நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

ஞாயிறு, 21 ஆகஸ்ட், 2011

மத்தியபிரதேசமாநிலத்தில்சங்க்பரிவாரஅமைப்புகளின் 3 நாள்கூட்டம் : முக்கியமுடிவுகள்

புதுடெல்லி :
அன்னா ஹஸாரேவின் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை வெற்றிப்பெறச் செய்வதற்கான திட்டங்களை வகுக்க சங்க்பரிவார பயங்கரவாத அமைப்புகளின் தலைவர்கள் மத்தியபிரதேச மாநிலம் உஜ்ஜையினில் 3 நாட்கள் ஆலோசனை கூட்டத்தை நடத்தியுள்ளனர்.

இக்கூட்டத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் சர்சங்க்சாலக் மோகன் பாகவத் மற்றும் பா.ஜ.க, ஏ.பி.வி.பி, பி.எம்.எஸ், வி.ஹெச்.பி ஆகிய அமைப்புகளின் மூத்த தலைவர்கள் பங்கேற்றனர்.



இக்கூட்டத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசுக்கு எதிராக டெல்லிக்கு போதுமான அளவு சுயம் சேவகர்களை அனுப்ப தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஹஸாரேவின் ஊழல் எதிர்ப்பு போராட்டத்தை அரசு எதிர்ப்பு போராட்டமாக மாற்றி அதிலிருந்து அரசியல் ஆதாயம் பெறுவதற்கான தந்திரங்களைக் குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

பா.ஜ.க தலைவர்களான எல்.கே.அத்வானி, நிதின்கட்கரி, அருண் ஜெட்லி, சுஷ்மா சுவராஜ் ஆகியோரும் இக்கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்தியாவில் நடந்த குண்டுவெடிப்புகளில் தங்களின் பங்கு வெட்ட வெளிச்சமான சூழலில் அதனை மூடிமறைப்பதற்கான தந்திரங்களும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. சங்க்பரிவாரத்தின் தீவிரவாத முகத்தை சர்ச்சையாக்க மத்திய அரசு முயலும் வேளையில் அன்னா ஹஸாரேவின் போராட்டம் நாட்டு மக்களின் கவனத்தை திசைத்திருப்பும் என சங்க்பரிவார தலைமை கருதுகிறது.

அன்னா ஹஸாரேவின் போராட்டம் தொடர்பான விஷயங்களைக் குறித்து விவாதித்ததாகவும், போராட்டத்திற்கு தாங்கள் ஏற்கனவே ஆதரவு தெரிவித்துவிட்டதாகவும் மூத்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் கூறுகிறார்.

உ.பி உள்ளிட்ட மாநிலங்களில் வரவிருக்கும் தேர்தல்களை முன்னிறுத்தி ராமர்கோயில் விவகாரத்தை மீண்டும் தீவிரப்படுத்தவும் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. கூடுதல் டாக்டர்கள், சார்ட்டட் அக்கவுண்டுகள் உள்ளிட்டோரை ஆர்.எஸ்.எஸ்ஸுடன் நெருக்கமாக்கவும், முன்னர் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் முன்னேற்றம் குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டன.

மாநிலங்களில் பா.ஜ.கவின் செயல்பாடுகளை கண்காணித்துவரும் நியமிக்கப்பட்டுள்ள ஆர்.எஸ்.எஸ் காரியவாஹ்களின் செயல்பாடுகளை கூட்டம் மீளாய்வு செய்ததாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.