பத்திரிக்கை செய்தி
திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருந்தாலும் (உ.ம்) சி.எஃப்.ஐ பல்புகள், கோதுமை, ஓட்ஸ், இன்சுலின் ஆகியவற்றின் வரி குறைப்பு வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. ஆனால் விவசாயிகளுக்கும், உள்நாட்டு தொழில் துறையினருக்கும், ஏழைகளுக்கும், சிறுபான்மையினருக்கும், ஒட்டுமொத்தமாக ஏமாற்றத்தை அளிக்கக்கூடிய பட்ஜெட்டாக அமைந்துள்ளது.
உணவு தாணிய உற்பத்தி இலக்கை 1 லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன்னாக நிர்ணயித்துள்ள அரசு, விளை பொருட்களுக்கு உரிய ஆதாயமான விலையை விவசாயிகள் வளர்ச்சிக்காக எந்த வகையான அறிவிப்பையும் வெளியிடவில்லை. அந்நிய நாட்டு முதலீட்டிற்கு ரூபாய் 20,000 கோடியை இலக்காக நிர்ணயித்துள்ள அரசு, உள்நாட்டு தொழிற்துறையினரின் வளர்ச்சிக்காக எந்த ஒரு இலக்கையோ, அவர்களுக்கு ஊக்மளிக்ககூடிய திட்டத்தையோ அறிவிக்க வில்லை.
விலைவாசியை கட்டுப்படுத்துவது தொடர்பாக எந்த ஒரு திட்டமும் இல்லாத போதிலும், சமையல் எண்ணெய் மீது அதிகரிக்கப்பட்ட வரியும், நிலத்தின் மதிப்பு உயர்வும், மேலும் மக்களுக்கு சுமையாக இருக்கும் வகையில் அமைந்துள்ளது.
சிறு தொழில் செய்பவர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், சிறு தொழில் உற்பத்தியில் இலக்கை நிர்ணயிப்பது சார்பாகவும் இந்த பட்ஜெட்டில் எந்த வகையான ஒரு அறிவிப்பும் வெளிவரவில்லை.
கோயில்களின் வளர்ச்சிக்காக பல நலதிட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ள சமயத்தில், வக்ஃப் வாரிய வளர்ச்சிக்காக இந்த அரசு எந்த நலத்திட்டமும் அறிவிக்காதது ஏமாற்றம் அளிக்கிறது