நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

புதன், 24 ஆகஸ்ட், 2011

பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு ஹவாலா பணம்:சி.பி.ஐ கண்டுபிடிப்பு



புதுடில்லி : இந்தியாவின் வரலாற்றுச் சின்னமும், முஸ்லிம்களின் வழிப்பாட்டுத் தலமுமான பழம்பெரும் பாப்ரி மஸ்ஜித் ஹிந்துத்துவ பயங்கரவாதிகளால் கடந்த 1992-ஆம் ஆண்டு இடித்து தள்ளப்பட்டது. இதுத்தொடர்பான வழக்குகள் உ.பி மாநில நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன. இதுத்தொடர்பாக மத்திய புலனாய்வு ஏஜன்சியான சி.பி.ஐ விசாரணை நடத்திவருகிறது.




கரசே வகர்களை அழைத்து வந்தது யார்? மஸ்ஜிதை இடிக்க திட்டமிட்டது எப்படி? என்று சி.பி.ஐ. அதிகாரிகள் தகவல்கள் சேகரித்தனர். சுமார் 20 ஆண்டுகளாக நடந்து வரும் இந்த விசாரணை இறுதிக் கட்டத்தை எட்டி உள்ளது. வரும் 15-ஆம் தேதி இந்த விசாரணை முடிவடையும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

அமலாக்கப் பிரிவு மற்றும் வருமான வரித் துறைகளின் ஒத்துழைப்பையும் பெற்றுள்ள சி.பி.ஐ, விரைவில் பாப்ரி மஸ்ஜித் இடிப்பு பின்னணியில் உள்ள சில தகவல்களை வெளியிடும் என்று தெரிகிறது.

குறிப்பாக பாப்ரி மஸ்ஜித் இடிப்புக்கு ஹவாலா பணம் பயன்படுத்தப்பட்டு இருப்பதை சி.பி.ஐ. கண்டுபிடித்துள்ளதாக தெரிகிறது. எந்த நாட்டில் இருந்து யார் மூலம் அந்த ஹவாலா பணம் வந்தது? மஸ்ஜிதை இடித்த கரசேவகர்களுக்கு அந்த பணம் எப்படி பட்டுவாடா செய்யப்பட்டது? என்பன போன்ற தகவல்களை சி.பி.ஐ. கசியவிடும் என்று தெரிகிறது.

சி.பி.ஐ தன் முதல் தகவல் அறிக்கையில் வாஜ்பாய், அத்வானி, உமாபாரதி, கல்யாண் சிங், உள்பட 48 பேர் பெயரை குறிப்பிட்டுள்ளது. லிபர்ஹான் கமிஷன் 68 பேரின் பெயர்களை கூறியுள்ளது. அவர்களை பற்றி மீண்டும் சி.பி.ஐ. தகவல்களை திரட்டுவதாக தெரிகிறது. சி.பி.ஐ.யின் இந்த நடவடிக்கை பா.ஜ.க. தலைவர்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்துள்ளது.