நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 31 மார்ச், 2012

மின்சாரக் கட்டண உயர்வு :அ.தி.மு.க அரசின் மற்றுமொரு மக்கள் விரோத நடவடிக்கை


 பத்திரிக்கை செய்தி 

மின்சாரக்  கட்டண உயர்வு :.தி.மு. அரசின் மற்றுமொரு மக்கள் விரோத நடவடிக்கை 

      .தி.மு. அரசு பொறுப்பேற்றது முதல் பஸ் கட்டணம் ,பால் விலை உயர்வு என ஏழை மற்றும் நடுத்தர மக்களை பாதிக்கும் பல்வேறு மக்கள் விரோத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. 

அதன் ஒரு பகுதியாக கடந்த நவம்பரில்  மின்சாரக்  கட்டணத்தை உயர்த்த வேண்டுமென தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் "கோரிக்கை " வைத்தது.

இதன் பின் மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கண்துடைப்பு கருத்துக் கேட்பு கூட்டங்களை சென்னை ,திருச்சி .மதுரை .கோவை ஆகிய நகரங்களில் நடத்தியது .அதில் கலந்து கொண்ட பொது மக்களும் பல்வேறு அமைப்புகளின் பிரதிநிதிகளும் தங்களின் கடும்  எதிர்ப்புகளை பதிவு செய்தனர்.

இந்நிலையில் நேற்று சுமார் 45 % கட்டண உயர்வை தமிழ்நாடு மின்சார  ஒழுங்கு முறை ஆணையம் அறிவித்துள்ளது .ஆனால் இதைவிட அதிகமாகவே கட்டணம் உயர்த்தப் பட்டுள்ளதாகவே தெரிகிறது . இது தவிர ஒவ்வொரு நுகர்வோருக்கும் சேவைக்  கட்டணம் ரூ.20 ம் அறிவிக்கப் பட்டுள்ளது .இந்த கட்டண உயர்வு வன்மையாக கண்டிக்கத்  தக்கது.

ஏற்கனவே மத்திய, மாநில அரசின்  கட்டண உயர்வு ,வரி உயர்வு மற்றும் பல்வேறு மக்கள் விரோத  நடவடிக்கைகளால்  ,விலைவாசி உயர்வால்   தினறிவரும் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் இந்த கட்டண உயர்வால் மேலும் அவதியுறுவர் 

தமிழ்நாடு    தமிழ்நாடு மின்சார  ஒழுங்கு முறை ஆணையம் சுயேட்சையானது அது சுயமாகவே முடிவெடுக்கிறது என்ற முதல்வரின்  அறிவிப்பு கேலிக்குரியது 

தமிழக அரசு மக்கள் விரோத இந்த கட்டண உயர்வை முற்றிலும் திரும்ப பெற நடவடிக்கை எடுக்க வேண்டும் 

தினமும் 10  முதல் 12 மணி நேரம் மின்வெட்டை அமுல்படுத்தி மக்களை வதைக்கும் மின்சார வாரியத்திற்கு மின்கட்டணம் ஒரு கேடா ?..என கேட்க விரும்பிகிறேன் 

                                                                             
                                                                                                                                இவன் 
             
              கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி-மாநில தலைவர்
              சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆஃப் இந்தியா(SDPI)
              தமிழ்நாடு



--

இவண்...
                  

             மக்கள் தொடர்பு அலுவலர்
             பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா நெல்லை மேற்கு மாவட்டம்
*            தமிழ்நாடு.
*           தொடர்புக்கு : 00919789112841*
*           மின்னஞ்சல் :  pronellaiwest@gmail.com
*           வெப்தளம்    : http://popularfrontnellaiwest.blogspot.in/