைது செய்த இரண்டு முஸ்லிம் இளைஞர்களை டெல்லி விசாரணை நீதிமன்றம் நான்கு ஆண்டுகளுக்கு பிறகு குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்துள்ளது. 


உத்தர பிரதேஷ் மாநிலம் முஷ்பாரபத் கலவரத்தில் உதவி செய்வதற்கு பாப்புலர் ப்ரண்ட் தமிழகத்தில் வசூல் செய்த விபரம்:

நெல்லையில் அறிவகம் கூட்டு குர்பானி ஒரு பங்கு 1600ருபாய்


திங்கள், 23 செப்டம்பர், 2013

மோடி திருச்சி வருகை!பெருகும் எதிர்ப்பு!!அலறும் பா.ஜ.க!!!

நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பாக திருச்சியில் நரமாமிச நரேந்திர மோடியை கண்டித்து மனித சங்கிலி போராட்டம்!



  குஜராத் மாநிலத்தில் முஸ்லீம்களின் மீது நடத்தப்பட்ட கலவரத்திற்கு காரணமான அம்மாநில முதல்வரும்,பாஜகவின் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியை கண்டித்து நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் சார்பாக திருச்சியில் நேற்று  (21-09-2013) மனித சங்கிலி மற்றும் கண்டன போராட்டம் நடைபெற்றது.நேஷனல் விமன்ஸ் ப்ரண்ட் திருச்சி மாவட்ட தலைவி மெஹராஜ் பானு ஆலிமா தலைமை தாங்கினார். மாவட்டச்செயலாளர் சித்திக்கா வரவேற்புரையாற்றினார்.


சிறை நிரப்பும் போராட்டம் ஏன்? அனைத்து இயக்க தலைவர்கள் சந்திப்பு



"அநீதிக்குள்ளாக்கப்படும் முஸ்லிம்கள்" என்ற முழக்கத்தை முன்வைத்து, பொய்வழக்கு-சித்ரவதை-தீவிரவாத முத்திரை-கருப்புச் சட்டம் என சமீப காலமாக தமிழகத்தில் தொடரும் மனித உரிமை மீறல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா  செப்டம்பர் 15 முதல் அக்டோபர் 6 வரை மாநிலம் தழுவிய தொடர் பிரச்சாரம் செய்து கொண்டு இருக்கிறது  தொடர் பிரச்சாரத்தின் துவக்க தினமான செப்டம்பர் 15 அன்று கோவையில் மாபெரும் துவக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது , நிறைவு தினமான அக்டோபர் 6 அன்று சென்னை மற்றும் மதுரை ஆகிய இரு இடங்களில் மாபெரும் சிறை நிரப்பும் போராட்டமும் நடைபெற இருக்கிறது.

புதுடெல்லியில் பாட்லா ஹவுஸ் என்கவுண்டருக்கு நீதி வேண்டி மாணவர்கள் பேரணி!

பாட்லா ஹவுஸ் போலி என்கவுண்டர் நடந்து 5 ஆண்டுகள் நிறைவுறுவதையொட்டி மாணவர் அமைப்பான கேம்பஸ் ஃப்ரண்ட் உறுப்பினர்கள் ஜாமிஆ மில்லியா பல்கலைக் கழகம் நோக்கி பேரணி நடத்தினர்.முஸ்லிம் வேட்டையை நிறுத்துங்கள்! அரச பயங்கரவாதத்தை நிறுத்துங்கள்! உள்ளிட்ட முழக்கங்களை பேரணியில் கலந்துகொண்டவர்கள் எழுப்பினர்.


பேரணிக்கு தலைமை வகித்த கேம்பஸ் ஃப்ரண்டின் தலைவர் அப்துல் நாஸர் கூறும்போது; ‘பாட்லா ஹவுஸ் சம்பவத்தில் சுதந்திரமான விசாரணையை நடத்த மத்திய அரசு முன்வரவேண்டும். சுதந்திரமான விசாரணைக்கு காங்கிரஸ் ஏன் அஞ்சுகிறது?

முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் போலீசுக்கு நற்சான்றிதழ் வழங்கினாலும், காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் திக்விஜய்சிங் இந்த என்கவுண்டரின் நேர்மை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார்.

காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே இவ்விவகாரத்தில் கருத்து வேறுபாடு உள்ளது. விசாரணை நடத்தி சந்தேகங்களை தீர்க்க வேண்டாமா? பாட்லா ஹவுஸ் சம்பவத்தில் விசாரணை நடத்தாவிட்டால் டெல்லி சட்டப்பேரவை தேர்தல் மற்றும் பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் தோற்பதற்கு ஒரு காரணமாக அது மாறிவிடும்.’ இவ்வாறு அப்துல் நாஸர் கூறினார்.

‘தீவிரவாத வழக்குகளில் முஸ்லிம் இளைஞர்களை பொய்யாக சிக்க வைப்பது ஏராளமான சம்பவங்களின் மூலம் நிரூபணமாகியுள்ளது.’ என்று கேம்பஸ் ஃப்ரண்டின் அனீஸுஸ்ஸமான் தனது உரையில் கூறினார்.

ஞாயிறு, 15 செப்டம்பர், 2013

முஸாஃபர் நகர் கலவரம் - பின்னணியில் பா.ஜ.க வின் மதவாத அரசியல் : பாப்புலர் ஃப்ரண்ட் கண்டனம்!


புதுடெல்லி : உத்தரபிரதேச மாநிலம் முஸாஃபர் நகர் மாவட்டத்தில் நடந்து வரும் கலவரத்தை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. சமூகங்களிடையே பா.ஜ.க வெறுப்பு மற்றும் பகைமையை தூண்டுகிறது. கலவரத்தில் அப்பாவிகள் மனிதாபிமானமற்ற முறையில் கொல்லப்பட்டுள்ளனர். கலவரத்தை உடனடியாக தடுக்காவிட்டால் மாநிலத்தின் இதர பகுதிகளுக்கும் பரவும் சாத்தியங்கள் அதிகம் உள்ளது. உள்ளூர் சம்பவத்தை பல உயிர்களை பறிக்கும் வகையில் மிகப்பெரிய கலவரமாக மாற்றியதில் பா.ஜ.க எம்.எல்.ஏ முக்கிய பங்கினை வகித்துள்ளார்.
 
மேலும் முஸ்லிம் கும்பலால் ஒரு சிறுவன் அடித்து கொல்லப்படக்கூடிய பொய்யான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியுள்ளது. ஆனால் இந்த வீடியோ இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவுக்கு வெளியே பதிவுச் செய்யப்பட்ட வீடியோவாகும். இந்த வீடியோவை கூட ஒரு பா.ஜ.க எம்.எல்.ஏ தான் பகிர்ந்துள்ளளார். இந்நிலை இப்படியே தொடர்ந்தால் மிக மோசமான நிலைமை ஏற்படும். மாநில அரசு சரியான நேரத்தில் ஆரம்பத்தில் இருந்தே கட்டுப்படுத்தியதால், ஒரு பெரிய அளவிற்கு கலவரம் ஏற்படாமல் தடுக்கப்பட்டுள்ளது. 
 
கலவரம் பிற பகுதிகளுக்கு பரவாமல் கட்டுப்படுத்தி, அனைத்து குடிமக்களின் உயிருக்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் தேவையான எல்லா நடவடிக்கைகளையும்  மாநில மற்றும் மத்திய  அரசுகள் உடனே எடுக்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்துகிறது. இக்கலவரத்திற்கு பின்னணியில் உள்ள உண்மைக் குற்றவாளிகளை வெளிக்கொண்டுவரும் வகையில், பாரபட்சமற்ற விசாரணை மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொள்கிறது.
 
எல்லா சமூகங்களைச் சேர்ந்தவர்களும் குற்றவாளிகள் மற்றும் வகுப்புவாத சக்திகளை தனிமைப்படுத்த வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா உத்தரபிரதேச மக்களை கேட்டுக் கொள்கிறது.
 

இப்படிக்கு 
 
O.M.A.ஸலாம்
 
தேசிய பொதுச் செயலாளர்
 
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா

சனி, 31 ஆகஸ்ட், 2013

எகிப்து ஆதரவு தினத்தில் டெல்லி ஜந்தர் மந்தரில் பாப்புலர் ஃப்ரண்ட் நடத்திய மனிதச் சங்கிலி போராட்டம்!




 ராணுவத்தின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலுக்கு உள்ளாகும் எகிப்திய மக்களுக்கு ஆதரவு தெரிவித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா டெல்லி ஜந்தர் மந்தரில் மனிதச் சங்கிலிப் போராட்டத்தை நடத்தியது. மனித உரிமை ஆர்வலர்கள், பெண்கள், குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கான மக்கள் இப்போராட்டத்தில் பங்கேற்றனர். நேற்று(30/08/2013) மாலை 3 மணியளவில் ஜந்தர் மந்தரில் எகிப்திய மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் மாநாட்டுடன் நிகழ்ச்சி துவங்கியது.



பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் மாநாட்டை துவக்கி வைத்து உரை நிகழ்த்தினார்.அவர் தனது உரையில்:

ஜனநாயகரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட எகிப்திய அதிபர் முஹம்மது முர்ஸியை அமெரிக்காவும், இஸ்ரேலும் சேர்ந்து கவிழ்த்துள்ளன. மக்களிடம் அதிகாரம் செல்வதை கண்டு அஞ்சுபவர்கள், இந்த ராணுவ புரட்சிக்கு துணை நின்றனர். அதிகாரம் மக்களிடம் சென்றால், எகிப்தின் வளங்களை கொள்ளையடிக்கும் அமெரிக்காவின் திட்டம் தவிடுபொடியாகும். இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் ராணுவத்தால் கொல்லப்பட்டுள்ளனர். இந்தியா, இந்த ராணுவ நடவடிக்கைக்கு எதிராக குரல் எழுப்பவேண்டும். எகிப்தில் மீண்டும் முர்ஸியை பதவியில் அமர்த்துவதற்கும், ஜனநாயகம் மீண்டும் எகிப்தில் மலரவு இந்தியா ராஜதந்திர ரீதியாக அழுத்தம் கொடுக்கவேண்டும். இவ்வாறு கே.எம்.ஷெரீஃப் தனது உரையில் கூறினார்.

கவ்மி ஸலாமத்தி பத்திரிகையின் முதன்மை எடிட்டர் முஹம்மது அஹ்மத் காஸ்மி தனது உரையில் கூறியது:

எகிப்தில் ஆயிரக்கணக்கான மக்களின் உயிர் தியாகம் வீண் போகாது. பாதிக்கப்பட்ட மக்களுடன் சேராத நடுநிலையை சர்வதேச சமூகம் கைவிட வேண்டும் என்றார் அவர்.

லோக் ராஜ் என்ற அமைப்பின் பிரதிநிதி பிர்ஜு நாயிக் தனது உரையில் கூறியது:

அமெரிக்காவை ஆதரிப்பவர்கள் ஜனநாயகவாதிகளாகவும், சர்வாதிகாரத்தை எதிர்ப்பவர்கள் தீவிரவாதிகளாகவும் முத்திரைக்குத்தப்படுவதாக அவர் தெரிவித்தார்.

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய துணை தலைவர் பேராசிரியர் பி.கோயா தனது உரையில் கூறியது:

செயல் அளவில் மிகவும் வலிமையாக மாறி வரும் முர்ஸியின் அரசை ஒழிப்பது இஸ்ரேலுக்கு தேவை. எகிப்தில் நடந்தது போல ஜனநாயக புரட்சி தங்களுக்கு அச்சுறுத்தலாக மாறிவிடும் என்று இதர அரபு நாடுகள் அஞ்சுகின்றன என்றார் கோயா.

மேலும் இந்நிகழ்ச்சியில் ஆல் இந்தியா இமாம் கவுன்சில் தேசிய தலைவர் உஸ்மான் பேக், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம், எஸ்.டி.பி.ஐயின் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் ஷரஃபுத்தீன், கேம்பஸ் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய பொதுச் செயலாளர் இனாமுர் ரஹ்மான் ஆகியோர் உரையாற்றினர்.

தன் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசி நாடகம் ஆடிய பா.ஜ.க பிரமுகர்கள் கைது!


திண்டுக்கல்லில் பா.ஜனதா கட்சியின் கிளை தலைவர் பிரவீன்குமார் வீட்டில் சில மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நாடகம் என போலீஸார் கண்டறிந்துள்ளனர்.
தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும் என்பதற்காகவும், அரசியல் விளம்பரத்திற்காகவும் அவரும் அவரது நண்பரும் நாடகமாடியது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து பிரவீன் குமாரும் அவரது நண்பர் கமலக்கண்ணனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.
இதுக்குறித்து போலீஸார் தெரிவிக்கையில்; ‘திண்டுக்கல் செல்லாண்டியம்மன் கோவில் தெரு பா.ஜ., கிளை தலைவராக பிரவீன்குமார் செயல்பட்டு வருகிறார். இவர் நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் தனது வீடு மீது பெட்ரோல் குண்டு வீசியதாக, போலீசில் புகார் செய்தார்.
பெட்ரோல் குண்டு வீசியது தொடர்பாக, பிரவீன்குமார் நண்பர் கமலக்கண்ணனிடம் விசாரித்தோம். அவரும், பிரவீன்குமாரும் சம்பவத்தன்று மது குடித்துள்ளனர். இருவரும் சேர்ந்து மதுபாட்டிலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து, பிரவீன் வீட்டின் மீது வீசி விட்டு தப்பினர். பின்பு ஒன்றும் தெரியாதவர்கள் போல நாடகமாடி, போலீசாருக்கு பிரவீன் தகவல் தெரிவித்துள்ளார்.
தனக்கு போலீஸ் பாதுகாப்பு வேண்டும், கட்சியில் விளம்பரம் வேண்டும் என்பதற்காக, அவர் நாடகமாடியுள்ளார். இவர்களது மொபைல் போன் பேச்சுகளை வைத்து, இதை கண்டுபிடித்தோம்.’ என்றார்.
கடந்த மாதம் இதேப்போன்று கோவையில் போலீஸ் பாதுகாப்புக்காக அனுமன் சேனா தலைவர் கடத்தல் நாடகமாடி கைதான நிகழ்வு குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே அதே திண்டுக்கல் நகரில் தமுமுக கிளைத் தலைவர் ஒருவர் வீட்டின் மீதும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசியதால் பரபரப்பு ஏற்ப்பட்டுள்ளது.

மாலேகான்: ஒன்பது முஸ்லிம் இளைஞர்கள் விடுவிக்கப்படுகின்றார்கள்!




மாலேகான் குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 9 முஸ்லிம்களை அவ்வழக்கிலிருந்து விடுவிப்பதற்கு தேசிய புலனாய்வு அமைப்பு (என்.ஐ.ஏ.) ஆட்சேபம் தெரிவிக்கவில்லை.


மகாராஷ்டிர மாநிலம் மாலேகானில் 2006 செப்டம்பர் 8ஆம் தேதி நிகழ்ந்த குண்டுவெடிப்பில் 37 பேர் கொல்லப்பட்டனர். இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக நூருல் ஹுதா சம்சுதா (28), ஷப்பிர் அகமது மஸியுல்லா (41), ரயீஸ் அஹ்மது ரஜாப் அலி மன்சூரி (35), டாக்டர் ஸல்மான் பார்சி அப்துல் லத்தீப் அய்மி (40), டாக்டர் பரோக் இக்பால் அஹ்மது மக்துமி (38), முஹம்மது அலி ஆலம் ஷேக் (42), ஜுனைத் (35), முஹம்மது ஜாகித் அப்துல் மஜீத் அன்சாரி (31), அப்ரர் அஹ்மது குலாம் அஹ்மது (38) ஆகியோரை மகாராஷ்டிர தீவிரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர். அதன் பிறகு இவ்வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. இவர்கள் மீது சிபிஐ தரப்பில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு மாற்றப்பட்டது. இதைத்தொடர்ந்து கைது செய்யப்பட்ட 9 பேரும் தங்களை ஜாமீனில் விடுவிக்கக் கோரி மனு செய்தனர். இதை ஏற்ற நீதிமன்றம் 9 பேரையும் ஜாமீனில் விடுவித்தது. அதன் பின், 9 பேரும் தங்களை வழக்கிலிருந்து விடுவிக்கக் கோரி சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவுக்கு பதில் அளிக்கும்படி தேசிய புலனாய்வு அமைப்புக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் இந்த வழக்கு மீண்டும் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய புலனாய்வு அமைப்பு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதில், 9 பேர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு போதுமான ஆதாரங்கள் இல்லை. எனவே, நீதிமன்றம் உரிய உத்தரவைப் பிறப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இதன் மீதான தீர்ப்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் செப்டம்பர் மாதத்துக்கு ஒத்திவைத்துள்ளது.

இந்த வழக்கு விசாரணை தேசிய புலனாய்வு அமைப்புக்கு வந்தபோது மாலேகான் குண்டுவெடிப்பில் ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்புகளுக்குத் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக லோகேஷ் சர்மா, தனசிங், மனோகர் சிங், மற்றும் ராஜேந்திர சவுத்ரி ஆகியோரை தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர். இவர்கள் மீது சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் துணைக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. மாலேகானில் 2008-ம் ஆண்டு நிகழ்ந்த குண்டுவெடிப்பு தொடர்பாக ஹிந்துத்துவா தீவிரவாத அமைப்பைச் சேர்ந்த சாத்வி பிரக்யா சிங் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சனி, 24 ஆகஸ்ட், 2013

எகிப்து இராணுவத்தை கண்டித்து தஞ்சையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்!

தஞ்சை: எகிப்தில் போராட்டக்காரர்கள் மீது இடைக்கால அரசாங்கம் நடத்தி வரும் கொடூரமான தாக்குதல்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. நூற்றுக்கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்டிருப்பது அதிர்ச்சிகரமாகவும் வெட்ககரமானதாகவும் உள்ளது. ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட முகம்மது முர்ஸியின் அரசாங்கத்தை கவிழ்த்து இராணுவத்தின் துணையுடன் ஆட்சியில் உள்ள சட்டவிரோத இடைக்கால அரசு,தன்னுடைய அரசை காப்பாற்றிக் கொள்ள அனைத்து வரம்புகளையும் மீறியுள்ளது.

ஜனநாயகத்தின் பாதுகாவலர்களாக கூறிக் கொள்ளும் ஐக்கிய நாடுகள் சபையும் மேற்கத்திய நாடுகளும் வார்த்தை ஜாலங்களை மட்டும் வெளிப்படுத்துவது மிகவும் துரதிஷ்டவசமானது. மேற்கத்திய அரசுகள் மற்றும் அதன் தலைவர்களின் நயவஞ்சகத்தை இது வெளிப்படுத்துகிறது. உலக நாடுகளின் இந்த நிலை,கொடூரமான கொலைகளை செய்வதற்கு எகிப்திய இராணுவ அதிகாரிகளுக்கு சுதந்திரத்தையும் பாதுகாப்பையும் அளித்துள்ளது. எகிப்தில் ஜனநாயகத்தை நசுக்கும் இந்த போக்கு மற்ற அரபு நாடுகளிலும் ஜனநாயகம் மலர்வதற்கான பாதையில் பாதிப்பை ஏற்படுத்தும். மிகப்பெரும் ஜனநாயக நாடான இந்தியா உலகம் முழுவதும் ஜனநாயகம் மற்றும் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதில் அதிக பங்களிப்பை அளிக்க வேண்டும். எகிப்தின் நட்பு நாடான இந்தியா இந்த விஷயத்தில் தலையிட வேண்டும்.

இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள எகிப்திய அரசாங்கத்துடன் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு அனைத்து ராஜாங்க உறவுகளையும் முறிக்க வேண்டும் என்றும் இந்தியாவிற்கான எகிப்திய தூதரை வெளியேற்ற வேண்டும் என்றும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கோரிக்கை வைக்கிறது. இந்தியா போன்ற மிகப்பெரும் ஜனநாயக நாட்டின் இத்தகைய நடைமுறை எகிப்திய ஜனநாயகத்திற்கு நிச்சயம் உதவியாக இருக்கும்.

காரைக்காலில் தடையை மீறி பாப்புலர் ஃப்ரண்ட் ஆர்ப்பாட்டம்! காவல்துறையினர் வன்முறை!

காரைக்கால்: சுதந்திர உணர்வையும், சுதந்திர போராட்டத் தியாகிகளை நினைவு கூறும் விதமாகவும் மற்றும் தேசத்திற்கான நமது கடமையை உணர்த்தும் விதமாகவும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சுதந்திர தினத்தன்று "வாருங்கள் சுதந்திரத்தின் காவலர்களாவோம்" என்ற முழக்கத்தை முன்வைத்து "ஃப்ரீடம் மீட்" என்ற பெயரில் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் பொதுக்கூட்டம் நடத்த ஏற்பாடு செய்திருந்தது.

ஆனால் தொடர்ந்து முஸ்லிம் விரோத போக்குடன் செயல்பட்டு வரும் தமிழக காவல்துறை மேற்கண்ட சுதந்திர தின பொதுக்கூட்டத்திற்கு கடைசி நேரத்தில் அனுமதி மறுத்தது. தமிழக காவல்துறையின் இந்த ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்து தமிழகம் மற்றும் புதுவையில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் கண்டன ஆர்பாட்டங்கள் கடந்த 16.08.2013ல் நடைபெற்றது.

புதுவை மாநிலம் காரைக்காலில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்களை, தொடர்ந்து முஸ்லிம் விரோதப் போக்குடன் செயல்பட்டு வரும் காரைக்கால் S.P.வெங்கடசாமி தலைமையிலான காவலர்கள் அடித்து இழுத்துச் சென்றதோடு, 28 முஸ்லிம்கள் மீது பொய் வழக்கும் பதிவு செய்து சிறையில் அடைத்தது.

மேற்கண்ட அப்பாவி முஸ்லிம்கள் மீது பொய் வழக்கு போட்டு சிறையில் அடைத்த காரைக்கால் S.P.வெங்கடசாமி மற்றும் உடனிருந்த காவல்துறையினரை கண்டித்தும், பொய் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள அப்பாவி முஸ்லிம்களை விடுதலை செய்ய வலியுறுத்தியும் இன்று (21.08.2013) காரைக்காலில் பாப்புலர் ஃப்ரண்டின் மாநில பொதுச் செயலாளர் ஏ.ஹாலித் முஹமம்து தலைமையில் ஜனநாயக முறையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.