நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

வெள்ளி, 19 ஆகஸ்ட், 2011

சத்தியாகிரகப் போராட்டம் ஜனநாயகத்தின் அடிப்படை:பாப்புலர் ஃப்ரண்ட்



புதுடெல்லி: ஊழலுக்கு எதிராக உண்ணாவிரதப்போராட்டம் நடத்தவிருந்த அன்னா ஹஸாரேவையும், அவருடைய ஆதரவாளர்களையும் கைதுச் செய்த நடவடிக்கை போராட்டம் நடத்தவும், மாற்றுக் கருத்தை கூறுவதற்குமான ஜனநாயக உரிமையை வெளிப்படையாக மீறுவதாகும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் தேசிய தலைவர் இ.அப்துற்றஹ்மான் குற்றம் சாட்டியுள்ளார். இதுக்குறித்து மேலும் அவர் கூறியிருப்பதாவது:


பொது சமூகத்தில் அதிகரித்துவரும் ஊழலை தடுப்பதற்கான வழிமுறைகளைக்குறித்தும், லோக்பால் மசோதாவில் யாரையெல்லாம் உட்படுத்தவேண்டும் என்பதைக் குறித்தும் சச்சரவு செய்வது பெரிய விஷயமல்ல. சட்டமியற்றும் சபைகளில் பரிசுத்தமான நபர்களை மட்டுமே அனுப்புவதற்கான அரசியல் சூழலை உருவாக்குவதுதான் இதற்கு சரியான தீர்வாகும்.
அதேவேளையில், பலத்தை பிரயோகித்து சத்தியாகிரக போராட்டத்தை தடுப்பதற்கான முயற்சி சுதந்திரத்தின் அந்தஸ்திற்கு எதிரானதாகும்.பிரிட்டீஷ் அரசின் கொடுமைகளை தாங்கிக் கொண்ட அகிம்சை வழியிலான போராட்டத்தை காங்கிரஸும், மத்திய அரசும் தடுப்பதற்கு முயல்வது வெட்ககேடானது. அரசியல் சட்டத்தின்படி நாட்டின் சட்டநிர்மாணம் நடத்துவதற்கான அதிகாரம் பாராளுமன்றத்திற்கு உரியதாகும். ஆனால், சத்தியாகிரகத்தின் மூலமாவது எதிர்ப்பு தெரிவிக்கும் குடிமகனின் உரிமையை பறிக்கக்கூடாது.
ராணுவத்திற்கு வழங்கப்பட்டுள்ள அளவுக்கு அதிகமான அதிகாரத்திற்கு எதிராக மணிப்பூரில் பல வருடங்களாக உண்ணாவிரதப்போராட்டம் நடத்திவரும் இரோம் ஷர்மிளாவை அரசும், அன்னா ஹஸாரேவுடன் செயல்படும் சமூக ஆர்வலர்களும் புறக்கணிக்கின்றனர். அன்னா ஹஸாரேவின் போராட்டத்தை மட்டுமல்ல சுதந்திர தினத்தை கொண்டாடுவதற்கான குடிமக்களின் உரிமையை கூட சீர்குலைக்க சட்ட-ஒழுங்கை திரையாக பயன்படுத்தும் தவறை அரசுகள் மேற்கொண்டுவருகின்றன.
கடந்த சுதந்திர தினத்தில் தென்னிந்திய மாநிலங்களில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்தவிருந்த சுதந்திர தின அணிவகுப்புகளை தடைச் செய்தது இதற்கு சான்றாகும். அன்னா ஹஸாரேவின் கைதிற்கு எதிராக களமிறங்குபவர்கள் நாடு முழுவதும் நடக்கும் இதைப் போன்றதொரு குடிமக்களின் உரிமையை மறுப்பதை எதிர்க்கவும் முன்வரவேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.