நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 25 மார்ச், 2012

மோடிக்கு எதிராக மேலும் ஒரு ஐ.பி.எஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தில் புகார்!


புதுடெல்லி : குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடிக்கு எதிராக மேலும் ஒரு மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
IPS officer Kuldeep Sharma 
மோடி தனக்கு எதிராக ஒருதலைபட்சமாகவும், தீய நோக்கத்துடனும் நடவடிக்கைகள் எடுக்க முற்படுவதால் சேவையை மதிப்பீடு செய்யும் வருடாந்திர அறிக்கை(Annual confidential ratings (ACRs)) உள்பட தனது சேவை தொடர்பான அனைத்து ஆவணங்களையும் குஜராத் ஆளுநர் முன்பாகவோ அல்லது இதர அரசியல் சாசன அதிகாரி முன்பாகவோ சமர்ப்பிக்க உத்தரவிடக்கோரி மூத்த ஐ.பி.எஸ் அதிகாரி குல்தீப் சர்மா உச்சநீதிமன்றத்தை அணுகியுள்ளார்.
உச்சநீதிமன்றத்தில் இம்மனு மீதான விசாரணை விரைவில் நடைபெறும். மோடி மற்றும் அவரது கூட்டாளியும், சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவருமான முன்னாள் உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரின் சில உத்தரவுகளை கடைப்பிடிக்காததால் இருவரும் தன்னை நிரந்தரமாக வேட்டையாடுவதாக சர்மா தனது மனுவில் கூறியுள்ளார்.
மத்திய அரசு பணியில் உள்ள சர்மா டெல்லியில் அடிஷனல் டைரக்டர் ஜெனரல் ஆஃப் பீரோ ஆஃப் போலீஸ் ரிசர்ச் அண்ட் டெவல்ப்மெண்ட் அதிகாரியாக பணியாற்றுகிறார்.
2002-ஆம் ஆண்டு இனப்படுகொலை காலக்கட்டத்தில் மனித எலும்புக்கூடுகளை கண்டுபிடித்த சம்பவத்திலும், சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் ஆரம்ப விசாரணை அறிக்கையை தயார் செய்த போதும் மோடி மற்றும் அமித் ஷாவின் உத்தரவுகளை தான் பின்பற்றவில்லை என்று சர்மா தனது மனுவில் கூறுகிறார். இந்த இரண்டு சம்பவங்களும் குஜராத் அரசுக்கு எதிராக அமைந்ததால் மோடி, 2002-2007 சர்வீஸ் காலக்கட்டத்தில் தனது ஏ.சி.ஆர் அறிக்கையில் தரம் தாழ்த்தியதாக சர்மா கூறுகிறார்.
மத்திய அரசு பணி கிடைப்பதற்கான விஜிலென்ஸ் க்ளியரன்ஸை முடக்கியது, கொலைவழக்கை சுமத்தியது, பல தடவை காரணம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியது ஆகியவற்றின் மூலம் மோடி அரசு தன்னை சட்டச்சிக்கலில் மாட்டிவிட்டு கொடுமை இழைத்ததாக சர்மா தனது மனுவில் சுட்டிக்காட்டியுள்ளார்.