"சமுதாயப் பணி"
பழிகள் சுமக்காமல் பயணிக்க முடியாத பாதை...!
எதிர்பலைகள் இல்லாமல் நீந்த முடியாத ஆறு....!
இது எளிதான பாதையல்ல
எளிதாக நினைப்போருக்க சரியான பாதையல்ல
அது வரை உன்னை கவனிக்காத உலகம்
அதன் பின் உன்னை மட்டுமே உற்று கவனிக்கும்
எந்த சமூகத்திற்காக நீ களம் காணுகிறாயோ
அதே சமூகம் உனை பழிக்கலாம்
விமர்ச்சையாக பணிகள் செய்தாலும்
விமர்ச்சனங்கள் இல்லாமலிருக்காது....!
உனது தவறுகள் உனை விட
உன் பாதையை அதிகம் பாதிக்கும்....!
வேகமாக பயணித்தால் குடும்பம்
உன்னை தடுக்கலாம்
வீரியமாக பயணித்தால் அதிகாரம் உன்னை மிரட்டலாம்
இப்பணியில் சிரம்மான காரியங்கள் கூட
இறைவனின் உதவியால் சுலபமாக நடப்பதுண்டு
முதலீடு இங்கே மிக முக்கியம்
அவை தியாகமும் பொறுமையும்....!
இதற்காக நீ பூமியில் ஓடினால்
உனக்காக அது மறுமையில்ஓடிவரும்
இது ஒரு முடிவில்லா பயணம்
பயணிப்பவர்கள் மடிந்தாலும் பயணம் முடிவதில்லை
முடிவில்லா பயணத்தில் முடிந்தவரை பயணியுங்கள்...!
இறைவனின் (3-104) வசனப்படி நீங்கள் நன்மையை ஏவி தீமையை தடுப்போராயிருந்ததால் இந்தப் பயணத்தின் பாதை சுவனத்தை நோக்கியே....!
ஆக்கம்:- அபூ ஆபியா