சென்னை : விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பாக அக்கட்சியின் தலைவரும் பாரளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன் தலைமையில் சென்னையில் 21.08.2011 அன்று நோன்பு திறக்க்கு நிகழ்ச்சி (இஃப்தார்) நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநிலத்தலைவர் ஏ.எஸ். இஸ்மாயில் அவர்கள் கலந்து கொண்டார்.
நேற்று (ஞாயிற்றுகிழமை) விடுதலை சிறுத்தை கட்சியினா சார்பாக சென்னை எழும்பூரில் உள்ள ஃபைஜ் மஹாலில் வைத்து இஃப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக இஸ்லாமிய தலைவர்கள் பலர் கலந்து கொண்டனர். அக்கட்சியின் மாநில பொருளாளர் எம். முஹம்மது யூசுஃப் வரவேற்புரை நிகழ்த்தினார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டவர்கள்:
1. ஏ.எஸ். இஸ்மாயில் (தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா)
2. கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி (தலைவர், எஸ்.டி.பி.ஐ)
3. டாக்டர் அப்துல்லாஹ் (பெரியார் தாசன்)
4. எம்.அப்துர் ரஹ்மான் (பாராளுமன்ற உறுப்பினர், முஸ்லிம் லீக்)
5. கவிக்கோ. அப்துர்ரஹ்மான் (முன்னால் வக்ஃப் போர்டு தலைவர்)
6. எம். பஷீர் அஹமது (தலைவர், தேசிய லீக்)
7. மெளலவி தர்வேஷ் ரஷாதி (பொதுச்செயலாளர், இஸ்லாமிய விழிப்புணர்வு கழகம்)
8. மெளலவி முஹம்மது மன்சூர் (தலைமை இமாம், ஆயிஷா மஸ்ஜித், புரைசைவாக்கம்)
9. அப்பல்லோ ஹனீஃபா
10. லியாகத் அலி கான்
11. சி.எம்.என். சலீம் (சமூக நீதி அறக்கட்டளை)
12. முஹம்மது சிக்கந்தர் (தலைவர், மஸ்ஜித் கூட்டமைப்பு)
13. ஹஸன் ஹாரூன்
14. மேலை நாசர் (பொதுச்செயலாளர், சுன்னத் ஜமாத்)
15. சாபு பாய்
16. முஹம்மது ஹாமித் ஹுஸைன்
17. சித்தீக் அக்ரம்