நெல்லை மேற்கு மாவட்டம் பாப்புலர் ஃப்ரண்டின் வலைதளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதனமும் உண்டாகட்டும்!!

NOV 2013

NOV 2013
POPULAR... FRONT OF INDIA NELLAI WEST ...

திங்கள், 22 ஆகஸ்ட், 2011

வினவுக்கு ஒரு வினா!

 வினவு இணையதளத்தை ஆதரிக்கும் முஸ்லிம்களா நீங்கள்? இதோ வினவின் வேடம் களைகிறது.
         நாம் ஏற்கனவே கூறியது போல நடுநிலையான செய்தியாளராக தன்னை காட்டிக்கொண்டு இஸ்லாமிய மார்க்கத்தினையும் அதன் சட்டதிட்டங்களையும் சரியாக புரிந்து கொள்ளாமல் செய்திகள் வெளியிடுவதில் தற்போது வினவு இணையதளம் முன்னேறி வருகிறது.          ஹிஜாப் என்னும் ஃபர்தாவை பிரான்சு அரசு தடை செய்துவிட்டு பெண்களுக்கு சுதந்திரத்தை கொடுத்திருக்கிறதாம். ஆனால் வங்காள தேசத்தில் பெண்களை அடிமைப்படுத்துகிறார்களாம்.




        சமீபத்தில் தனது இணையதளத்தில் "இஸ்லாமிய பெண்களை சிதைக்கும் ஆணாதிக்க அமிலம்" என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டுள்ளது. அக்கட்டுரையில் சகட்டு மேனிக்கு குற்றச்சாட்டை வைத்துள்ளது வினவு இணையதளம். அந்த கட்டுரையின் ஆரம்பமாக வங்காளதேசத்தில் நடைபெற்றதாக சில சம்பவங்களை கூறுகிறது. அதில் ஒருவன் ஒரு பெண்ணின் மீது காதல் கொண்டு அதை அந்த பெண் ஏற்க மறுத்ததால் அந்த பெண் மீது ஆசிட் வீசியதாகவும் கூறுகிறது. இது போன்ற மூன்று நான்கு சம்பவங்களை கூறிவிட்டு, சமீபகாலமாக பாகிஸ்தான், ஆஃப்கானிஸ்தான் போன்ற நாடுகளை விட வங்காள தேசத்தில் பெண்கள் மீது ஆசிட் வீசும் சம்பவம் அதிக அளவில் நடந்து வருவதாக கூறுகிறது அக்கட்டுரை. உச்சந்தலைக்கும் முழங்காலுக்கு முடிச்சு போடும் வேலையையே வினவு இணையதளம் செய்கிறது.

       ஒரு தனி மனிதன் செய்யும் தவறுகள் அது அவன் பின்பற்றும் மதத்தோடு ஒப்பிடும் அவலம் அது ஏன் முஸ்லிம்களுக்கு மட்டும் நடத்தப்படுகிறது என்பது நமக்கு புரியாத புதிராகவே உள்ளது.

         வங்காளதேசத்தில் நடந்த சம்பவங்களை போன்று என்ணற்ற சம்பவங்கள் அதிக அளவில் இந்தியாவிலும் நடைபெற்றுள்ளன இன்னும் சொல்லவேண்டுமென்றால் வங்காளதேசத்தை விட இந்தியாவில் தான் அதிக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறுகின்றன. இன்று வரை பெண்சிசுக்கொலை நின்றபாடில்லை, பாலியல் வன்முறைகள் குறைந்தபாடில்லை, இதில்  ஈடுபடும் குற்றவாளிகள் அதிக அளவில் தண்டிக்கப்படுவதும் இல்லை. அப்படியானால் இந்தியா அரசாங்கம் பெண்களை சிதைத்து வருகிறது என்று கூறலாமா?

       குர் ஆன் கூறுவது போன்று இஸ்லாம் பெண் அடிமைத்தனத்தை களையவில்லையாம்! காரணம் இஸ்லாமிய பெண்கள் மீது ஆசிட் வீசப்படுகிறதனாலா? என்ன ஒரு மடத்தனம்? இஸ்லாமிய சட்டங்கள் பெண் அடிமைத்தனத்தை ஒழித்திருக்கிறது என்பதற்கு எண்ணற்ற வரலாற்று ஆவணங்கள் உண்டு. வேண்டுமானால் நாம் வினவு இணையதளத்திற்கு தெரிவிக்க தயார்!

       குரானின் (சுரா 4:34) படி, ஆணின் கையிலேதான் பெண்ணைக் குறித்த முழு அதிகாரமும் இருக்கிறது. பெண்ணைப் பராமரிப்பதிலேயே ஆண் தனது செல்வத்தைச் செலவழிப்பதால் பெண்ணை விட ஆணை உயர்ந்தவராக கடவுள் படைத்திருப்பதாகக் கூறுகிறது. நல்லபடியாக (!) நடந்துக்கொள்ளும் பெண்களுக்கு ஆண்களைப் போலவே சரிநிகராக உரிமைகள் இருந்தாலும், ஆணே எப்போதும் பெண்ணை விட உயர்ந்தவராகக் கருதப்படுவார் என்றும் குரான் கூறுகிறது.

      குர்ஆனுடைய வசனங்கள் தங்களுக்கு புரியவில்லையாயின் இஸ்லாமிய மார்க்க அறிஞரிடம் கேட்டு தெரிந்துகொள்ளுங்கள். சூரா நிஸா (4:34) வது வசனம் என்ன கூறுகிறது. இதோ!

          (ஆண், பெண் இருபாலாரில்) அல்லாஹ் சிலரை சிலரைவிட மேன்மைப்படுத்தி வைத்திருக்கிறான். (ஆண்கள்) தங்கள் சொத்துகளிலிருந்து (பெண் பாலாருக்காகச்) செலவு செய்து வருவதினாலும், ஆண்கள் பெண்களை நிர்வகிக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர். எனவே நல்லொழுக்கமுடைய பெண்டிர் (தங்கள் கணவன்மார்களிடம்) விசுவாசமாகவும், பணிந்தும் நடப்பார்கள். (தங்கள் கணவன்மார்கள்) இல்லாத சமயத்தில், பாதுகாக்கப்பட வேண்டியவற்றை, அல்லாஹ்வின் பாதுகாவல் கொண்டு, பாதுகாத்துக் கொள்வார்கள்; எந்தப் பெண்கள் விஷயத்தில் - அவர்கள் (தம் கணவருக்கு) மாறு செய்வார்களென்று நீங்கள் அஞ்சுகிறீர்களோ, அவர்களுக்கு நல்லுபதேசம் செய்யுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களைப் படுக்கையிலிருந்து விலக்கிவிடுங்கள்; (அதிலும் திருந்தாவிட்டால்) அவர்களை (இலேசாக) அடியுங்கள். அவர்கள் உங்களுக்கு வழிப்பட்டுவிட்டால், அவர்களுக்கு எதிராக எந்த வழியையும் தேடாதீர்கள் - நிச்சயமாக அல்லாஹ் மிக உயர்ந்தவனாகவும், வல்லமை உடையவனாகவும் இருக்கின்றான்.

        எங்குமே குர்ஆன் ஆண்கள் தான் உயர்ந்தவர்கள் என்றோ பெண்கள் தாழ்ந்தவர்கள் என்றோ கூறியதில்லை. பெண் என்பவள் பலஹீனமானவள், எல்லா காரியங்களிலும் ஆண்களுக்கு சரிசமாமாக வேலை செய்யமுடியாது என்பது நிதர்சனமான உண்மை. குடும்பத் தலைவர்களாகவும், குடும்பத்தில் நிர்வகிப்பவ்ர்களாகவும், குடும்பத்தை நிரவகிப்பவர்கள் ஆண்களாக இருப்பதினால் குடும்ப சூழ்நிலைகளை அறிந்து முடிவுகள் எடுப்பதினால் ஆண்களுக்கு சில முன்னுரிமைகள் இருப்பதையே இந்த குர்ஆன் வசனம் சுட்டிக்காட்டுகிறது. இன்னும் சொல்ல வேண்டுமென்றால் குடும்ப சூழ்நிலைகளில் கணவன் தனது மனைவியிடம் ஆலோசனை கேட்பதும், மனைவியின் ஆலோசனைக்கு மதிப்பளிப்பதும் சிறந்தது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஒரு பெண் தனது கணவனுக்கு மாறு செய்தால், அவர்களுக்கு  நல்லு உபதேசம் செய்யுங்கள் என்றும், அதிலும் அவர்கள் திருந்தா விட்டால் படுக்கையில் இருந்து விலகி இருங்கள் என்றும், அதிலும் திருந்தாவிட்டால் லேசாக அடியுங்கள் என்றும் தெளிவாக கூறுகிறது குர்ஆன் வசனம். உடனே பார்த்தீர்களா! ஆண்கள் பெண்களை அடிக்கலாம் என்றும், குர்ஆன் வசனங்கள் பெண்களை அடிமைப்படுத்த தூண்டுகிறது என்றும் கூறுவது வினவின் வாடிக்கை. இஸ்லாம் போன்று எந்த ஒரு மதமோ, அரசாங்கமோ பெண்களுக்கு உரிமைகளை வழங்கிடவில்லை.

        நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். உங்களது மனைவி தவறு செய்பவளாக இருந்தால் தனிமையில் அவளுக்கு உபதேசம் செய்யுங்கள், அவளை கண்டியுங்கள், அவளது முகத்தில் அடிக்காதீர்கள்! லேசாக அடியுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

"உடலுறவுக்கு மறுத்தால் அடிக்கலாம் என்றும் குரான் கூறுகிறது."

       பெண்களை உடலுறவுக்கு அழைத்து அவள் மறுத்தால் அவளை அடிக்கலாம் என்று  குர் ஆன் கூறுவதாக கூறும் வினவு ஆசிரியரே! எந்த வசனத்தில் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்பதை காட்ட முடியுமா?

       வழக்கம்போல் இஸ்லாத்தின் எதிரிகள் கேட்கும் கேள்விகளையே வினவு ஆசிரியரும் கேட்டுள்ளார். இன்டெர்நெட்டை அதிக அளவில் பயன்படுத்தும் வினவு ஆசிரியருக்கு அதே இன்டெர்நெட்டில் அவர்கள் வைத்த குற்றச்சாட்டிற்கு பதில் இருப்பது தெரியாதோ?

       சிறுவயதிலேயே பெண்கள் திருமணத்திற்கு உட்படுத்தப்படுகிறார்களாம். உதாரணத்திற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அன்னை ஆயிஷா (ரழி) அவர்களை திருமணம் செய்யும் போது வயது 9 என்பதை சுட்டிகாட்டுகிறார். இன்ஷா அல்லாஹ் இதன் பதிலை அடுத்த கட்டுரையில் வெளியிடுகிறேன்.