நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

சனி, 31 மார்ச், 2012

இந்திய போலீஸ் சிறுபான்மையினரை பாதுகாக்க முன்வருவதில்லை- ஐ.நா மனித உரிமை கவுன்சில்!


புதுடெல்லி : வகுப்புவாத கலவரங்கள் நடைபெறும் வேளையில் இந்தியாவில் போலீஸ் சிறுபான்மையினரை பாதுகாக்க முன்வருவதில்லை என்று ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கவுன்சில் கூறியுள்ளது. இத்தகைய வகுப்புவாத வன்முறைகள் குறித்தும், கூட்டுப் படுகொலைகளை குறித்தும் ஆய்வு செய்ய இந்தியாவுக்கு வருகை தந்த ஐ.நா மனித உரிமை கவுன்சிலின் கண்காணிப்பாளர் கிறிஸ்டோஃப் ஹெய்ன்ஸ் நேற்று வெளியிட்டுள்ள ஆரம்பக்கட்ட அறிக்கையில் இதனை தெரிவித்துள்ளார்.
இந்திய போலீஸ் சிறுபான்மையினரை பாதுகாக்க முன்வருவதில்லை
கேரளா, குஜராத், கஷ்மீர், அஸ்ஸாம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு சென்ற கிறிஸ்டோஃப் இந்த அறிக்கையை தயார் செய்துள்ளார்.
குஜராத் இனப்படுகொலையில் முஸ்லிம்களுக்கும், கண்டமால் கலவரத்தில் கிறிஸ்தவர்களுக்கும் அரசு பாதுகாப்பு அளிக்கவில்லை. போலீஸ் கலவரக்காரர்களுக்கு உறுதுணையாக இருந்தனர். இதுத்தொடர்பான விசாரணைக்கு குஜராத் அரசு ஒத்துழைக்கவில்லை. சந்திப்பு நடத்த மறுத்தனர் என்று வகுப்புக் கலவரத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற கிறிஸ்டோஃப் ஹெய்ன்ஸ் கூறுகிறார்.
இந்தியாவில் ஐ.நாவின் தலைமையில் இவ்வாறான விசாரணை முதன் முதலாக நடைபெறுகிறது. விரிவான அறிக்கை அடுத்த ஆண்டு நடைபெறும் ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் சமர்ப்பிக்கப்படும்.
கஸ்டடி மரணங்களும், என்கவுண்டர் படுகொலைகளும் இந்தியாவில் அதிகரித்துள்ளன. என்கவுண்டர்கள் பெரும்பாலும் போலீசாருக்கு அளித்துள்ள கட்டுப்பாடற்ற அதிகாரத்தின் விளைவாகும். போலீசாரின் துப்பாக்கிச்சூட்டில் கொலைச் செய்யப்படும் அப்பாவிகளின் குடும்பத்தினருக்கு, அவர்கள் சந்திக்கும் மனித உரிமை மீறல்களை வெளிக்கொணர்வதறாக பொருளாதார வசதியும் இல்லை. அதேவேளையில், ‘என்கவுண்டர் கொலைகளை’ திட்டமிட்டு நிறைவேற்றும் போலீஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வு வழங்கப்படுகிறது.
ஜம்மு-கஷ்மீரிலும், வடகிழக்கு மாநிலங்களிலும் அமலில் இருக்கும் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச்சட்டம் மிகப்பெரிய மனித உரிமை மீறலுக்கு வழிவகுக்கிறது. இச்சட்டத்தின் திரைமறைவில் அமைதியான முறையில் போராட்டம் நடத்தியவர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் 2010-ஆம் ஆண்டு மட்டும் பலியானோர் கஷ்மீரில் 100 பேர் ஆகும்.
அதேவேளையில், மாவோயிஸ்டுகள் உள்ளிட்டோர் நடத்திய தாக்குதலிலும் பலர் உயிரிழந்துள்ளனர்.
வரதட்சிணை, கெளரவக் கொலை போன்றவற்றில் பெண்களை கொலைச் செய்யப்படும் வழக்குகளும் ஏராளம் உள்ளன. நகரங்களில் கட்டமைக்கப்பட்ட குற்றவாளிகளின் தாக்குதல்களில் உயிரிழப்போரில் பெரும்பாலோர் பெண்கள் ஆவோர்.
தலித்துகளும், பழங்குடியினரும் கொலைச் செய்யப்படும் வழக்குகளில் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இத்தகைய பிரச்சனைகள் நிலவினாலும் அதனை கையாளும் சட்டமும் இந்தியாவில் உண்டு. அவை போதுமான அளவு பிரயோகப்படுத்தப்படுவதில்லை.
மனித உரிமை கமிஷன்களுக்கோ அரசுகளின் கீழ் போதிய சுதந்திரம் வழங்கப்படுவதில்லை. கொலைகள் தொடர்பான மனித உரிமை பிரச்சனைகளை ஆராய சுதந்திர கமிஷனை மத்திய அரசு நியமிக்கவேண்டும் என்று கிறிஸ்டோஃப் ஹெய்ன்ஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.