குமரி மாவட்ட பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக ஆம்புலன்ஸ் சேவை துவக்க விழாமற்றும் பொதுக்கூட்டம் நாகர்கோவில் இடலாக்குடியில் வைத்து நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் பாப்புலர் ஃப்ரண்ட்டின் தேசிய தலைவர் இ.எம். அப்துர்ரஹ்மான்கலந்துகொண்டார்.
ஆம்புலன்ஸ் சாவியை குமரி மாவட்ட தலைவரிடம் ஓப்படைக்கிறார் தேசிய தலைவர் |
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நாடு முழுவதும் பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டுவருகிறது. பாப்புலர் ஃப்ரண்டின் சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக ஏழை மற்றும் பாமரமக்களுக்கு மருத்துவம், கல்வி உட்பட பல்வேறு தொண்டுகள் நடந்து வருகிறது. இதன் ஒருபகுதியாக குமரி மாவட்ட சமூக மேம்பாட்டுத்துறை சார்பாக ஆம்புலன்ஸ் சேவைதுவக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து ஆம்புலன்ஸ் சேவையின் துவக்கவிழா மற்றும்பொதுக்கூட்டம் 25ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6:50 மணிக்கு நாகர்கோவில்,இடலாக்குடியில் வைத்து நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்டின்மாவட்டத்தலைவர் சுல்பிக்கர் அலி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரூஹுல் ஹக்வரவேற்புரையாற்றினார். மாலிக்தீனார் பைத்துல்மால் ஜமாஅத் தலைவர் அப்துல் கஃபூர்,கோட்டார் இளங்கடை முஸ்லிம் சமுதாய டிரஸ்டின் தலைமை இமாம் பஸ்லுல் ஹக் மன்பஈ,இஸ்லாமிக் சேனல் நிர்வாக இயக்குனர் அல்காலித் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் குமரி மாவட்ட ஆம்புலன்ஸ் |
பாப்புலர் ஃப்ரண்டின் மாநில செயலாளர் ஃபைசல் அஹமது துவக்கவுரையாற்றினார். குமரிமாவட்ட ஜமாஅத் கூட்டமைப்பின் தலைவர் ஜி.எம்.ஷா, இஸ்லாமிய கலாச்சாரப் பள்ளிதலைமை இமாம் சவுக்கத் அலி உஸ்மானி, திருவனந்தபுரம் எஸ்.எம்.சி.எஸ்.ஐமருத்துவக்கல்லூரி விரிவுரையாளர் டாக்டர் பிளஸட் சிங்க், சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டிஆஃப் இந்தியாவின் மாநில பொது செயலாளர் முபாரக், குமரி மாவட்ட இஸ்லாமிய முன்னேற்றசங்கத்தின் தலைவர் பீர் முகம்மது ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
குமரி மாவட்ட இஸ்லாமிய முன்னேற்ற சங்கத்தின் தலைவர் பீர் முகம்மதுக்கு நினைவு பரிசுவழங்குகிறார் தமிழ் மாநில பாப்புலர் ஃப்ரண்ட் தலைவர் |
பாப்புலர் ஃப்ரண்ட் தேசிய தலைவர் அப்துர்ரஹ்மான் ஆம்புலன்ஸ் சேவையை துவக்கி வைத்துசிறப்புரையாற்றினார். மேலும் மாநில தலைவர் ஏ.எஸ்.இஸ்மாயில், பத்திரிகையாளர்கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். தக்கலை பகுதி தலைவர்அபூதாஹிர் நன்றியுரையாற்றினார். இந்நிகழ்ச்சிக்கு அனைத்து ஜமாஅத்களை சேர்ந்தபொதுமக்கள், பாப்புலர் ஃப்ரண்ட் மற்றும் எஸ்.டி.பி.ஐ தொண்டர்கள், பல்வேறு சமூகஆர்வலர்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டார்கள்.