சென்னை: ராமர் பாலத்தை(?) தேசிய சின்னமாக அறிவிக்கவேண்டும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
பாப்ரி மஸ்ஜித் விவகாரத்தில் தேசிய ஒருமைப்பாட்டு கவுன்சிலில் பா.ஜ.கவினரையே அதிர்ச்சியடையச் செய்யும் வகையில் கரசேவைக்கு அனுமதி அளிக்கவேண்டும் என்று பேசியவர் தமிழக முதல்வராக பதவி வகிக்கும் ஜெயலலிதா. குஜராத்தில் கோத்ரா ரெயில் எரிப்பை யார்
நிகழ்த்தினார்கள் என்பதை கண்டுபிடிக்கும் முன்னரே முஸ்லிம்களின் பழியை போட்டார். குஜராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லிம்களை கொன்றுகுவித்த ஹிந்துத்துவா கோரத் தாண்டவத்திற்கு தலைமைத் தாங்கிய மோடியுடன் நெருங்கிய நட்பை பேணி வருபவர்.இவ்வாறு பல சூழல்களிலும் தனது ஹிந்துத்துவா பாசிச முகத்தை வெளிக்காட்டி வரும் ஜெயலலிதா, நாட்டிற்கும், தமிழக மக்களுக்கும் பெரும் நன்மையை பெற்றுத்தரும் சேதுக் கால்வாய் திட்டத்தை கற்பனையான ராமர் பால கதை மூலம் முடக்குவதிலேயே குறியாக இருந்தார். தற்பொழுது உச்சநீதிமன்றம் இல்லாத ராமர்பாலத்தை தேசிய சின்னமாக அறிவிப்பது குறித்த மத்திய அரசின் கருத்துக்களை தெரிவிக்குமாறு அரசின் வழக்குரைஞருக்கு உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் இதுத்தொடர்பாக பிரதமருக்கு ஜெயலலிதா எழுதியுள்ள கடிதத்தில் ராமர் பாலத்தை தேசிய புராதன சின்னமாக அறிவிப்பதில் எந்த தாமதமும் காட்டக் கூடாது. அதுகுறித்த தனது கருத்துகளை நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவிக்க வேண்டும். உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசும் தனது நிலைப்பாட்டை தெரிவிக்கும் என்று பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா எழுதிய கடிதத்தில் கூறியுள்ளார்.