சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தென் சென்னை மாவட்டம், எழும்பூர் பகுதி 106 - வது வட்டமும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி பகுதி 82 வது வட்டமும் இணைந்து நடத்திய இப்தார் விருந்து 21 .08 .2011 ஞாயிறு பின்னேரம் புதுப்பேட்டை முதல் தெரு தமிழர் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இப்தார் என்னும் நோன்பு திறப்புடன் நிகழ்ச்சி ஆரம்பம் ஆனது. மக்ரிப் தொழுகைக்கு பின்பு நடந்த கூட்டத்தில் எழும்பூர் தொகுதி தலைவர் அஹமது அலி நிகழ்ச்சிக்கு வருகை புரிந்தவர்களை வரவேற்புரையற்றினார். ஆயிரம் விளக்கு தொகுதி தலைவர் ஜூனைத் அன்சாரி அவர்கள் நோன்பின் மாண்புகள் குறித்தும், நோன்பின் இறுதி பத்து நாட்களின் சிறப்பு குறித்தும், அதனை முழுமையாக பயன்படுத்துவது குறித்தும் விரிவாக எடுத்துரைத்தார்.
சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவின் தென் சென்னை மாவட்ட தலைவர் முஹம்மது ஹுசைன் அவர்கள் தனது சிறப்புரையில் முஸ்லிம்களது அரசியல் விழிப்புணர்வு குறித்தும், அதிலிருந்து விலகி இருப்பது சமூக தீமை என்றும் கூறினார். மேலும் முஸ்லிம்கள் பிற கட்சிகளில் பிரிந்து தங்கள் சக்தி வீணாவதை தடுத்து தலித்கள், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மற்றும் ஆதிவாசி மக்களின் அரசியல் மேம்பாட்டிற்காக உருவாக்கப்பட்ட சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியாவில் தங்களை இணைத்து கொண்டு தேசிய நீரோட்டத்தில் அரசியல் பயணம் மேற்கொண்டு ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றி, இன்றைய கொடுங்கோல் ஆட்சியாளர்களை அகற்றி, நல்லாட்சி அமைந்திட தியாகங்களை மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
பின்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு இரவு விருந்து வழங்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் SDPI -யின் தென் சென்னை மாவட்ட செயலாளர்கள் முஹம்மது இஸ்மாயில் அவர்களும், முஹம்மது ஸாலிஹ் அவர்களும், அண்ணா நகர் தொகுதி தலைவர் ஜூனைத் அவர்களும், மைலாப்பூர் தொகுதி தலைவர் மீரான் அவர்களும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி செயலாளர் சாகுல் ஹமீது அவர்களும், எழும்பூர் தொகுதி செயலாளர் நாகூர் கனி அவர்களும் மற்றும் எழும்பூர் தொகுதி, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி நிர்வாகிகள், 82 மற்றும் 106 வட்ட நிர்வாகிகள், செயல் வீரர்கள் மற்றும் ஏராளமான பொது மக்களும் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியை 106 -வது வட்ட தலைவர் ராஜா முஹம்மது, செயலாளர் நத்தர்சா, சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி செயற்குழு உறுப்பினர் மெக்கானிக் சித்திக் மற்றும் 82 - வது வட்ட தலைவர் முஹம்மது அலி ஆகியோரது தலைமையில் வட்ட நிர்வாகிகள் சிறப்புடன் ஏற்பாடு செய்திருந்தனர். 106 -வது வட்ட செயலாளர் நத்தர்சா அவர்களது நன்றியுரையுடன் நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது.