பரமக்குடி, மதுரை, இராமநாதபுரம் என தொடரும் கலவரங்கள். அங்கும் இங்கும் அலைந்து திரியும் அப்பாவி மக்கள். நினைவு தினத்தை அனுசரிக்க வந்தவர்கள் விரட்டியடிக்கப்பட்டதால் செய்வதறியாது திகைத்து நிற்க்கும் கூட்டங்கள். வீட்டுக்கு உபயோக பொருள்கள் வாங்க, குழந்தைக்கு மருத்துவம் பார்க்க, உறவினர் வீட்டிற்கு என்று வந்த பெண்கள், குழந்தைகள் திரும்பி செல்ல பேருந்து இல்லாமல் அலையும் அவலம். கடைகள் அனைத்தும் மூடப்பட்டும் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல் அடித்து நொறுக்கப்பட்டு, அலறி ஓடும் ஆண்களை கண்டு அஞ்சி நடுங்கி சாலையின் ஓரங்களிலும், பேருந்து நிலையங்களின் இடுக்குகளிலும் நுழைந்து மரண பீதியில் கதறும் குடும்பங்கள். கையில் நீண்ட லத்தி, தங்களை பாதுகாத்து கொள்ளும் கவச ஆயுதம், துப்பாக்கி முழக்கம், திரும்பும் திசை எங்கும் காக்கி கும்பல்கள் என ஒரு கனம் நம் கண்முன் கஷ்மீரின் அவலநிலை வந்து சென்றது.
NOV 2013
செவ்வாய், 13 செப்டம்பர், 2011
மோடியை பாஜகவின் தேசியத் தலைவராக்க முயற்சி!
டெல்லி : குஜராத் கலவர வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பைத் தொடர்ந்து, அம் மாநில முதல்வர் நரேந்திர மோடியை தேசிய அரசியலில் ஈடுபடுத்த பாஜக திட்டமிட்டுள்ளது. அவரை பாஜக தேசியத் தலைவராக்கவும் முயற்சிகள் தொடங்கியுள்ளன.
உச்ச நீதிமன்ற உத்தரவின் மூலம் நரேந்திர மோடி தேசிய அரசியலில் ஈடுபடுவதற்கு இருந்த தடை விலகி விட்டதாக பாஜக கருதுகிறது.
மசூதி கட்டுவதற்கு எதிராக சர்ச்சை: முஸ்லிம்களை வலுக்கட்டாயமாக கிராமத்தை விட்டு வெளியேற்ற முயற்சி
ஜமுனாநகர் : முஸ்லிம்களும், ஹிந்து மக்களும் வாழும் கிராமத்தின் உள்ளே மசூதி கட்ட ஹிந்துத்துவவாதிகள் பலத்த எதிர்ப்பை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சினையை சரி செய்ய மாவட்ட நிர்வாகம் ஒரு சரியான தீர்வை தரவில்லை என்றாலோ அல்லது மசூதி கட்ட அனுமதி மறுக்க பட்டாலோ நாங்கள் இந்த கிராமத்தை விட்டு வலுக்கட்டயாமாக வெளியேறும் நிலையில் உள்ளோம் என்று மாவட்ட நிர்வாக கமிட்டியில் பங்கெடுத்துக் கொண்ட தில்ஷான் மற்றும் சஹாபுதீன் தெரிவித்துள்ளனர்.
சென்னை அடுத்த அரக்கோணம் அருகே இரயில்கள் மோதல் 15 பேர் பலி 200-க்கும் மேற்பட்டோர் படுகாயம்...
சென்னை : சென்னையை அடுத்த அரக்கோணம் ரயில் நிலையம் அருகில் சித்தேரி என்ற இடத்துக்கு அருகே சிக்னலுக்காக நின்று கொண்டிருந்த பாசஞ்சர் ரயில் மீது பின்னால் வந்த விரைவு பாசஞ்சர் ரயில் மோதி பெரிய விபத்து நேரிட்டது.
நேற்று செவ்வாய்க் கிழமை இரவு 9.40 மணிக்கு நடந்த இந்த விபத்தில், ஐந்து ரயில் பெட்டிகள் தடம்புரண்டன. மூன்று பெட்டிகள் பலத்த சேதமடைந்தன. இதில், நின்று கொண்டிருந்த ரயிலின் கார்டும், மோதிய ரயிலின் டிரைவர் உட்பட 15 க்கும் மேற்பட்டோர் பலியானதாக அஞ்சப்படுகிறது. மேலும், 200க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள், அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.
எல்லா மதானிக்களுக்காகவும் எஸ்.டி.பி.ஐ போராடும்- இ.அபூபக்கர்
அப்துல் நாசிர் மதானியின் விடுதலைக்காக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து போராடும் என அக்கட்சியின் தேசிய தலைவர் இ.அபூபக்கர் கேரளா மாநிலம் கொல்லத்தில் வைத்து நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் வைத்து கூறினார். கேரளா மாநிலம் கொல்லத்தில் வைத்து எஸ்.டி.பி.ஐ சார்பாக அப்துல் நாசிர் மதானியை விடுதலை செய்யக்கோரி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் உரையாற்றிய அக்கட்சியின் தேசிய தலைவர்
இ.அபூபக்கர் கூறும்போது இந்தியாவில் மதானிக்கு எதிராக அநியாயம் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் அவருடைய விடுதலைக்காக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.
நாடு முழுவதும் மதானியைப் போன்று எண்ணற்ற அப்பாவிகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அதிலும் அவர்கள் விசாரணை கைதிகளாகவே சிறையில் பல வருடங்களாக இருந்து வருகிறார்கள்.
இ.அபூபக்கர் கூறும்போது இந்தியாவில் மதானிக்கு எதிராக அநியாயம் நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றும் அவருடைய விடுதலைக்காக எஸ்.டி.பி.ஐ தொடர்ந்து போராடும் என தெரிவித்தார்.
நாடு முழுவதும் மதானியைப் போன்று எண்ணற்ற அப்பாவிகள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்கள். அதிலும் அவர்கள் விசாரணை கைதிகளாகவே சிறையில் பல வருடங்களாக இருந்து வருகிறார்கள்.
பரமக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிர் இழந்தவர்களுக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்க வேண்டும்: SDPI கோரிக்கை
சென்னை இராமநாதபுரத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் குரு பூஜையை முன்னிட்டு நடந்த கலவரமும் அதனால் ஏற்பட்ட உயிர் இழப்புகளும் வேதனைக்குரியது, கண்டிக்கத்தக்கது என SDPI மாநில தலைவர் KKSM தெஹ்லான் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
மேலும் அவர்; “தமிழக மக்கள் முன்னேற்றக் கழக தலைவர் ஜான் பாண்டியனுக்கு குரு பூஜையில் கலந்து கொள்ள தடைவிதித்ததாலேயே போராட்டங்கள் நடந்து அதனால் கலவரமும் ஏற்பட்டள்ளது.
ஞாயிறு, 11 செப்டம்பர், 2011
சவூதி அரேபியா (அல் கோபர்)வுக்கு - ஏசி டெக்னீசியன் தேவை
அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)..
சகோதரர்களே சவூதி அரேபியா - அல் கோபர் - ஏசி கம்பெனிக்கு - படித்த, முன் அனுவபமுள்ள ஏசி டெக்னீசியன் தேவை , உடனே தொடர்பு கொள்ளவும்.
Mr. Abdul Gani – 00966507390507
முஸ்லீம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீட்டை உயர்த்தி வழங்க இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கோரிக்கை
கும்பகோணம்: முஸ்லீம்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 3.5 சதவீத இடஒதுக்கீடை உயர்த்தி வழங்குமாறு, தமிழக அரசுக்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் வலியுறுத்தியுள்ளது.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் திருமங்கலக்குடியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் காதர்மொய்தீன் தலைமை வகித்தார். தேசிய செயலாளளர் குரம் அனிஸ்உமர் முன்னிலை வகித்தார்.
இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியின் மாநில பொதுக்குழு கூட்டம் கும்பகோணம் திருமங்கலக்குடியில் நடந்தது. இந்த கூட்டத்திற்கு மாநிலத் தலைவர் காதர்மொய்தீன் தலைமை வகித்தார். தேசிய செயலாளளர் குரம் அனிஸ்உமர் முன்னிலை வகித்தார்.
குஜராத் கலவர வழக்கை மேலும் விசாரிப்பதற்கில்லை: உச்சநீதிமன்றம்
புதுதில்லி : 2002ம் ஆண்டு நடந்த குல்பர்க் சொசைட்டி கலவர வழக்கை மேற்கொண்டு விசார்ப்பதற்கில்லை என்று உச்சநீதிமன்றம் இன்று திங்கள்கிழமை முடிவு செய்தது. இதனால் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு தலைவலி தற்காலிகமாக நீங்கியதாகக் கருதப்படுகிறது.
இறுதி அறிக்கையை கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
இறுதி அறிக்கையை கீழ் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு சிறப்பு புலனாய்வுக் குழுவுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை வழங்கியது.
பரமக்குடி கலவரம்: சட்டசபையில் ஆளும் கட்சிக்கு கூட்டணிக் கட்சிகள் நெருக்கடி கொடுக்குமா?
தமிழகத்தில் தற்போது சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. இந்நிலையில் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவனத் தலைவர் ஜான்பாண்டியனை கைது செய்ததாக செய்தி பரவியதையடுத்து பரமக்குடியில் ஏற்பட்ட கலவரத்தில் துப்பாக்கி சூடு நடைபெற்றது. இதில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
தமிழக அரசு தலித் இளைஞர்களின் உயிரை மிகக் குறைத்து மதிப்பிடுகிறது: பரமக்குடி கலவரம் குறித்து திருமா அறிக்கை
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தியாகி இம்மானுவேல் சேகரன் நினைவுநாளான இன்று பரமக்குடியில் காவல்துறையினர் நடத்திய சூப்பாக்கிச் சூட்டில் நால்வர் பலியாகி உள்ளனர். இன்னும் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் பதட்டம் நிலவுகிறது. மதுரையில் துப்பாக்கிச் சூடு நடைபெற்று இரண்டு பேர் காயம் அடைந்துள்ளனர். தென் மாவட்டங்களில் மேலும் வன்முறை பரவும் நிலை உருவாகியுள்ளது. இத்தகைய அரசு பயங்கரவாத அடக்குமுறைப் போக்கினை விடுதலைச் சிறுத்தைகள் வன்மையாகக் கண்டிக்கிறது.
அமெரிக்காவின் மீதுள்ள எண்ணெய் வெறியே இரட்டை கோபுர தாக்குதல் நாடகம்
உலகின் தலைசிறந்த செய்தி நிறுவனமான பி.பி.சி., கடந்த 29-1-2001 அன்று ஒரு சிறிய செய்தியினை வெளியிட்டிருந்தது. அந்த செய்தி இந்த உலகின் மிகப் பெரிய அழிவுகளுக்கு கட்டியம் கூறும் செய்தி என்பது தெரியாமலே போனது. சுமார் 5 லட்சம் மக்கள் உயிர் உடமைகளை இழக்கவும், அடிமைப்பட்டுப் போகவும் காரணமாக அச் செய்தி இருக்கப் போகிறது என்பதை யாருமே அறியவில்லை. 2001-ல் அமெரிக்க அதிபர் புஷ் அமைத்த அமைச்சரவை பற்றிய செய்தி அது. அமெரிக்க செனட்டின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பல கோடிகளுக்கு அதிபதிகள்; பெரும் பணக்காரர்கள்.
அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை இடித்தது அமெரிக்காவே
இரட்டை கோபுரத்தை இடித்தது யார் என்று கேட்டால் அனைவரும் சொல்வது ஒசாமா பின்லேடன். ஒரு வீட்டை இடிப்பதற்க்கே 20லிருந்து 30 நபர்கள் தேவைப்படும்போது, உலகத்திலேயே மிக உயர்ந்த கட்டிடம் என்று பெயர் பெற்ற ஒரு கட்டிடத்தை ஒரு தனி மனிதனால் இடித்து தரை மட்டமாக்க முடியுமா? முடியாது என்பதே பலரின் பதில். இரட்டை கோபுரத்தை இடித்ததில் தனி ஒரு மனிதனின் பெயரை குறிப்பிடுவதை விட அதை செய்தது ஒரு கூட்டம் என்று சொல்வதே சரியானது.
அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்...
அப்படியானால் இரட்டை கோபுரத்தை இடித்தது எந்த கூட்டம்? அலசுவோம் வாருங்கள்...
மலேசியா : மதக்கலவரம் ஏற்படும் அபாயம்
மலேசியாவில் முஸ்லிம் அதிகாரிகள் ஒரு கிறிஸ்தவ தேவாலயத்துக்குள் புகுந்து சோதனை நடத்தினார்கள். இதை தொடர்ந்து இரு மதங்களை சேர்ந்தவர்களுக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டு உள்ளது.
மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இவரிகளில் 60 சதவீதத்தினர் முஸ்லிம்கள் ஆவார்கள். மற்றவர்கள் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பவுத்தர்கள் எனப்படும் பிற மதத்தினர் ஆவார்கள்.
மலேசியாவின் மொத்த மக்கள் தொகை 2 கோடியே 80 லட்சம் ஆகும். இவரிகளில் 60 சதவீதத்தினர் முஸ்லிம்கள் ஆவார்கள். மற்றவர்கள் கிறிஸ்தவர்கள், இந்துக்கள், பவுத்தர்கள் எனப்படும் பிற மதத்தினர் ஆவார்கள்.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)









