நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

திருச்சியில் காவல்துறை மற்றும் தமிழக அரசை கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்

ஆகஸ்ட் 15 அன்று நாடே சுதந்திர தினத்தை கொண்டா இருக்கும் வேளையில் அதனை கொண்டாட முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மக்கள் அனைவரும் ஒற்றுமையாக கொண்டாடவேண்டிய மகிழ்ச்சியான இந்த நன்னாளில் நாட்டையே பீதிக்குள்ளாக்கும் வகையில் செயல்படும் காவல்துறை மற்றும் மாநில அரசாங்கத்தின் சிறுபான்மியனருக்கு எதிரான காழ்புணர்ச்சி மற்றும் நீதிமன்றத்தை அணுகவிடாமல் செய்த சதியையும் கண்டித்து மாநிலம் தழுவிய ஆர்பாட்டம் நடந்தது .




இதை கண்டித்து திருச்சி ரயில்வே ஜங்ஷன் காதி கிராப்ட் அருகே பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில்
மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .சகோ .முஜிப் அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினர்
இதில் மாவட்ட தலைவர் s .அமீர் பாஷா அவர்கள் கண்டன உரையாற்றினர் மற்றும் SDPI -இன் மாவட்ட துணை தலைவரும் மாநில பேச்சாளருமான சம்சுதீன் அவர்களும் சிறப்புரையாற்றினார் .

முடிவில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் அப்துல் ரஹீம் நன்றியுரையாற்றினார் .இந்த கண்டன ஆர்பாட்டத்தில் அனைத்து சமுதாய இயக்கத்தை சேர்ந்த உறுபினர்களும் கலந்து கொண்டு தங்களது உணர்வை வெளிபடுதினார்கள் .இந்த ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரன்ட் செயல்வீரர்கள் மற்றும் பொது மக்கள் பெருந்திரளாக கலந்து கொண்டு தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு எதிராக கோஷங்கள் எழுப்பி தங்களது கருத்தை பதிவுசெய்தனர்.