தடை விதித்ததை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. ஆயிரக்கணக்கான பாப்புலர் ஃப்ரண்டின் சகோதரர்கள் வீதியில் இறங்கி கேரள அரசுக்கெதிரா ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எந்த ஒரு காரணமும் இன்றி சுதந்திர தினஅணிவகுப்பிற்கு
ஆழப்புழாவில் நடைபெற்ற ஆர்பாட்டம் |
கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக 4 இடங்களில் சுதந்திர தின அணிவகுப்பு நடத்தப்படுவதாக அறிவித்திருந்தது. இதற்காக முறையாகச்சென்று அனுமதி கேட்டபின்னரும் எந்த ஒரு காரணமுமின்றி 4 மாவட்ட ஆட்சியரும் சுதந்திர தின அணிவகுப்பிற்கு தடை விதித்தனர். இதனை எதிர்த்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நீதி கேட்டு கேரள உயர் நீதி மன்றத்தில் வழக்கு தொடுத்தது. இங்கே இந்தியாவில் நீதிமன்றங்கள் அனைத்தும் முஸ்லிம் சமூகத்திற்கு நீதி வழங்கும் விஷயத்தில் இரட்டை நிலையையே கையாழ்கின்றனர். எந்த ஒரு காரணமுமின்றி உயர் நிதி மன்றமும் அணிவகுப்பிற்கு தடை விதித்தது.
இத்தகைய அநீதியை எதிர்த்து கேரள மாநிலம் முழுவதும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது. கேரள அரசை கண்டித்து கோஷங்கள் எழுப்பப்பட்டது. இந்தியாவில் முஸ்லிம்கள் சுதந்திர தினத்தை கொண்டாடுவது குற்றமா? ஆனால் இந்தியாவில் நடைபெற்ற குண்டுவெடிப்புகளுக்கு காரணமாயிருக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பிற்கு மட்டும் கேரள அரசாங்கம் அனுமதி அளித்தது தேச விரோத செயலாகும் என கண்டன குரல்கள் எழுந்தன. ஒவ்வொரு ஆர்ப்பாட்டத்திலும் திரளான மக்கள் கலந்து கொண்டனர்.